வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை என்ற முழு நாட்டிலும் சிறுபான்மையினர். ஆக அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். அல்லது தேசிய இனமாக வளர்ச்சியடையும் நிலையிலுள்ளவர்கள். அவ்வாறான தேசிய இனம் ஒன்றிற்குப் பிரிந்து சென்று தனியாட்சி அமைப்பதற்கான உரிமை உண்டு. பெருந்தேசிய ஒடுக்குமுறை பிரதான முரண்பாடாகியுள்ள சூழலில் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான உரிமைக்காகப் போராடுதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
பிரிந்து செல்லும் உரிமையைத் தேசிய இனம் என்ற அடிப்படையில் கருத்தியல்ரீதியாகச் சிதைப்பவர்கள் பலர்.
நேரடியாகவே சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஒரு வகையினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உட்பட அரச துணைக் குழுக்கள் மற்றும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்பவர்களை இந்த வகையினுள் அடக்கிவிடலாம்.
இலங்கையில் வெளிப்படையான அரசியல் நடத்த வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பிரிவினையைக் கோரமுடியாது என்பதே இவர்களின் வாதம். பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது பிரிவினை அல்ல. தேசிய இனம் என்ற அடிப்படையில், வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமை உண்டு.
அந்த உரிமை அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிந்து செல்வதற்கான உரிமை தேசிய இனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டால், தேசிய இனம் ஒடுக்கப்படும் போது பிரிந்து செல்வதும், விரும்பினால் கூட்டாட்சி நடத்துவதும் அத் தேசிய இனத்தின் உரிமையாகும். அதனால் தான் பிரிந்து செல்லும் உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமையே தவிர பிரிவினை அல்ல, இந்த அடிப்படையில் இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவதற்கு எந்தக் கட்சிக்கும் தடை இல்லை.
போலி இடதுசாரிக் கட்சிகளோ, பிரிந்து செல்வது என்பது மக்களைப் பிளவுபடுத்தும் எனத் தமது வசதிக்கு ஏற்ப சுய நிர்ணைய உரிமையை தத்தெடுத்து திரிபுபடுத்தி மாற்றி விடுகின்றனர். இப் போலிகளின் பிறழ்வடைந்த கருத்துக்களால் தமிழ்ப் பேசும் மக்கள் ‘இடதுசாரிகள்’ மீது வெறுப்படைந்துள்ளனர் என்பது வேறு விடையம்.
இரண்டாவதாக, சுய நிர்ணைய உரிமைக்கான கருத்தைச் சிதைப்பவர்கள் தமிழின வாதிகள். ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமையை வெறும் மொழிப் பிரச்சனையாக மாற்றி தமிழர்கள் என்ற பொதுவான அடைமொழிக்குள் அவர்களைக் கொண்டுவந்து விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் தனியான தேசிய இனமான மலையகத் தமிழர்களைப் பற்றி அவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை.
இவர்களின் அடிப்படைக் கோரிக்கை எந்தத் தர்க்க நியாயங்களும் அற்று தமிழர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்பதால் தமிழீழம் வேண்டும் என்று கோருகின்றனர். ஒரு தேசிய இனம் என்பது அதன் சுய பொருளாதாரத்தை அன்னியத் தலையீட்டிற்கு எதிராக வளர்த்தெடுக்க வேண்டும், சுய நிர்ணைய உரிமையை தமிழர்கள் என்று மொழி சார்ந்த இனக்குழுவின் உரிமையாகக் குறுக்கிய அன்னியர்களின் தலையீடு சுய பொருளாதாரம் என்பதற்குப் பதிலாக தமிழர்களின் பொருளாதாரம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.
ஒரு தேசிய இனத்திற்குப் பொதுவான கலாச்சரம் ஒன்றைக் காணலாம். வட கிழக்குத் தமிழர்களிடையே பொதுவான கலாச்சாரம் என்பது வரலாற்று வழிவந்த தொடர்புகள் ஊடாகத் உருவான ஒன்று. தமிழர்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்ட்த்தைச் சிதைக்கும் தமிழினவாதிகள், தமிழினத்தின் கலாச்சாரம் என்ற விசித்திரமான ஒன்றை முன்வைக்கின்றனர். ஒரு தேசிய இனத்தின் தேசியக் கலாச்சாரத்திற்கு ஆபத்தான இக் கருத்தியல் வாக்குக் கட்சிகளின் அரசியலை விட ஆபத்தானது.
