Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் -24.06.2014-

இனியொரு... by இனியொரு...
06/23/2014
in இன்றைய செய்திகள்
0 0
54
Home இன்றைய செய்திகள்

protestஇலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீதான பாசிச அரசின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து பிரித்தானிய இளைஞர் குழுவினர் கண்டனப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். பொதுபல சேனா என்ற இலங்கை அரசின் அடியாள் படையினால் அப்பாவித் தமிழ் முஸ்லீம்கள் அழிக்கப்படுகின்றனர். அவர்களது வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சூறையாடப்படுகின்றன. குழந்தைகளின் அழுகுரலுக்கும் முதியோரின் புலம்பலுக்கும் நம்பிக்கையை உரைக்க ஒடுக்குமுறையின் எல்லைகு வெளியில் வாழ்கின்ற நாம் போராடுவது இன்று எமது தேவையாகின்றது.

ஆர்பாட்டங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்பட இவை ஆரம்பப்புள்ளிகள். போராடும் சமூகங்கள் தமது வலிகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அதிகார வர்க்கமும் ஒடுக்குமுறையாளர்களும் கிலிகொள்ள ஆரம்பிக்கும் இந்தப் பகிர்வு அவசியமானதாகும்.

போராட்டம் நடைபெறும் இடம்: 10 Downing Stree / Tube: Westminister

காலம்: Tuesday 24th of June 2014

நேரம்: 4 PM

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

Comments 54

  1. kumar 5 says:
    12 years ago

    பிரித்தானிய இளைஞர் குழுவினர்//WHO ARE THEY? WHERE WERE THEY? are they TYO? why now?

    Please don’t force any orgs to protest if they don’t feel to do so.

  2. Alex Eravi says:
    12 years ago

    Is this organization…
    Another NGO…?
    Another Multi National Companies backed organization…?

    What about continuous  killings in Iraq… Syria… Egypt… Afghan…?
    And now in Pakistan…

    Who are the people responsible for these innocent peoples deaths…?

    These are not Human Rights Violation…?

    When LTTE was strong there was a UK based lawyer I think Bazeer or someone usually write ariticles in thenee, don’t know where is he now…?

    Is he organize this protest…?

  3. Mukunthan says:
    12 years ago

    y do we need an oganisation? would you only go if its an organisation? no its not TYO or any other oganisation, its everyone, its organised by tamil youths!

  4. Ranjith says:
    12 years ago

    இனி ஒரு விதி செய்ய, புதிய தலைமுறை எழுகிறது.
    யார் செய்கிறார்கள் என்று அறியும் ஆவல், எதற்காகச் செய்கிறார்கள் என்பதில் இல்லையே…
    தமிழ் அகதிகளை, திரும்பவும் கோத்தாவின் கொலைக் களத்திற்கு அனுப்பக் கூடாது என்று லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை பேர் வந்தீங்க?.
    TYO ஆ…TCC ஆ.. என்பதை அறிவதில் என்ன அக்கறை உங்களுக்கு.

    இனி மக்கள் போராட்டங்களுக்கு வராதவர்கள், நிராகரிக்கப்படுவார்கள்.
    எவரையும் விமர்சிக்கும் தகுதியையும் இழந்தவர்கள் ஆவீர்கள்.

    • kumar 5 says:
      12 years ago

      தமிழ் அகதிகளை, திரும்பவும் கோத்தாவின் கொலைக் களத்திற்கு அனுப்பக் கூடாது என்று லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை பேர் வந்தீங்க?.//பிரித்தானிய இளைஞர் குழுவினரே!!
      உங்களிற்கு பின்னால் நிற்கும் சக்திகளின் முகமூடி கிழிக்கப்பட்டுவிட்டது. இனியாவது கவனமாக இருங்கள்.
      .
      .பிரித்தானிய இளைஞர் குழுவினரே!!
      வெவ்வேறு முகமூடிகளுடன் உங்கள் முன் வருவார்கள் ,மிக கவனமாக இருக்கவும்.

    • kumar 5 says:
      12 years ago

      இனி மக்கள் போராட்டங்களுக்கு வராதவர்கள், நிராகரிக்கப்படுவார்கள்.
      எவரையும் விமர்சிக்கும் தகுதியையும் இழந்தவர்கள் ஆவீர்கள்.
      //உங்கள் இன்றைய போராட்டம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று நீங்கள் புரிந்து கொள்ள உங்களை மேய்ப்போர்கள் விடவே மாட்டார்கள். மிகவும் கவலையாக உள்ளது.

    • kumar 5 says:
      12 years ago

      பிரித்தானிய இளைஞர் குழுவினரே!!!!
      they won’t let my questions to reach you.
      I’ll contact you Via your face book. don’t worry.

    • kumar 5 says:
      12 years ago

      எதற்காகச் செய்கிறார்கள் // Ranjith !! do you know why are you doing this?

    • kumar 5 says:
      12 years ago

      இனி ஒரு விதி செய்ய// no!! you can’t you are corrupted. narrow minded. very very sorry to see this state. I’m shame of this.

  5. kumar 5 says:
    12 years ago

    போராடுவதை வரவேற்கிறேன்.போராட ஒவொருவருக்கும் உரிமை உண்டு, அது அமைப்பாக தான் போராட வேண்டும் என்றில்லை.
    .
    .அதே நேரம் 18/06/14 அன்று முஸ்லிம் மக்களும் தம் வலிகளுடன் பகிர்ந்துகொள்ள அனைவரையும் வருக என்று அழைப்பு விட்டிருந்தார்கள், அன்றும் நீங்கள் விமர்சிக்காமல் பங்குகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். .
    .
    .அதன் தொடர்ச்சியாக தான் இன்றைய போராட்டமும் நடைபெறுகிறது என்று தெரியாமல் கேள்விகளை கேட்டதிற்கு மன்னிக்கவும்.

