தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் காவற்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்