இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.
BBC.
எது போதும் என்று யார் தீர்மானிப்பார்?
தமிழீழம் கேட்டதையே மறுத்த நேர்மையாளர் அல்லவா இவர்.
த.தே.கூ.விலிருந்து சிலர் கழற்றப் பட்டட்ய்கற்கான விளக்கத்தை முதலில் தருவாரா? அது திருப்தியில்லை இது திருப்தியில்லை என்ற மொட்டை விளக்கங்கள் வேன்டாம்.
குற்றச்சாட்டுகளை முழுமையாக முன்வைக்கட்டும்.
அவை முன்வைக்கப்பட்டால், த.தே.கூ.விலிருந்து சம்பந்தன் உட்பட எல்லாருமே விலக்கப் பட்டிருக்க வேண்டும் என்று விளங்கும்.
அய்யா,சூழ்நிலைகளூக்கு ஏற்ப சிந்திப்பதே அரசியல் முரண்டு பிடிப்பதல்ல.தலைவர்கள் முடிவுகலை ஏற்காது விமர்சிப்பவர்கள் சரியான அரசியல் கட்சிகளுக்கு சரி வர மாட்டார்கள் அவரகளால் இடைன்சல்கலே.லண்டனில் இருந்து தங்கள் கருத்து ஆச்சரியமளீக்கிறது.சீ,வீ,கே.சிவஜானம் அய்யா வருவது கேட்டு மகிழ்கிறோம்.திரு,சரவணபவன் அவர்கலை நான் கம்பன் கழ்க விழாக்களீல் கண்டிருக்கிரேன்.மறூபடியும் அந்தக் காலங்கள் வாராதோ? நமது மக்கள் வாழ்வு புத்துயிர் பெறூமெனும் நம்பிக்கையில் யாழ்ப்பாண ஓல்ட் பார்க் வாழ்க்கை அங்கிருந்த சீன உணவகம், வை.எம்.சி.எ. கிளப் எல்லாம் நினைவுகளீல் வந்து போகிறது. நாம் வாழ்ந்த அந்த அமைதியான் வாழ்க்கை நமது மக்களூக்கும் வேண்டும்.