  6. Mukunthan says:
    12 years ago

    couple of people i know (there could be more) are taking part in organising this there is a video on social media facebook. we wanted to take part in protest organised by tamil muslims 18.06.2014 we kindley requested them not bring Lion flag (tamils blood on it) however they did so we couldnt take part. also todays protest is for same cause but NOT a continuation from 18.06.2014

  7. kumar 5 says:
    12 years ago

    சிங்க கொடி சிக்கல் தான். ..
    .
    ஒரு வில்லங்கமான சிந்தனை/கேள்வி : முஸ்லிம் மக்கள் எந்த கொடியை பிடித்தால் சரியாகப்படும்?

  8. kumar 5 says:
    12 years ago

    https://www.facebook.com/keerthikann#!/groups/78424681904/

    our leader PIRABAKARAN.
    ..
    .very sorry பிரித்தானிய இளைஞர் குழுவினர்;.
    . you are in the wrong hands for wrong reasons..
    .you are not talking about MUSLIMS sufferings or tamils sufferings. or opperssion of SL state. talking something else..
    . good luck. bewarned there are so many crocs in muddy water..
    . NOTE:for the misleaders:Please stop abuisng child soldiers.

  9. kumar 5 says:
    12 years ago

    https://www.facebook.com/groups/78424681904/?fref=ts

  10. mannan says:
    12 years ago

    இலங்கை அரசின் குடும்ப சர்வாதிகாரத்தை காப்பாற்ர  தோற்றுவிக்கப்பட்டதே முஸ்லிம் பெளத்த  மோதல்.   தமிழ் சிங்கள் மோதல் ஏற்படுத்தினால் தமக்கு  ஆபத்தென்பதை    நன்கு  அறிந்த  சகோதர  அரசியல் வாதிகள் தமக்கு   சிங்கள மக்கள் மீதிருந்து   வளரும்  விரக்தியை  திசை திருப்பவே இந்த   பொது பல சேனாவும்   கலவரங்கழும்.

    முஸ்லிம்நாடுகள் எவ்வள்வோ  இருந்தும்  இதுவரை  முஸ்லிம்களிற்காக
    இலங்கை அரசினை  கண்டிக்கவில்லை.  அதுமட்டுமல்ல   இந்த லண்டன்
    ஊர்வலக்காரர்  முள்ளிவாய்க்காலில்  தமிழர்  அழிக்கப்படும் போது
    தமது  திறமையினால்   சாதித்தவைகள்   இன்னமும்நிறைவேறவில்லை.

    முதலில்  முள்ளிவாய்க்காலில்  நடந்த  அழிவிற்கு  இராஜ்பக்சாவிற்கு
    தண்டனையாவது    வாங்கிக்கொடுத்தார்களா?

    இனி ஊர்வலம்செய்து   இராணுவமூலம்  முஸ்லிம்களை அழிப்பதற்கு
    இவர்கள்  வழி செய்வார்களா?

    • Alex Eravi says:
      12 years ago

      As I said earlier some Diaspora Tamil elements like to have mass killings in both sides of Sinhslese & Muslims .

      No one want to put water over the burning house… They try to put Oil over it…

      And these medias say they are “Tamil Muslims”

      How…?

      Here in Canada our generation speak, write English… But we are not English people…!

      Tamil is a language, Srilankan Muslims speak, write this language…!

      We Tamils our mother tounge is Tamil…!

      If Srilankan Muslims accept Tamil as their Mother tounge, then we can accept Tamils or Tamil Muslims…!
      (But their Mother tounge is “Tamil”…
      By their Mothers or by they convert to Islam from Hindu-Tamils…!)

      But here like “Ethirikku Ethirikku Nanpan” we are pouring oil over the burning house…

      We don’t know how to solve our problem… & not united… But try to solve their problem,… What kind of Joke is this…?

      Is this called “Eriyum Veeddil Kulir Kaaivathu…?” (Keep warm from a burning house)

      Ok, we support the affected people… But don’t say “Muslim Tamils ” 
      Leave them with their identity…!
      (Until they accept) 

    • lala says:
      12 years ago

      லண்டனில்  ஊர்வலம் நடந்தால்  இலங்கையில்  முஸ்லிம்கள் ராணுவத்தால் கொல்லப்படுவார்களா ?
      புது வியாக்கியானமா இருக்கு ?

      • mannan says:
        12 years ago

        லண்டனில்  ஊர்வலம்  நடத்தினால்  அரசாங்கம் பயந்து
        தமிழர்களிற்கு  உருமைகள்  கொடுக்குமா? 

        இலங்கை அரசாங்கம் தமிழர்கள்  போரின் போது அநியாயமாக  கொல்லப்படுகின்றார்கள்  என்று தெரிந்தும்  போரை  தொடர உதவியது
        மேறுகுலகம். அப்போ  தமிழர்  செய்த  ஊர்வலம்  சரித்திர பதிவாகிவிட்டது.

        ஊர்வலம் முன் செல்லவும், மேடைகளில்  ஏறவும்  தமிழரின்
        முன்ணணியில்  திகழவும்  லண்டன் வாழ்  சில  தமிழர்களிற்கு
        இலங்கையில்  அழிவு  தேவையாகவுள்ளது.

        • lala says:
          12 years ago

          கடைசியாக லண்டனில் ஊர்வலம்நடத்தியவர்கள் முஸ்லிம்களதான் .

          ஆனால் உங்கள்  இலவச  அட்வைஸை  தமிழர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறீர்கள் .

          ஜனநாயக  வழியில்  எதிர்ப்பை  காட்டா  விட்டால்  லண்டனில் இவ்வளவு தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் இருந்தும்  ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட 
          வக்கில்லை என  எள்ளி நகையாட  உங்களைப்போன்றவர்கள்  தயங்க  மாட்டீர்கள் . 