தேசிய இனம் ஒன்றின் சுய நிர்ணைய உரிமை என்பதையே தலை கீழாகப் புரட்டிப்போட்டு தமிழர்கள் என்று மொழி சார்ந்த இனக்குழுவின் பிரச்சனையாகக் குறுக்குவது என்பது சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைய அழிப்பதற்கான நாசகார வழிமுறையாகும்.
பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் முற்போக்கானது. அன்னியப் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள் நாட்டில் தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் தேசிய விடுதலை தங்கியிருபதால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது. இதனால் ஏகதிபத்தியங்களும் அதன் உளவு நிறுவனங்களும் தமிழின வாதிகளைப் பயனபடுத்தி தேசிய விடுதலையைச் அழிக்க முற்படும் என்பது வெளிப்படையானது.
இந்திய அரசு தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கிச் அழித்தது போன்று தமிழின வாதிகள் ஊடாக இன்று அழிக்க முற்படும் என்பது வெளிப்படையானது.
தென்னிந்தியாவிலிருந்து தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமையை மொழிசார்ந்தஇனவாதமாக மாற்றி அழிக்க முற்படும் குழுக்களின் பின்னால் உளவு நிறுவனங்கள் செயற்படுவதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு.
தமிழ் நாட்டிலிருந்து ரிமோட் அரசியல் தமிழ் இனவாதம் பேசும் ஒவ்வொரு தனி மனிதர்களும் சுய நிர்ணைய உரிமைக்கு எதிரானவர்களே. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் கூட ரிமோட் இனவாதிகள் கட்டளையிடும் அளவிற்கு பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குக் கட்சிகள் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் தற்காலிகத் தடைகள் மட்டுமே. இங்கு ஆபத்தானவர்கள் சுயநிர்ணைய உரிமை என்ற கருத்தியலையே சிதைத்துக் கடத்திச் செல்லும் தமிழினவாதிகளே.
கட்டுரையின் தரத்தினை இணைக்கப்பட்ட வீடியோவில் தெரிவிக்கப்படும் கருத்துக்களும் மொழியும் பாதித்துவிட்டது.
என்ன எனந்த வீடியோ?அப்படி ஒன்றையும் காணவில்லையே?
கட்டுரையின் தரம் ஈழம், தமிழீழம், ஸ்ரீலங்கா. சிலோன், இலங்கை எனும் சொற்களை தாறுமாறாக பாவித்ததாலோ, பொருத்தமான முறையில் பாவிக்காமல் விட்டதாலோ பாதிப்படைகிறது.
இணைக்கப்பட்ட படத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தால் வரையறுக்கப்படும் நிலப்பரப்பு (மன்னார் மாவட்டத்தின் தெற்கு எல்லையை நோக்கவும்) தமிழீழம் எனப் பெயரிடப்படுவது, யாழ்ப்பாணத்திற்கு முதலிடம் போன்ற மசாலா பற்றி அவதானம் வேண்டும்.
// சுய நிர்ணைய உரிமைக்கான கருத்தைச் சிதைப்பவர்கள் தமிழின வாதிகள்
இது எவ்வளவு பிழையான கருத்து!
கிட்டத்தட்ட முழு உலகமே சேர்ந்து சிதைக்கும் அளவுக்கு தமிழரின் போலி அரசியலும் போலி விடுதலை அமைப்புகளும் சுய நிர்ணைய உரிமையை நாசமாக்கின. தொடர்ந்து சிதைத்துக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கே சவால் விட்டு முதலாவதிடம் பிடிக்க தற்போது எத்தனிப்பது தமிழினவாதம் எனும் இன மேலாதிக்க கோட்பாடு (தென்னிந்திய பிராந்திய அடிப்படையில் தமிழர் பெரும்பான்மையினர். சென்னை ஒரு முக்கிய சர்வதேச மையம். இந்தியாவில் மொழி, இனமேலாதிக்கம் என்பவவற்றை எதிர்ப்பதில் சென்னை சார்ந்த அரசியல் பெரியார் காலந்தொட்டு முன்னணியில்)
ஆங்கிலத்தில் ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பதுவும் நஷனலிஸம் [தமிழில் தேசியவாதம்] (Nationalism) என்பதுவும் ஒன்றல்ல. ‘நேஷன் ஸ்டேட்’ என்பதற்கு தமிழ் சொல் இல்லாத அள்விற்கு தற்கால உலக அரசியலில் பின்தங்கியது தமிழ் மொழி.
இன்னும் எத்தனையோ மொழி வளர்ச்சி சார்ந்த பின்தங்கல்களால் தமிழ் அரசியல் பாதிப்புற்றது என்பதை நாம் உணர்வதுவும் முக்கியம்.
