மோடியை ஆட்சிக்குக் கொண்டுவந்தால் ஈழம் பிடிப்பதற்கு வசதியாகவிருக்கும் என்று தமிழகத்தில் வை;கோபாலசாமியும், புலம்பெயர் நாடுகளில் புலியின் வாரிசுகள் என்று கூறிக்கொள்பவர்களும் மக்களை நம்பவைத்து மீண்டும் கழுத்தறுத்துள்ளார்கள். இன்று மக்களை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் வை,கோ உட்பட்ட புலம்பெயர் கூட்டம் தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வன்னியிலிருந்த புலிகளின் தலைமையையும் மக்களையும் நம்பவைத்து கூண்டோடு கொன்று போட்டது. 2009 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா வெற்றிபெற்றுவிடும் என்றும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்றும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறவேண்டாம் என்றும் வை.கோவும் புலம்பெயர் கும்பலும் புலிகளை வன்னியில் சிறைப்பிடித்து வைத்திருந்தது.
அதனை நம்பி நந்திக்கடலில் அப்பாவித்தனமாகக் குந்தியிருந்த புலிகளின் தலைமை கூண்டோடு அழிக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் நாட்டிலோ புலம்பெயர் நாடுகளிலோ எழுச்சிகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரபாகரன் இறக்கவில்லை அமைதியாக இருங்கள் அவர் வந்து போராடுவார் என அழைப்புவிடுத்த பிழைப்புவாதி வைகோ இற்கும் வன்னிக் கொலைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இன்று நேற்றல்ல நீண்ட பல வருடங்களாகவே மக்களுக்கு உண்மைகளை மறைத்து அவர்களை ஏமாற்றி பணத்தையும் வாக்கையும் திருடும் இந்தக் கும்பல்கள் அழிவுகளின் பின்னர் இன்னும் வாழ்கின்றன.
தனது தொகுதியான ஹம்பாந்தோட்டையில் எதிரி வக்கீலை நேரடியாகவே கத்தியால் குத்தி கொலைசெய்து ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சவைப் போன்றே நரேந்திர மோடி தனது தொகுதியில் இனப்படுகொலை செய்தே ஆட்சிக்கு வந்தவர். இந்த இரண்டு கொலைகாரர்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல.
வை.கோ பார்த்துக்கொண்ட்ருக்கும் போதே, 2012 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திற்கு ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியது பாரதீய ஜனதாக் கட்சி.
இந்த நிலையில் ராஜபக்சவை அழைக்க வேண்டாம் என்று அவரின் சக கொலைகாரனான மோடியிடம் மனுப்போட்டு இரந்துகொண்டிருக்கிறது புலம்பெயர் பிழைப்புவாதக் கும்பல்கள். இவர்கள் தம்மைப் புலிகளின் தொடர்ச்சி எனக் கூறிக்கொள்கின்றனர்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலயோ போர்க்குற்றமோ அல்ல என வெளிப்படையாகவே கூறிய பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவரும் புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராகப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பவருமான சுஷ்மா சுவராஜ் வை.கோ இன் நண்பரும் கூட. 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு சுற்றிவழைக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த போது பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்தது. முற்றுகையை விலக்காவிட்டால் இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இந்தியப் படைகள் இறங்கும் என வை.கோ அங்கம் வகித்த அரசே புலிகளை மிரட்டியது. புலிகள் முற்றுகையை விலக்கிக்கொண்டனர்.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அதிகமாக தாக்கப் பட்டது வை.கோ அங்கம் வகித்த பாரதிய ஜனதா ஆட்சில் இருந்த 1998ல் இருந்து 2004 வரைதான்.
இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே புலம்பெயர் பிழைமிஒப்புவாதிகள் வை.கோ ஐ ஆதரித்து மோடியிடம் மண்டியிடுகின்றனர்.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் தமிழர்களின் நண்பர்களே பெரும்பான்மை. அவர்கள் மோடி, ராஜபக்ச போன்ற பாசிஸ்டுக்களின் எதிரிகள். ஒடுக்கப்படும் மக்களின் நண்பர்கள். தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த எண்ணும் புலம்பெயர் பிழைப்பு வாதிகள் மோடியை ஆதரிப்பதால் முழுத் தமிழ் மக்களையும் அவர்களின் நண்பர்கள் அருவருப்பாகப் பார்க்கின்றனர்.
போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து அதனை அழித்த அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு இனிமேலும் அது முழைவிடாமல் பேரினவாத இலங்கை அதிகாரவர்க்கத்திற்குத் துணைபோகின்றனர். இதனையே ஒற்றுமை என்றும் பலம் என்றும் அழைத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்று கியூ பிரிவினரதும், பொலிசினதும் இரும்புப் பிடிக்குள் முகாம்களுக்குள்ளும் வெளியிலும் வாழும் ஈழத் தமிழர்களைக் கேட்டால் தெரியும் ஜெயலலிதா யார் என்று. இன்றைக்கு வரைக்கும் ஈழத் தமிழர்களுக்காக அவர் எந்த நற்செயலையும் செய்ததில்லை. ரஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிகளைச் சிறையிலடைத்ததிலிருந்து சிறப்பு முகாம்களில் விசாரணையின்றி கிரிமினல்கள் போல அகதிகளை அடைத்து வைத்திருப்பது ஜெயலலிதா அரசே.
இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என முதலில் அறிவித்த இந்தியத் தலைவர் ஜெயலலிதாவே. வெற்றுத் தீர்மானங்களைத் தேர்தலில் சிறிய பகுதி வாக்குக்களைப் பொறுக்கும் நோக்குடன் நிறைவேற்றிவிட்டு தமிழர்களையே ஒடுக்கும் ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமியின் நண்பர். சுப்பிரமணிய சுவாமி
இனக்கொலையாளி ராஜபக்சவின் நண்பரும் ஆலோசகருமாவார். போர் நடந்துகொண்டிருக்கும் போது பயங்கரவாதம் அழிக்கப்படுவதாக பாசிஸ்ட் ராஜபக்சவைப் பாராட்டியவர். போர் முடிந்தபின்னர் இலங்கை இராணுவத்தின் வெற்றி விழாக் கொண்டாடங்களில் இரண்டு தடவை கலத்துகொண்டவர்.
மோடியின் புதிய அரசில் சுப்பிரமணிய சுவாமி நிதியமைச்சராகப் பதவியேற்பதற்காகக் காத்திருக்கும் இந்து அடிப்படைவாதி.
தேர்தல் நடைபெற்ற காலத்தில் மோடிக்கு ஆதரவாக அதாவது ராஜபக்சவின் நண்பர் சுப்பிரமணிய சுவாமிக்கு அதரவாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.பின்னர் பாரதீய ஜனதா என்ற கொலைப்படையின் தலைமையில் வாக்குக் கேட்டுத் தோற்றுப் போன வை..கோவிற்காகக் கண்ணீர்வடித்தார்கள்.
ஜெயலலிதா, நரேந்திர மோடி, சுப்பிரமணிய சுவாமி, வை.கோ கும்பலோடு கூட்டுவைத்திருப்பதைத்தமிழ்த் தேசியம் என்று கூறும் புலம்பெயர் கும்பல்கள் இந்திய அரச அதிகாரம் சில அதிகாரிகளின் கைகளில் உள்ளது என்ற மாயையை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இனிமேல் அதிகாரிகளைத் தாஜா செய்து இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்றுவோம் எனப் பிரச்சாரம் செய்து மக்களிடம் பணம் கறக்க இந்தக் கும்பல்களுக்கு இது வாய்ப்பளிக்கும்.
நரேந்திர மோடியை அதிகாரத்திற்கு அழைத்துவந்து பிரதமர் சிம்மாசனத்தில் இருத்திய பல்தேசிய வியாபார நிறுவனங்களே அதிகாரிகளையும் கூட தீர்மானிக்கிறது என்பதை மறைப்பது அவர்களின் பிழைப்பிற்கு அவசியமானது.
காலத்திற்குக் காலம் ஒவ்வொரு பிழைப்பு வாதியைக் காட்டி மக்களை ஏமாற்றுவதும் பின்னர் துரோகி என்பதும் புதியவர்களைப் பிடித்து வருவதும் இவர்களது வழமை. இந்த வகையில் இப்போது ஜெயலலிதாவைப் பிடித்துவைத்திருக்கிறார்கள். இதை வைத்தே சில வருடங்களை ஓட்டிவிட்டு இன்னொரு புதியவரைத் தேடுவார்கள். இதனை எதிர்ப்பவர்களையும் மக்களுக்கு உண்மையை கூற முற்படுபவர்களையும் துரோகி என்பார்கள். போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த தவறுகளுக்காக புலிகளையும் பிரபாகரனையும் விமர்சிப்பவர்களை துரோகிப்பட்டம் கட்டும் புலம்பெயர் புலி வியாபாரக் கும்பல்கள் ஜெயலிதா மோடியின் பதவியேற்பில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக அறிக்கைவிடுத்து ஆராத்தி எடுக்கின்றன. தமிழின விரோதி சுப்பிரமணிய சுவாமியை அமைச்சராக்கக் கூடாது என்று ஆர்பாட்டம் நடத்த ஜெயலலிதா தயாரா என்று இவர்கள் கேட்கமாட்டார்கள். ஜெயலலிதாவே தமிழின விரோதிதானே? இவை அனைத்திற்கும் எதிரான புதிய மக்கள் சார்ந்த தலைமை கட்டியெழுப்பப்படும் வரையும் ஈழ மக்களின் அவலம் இவர்களுக்குப் பொன்முட்டை போடும் வாத்து!