          லண்டனில்  ஊர்வலம்நடத்தினால்  முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என சிங்கள பவுத்த தீவிர வாதிகளின்  குரலில் மிரட்டியுள்ளீர்கள் .
          இன்னமும்  சொல்ல[போனால்  அவர்களுக்கு அப்படி  சிந்திக்காமல் இருந்தால் கூட  உங்களைப்போன்றவர்கள் இப்படி ஐடியா கொடுத்து செய்ய  வைப்பீர்கள்  போலிருக்கிறது..

          • a voter says:
            12 years ago

            லாலா 
            இங்கே போராட்டம் சரி என்கிறீர்கள். இன்னொரு பின்னூட்டத்தில் நாங்கள் (தமிழர்கள்) செய்தது போதும் முஸ்லீம்கள் தமிழ்-முஸ்லீம் ஒற்றுமைக்காக என்ன செய்தார்கள் என்கிறீர்கள். உங்களைப் புரிந்து கொள்வதே சிரமம் தான்.
            வேண்டுமென்றே குழப்புகிறீர்களா?

          • mannan says:
            12 years ago

            முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசினாலும்
            அவர்கள் தமிழினம்மல்ல என்றால்
            புலம் பெயர்  நாடுகளில் வாழும் ஈழ்த்தமிழர்களின்
            பிள்ளைகள்  பலர்தமிழ் மொழியே  பேசத்தெரியாம்ல்
            வாழ்கின்றார்கள்.  இவ்ர்களை  தமிழர்கள்
            என்று  ஏற்கின்றீர்களா?   

            சாதி,மத,இன பேதமின்றி  மனித இனத்தின்
            உருமைகளை மதிக்கத்  தெரிந்தவர்களிற்குத்தான்
            தனது சொந்த  இனத்தையும் பிற  இனத்தையும் மதிக்கவும்
            உருமைகளை    பாதுகாக்கவும் முடியும்.

            அதனை  உணராதவ்ர்கள்   ஆதிக்க வெறியும்
            பொருளாசையும் கொண்ட  பயங்கரவாதிகள்தான்.

  11. Mukunthan says:
    12 years ago

    we are not asking muslims to hold tiger flag, but not to bring lanka flag IFF they want our support!

    who is ur leader
    ? Mahinda? Karuna? KP? Rudra? or maybe Obama? non of you had the strangth to take wepon and fight, Pirabhaharan did, so stop your nonsense! my frinds were talking about muslims issue, you are so blind and deaf!! y didnt u attend yestrday? jaaa let thr be crocs in muddy wat, we will clean it

    • kumar 5 says:
      12 years ago

      who is ur leader//உங்கள் 24/06/14ம் திகதி நடாத்திய போராட்டம் எமது தலைவர் பிரபாகரனே என்று பறை சாற்றவே என்று தெளிவாக கூறியதிற்கு நன்றி.

  12. lala says:
    12 years ago

    முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசினாலும்
    ##அவர்கள் தமிழினம்மல்ல என்றால்
    புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழ்த்தமிழர்களின்
    பிள்ளைகள் பலர்தமிழ் மொழியே பேசத்தெரியாம்ல்
    வாழ்கின்றார்கள். இவ்ர்களை தமிழர்கள்
    என்று ஏற்கின்றீர்களா? ## @மன்னன்

    இங்கு நான் ஏற்கிறேனா இல்லையா என்பதல்ல விடயம் .
    அவர்கள் தம்மை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறார்களா ? அடையாளப்படுத்துகிறார்களா என்பதுதான் கேள்வி ,
    இலங்கை வாழ் முஸ்லிம்கள் தம்மை முஸ்லிம்களாக , சோனகர்களாக அடையாளப்படுத்துகிறார்களே தவிர தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தியதில்லை என்பதே கசப்பான உண்மை .நிலைமை இப்படியிருக்க நீங்கள் அவர்களை ஏன் தமிழர்களாக ஏற்கவில்லையென வரிந்து கட்டி கொண்டு வருகிறீர்கள் .

    ##சாதி,மத,இன பேதமின்றி மனித இனத்தின்
    உருமைகளை மதிக்கத் தெரிந்தவர்களிற்குத்தான்
    தனது சொந்த இனத்தையும் பிற இனத்தையும் மதிக்கவும்
    உருமைகளை பாதுகாக்கவும் முடியும்.##

    இப்படியெல்லாம் வக்கணையாக இளிச்சவாய் தமிழர்களிடம்தான் கேட் க முடியும். இத்தனை காலம் அகிம்சை வழியிலும் , ஆய்தப்போராட்டத்திலும் ஈடுபட்டபோது சிங்கள அரசுகளுடன் சேர்ந்து கொண்டு போராட்டத்தை காட்டி கொடுத்தபோதும் , இன்று வரை ஜெனிவா கூட்டத்தொடரின்போது சிங்க கொடியை பிடித்தபடி ஐநாவையும் நீதி கேட்டுநிற்கும் தமிழகளை எதிர்த்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்ட ஊர்வலம்நடத்தியபோதும் எப்போதாவது இந்த கேள்வியை முஸ்லிம்களை பார்த்து கேட்டதுண்டா ?

    • mannan says:
      12 years ago

      அகிம்சைப்போராட்டம்     சிங்கள ஆட்சியாளர்கழுடன் நடத்தப்பட்டது
      தமிழர்கள்  சிங்களவ்ர்களால்  கொல்லப்படாலும்   தமிழர்கள்  தமிழர்களை
      கொல்ல எத்தனிக்கவில்லை. எனவே  ஆயுதப்போராட்டத்தை விட
      அகிம்சைப்போராட்டம்   தமிழர்கள்  தமிழ்ர்களால்  அழிவதை
      காப்பாற்ரியுள்ளது.   

