தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள், இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு உருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.
ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக்கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முறண்படுகிறார்.
BBC
I CANT SEE ANY POINT ON HIS STATEMENT.I DONT KNOW WHY?JEYALALITHA WAS REFUSED HIS ENTRY MR KALAIJAR MADE A INVITATION FOR HIM, I CANT UNDERSTANT HIM AT ALL.HE SHOULD BE THERE.
which is official language in Tamilnadu ! English or Tamil.!! colleges, schools, offices, business languages in tamilnad is ENGLISH NOT TAMIL. This is because of DMK POLICY AND PRACTICE. Only karuna family will cherish. Not tamil.and tamilans.
‘which is official language in Tamilnadu’
இரு பின்னூட்டங்களையம் பாரத்தால் தெரியவில்லையா ! உலகத்து; தமிழரெல்லாம் என்ன மொழியில் வாழ்கின்றனர் என்பது…
செம்மொழிமாநாடு என்பது தமிழ்தாய்க்கு உலகதமிழர்க்லால் எடுகப்படும் விழா
தமிழக அரசியல் அடிப்படையிலதனை யாரும் புரக்கனிக்க கூடாது
ஐயா இஙுல்லதமிழர்கல்நாஙலெ வெஞிரையில் விருக்கும்பொது உஙல் உதவிக்கு எங்ங வருவது
தமிழ்த்திரு. கார்த்திகேசு சிவத்தம்பி ஐயா அவர்களின் முடிவு மிகவும் சரியானதும் அறவழிப் பட்டதுமாகும்.
ஓரிலக்கம் ஈழத்தமிழர் கொடுமையாகக் கொல்லப்படவும் மூன்றிலக்கம் பேர் சொல்லொணாக் கொடுமைகளுக் காளாகி முடிவின்றி அல்லல் உழலவும் முழுமுதற் காரண ஆற்றலான இந்திய அரசுக்கு முழுமையாக உடந்தையாயிருந்தவர் கருணாநிதி.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு உறுதியில்லாத நிலையில், நாளைக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வழ்கின்ற நிலையில் செம்மொழி மாநாட்டைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது? கருணாநிதியின் அரசியல் நலனை முன்னிறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள தமிழன்பர்களை ஏமாற்றும் முயற்சியாகவும் நடக்க இருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது மனச்சான்று உடைய தமிழர் செய்யும் செயலன்று.
வதை முகாமில் வதைபடும் எம் மக்களின் நீதிக்கான குரலாய், முள்ளிவாய்க்காலில் புதையுண்டுபோன மானுட அநீதிக்கெதிரான அறைகூவலாய் இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் குரல்கள் சற்று காட்டமாகவே ஓங்கி ஒலிக்கட்டும். தமிழின் பேரால் பிழக்கும் பிழைப்புவாதிகளின் முகமூடிகள் தகர்த்தெறியப்படட்டும்.
இன்று வீர கேசரிசயில் (பக்கம் 1+2) வெளியான தகவல்கள் கவனிக்கத்தக்கவை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ள மாநாட்டுக்குப் பதிலாக இந்த மாநாட்டை நடத்தக் கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்து 12.10. அன்று கருணாநிதிக்கு நெருக்கமான ஒரு பேராசிரியருக்குப் பேராசிரியர் சிவத்தம்பி கடிதம் எழுதி ஊக்குவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி “இலங்கையில் தமிழர் அரசியலில் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது” பேராசிரியருக்கு அப்போது தெரியாதா?
கடும் எதிப்புக் கிளம்பியதும் போக மாட்டேன் என்று பேராசிரியர் சாடை காட்டினார்.
21.10 அன்று முன்னைய பேராசிரியருக்குத் தனது பின்வாங்கலை எழுதினார்.
இன்று வீரகேசரி நேர்காணலில் முடிவெடுக்க இன்னும் நாளிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
“இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?” — நாமக்கல் கவிஞரின் பாடல்.
MR SIVATHAMPY MAKING IT A BIG DEAL.
This is serious business.
What is sad is that academics like Sivathamby and his Tamilnadu counterparts do not see the gravity of the issues. They let Karunanithi play politics with Tamil studies.
Karunanithi is trying to take the people of Tamilnadu for a ride by hastily arranging a conference. Such conferences to be of any value need to be planned and executed well.
A fraud is being perpetrated on the people of Tamilnadu. That is why this conference should be rejected. Scholars like Professor Sivathamby, and TN academics (who unfortunately have become hangers on of politicians for their survival) should have known better.
They are equally to blame for playing along with Jarunanithi.
The International Tamil reserach coference was scheduled for early 2011. It got blocked on the pretext of TN Assembly elections. Then there was the call to get the international body to endorse Mr K’s stunt.
Comment should be based on the real issues at stake.
Tamil has become a plaything for the cheap politicians of Tamilnadu and it is a shame that academics are party to it.
It is time to put an end to this nonsense.