இப்பின் தங்கல்களில் இருந்து விடுபடுவது மிக முக்கியம்.
மேலுள்ள கட்டுரையிலிருந்து ஒரு உதாரணம் :-
// இலங்கையில் தனியான தேசிய இனமான மலையகத் தமிழர்க[ள்]
ஈழத்தில் மலையகத் தமிழர்களும் தனியான தேசிய இனம் என்பதே சரியானது.
(இலங்கை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சொற்பதம் ஆகிவிட்டது.
ஈழம், தமிழீழம் என்பன என்ன? அவற்றின் பாவனை வரலாறு என்ன? என்பதில் தெளிவு முக்கியம்)
மலையக மக்களிடம் ‘ஈழத் தமிழர்’ அந்தஸ்தை, அவர்களும் ஈழத்தில் நிலைகொன்ற தமிழ் பேசும் மக்கள் என்ற காரணத்தினால் வழங்காமல் விட்ட ‘ஈழத் தமிழர்’ எனும் தேசிய இனத்தின் தலைமைகள் எவ்வாறு சக மானிடரை, சக மொழிபேசும் மக்களையே வரலாற்று ரீதியாக ஒடுக்கி ஆள எத்தனித்தன என்பதிலும் தெளிவு வேண்டும்.
ஈழத்தமிழரின் பூர்வீக நிலங்களில் பூர்விகக் குடிகளான முஸ்லிம் மக்கள் ‘ஈழத் தமிழர்’ என்பதிலும் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்’ என ஓரங்கட்டப்படுவதிலும் விளக்கம் வேண்டும்.
ஈழத்தமிழரின் பூர்வீக நிலம் என்பது பெருமளவில் ‘தமிழீழம்’ எனும் கோட்பாட்டை அல்லது சரியோ பிழையோ அண்மைய தசாப்தங்களில் ‘நடத்தை அடிப்படையில்’ (de facto) தனித்தேசம் என கூக்குரலிட்ட பிரதேசங்கள்.
புத்தளம், கற்பிற்றி குடாநாடு ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களே தமிழ் மக்களாக பெருமளவு இருந்தும் தமிழீழ வரைபடங்கள் அவர்களை உள்ளடக்கியது. ஆனால் நடத்தையில் இது ஒரு பிளவுபட்ட கருத்தானது.
ஈழத்தில் தமிழ் இனவாதத்தை இக்காலகட்டத்தில் முன்னெடுக்க முடியாதது ஒருபுறம். மறுபுறம், அப்படி முன்னெடுப்போர் எளிதில் தமிழ் நாட்டில் இயக்கப்படும் தமிழ் பேரினவாதத்துடன் சேர்த்தே சுட்டிக்காட்டப்பட்டு ஒதுக்கப்படுவர்.
தமிழ் நாட்டில் தமிழர் தன்மான உணர்வுகளுக்கும் தமிழ் பேரினவாதத்திற்கும் இடையில் முரண்பாடு வேறொரு விடயம். இம்முரண்பட்ட கருத்துக்கலை வைத்து வியாபாரம் செய்வோர் ஈழத்தமிழர் அவலத்தை வைத்து தெரிந்தோ தெரியாமலோ உணர்ச்சிபூர்வமாக முதலிக்கண்ணீர் வடிக்க ஒரு சந்தர்ப்பமாக பாவிக்கின்றனர்.
ஈழத்தமிழர் ஒரு தனித்தேசம் என்பதை நிலை நாட்ட தன்மான உணர்வுகளை முழு ஈழத்தீவிலும் சரியோ பிழையோ த.வி.பு பெருமளவு வளர்த்தே உள்ளது.
1981-ஐ போல் குடிபோதையில் கொழும்பில் இருந்து வாறவன் போறவன் எல்லாம் ரயிலில் பயணித்து யாழ் நகரில் கும்மாளம் போட்டு நூலகத்தை எரித்து திரும்புவது என்பது இப்போது நடக்கப்போவதில்லை.
அதே வேளை கடைசிவரை தமிழ் நாட்டு அரசியல் ஏமாற்றுவாதிகளிடம் சிக்கித் தவித்த த. வி.பு இயக்கம் அரசியலில் தமது இரும்புப் பிடியிலிருந்த தமிழீழம் எனும் பதத்தை அர்ப்பணித்தது. அன்றிலிருந்து ‘ஈழம்’, ‘தமிழீழம்’ என்பதில் கேட்பாரற்று மேலும் பல குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
தமிழ் நாட்டிலிருந்தும் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவது வேறு ஆனால் தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலம் ஒரு உதைபந்தாக விளையாடப்படுவது வேறு.