      ஆயுதமேந்திய தமிழர்களின் போராட்டம்
      புத்தியில்லாதவன்  கையில்  கத்தியைக் கொடுத்தால்
      தன்னையே  குத்திப்பார்பானென்பார்கள். அதே  போல்  ஒற்றுமையோ
      அரசியல்  தெளிவோ,  எதிர்காலச்சிந்தனையோ  இன்றி  அதிகார மோகம்
      பொருளாசை கொண்ட  அர்சியல் தலைவர்களின்    வழிகாட்டலின்
      பயனே  இன்றைய ஈழத்தமிழர்  நிலமை.

      தமிழர்  தம்மிடமுள்ள  தவ்றுகளையும்  வேறுபாடுகளையும்
      கண்டறிந்து  திருத்தாமல்  சிங்களவருடனும்,முஸ்லிம்கழுடனும்
      பகைமயை   வளர்பது  தமிழ் பயங்கர்வாதிகளை உருவாக்கி
      அவர்கள்  சிங்கள  இனவாதிகளினதும்,மேற்குலகினதும்
      கூலிகளாக  செயற்படவே வழிவகுக்கும்.

      இதுவரைநடந்ததும்  அதுவே  நடப்பதும் அதுவேயாகும்.

      • lala says:
        12 years ago

        ஆயுதமேந்திய தமிழர்களின் போராட்டம்
        ##புத்தியில்லாதவன் கையில் கத்தியைக் கொடுத்தால்
        தன்னையே குத்திப்பார்பானென்பார்கள். அதே போல் ஒற்றுமையோ
        அரசியல் தெளிவோ, எதிர்காலச்சிந்தனையோ இன்றி அதிகார மோகம்
        பொருளாசை கொண்ட அர்சியல் தலைவர்களின் வழிகாட்டலின்
        பயனே இன்றைய ஈழத்தமிழர் நிலமை.##

        ஆய்தப்போராட்டத்தில்நீங்களோ ,நீங்கள் சார்ந்த வாய் சொல் வீரர் இயக்கமோ பெரிதாக பங்கெடுக்கவில்லை போலிருக்கிறது .அதனால்தான் சீ இந்த பழம் புளிக்கும் எனும் விதமாக பேசுகிறீர்கள்.

        ##தமிழர் தம்மிடமுள்ள தவ்றுகளையும் வேறுபாடுகளையும்
        கண்டறிந்து திருத்தாமல் சிங்களவருடனும்,முஸ்லிம்கழுடனும்
        பகைமயை வளர்பது தமிழ் பயங்கர்வாதிகளை உருவாக்கி
        அவர்கள் சிங்கள இனவாதிகளினதும்,மேற்குலகினதும்
        கூலிகளாக செயற்படவே வழிவகுக்கும்.##

        சரி , தமிழர்கள் பகைமை பாராட்டினார்கள் . ஆனால் முஸ்லிம்கள் பகைமை பாரட்டவில்லையே . அப்படியிருந்தும் ஏன் கலவரம் என்ற பெயரில் தாக்க்கப்பட்டார்கள் ?
        முஸ்லிம்கள் தமது சகோதரகளுக்கு நடந்த அநீதிக்காக ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம்நடத்தியபோது , அப்படிநடந்து கொண்டால் இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என கூறியது எதற்காக ?
        இதுதான் இணக்க அரசியலா ? இதற்கு பெயர் இணக்கம் அல்ல , அடிமை புத்தியுள்ளவர்களின் சரணாகதி அரசியல் .
        அதைத்தான் நீங்கள் இணக்க அரசியல் என்ற போர்வையில் போதிக்க முயற்சிக்கிறீர்கள் .
        இணக்கத்துக்கும் , சரணாகதிக்கும் வேறுபாடு தெரியாதா ? அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்களா ?

  13. lala says:
    12 years ago

    # அ வொடெர்
    Pஒச்டெட் ஒன் 06/27/2014 அட் 17:33

    லாலா
    இங்கே போராட்டம் சரி என்கிறீர்கள். இன்னொரு பின்னூட்டத்தில் நாங்கள் (தமிழர்கள்) செய்தது போதும் முஸ்லீம்கள் தமிழ்-முஸ்லீம் ஒற்றுமைக்காக என்ன செய்தார்கள் என்கிறீர்கள். உங்களைப் புரிந்து கொள்வதே சிரமம் தான்.
    வேண்டுமென்றே குழப்புகிறீர்களா?##

    ஒன்றும் குழப்பவில்லை .நான் யாருடைய பின்னூட்டத்துக்கு பதிலளித்தேனோ அவரிடம் கேட் க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் .
    முதலில் அவர் லண்டனில் முஸ்லிம்கள் ஜனனாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினால் இலங்கைல் ராணுவத்தினால் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என மிரட்டும் தொனியில் பின்னூட்டம் வழங்கினார் .
    இதிலிருந்தெ இவர் யாருக்கு மறைமுகமாக ஆதர்வு வழங்குகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    பின்பு இப்படியெல்லாம் இலங்கை அரசுகெதிராக ஆர்ப்பாட்டம்நடத்தினால் உரிமைகள் கிடைத்து விடுமா ? என கேள்வி எழுப்பி இலங்கை அரசுக்கு ஜால்ரா அடித்தார் .

