அண்மை காலத்தில் இலங்கை திரு நாட்டில் தயாரிக்கப்பட்ட திரையிடப்பட்ட சிங்கள திரைப்படங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கசப்புணர்வினையும், அந்நியத் தன்மையையும் ஏற்படுத்தி கொண்டிருப்பதனை காணலாம். விஜய குவேனி எனும் திரைப்படம் துவங்கி இன்று திரையில் காட்சிப்படுத்தப்படும் மகாராஜீ கெமுனு என்னும் திரைபடம் வரை இனவாதத்தினையும், பிரிவினை வாதத்தினையும் சிங்கள மக்களின் இதயங்களில் விதைக்கும் செயற்பாட்டினை மிகவும் சாதூர்யமாக செய்து கொண்டிருப்பது அனுபவமாகும். மேற்படி திரைப்படங்கள் இலங்கை தேசம், சிங்கள மண் என்பதனையும், தமிழர்கள் இலங்கை மண்ணை தூவம்சம் செய்ய வந்தவர்கள் என்பதனையும் அடையாளப்படுத்தி நிற்பதனை காணலாம். இவ்வாறான நச்சு கலைகள,; நச்சுக் கலைஞர்கள் கலையினூடாக பிரிவினை வாத அரசியலை செய்பவர்கள,; செய்ய முயற்சித்தவர்கள் மத்தியில் மனித நேயமும், ஏனைய சிறுபான்மை மக்களின் உரிமைகளை புரிந்துக் கொண்டும் மக்கள் இலக்கியங்களை இனம் கண்டு மக்களுக்காய் வாழும் பெரும்பான்மை இன கலைஞர்கள் பலரை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் தமிழ் சிங்கள ஐக்கியத்தினை செய்முறையூடாக சாதித்துக்காட்டிய நாடக திரைப்பட தயாரிப்பாளர் பராக்ரம நிரியல்ல பற்றித் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் காரணமாக இப்பகிர்வு கட்டுரை வரையப்படுகின்றது.
மலையக பிரதேசத்தில் முதன் முதலாக நாடகமும் அரங்கியலும் என்னும் பாடத்திட்டத்தினை பொகவந்தலாவை ஹொலி ரோசரி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. ஹொலி ரோசரி பாடசாலையின் அதிபராக கடமையாற்றி நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கும் திரு. N. நாகலிங்கம் இப்பாடத்தினை ஆரம்பித்தார். பல மாணவ மாணவிகளை பல்கலைக்கழகத்திற்கு இப்பாடத்தின் மூலம் செல்ல அத்திவாரம் இட்டார்.
இந்த பாடசாலையில் உருவான பல மாணவர்கள் அவர்களின் பயணத்தினை பல துறைகளில் ஆரம்பித்தனர். இவர்களில் ஒரு சிலரை திரு பராக்ரம நிரியல்ல இனம் கண்டு தனது ஜன கரலிய என்னும் நாடக குழுவில் இணைத்து நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
பராக்ரம நிரியல்ல அவர்களின் ஜன கரலிய மக்கள் களரி எனும் நாடக குழுவில் தமிழ் சிங்கள இஸ்லாமிய கலைஞர்கள் பங்கு கொள்வதும,; அவரது நாடகங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் மேடையேற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தேசிய நாடக கலைஞரான ஹபீப் தன்வீரின் ‘ சரண்தாஸ் சோர்’ நாடகத்தினை சரண்தாஸ், சரண்தாஸ் திருடன் என்னும் பெயர்களில் தழுவல் நாடகங்களாக தமிழ் சிங்கள மொழிகளில் வழங்கியுள்ளார். சரண்தாஸ் திருடன் நாடகத்தினை தமிழ் மொழியில் நூலாகவும் வெளியிட்டுள்ளார். இதனை சரோஜினி அருணாசலம் தமிழாக்கம் செய்துள்ளார். இந்த நூலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுன்கலைத்துறையின் தலைவரும் பேராசிரியருமான சி. மௌனகுரு பராக்ரம நிரியல்லவும், சரண்தாசும் என்னும் தலைப்பில் தனது பதிவினை கீழ்கண்டவாறு பகிர்ந்துள்ளனனர்.