சரி, ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது சனாதிபதி என்பதை இங்கிலீசில்சொல்லும் பாப்பம்?
##ஈழத்தமிழரின் பூர்வீக நிலங்களில் பூர்விகக் குடிகளான முஸ்லிம் மக்கள் ‘ஈழத் தமிழர்’ என்பதிலும் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்’ என ஓரங்கட்டப்படுவதிலும் விளக்கம் வேண்டும்.## பறை
முஸ்லிம்களை ஈழத்தமிழர் என்பதிலிருந்து யாரும் அவர்களை ஒரங்கட்டவில்லை . அவர்களாகவே தம்மை தாமே இலங்கை சோனகர் என அழைத்து ஏனிய சமூகங்ளிலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொண்டனர் , இந்த உண்மையை மறைத்து விட்டு அல்லது வசதியாக மறந்து விட்டு மற்றவர்களை நோவதில் பயனில்லை .
ஈxழத்தமிழர்களை பொறுத்தவரை தம்மை தமிழர்கள் என்றொ தமிழ் பேசும் சமூகமென்றொ அழைத்துக்கொள்ளாதவர்களை , தமிழ் பேசும் சமூகம் என அழைத்ததே பெரிய விடயம் .
ஆனால் அதிலும் தமிழர்கள் மேல் தான் குற்றம் என்பது போல் குறை கண்டு பிடித்து முட்டைக்கு முக ச்சவரம் செய்ய முற்படுபவர்களை என்ன செய்யலாம் ??
ஆம். ஈழத்தில் போத்துக்கீசரின் அடக்குமுறையில் முஸ்லிம் மக்களே பெரிதும் பாதிப்புற்றனர். சைவம் என்பதுவும் பாதிப்புற்றது – சைவ சமுதாய உள்ளக அடக்குமுறைகள் ஒழியாமல் போனது கவலைக்குரியது.
முஸ்லிம் மக்கள் ஏனைய தீவு வாசிகளில் இருந்து வேறுபட்டு வாழ்வது அவர்களது உரிமை. ஆனால் அவர்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்பது மொழிப்பாவனையால் நிர்ணயிக்கப்படுவது.
தமிழ் நாட்டில் போத்துக்கீசரின் தாண்டவம் பரவியது வெகு குறைவு. அங்கு முஸ்லிம் மக்களின் சுமூக வாழ்க்கை இப்பொழுதும் தமிழ் எனும் அடையாளத்துடனேயே செழிக்கிறது.
##முஸ்லிம் மக்கள் ஏனைய தீவு வாசிகளில் இருந்து வேறுபட்டு வாழ்வது அவர்களது உரிமை ##
அப்படியானால் அந்த ஏனைய தீவு வாசிகள், முஸ்லிம்களை தமிழ் பேசும் முஸ்லிம்கள் என ஒரங்கட்டுகின்றனர் என அவர்களது உரிமை மீது காழ்ப்பு கொண்டு விமர்சிப்பது ஏனோ ?
அந்த உரிமை முஸ்லிமக்ளுக்கு மட்டுமல்ல ஏனைய தீவு வாசிகளுக்குமுண்டு என்பதை உங்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன் .
போத்துக்கேயர்களின் வருகைக்கும் முஸ்லிம்களின் இன்றைய போக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை . ஒரு அன்னிய ஆட்சியில் குடி மக்கள் எவ்வாறு ஒடுக்கு முறைக்குள்ளாவர்களோ அந்த வகையிலேயே முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் . அவர்கள் ஒன்றும் பிரத்யேகமாக பாதிக்கப்படவில்லை .
இன்னமும் சொல்லபோனால் போத்துக்கேயர் வருகைக்கு முன்னர் வந்தேறு குடிகளான முகமதிதியர்களால் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் வசித்த தமிழ் மக்கள் பாதிப்புக்குள்ளானர்கள் .முகமதியர்களின் கொடுமைகளை சமாளிப்பதற்கு போத்துகேயர்களின் உதவியை அந்த தமிழர்கள் நாடினார்கள் . போத்துக்கேயர்களிடமிருந்து , துப்பாக்கி , வெடிமருந்து தொழில்நுட்பங்களை பெற்று முகமதியர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொண்டார்கள்.
அதற்கு கைமாறாக கத்தோலிகர்களாக மதம் மாறினார்கள்