    இங்கு அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவது கூட நடிப்புத்தான் .
    தமிழர்களை மட்டம் தட்டவே முஸ்லிம் ஆதரவுநிலை எடுப்பது போல்நடிக்கிறார் .
    பின்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கொல்லப்படுவார்களென அவர்களை மிரட்டவும் செய்கிறார்.
    முஸ்லிம்களோ தமிழ்கர்களொ அவர்கள் தமக்கு இலங்கையில்நடக்கு அனியாயங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிப்பதை யார்தான் தவறேன்று சொல முடியும் .
    ஆனால் இருவரும் இணைந்து போராடுவதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லாதது .
    அப்படிநடைபெற வேண்டுமென்றால் அது முஸ்லிம்கள் தரப்பிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் . தமிழர் தரப்பிலிருந்து பல தடவைகள் இதற்கான சிக்னல் காட்டப்பட்டாயிற்று .
    அது மட்டுமல்ல அவர்களை நம்பவும் முடியாது . இவ்வளவு பட்ட பிறகும் வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரின்போது சிங்க கொடியை பிடித்தபடி ஐநாவுக்கெதிராகவும் . தமிழர்களூக்கெதிராகவும் , சிங்கள அரசுக்காதரவாகவும் கூச்சல் போட்டபடி கொழும்பு தெருக்களில் இறங்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்ல.

  14. kumar 5 says:
    12 years ago

    சிங்க கொடியை பிடித்தபடி ஐநாவையும் நீதி கேட்டுநிற்கும் தமிழகளை எதிர்த்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்ட ஊர்வலம்நடத்தியபோதும் எப்போதாவது இந்த கேள்வியை முஸ்லிம்களை பார்த்து கேட்டதுண்டா ?//ஏன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அப்படி எமக்கெதிராக செய்தார்கள்,நாம் என்ன தவறு செய்தோம்,ஏன் அவர்கள் புலிக்கொடியின் பின்னல் எம்முடன் ஜெனிவாவிற்கு வரவில்லை என்று நாம் எம்மையே கேட்டுப்பார்த்தால் விடை தெரியும் என்று நம்புகிறேன்.

    .
    .
    நோக்கங்கள்:.
    . அவர்கள் சிங்க கொடியை தூக்கியது தவறு என்று உணர விடக்கூடாது.
    .
    .

    சிங்கக்கொடி கொடியை தூக்கியது தவறு ஆகவே புலிக்கொடியை தூக்கவேண்டும்.தமிழ் தேசியம் சரியான கொடியை தூக்கக்கூடாது.
    .
    .
    இவைகள் தான் இன்றும் எமது நோக்கமா?

    • lala says:
      12 years ago

      ## ஏன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அப்படி எமக்கெதிராக செய்தார்கள்,நாம் என்ன தவறு செய்தோம்,##

      சுதந்திரத்துக்கு பின் முஸ்லிம்கள் தமிழர்களிடம் எப்ப்டொயெல்லாம் வாக்கு பெற்று எம்பியாகி விட்டு பின் பல்டி அடித்து கட்சி மாறி மந்திரியானார்கள் போன்ற வரலாறு தெரியாது போலிருகிறது .
      தமிழரசுக்கட்சில் தேர்தலில் நின்று வென்று விட்டு பின் ஆளும் கட்சிக்கு மாறி அமைச்சர் பதவிகள் பெற்று சலூகை அரசியல் நடத்துவது அவர்களூக்கு கை வந்த கலை .
      அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள் . ஆனால் எந்த தமிழ் வேட்பாளர்களுக்கும் முஸ்லிம்கள் வாக்களித்ததில்லை.

      இதற்கு உதாரணமாக கடைசியாக நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை எடுத்துக்கொள்ளலாம்.
      மட்டக்களப்பில் துறைநீலாவணை 100 % தமிழ் மக்கள் வாழும் கிராமம் . அங்கு 500 வாக்குகளுக்கு மேலாக முஸ்லிம் வேDபாளரக்ளுக்கு வாக்குகள் விழுந்திருக்கிறது.
      எனவே தமிழர்கள் தாம் எங்கு தவறு செய்தோம் என்று மூளையை கசக்கி கொள்ள தேவையில்லை.
      முஸ்லிம் அரசியல்வாதிகள் சரி அவர்களை ஆதரிக்கும் மக்களும் சரி அண்டிப்பிழைக்கும் சலூகை அரசியலையே அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறார்கள் .
      தமிழர்களூடன் சேர்ந்தால் உரிமைகளுக்காக போராட வேண்டியிருக்கும் அதற்கு அவர்கள் எப்போதும் தயாரில்லை . சிங்கள இனவாதிகள் அடித்து உதைத்தாலும் கூட.
      தமிழர் தரப்பில் வேண்டுமானல் ஒரு தவறிருப்பதாக கூறலாம். அது அவர்கள் ஆட்சி அதிகாரமற்று இருப்பது . இது மட்டுமே தமிழர்கள் தரப்பில் இருக்ககூடிய தவறு . அதிகாரமற்று இருக்கும் தமிழினம் முஸ்லிகளுக்கு விருப்பமான சலூகைகளை வழங்கி குளிவிக்க முடியாது . அது அதிகாரத்தை தன்னகத்தே வைத்திருக்கும் பெரும்பானமையினத்தாலேயே முடியும்.

      ## சிங்கக்கொடி கொடியை தூக்கியது தவறு ஆகவே புலிக்கொடியை தூக்கவேண்டும்.தமிழ் தேசியம் சரியான கொடியை தூக்கக்கூடாது.##

      புலிக்கொடியை தூக்க வேண்டுமன நான் கூறவில்லயே ?
      தமிழர்கள் தமக்குநடந்த இன அழிப்புக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுநிற்கும் அந்த தருணத்தில் கூட சிங்கள இனவாதிகளை குளிர்விப்பதற்காக சிங்க கொடியேந்தி சர்வதேசத்துக்கு எதிராகவும் தமிழர்களுகெதிராகவும் தெருவில் இறங்கி கூச்சல் போடும் அவர்களது கூச்ச நாச்சமற்ற சந்தர்ப்பாவாதத்தயே சுட்டி காட்டினேன்.