‘இந்தியாவின் நவீன நாடக ஆளுமைகளில் ஒருவரான
ஹபீப் தன்வீரின சரண்தாஸ் சோர் எனும் நாடகம்
தமிழில் வெளிவருவது நமக்கு பெருமகிழ்ச்சியை தருகின்றது
இதனை மொழிப் பெயர்தவர் சரோஜினி அருணாசலம்
ஆனால் இதனைத் தழுவி முடிவினை மாற்றி மேடைக்குரியநாடகமாக அமைத்து புதுப்படைப்பாகத் தருகின்றார்.
இலங்கையின் நவீன சிங்கள நாடக ஆளுமைகளுள் ஒருவரான பராக்ரம நிரியெல்ல அவர்கள் இனப்பூசல் கொழுந்து விட்டு எரியும் இன்றைய சூழலில், தமிழ்க் கலைஞர்களும், சிங்கள கலைஞர்களும் இணைந்து 200க்கு மேற்பட்ட தடவை இலங்கை பூராகவும் இந்நாடகத்தை மக்கள் மத்தியில் மேடையேற்றினர் என்பது யாரும் நம்ப முடியாத ஒரு செய்தி. ஆனால்அது நடந்தேறியிருக்கின்றது. என்பது தான் உண்மை. அண்மைக்காலத்தில் மேடையேறிய மிகவும் தரம்மிக்க தமிழ் மேடை நாடகமாகிய இதனை பராக்ரம நிரியல்ல நெறிப்படுத்தினார். சி. மௌனகுரு – 07.12.2007
ஈழத்து இலக்கிய பரம்பலின் தமிழ் கூத்து, தமிழ் மேடை நாடகம் அரங்கியல் என்றால் அதன் சிகரம் சி. மௌனகுரு என்றால் மிகையாகாது. பேராசிரியர் மௌனகுருவின் பார்வையில் பராக்ரம நிரியல்ல மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கின்றார், என்பதற்கு சான்றாதாரமாக மேற்கண்ட பதிவினை முன் மொழிதல் சிறப்பாகும்.
மேற்படி நாடக நூலை பராக்ரம நிரியல்ல தமிழ் நாடக உலகின் ஒப்பற்ற கலைஞர் ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு சமர்பணம் செய்துள்ளார். கீழ்கண்டவாரு தனது பதிவினைத் தந்துள்ளார். இலங்கை தமிழ் நாடக மரபை புதிய திசைகளுக்கு இட்டுச் சென்ற எங்கள் பெருமதிப்பிற்குரிய நாடக கலைஞர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என பதிந்துள்ள பராக்ரம நிரியல்ல அவர்களை எமது இதயங்களில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்ற காரணமாகின்றது.
பராக்ரம நிரியல்ல என்னும் அற்புதக் கலைஞர் 1949-04- 18ல் இரத்தினபுரி நிரியல்ல என்னும் இடத்தில் ஜயசிங்க பண்டாரநிரியல்ல அமராமவதி தம்பதிகளுக்கு பிள்ளையாக பிறந்தார். தனது தாயாரின் இறப்பின் பின் ளுனுமுல்ல மத்திய கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு லயனல் வென்ற் ஞாபகார்த்த கலை மையத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றுள்ளார்.
திரு பராக்ரம நிரியல்ல அவர்களின் இயற்பெயர் கிரிஸ்ணதாச நாராயன பண்டாரநாயக்க பிரமச்சாரி முதியான்சேலாகே பராக்ரம பண்டார நிரியல்ல என்பதாகும். கிருஸ்ணதாஸ் நாராயணன் பண்டாரநாயகம் பிரமச்சாரி முதலியார் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த குறித்த குடும்பத்தின் முதலாவது பரம்பரையினரின் தலைவனாக 1593ல் சீதவாக்க என்னும் பிரதேசத்தில் இராஜ சிங்கன் என்னும் மன்னனின் மாணிக்ககல் அகல்வு தொழிலை மேற்பார்வை செய்வதற்காக வந்துள்ளார், எனவும் இவரது தொழில் நேர்மைக்காக சீதவாக்க இராஜ சிங்கன் நிரியல்ல என்ற கிராமத்தை இவருக்கு எழுதி கொடுத்ததற்கான சான்றாதாரங்கள் இன்றும் தனது கைகளில் இருப்பதாகவும், தனது பரம்பரை பற்றி திரு. பராக்ரம நிரியல்ல கூறுகின்றார்.
