நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் இதன் போது மோட்டார் சைக்கிளில் திடீரென வந்த இலங்கை அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஆர்பாட்டத்தில் ஏந்தியவாறு சென்று படம்பிடித்துக்கொண்டனர்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிறீ தரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி.தெரிவித்ததாவது,
“ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலையே இது. எனினும், நாங்கள் இதற்குப் பயப்படப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம். இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது புலனாய்வுப் பிரிவினரே மோட்டார் சைக்கிளில் புலிக்கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப நினைத்தார்கள். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் முதியர் ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களைப் புலிகளின் போராட்டமாகச் சித்தரிக்க முயலும் புலனாய்வுப் பிரிவினரையும், துணைக் குழுக்களையும் ஆதரவாளர்களையும் இலங்கை அரசு உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகிறது. புலம் பெயர்நாடுகளில் ஆரம்பித்த புலனாய்வுப் பிரிவு ஆதரவாளர்களின் இந்தநடவடிக்கை வெற்றியளித்த பின்னர் இது தமிழ்ப் பிரதேசங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்றைக்கு இலங்கையில் நடைபெறும் ஆட்சி புலிகளினுடனான கூட்டாச்சி.அதாவது பிரபாகரனும் அவர் சந்தோரையும் அகற்றிவிட்டு மற்றைய புலிகளுடன் செர்ந்துநடத்தும் கூடாச்சிதான் இது.
புனர்வாழ்வு என்பதெல்லாம் தங்களின் கூடாச்சிக்கு ஆட்களை தேர்தெடுக்கும் நேர்முக பரீச்சை நிலையங்கள்.இங்கே இருந்து தங்களின் குணநலனுக்கு ஏற்றவர்களை பிரித்தெடுத்து தன்னுடன் சேர்த்து வைத்திருகிறது இலங்கை அரசு.
புனவர்வாழ்வு என்னும் கண்துடைப்புக்கு அப்பால் ஆய்ரம்,ஆய்ரம் புலிகள் இன்னும் புலிகளாவே அதே குணநலத்துடன் அரசுடன் வாழ்கிறார்கள், இவர்களுடன் சேர்ந்து செய்யும் ஆட்ச்சிதான் இன்றைய அரசபயங்கரவாத ஆட்சி.
எண்ணிப்பாருங்கள், பிள்ளையான்,கருணா,கேபி மற்றும் இவர்களுடைய கூட்டாளிகள் பங்காளிகள் எல்லாம் மூன்று வருடத்திற்கு முன் பயங்கரமான பயங்கரவாதிகளா இல்லையா? இன்று நாம் கூறும் அரசபயகரவாதம் என்பது இவர்களின் கூட்டா இல்லையா?
அதேஅரசு,அதேஆட்சி,அதேபாதிக்கப்பட்டமக்கள்……
புலி இருப்பை உலகிற்கு காட்டடவும்>ராணுவமயமாக்கலை தொடரவும் >அரசிற்கு புலி இருப்பு தேவைப்படுகின்றது. இது நாடு கடந்த புலிக்கொடி ஏந்தல்களுக்கும் ஓர் விருப்பு மகிழ்ச்சியும்தான்.
Someone, wrote a great line in Tamil after the fall of the Mullaitivu Camp. He carried the Tiger Flag. He established new vigour. He saved the Tamil Pride. General Rohan Daluwatte said that the Mullaitivu Camp should not have been erected as it was not possible to defend it.