      • mannan says:
        12 years ago

        //சுதந்திரத்துக்கு பின் முஸ்லிம்கள் தமிழர்களிடம் எப்ப்டொயெல்லாம் வாக்கு பெற்று எம்பியாகி விட்டு பின் பல்டி அடித்து கட்சி மாறி மந்திரியானார்கள் போன்ற வரலாறு தெரியாது போலிருகிறது //லல

        உ
        உலகமெங்கும் புலிக்கொடியைக்காட்டியும்,  ஏழைப்பிள்ளைகளின்
        கழுத்தில் சயனைட்டைக்கட்டியும்,  தமிழர்கள் பலரைத்த் துரோகிகளாக்கி
        படு கொலைசெய்துவிட்டும்   வெள்ளைக்கொடியுடன் தம்மை பாதுகாத்தால்
        போதுமென்று சென்றவர்களை  விட  முஸ்லிம்கள் தமிழர்களிற்கு
        என்ன  கொடுமை செய்தார்களென்று  விளக்கமாக  கூறுவீர்களா?

        • lala says:
          12 years ago

          அது தமிழர்களது தெரிவு . உமக்கு என்ன பிரச்சனை ?  மேலும் கழுத்தில்  சயனைட் கட்டியவர்கள்  ஏழை  வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல ,நடுத்தர  , பணக்கார  வீட்டு பிள்ளைகளும் அதிகம் இருந்தனர் என்பதை உமது துவேச  புத்திக்கு  தெரியவில்லை போலும் . 

          போராட்டம் சரியாகவிருந்தாலும் சரி , தவறாக போனாலும் சரி  அது தமிழர்களது தெரிவு , அவர்களது முடிவு .
          ஆனால் முஸ்லிம்கள்  விடயம் அப்படிப்பட்டதல்ல , இன்னொரு சிறுபானமையினர் அது ஒரே மொழியை  பேசுவோர் போராடும்போது காட்டி கொடுத்து குளிர்  காய்ந்தவர்கள் .
          யாருக்காக  காட்டி கொடுத்தார்களோ  இன்று அவர்களிடமே  உதை  வாங்கி கொண்டு குய்யோ  முறையோ என்றால்  ஆச்சா ?

          • mannan says:
            12 years ago

            //அது தமிழர்களது தெரிவு . உமக்கு என்ன பிரச்சனை ? //லாலா

            நானும் தமிழன் தான்.  கருதுக்களை சொல்பவ்ர்களெல்லாம்
            புலிகளின் கால்த்தில்  துரோகிகள்தான்.

            தமிழரின் பெயரால்,தமிழரின் அரசியல் பிரச்சினையின் பெயரால்
            பிர்பாகரனும்,புலிகொடியும்,தமிழ் பயங்கரவாதமுமே  செயற்பட்டனவே தவிர இலங்கைத்தமிழ்ர்களல்ல- இது  நான் கூறவில்லை  சர்வதேசத்தின்
            முடிவும்   தீர்மானமும். இதுவே  முள்ளிவாய்க்காலில் தமிழரை பலியாக்கியது.

  15. kumar 5 says:
    12 years ago

    முஸ்லிம் மக்கள் ஈழ தேசத்தில் மட்டும் வாழ்கிறார்களாயின் உங்களுடன் உடன் படுகிறேன் முஸ்லிம் மக்கள் ஈழ தேசத்தில் மட்டும் வாழ்கிறார்களாயின் உங்களுடன் உடன் படுகிறேன். . அண்டிப்பிழைக்கும் சலூகை அரசியலையே அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறார்கள் //. அவர்கள் பரந்து சிங்கள தேசம் முழுவதும் சிறு தொகையில் வாழ்வதனால் தொடர்ந்தும் அண்டியே பிழைப்பு நடத்த முடியும்,
    .
    .

    .
    .நாம் சிங்கள தேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களாக இருந்திருந்தால் என்ன எப்படி செய்திருப்போம்?

    http://www.sonakar.com/?p=20427

    • lala says:
      12 years ago

      என்ன  காரணத்துக்காக  அண்டிப்பிழைத்தார்களோ , ? ஆக  மொத்தத்தில் அண்டிப்பிழைத்ததை  ஒப்புக்கொள்கிறீர்கள் . அதற்காக இன்னொரு சிறுபான்மை இனத்தை  காட்டி கொடுத்தா அண்டிப்பிழைக்க  வேண்டும் ?

      சரி , அந்த அண்டிப்பிழைக்கும் பிழைப்பு வாதிகளையும் தமிழர்கள் தமது போராட்டத்தில் அவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களைநம்பி இணைத்துக்கொள்ள வேண்டுமென  ஏன் கூறுகிறீர்கள் ?

      • kumar 5 says:
        12 years ago

        தமிழர்கள் தமது போராட்டத்தில் அவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களைநம்பி //தமிழர்கள் தமது போராட்டத்தில் தமிழீழ தேசத்தில் வாழ்ந்துகொண்டே சிங்கள தேசத்தின் நக்கி வாழ்ந்த, வாழும் தமிழ் தேசிய தலைமைகளையும், வரலாறுகளையும் கண்டது கண்டுகொண்டிருக்கும் மக்கள் தான் நாம் என்பதை எப்படி மறக்கமுடியும். லாலா லொள்ளா!

  16. kumar 5 says:
    12 years ago

    நாம் சிங்கள தேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களாக இருந்திருந்தால் என்ன எப்படி செய்திருப்போம்?

    • lala says:
      12 years ago

      சிங்கள  தேசத்தில்   முஸ்லிம்கள்  மட்டும் வாழவில்லை . தமிழர்களும்தான்  வாழ்கிறார்கள் .

