தமிழ் உரையாடலுடன் உள்ள காணொளியானது போலியானது. இந்த காணொளியில் படையினர் மீது புலி உறுப்பினர்கள் தாக்குதல் மேற்கொள்வதாக காட்டப்படுகின்றது என ஜனநாயகத்துக்கான ஊடக அமைப்பின் குழு கூறியதாக பிபிசியின் சிங்கள சேவை தெரிவிக்கின்றது.
இலங்கையில் எவ்வித குற்றச் செயல்களும் வெளியாகவில்லை என்று அரசாங்கம் கூறியது தற்போது அர்த்தமற்றதாகியுள்ளது என ஜனநாயகத்துக்கான ஊடக அமைப்பின் சனத் பாலசூரிய கூறியதாக பிபிசியின் சிங்கள சேவை தெரிவிக்கின்றது.
இதேவேளை இலங்கையில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்றே இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சிங்கள குரலுடன் கூடிய காணொளியை சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியதாகவும் பிபிசியின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்னும் ஊடக உரிமைகளுக்காக உழைக்கும் குழுவே இவ்வாறு வழங்கியதாக பிபிசி சிங்கள சேவை மேலும் கூறியுள்ளது
Horrible scene. Why do they want to film and they leak it to be shown at some place. Gothapaya Rajapakse (1950) is also getting confused. He may not able to go back to USA (New York).