கிருஸ்ணதாஸ் நாராயணன் பண்டாரநாயகம் பிரம்மச்சாரி முதலியார் என்னும் இந்திய நாமமே இன்று கிருஸ்ணதாஸ் நாராயன பண்டாரநாயக்க முதியான்சே என்று மாற்றம் அடைந்துள்ளது. என்பதற்கு சான்றாதாரங்கள் இன்னும் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது, என்றால் மனித குல வரலாற்றில் மொழி, சாதி, மத, இன பேதம் தேவையா? என்ற வினா எம் இதயங்களில் தோன்றுவது முறையாகும்.
மக்கள் களரியில் நாடகங்களில் நான் பார்த்துரசித்த மாயப்பட்டாடை, செக்கு, சரண்தாஸ் போன்ற நாடகங்கள் அட்டன் நகரில் நேற யுசiயெ என்னும் புதிய நடமாடும் அரங்கத்தின் ஊடாக பார்த்து ரசிக்க கூடியதாய் இருந்தது. மலையக பிரதேசத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், ரசிகர்கள் புதிய நாடக அரங்கையும், இலங்கையின் பிரசித்திப்பெற்ற நாடகங்களையும,; தமிழ் சிங்கள மொழிகளில் கண்டு ரசிக்க வாய்ப்பாக அமைந்தது.
மலையகத்தினை பிறப்பிடமாக கொண்ட நாடக கலைஞர்களான முனியாண்டி காளிதாஸ், தியாகராஜா சிவநேசன், சொக்கலிங்கம் கிருஷாந்தன், செல்வராஜ் லீலாவதி, முருகேசு அஜந்தன் சாந்தகுமார், ராசையா லோகநாதன், வேணி திரேஸா, சோதிவேல் சீதேவி, பாலகிருஸ்ணன் ராதிகா போன்றோர் தங்களின் திறமையை தங்களின் உற்றார் உறவினர்களுக்கு காட்டுவதற்கு மலையக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் திறமையைக் கண்டு கழிப்பதற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுத்தமை பெரும் பாக்கியம் என்றே கூற வேண்டும்.
இவருடைய படைப்புக்கள் யாவும் மனிதாபிமானத்தை வலியுருத்துபவையாகவும், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள இறப்பு பற்றி விவாதிப்பவையாக காணப்படுகினறன. இவரது மனிதாபிமான கலை சேவை அரங்கத்தில் மாத்திரமன்றி தொலைகாட்சி, சினிமா என்று வியாபித்திருப்பதுடன் என்றும் மனித்துவத்திற்கு எதிராக பொருள் தேடல் படைப்புக்களாக மாறாமல் இருப்பது உயர் பண்பாகும். இவரின் கலைப்படைப்பும் இன ஐக்கத்திற்கான உழைப்பும் சிறப்பும் வாழ்துதல் சிறப்பாகும்.
அணல்கள் இடம்பெற்ற நேரத்தில் இலங்கை கலைஞர்கள் தாக்கப்பட்ட போது மிகவும் துணிகரமானவர்களுக்கு குரல் கொடுத்த பராக்ரம நிரியல்ல தனது வாழ் நாளில் ஒடுக்கப்பட்டோர்க்காகவும் அடக்கப்பட்டோர்க்காகவும், சிறுபான்மை இன மக்களுக்காகவும,; மலையக மக்களுக்காகவும் தனது படைப்புக்களை திசை முகப் படுத்தியுள்ளார், என்பதுடன் தனது படைப்புக்களில் அரசியல் தலைமைகளையும,; ஆட்சியாளர்களையும் மிகவும் துணிகரமாக விமர்சித்துள்ளார். என்பதற்கு பல நாடகங்கள் சான்றாதாரமாக காணப்பட்ட போதும் செக்குவ என்னும் நாடகம் தமிழில் செக்கு மாரி மாரி எமது நாட்டில் ஆட்சியமைக்கும் அரசாங்கங்களை கேலிகுட்படுத்தி இருப்பதனை இனங்காணலாம்.
மனித நேயமும,; இன ஐக்கியமும் உண்மையாக புரிந்துணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட பாடு படும் கலைஞர்கள் மத்தியில,; மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் தமது பதிவுகளை விதைத்து செல்லும் உன்னத கலைஞன் பராக்ரம நிரியல்ல நீடூழி வாழவும் மக்கள் நேய படைப்புக்களை மென்மேலும் படைக்கவும் மலையகத் தமிழ் படைப்பாளிகள் சார்பாக பகிர்தல் காலத்தின் தேவையாகும்.
2015 ஊவா மாகாண சாகித்ய விழா மலருக்காக ஆக்கிய கட்டுரை