      முஸ்லிம்களும் தமிழர்களைப்போல்   ஈழ தேசத்திலும் வாழ்கிறார்கள் .
      எனவே  அவர்கள் சிங்கள தேசத்தில்  வாழ்வதனால்தான்  அண்டிப்பிழைக்கிறார்கள்  எனநீங்கள்   ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல்  கூறியிருப்பது சொத்தையான  வாதம் .

      ##   தமிழர்கள் தமது போராட்டத்தில் தமிழீழ தேசத்தில் வாழ்ந்துகொண்டே சிங்கள தேசத்தின் நக்கி வாழ்ந்த, வாழும் தமிழ் தேசிய தலைமைகளையும், வரலாறுகளையும் கண்டது கண்டுகொண்டிருக்கும் மக்கள் தான் நாம் என்பதை எப்படி மறக்கமுடியும். ##

                                     நீங்கள் சொல்வது உண்மையானால்  , எதற்காக தங்களது முன்னைய  பின்னூட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களைப்போல்  ஈழ தேசத்தில்   வாழ்வார்களாயின் உங்களுடன்  உடன்படுகிறேன் என  கூறினீர்கள் ?

  17. kumar 5 says:
    12 years ago

    தமிழர்களும் முஸ்லிம்கள் போல் பரவலாக சிங்கள தேசம் முழுவதும் பரந்து வாழ்கிறார்களா? மொத்த தமிழ் பேசும் தமிழ் மக்களில் எத்தனை வீதம் சிங்கள தேசத்தில் வாழ்கிறார்கள்.
    ..
    .
    ஈழ தேசத்தில் மற்றும் சிங்கள தேசத்தில் வாழும்
    முஸ்லிம் மக்களை அவர்கள் பலம், பலவீனம், வாழ்நிலை, முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகள், பிரச்சனைகளை , மற்றும் தம்மை ஏன் முஸ்லிம் மதத் தேசியமாகஅடையாளப்படுத்துகிறார்கள் போன்றவற்றை தமிழ் தேசியம் சரியாக புரிந்து கொள்ளல் வேண்டும்..
    .
    இது அனைத்து தேசியங்களிட்கும் இனங்களிட்கும் பொருந்தும்…
    .

    தத்தமது பிரச்சனைகளை உரிமைகளை புரிந்து கொள்வதோடு மற்றையவர்களின் பிரச்சனைகளை உரிமைகளையும் மதித்து புரிந்து கொள்ள தவறின் முள்ளிவாய்கால்கள் தான் தொடரும்.

    • Sutharsan says:
      12 years ago

      From your post it is obvious you don’t consider our Tamil folks living in th hill country as our people.

      • kumar 5 says:
        12 years ago

        Well spotted Sutharsan. but at this time we are talking about Muslims and Thamil EEla tamils. Yes! we have to consider HILL COUNTRY Tamils as well. at the same time H C tamils also should raise their support for other communities as well. I haven’t seen (if you find anything please send the link)any voice from HC tamils on this current Muslims issue.

        • Sutharsan says:
          12 years ago

          When did anyone raise their voice for the HC Tamils for them to reciprocate? Our Muslim brothers will only sympathize if anything happens to their fellow Muslims not just in SL but in any corner of the world.

          • kumar 5 says:
            12 years ago

            what are you trying to say here? are you saying Tamils shouldn’t talk about Muslims and HC tamils, Muslims shouldn’t talk about Tamils and HC tamils, likewise HC tamils shouldn’t talk about tamils and Muslims; because none of them talked about others in the past. long live Tamil NARROW thesiyam. long live SRI LANKA!!

          • Sutharsan says:
            12 years ago

            Mate I am not trying to say anything, you are the one who is trying to say A=B, X=Y and therefore A=Y. You don’t make any sense at all 🙁

    • lala says:
      12 years ago

      இனி மேல் முள்ளிவாய்க்கால் தொடர்வதற்கு சாத்தியமில்லை,

      அளுத்கமவும் , பேருவளையும் தொடர்வதற்குத்தான் சாத்தியம் அதிகம்.

      இன்றைய கணிப்பின்படி வட கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர் தொகைதான் அதிகம்.

  18. lala says:
    12 years ago

    ##   நானும் தமிழன் தான்.  கருதுக்களை சொல்பவ்ர்களெல்லாம்
    புலிகளின் கால்த்தில்  துரோகிகள்தான். ##

      எட்டப்பனும்  , காக்கை  வன்னியனும்  தமிழர்கள்தான்  . யூதாஸும்  இயேசுவைப்போல்    யூதன்  தான் .

    • mannan says:
      12 years ago

      //எட்டப்பனும்  , காக்கை  வன்னியனும்  தமிழர்கள்தான்  . யூதாஸும்  இயேசுவைப்போல்    யூதன்  தான் .//லாலா

      பிரபாகரனும்.கருணாவும் புலிகள்தான்.
      கோடிகணக்கில்  இராசபகசாவிடம்  பணம் வாங்கினாலும்  பிரபாகரன்
      இனப்பற்றாளன். ஆணால் கருணா  இராசபகசவுடன் சேர்ந்தால்  துரோகி.
      இதற்கு என்ன விளக்கம் லாலா அவர்களே.

      • lala says:
        12 years ago

         பிரபாகரன்  ராஜபக்சவிடம்  பணம்  வாங்கினார் ,  பிரேமாதாசாவிடம்  ஆயுதம்  வாங்கினார்  என்று  வதந்தியாக  செய்திகள் வந்திருக்கின்றன . 

        கருணாவைப்போல் அவை  அப்ப்ட்டமாக  உறுதிப்படுத்தப்பட்டவையல்ல .

        மேலும்  தமிழ் மக்களும்  இந்த  உலகும்  கருணவையே  துரோகியாக  பார்க்கிறார்களே  தவிர  பிரபாவையைல்ல .  இனி  வருங்காலமும்  தனது  சரித்திரத்தில்  கருணாவுக்கு  எட்டப்பன் காக்கை  வன்னியன் , இடத்தையும் ,  பிரபாகரனுக்கு   பண்டார வன்னியன் , கட்ட பொம்மன்  இடத்தையுமே  வழங்கப்போகிறது . தாங்கள்  விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் அதுதான் நடக்கப்போகிறது .