After Lok Saba victory… Jaya taking another step for State govt election…
May be Vaiko received another transaction… he is going to Delhi…
Nedumaran, Seeman, Captain keep silence…
Who knows ? may be you receive another transaction from Rajapaksha
Yes… Since 1982 I’m getting…
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
இது ஒரு தொடர்களை என்பதனை மறுக்க முடியாது . ஆனால் இவர்களது மன்னிக்க முடியாத தவறுகளுக்கு காலம் பதில் கூறும் என ஒரு வார்த்தையில் கூற முடியாது. காரணம் எதிரியானவன் தன்னை வளர்த்துக் கொள்ள தமிழர்களை தொடர்ந்து பயன்படுத்தியமை முள்ளிவாய்கால் அவலமும் நம்பிக்கை துரோகங்களும் அதுவே இன்னும் தொடரும் அத்தியாயம்
ஆனால் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதனைப்போல் முள்ளிவாய்கால் அவலம் எமது வரலாற்றின் வெற்றி அதில் கையளிகப்பட்டவை அத்தனையும் எமது சமூகத்திற்கான பெரும் சொத்து அதனை அடையாளம் காண தர்ம வழிகளை மதித்து சத்தியத்தின் இலக்கை அடையாளப்படுத்த வேண்டும்.
அதற்கான எந்த முயற்ச்சிககும் தமிழர்கள் சந்தற்பங்களை ஏற்படுத்தாமல் சர்வதேசம், இலங்கை ,இந்தியா என்பது அவர்கள் அவர்களுகான சந்தற்பங்களை பயன்படுத்தும் போது ஊடகங்களை அமைப்புக்கள் வழிநடாத்த அதனை மக்கள் பார்யிடுவது மட்டுமல்ல சமூகம் தவறாக தம்மை வழிநடத்தி எதிர்கால சமூகத்தை எதிரி அழிப்பதல்ல நாமே எமது இன அழிவிற்கு காரணமாக செயல்படுகினறோம். என்பதனை எத்தனை தமிழர்கள் ஏற்பார்கள் ?
ஒவ்வொரு சந்தற்பங்களிலும் நியாயங்கள் உண்டு என்பதற்காக ஏற்க்க முடியாது அதனால் அவற்றில் எமக்கு எதிராக வளர்கப்படுவதனையும் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது காலத்தின் அவசியமானது. அதனைப்போல் ஊடகங்கள் அமைப்புக்களை விமர்சிப்பது மட்டும் அல்ல தமிழர்களினது விடுதலைப்போராட்டம் வரலாற்றின ; தீர்பை நோக்கி நகர்தப்பட வேண்டும் அதற்காக தாயகமக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பணி ஆற்றவில்லை, தமிழக மக்களும் தலைவர்களும் பணி ஆற்ற வில்லை, புலம் பெயர் சமூகம் பணி ஆற்ற வில்லை என கூற முடியாது.
யதார்த்தம் ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு பொறுப்பை கொடுப்பது போல் தமிழர்களிடமும் ஈழத்தின் வரலாறு ஒப்படைகப்பட்டுள்ளது . அதனால் தான் விடுதலைப்புலிகள் அமைப்பு தாயக மக்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்று புலம் பெயர் சமூகத்திடம் ஒப்படைத்த நா.க.தமிழீழ அரசாங்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது அதனை நாம் எமது எதிர்பார்ப்புக்களை திணிப்பதற்காக பயன்படுத்த முடியாது. என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பாடுகள் வளர்கப்பட வேண்டுமே தவிர தமிழர்கள் தமிழர்களை குறை சொல்வதனை தவிர்த்து தேவைகளை புரீந்து பணிஆற்றுவதே காலத்தின் அவசியமாகும்.
நீங்கள் சுய சிந்தனையுடன் எழுதியதா? இனப் பிரட்சனையில் வைகோ அவர்களை இத்தனைக் கொச்சைப் படுத்தியதற்கு நேரடியாக அவரைக் கொன்றிருக்கலாமே! 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்ததற்குக் கூட நீங்கள் ஏதாவது சொல்லலாமே!
you all information true.send .your future info to me.