        புலிகளுக்கு  பிரமதாசா ஆயுதம்  கொடுத்தது  பற்றி   திருமதி பண்டாரநாயக்க   பாராளுமறத்தில்  வைத்து  பிரேமதாசவை  பார்த்து  சொன்னது . 

                                 ”  நீங்கள் கொடுத்த  ஆயுதத்தை  வைத்துத்தான் இன்று எமது  ராணுவத்தை புலிகள்  விரட்டியடிக்கிறார்கள் .”

        பிரேமதாசா பதிலேதும் சொல்லாது  தலை குனிந்தார்..

        • அகதித் தமிழன் says:
          12 years ago

          பிரபாகரனைப் பொறுத்தவரை கருணா துரோகி
          பிரேமதாசாவைப் பொறுத்தவரை பிரபாகன் துரோகி
          அப்பாவி அகதிகளைப்  பொறுத்தவரை  கொலை செய்யும்  
          கருவிகளைத்  தூக்கிய  அனைவரும்  துரோகிகளே !!!!

        • அகதித் தமிழன் says:
          12 years ago

          பிரபாகரனைப் பொறுத்தவரை
          கருணா துரோகி
          பிரேமதாசாவைப் பொறுத்தவரை
          பிரபாகன் துரோகி
          அப்பாவி அகதிகளைப்  பொறுத்தவரை  
          கொலை செய்யும்  
          கருவிகளைத்  தூக்கிய  
          அனைவரும்  துரோகிகளே !!!!

        • Sutharsan says:
          12 years ago

          Whatever you say Karuna was Praba’s biggest mistake ever. It all started with him sending Karuna to the peace talks where he and most of the goons who were sent were just show pieces only except Bala. It wasn’t obvious at that time but it became very clear Praba took the international community for a ride and ended up paying the price for it. The blame has to stop with him.

        • Kumar says:
          12 years ago

          முதலில் வதந்தி என்கிறாா் பின்பு திருமதி பண்டாரநாயக்க கூறும்
          போது பிரேமதாஸ தலை குனிந்ததாக குறிப்பிடுகிறாா் புரியவில்
          லையே.

          • lala says:
            12 years ago

            அந்த செய்திகள் வதந்தியின் அடிப்படையிலானவை தான் .
            சில வருடங்களின் பின் பண்டாரநாயகா அது குறித்து பாராளுமறத்தில் பிரேமதாசா கொடுத்த ஆயுதங்களை வைத்துத்தான் தமது ராணுவத்தினரை புலிகள் விரட்டியடிக்கிறார்கள் எனக்கூறியபோது பிரேமதாசா பதிலேதும் பேசவில்லை..

  19. mannan says:
    12 years ago

    //மேலும்  தமிழ் மக்களும்  இந்த  உலகும்  கருணவையே  துரோகியாக  பார்க்கிறார்களே  தவிர  பிரபாவையைல்ல .  இனி  வருங்காலமும்  தனது  சரித்திரத்தில்  கருணாவுக்கு  எட்டப்பன் காக்கை  வன்னியன் ,// லாலா

    இந்த உலகம்தான்  முள்ளிவாய்க்காலில்   பிரபாகரனும் தமிழ் மக்கழும்
    அழியும்போது    வாய்பேசாது  இருந்தன  என்பதை மறந்துவிட்டீர்களா?
    அல்லது  இலங்கை அரசு உல  நாடுகளையெல்லாம்  எதிர்த்து  நிற்கும் சக்தி வாயந்ததென்று கூறுகின்றீகளா?  

    //பிரபாகரனுக்கு   பண்டார வன்னியன் , கட்ட பொம்மன்  இடத்தையுமே  வழங்கப்போகிறது . தாங்கள்  விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் அதுதான் நடக்கப்போகிறது .//லாலா

    அதனால்தானோ    தமிழகத்தில்  ஏழ்மையும்,ஈழ்த்தில்  தமிழ் அகதிகழும்
    மலிந்து காணப்படுகின்றனர்.   வாழ்வதும்  அனுபவிப்பதும்
    அன்னிய  நாட்டில்  பெயர் கொடுப்பதும்   தலைதாழ்த்தி வணங்குவதும்
    மாற்ரானை.      இதுவே   தமிழனின்  நவீன  நாகரீகம்.

    • lala says:
      12 years ago

      ருவாண்டா  , ஆமேனியர்கள் இலட்சணக்கில் படுகொலை  செய்யப்பட்டபோது   பேசாமல் இருந்த  உலகம்தான் இன்று அந்த படுகொலைகள் அனைத்தும் இனப்படுகொலை  என  ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளன .

      அது போல் இன்றில்லாவிட்டாலும்  வருங்காலத்தில்  ஈழத்தில்நடை பெற்றது இனப்படுகொலைதான் என வும் அந்த இனப்படுகொலைகளை செய்தவர்கள்  யார் எனவும்  இதே சர்வதெச சமூகத்தால்  ஏற்றுக்கொள்ளப்படும் .

      உங்களது எசமானர்களுக்கு அந்தநிலை ஏற்படப்போகிறதென்பதால்தான் ஆவேசப்பட்டு  அங்கு அகதிகள் இருக்கிறார்கள் , இங்கு  அகதிகள் இருக்கிறார்கள்  என  ஆடுநனைகிறதென  ஒநாய் அழுதது  போல்நடிக்கிறீர்கள் .
      இதற்கு முன்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக  முதலைக்கண்ணீர் வ்  வடடித்ததும் இதே கதைதான்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...