இவ்வாறு இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;வெறுமையாகக் காணப்பட்ட நகரங்களின் வெளிப்புறத்தே கைவிடப்பட்ட நிலையில், கால்நடைகள் அலைந்து திரிந்தன. நூற்றுக்கணக்கான இந்தப் பசுக்கள் வீதியில் செல்லும் பஸ்களுக்கு மிகுந்த ஆபத்தைக் கொடுப்பனவாகவுள்ளன. ஏ9 வீதி வழியாக இப்போது பஸ்கள்,வான்கள்,ட்ரக் வண்டிகள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக ஏ9 வீதி மூடப்பட்டிருந்தது. ஜனவரிக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுவரை யுத்தத்தின் சுமையைத் தாங்கிக் கொண்டதாக அந்த வீதி இருந்தது. இப்போது அந்த வீதியால் செல்லும் வாகனங்களில் உல்லாசப் பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அப்பிள்,தோடம்பழங்கள் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஏ9 வீதி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷாரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த வீதியானது இரு தனியான அடையாளத்துவங்களைக் கொண்டவர்களை ஒன்றுசேர்ப்பதற்குப் பதிலாக தனித்தனியாக கடந்த 27 ஆண்டுகளாக பிரித்து வைத்திருந்தது. 2008 வரை விடுதலைப்புலிகளும் இராணுவமும் நெடுஞ்சாலையிலுள்ள ஓமந்தைக் கிராமத்தில் யுத்தத்தில் பலியானவர்களின் உடல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்புடன் இந்த ஓமந்தை வழியான போக்குவரத்து இடம்பெற்றது. 2009 ஜனவரியில் இலங்கை இராணுவம் நெடுஞ்சாலையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஒரு வருடம் கடந்தும் வட பகுதி யுத்தத்தினால் அழிவடைந்ததாகவே காணப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயிலாக இருக்கும் உப்பளங்கள் நிறைந்த ஆனையிறவு பகுதியில் மரங்கள் மேல் பகுதியை இழந்தவையாகக் காட்சிதருகின்றன. இலங்கையின் விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களை ஞாபகமூட்டுபவையாக அவை காணப்படுகின்றன. வீதியில் புலிகள் கவச வாகனமாக மாற்றியிருந்த வீதிறோலர் இப்போது அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. தென் பகுதியிலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகள் அதனை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
கிளிநொச்சியில் சிறிய கடைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் சுமார் 12 தமிழர்கள் பஸ்ஸுக்காகக் காத்துநின்றனர். அருகில் சிங்களப் பாடல் ஒலித்தது. சகல தமிழ் அறிகுறிகளும் அற்றதன்மை காணப்பட்டது. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா நகரத்தில் தென்பகுதி எப்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த பகுதியாகும். இப்போது படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்பகுதி கிட்டத்தட்ட முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக மாறிவருகிறது.
பறிபோகும் தமிழ் தாயகம் இனம் புரியாமல் கனவில் நம்சமூகம்!
வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக் கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக் குக் கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேச மாக இருக்கிறது என நம்பிக்கொண் டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண் டிருக்கின்றன. என்பதை உணராத நிலை யில் தானே எங்களில் பலர் கனவுகளி லும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டி ருக்கிறோம்……..?
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுக ளின் பின்னர் இலங்கை வரை படத்தில் சரத் பொன்சேகா வெற்றி பெற்ற பிரதே சங்களை பச்சை நிறத்திலும், மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டுக் காட்டியிருந் தார்கள்.
பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதி கள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங் களில் பலர் பெருமைப் பட்டுக் கொண் டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங் களை உள்ளடக் கியதே தமிழீழம் என் றும் பெருமை பேசிக்கொண்டோம்.
அப்போது வெளியான வரைபடத் தில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு காட்டப் பட்டிருந்த வடக்குக் கிழக்கு பிரதேசத் தின் பெரும் பகுதிகள் இன்று தமிழர் களின் கைகளில் இல்லை என்பதை எங்க ளில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
மின்னாமல் முழங்காமல் தமிழர் பிர தேசங்கள் அபகரிக்கப்பட்டு வரு கிறன என்பதையும் அந்த இடங்க ளில் தமிழர் கள் இனிமேல் கால் வைக்க முடியாத வாறான கட்டமைப்புகள் சிங்களவர்க ளால் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் உணர்ந் திருக்கிறோமா?
வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம், அந்த தமிழீழத்தை அடைந்தே தீருவோம். தமிழீழம் இல்லை என்றால் ஒரு துளி மண்ணும் வேண்டாம் என நாங்கள் மேற்குலக நாடுகளில் இருந்து வீரவச னம் பேசிக்கொண்டி ருக்கும் போது, எங்கள் முற்றங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு வருகின்ற னவே. இந்த யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு செயற்படுங்கள் என்றுதான் நாங்கள் உங்களை மன்றாட்டமாகக் கேட்டு வருகிறோம்.
இதைச் சொல்லி வரும் துரைரத்தினம், நிராஜ் டேவிட் ஆகி யோர் சம்பந் தரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற் படுகிறார் கள் என்று குற்றம் சாட்டு பவர்களும் உண்டு. சம்பந்தரின் நிகழ்சிநிரல் என்று ஒரு மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை. எங்களின் நோக்கம் ஒன்றுதான். எங்கள் மண் பறிபோவதை தடுக்க வேண் டும். தமிழர் தாயகம் என்று நாங்கள் சொல் லும் இடங்களில் தமிழர் பிரதிநிதித் துவம் காக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்க மும் எங்களிடம் இல்லை. வேறு நோக்கங்களில் செயற்பட வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.
தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு தெரிவு செய்யப்ப டும் தமிழர் கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு கைகட்டி சேவகம் செய்ப வர்களாக இல்லாமல், தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தக்கூடிய தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதுமே எமது நோக்கம். அந் தத் தமிழர்கள் சம்பந்தராகவும் இருக்கலாம். அல்லது எந்தக் கந்தப்பராகவும் இருக்கலாம்.
தமிழீழம்தான் என்ற உறுதியோடு இருக்கும்போது வடக்குக் கிழக்குப் பிரதேசம் எங்கள் கைகளில் இல்லை என எங்கள் உணர்வுகளை மழுங் கடிக் கப் பார்க்கிறீர்களே எங்கள் கனவுகளை கலைக்கப்பார்க்கிறீர்களே என்று வெளி நாடுகளில் உள்ள ஒரு சிலர் என் மீது ஏவுகணை வீசு வீர்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் கனவுகளுடன் மட்டும் என்னைப்போன்ற ஊடகவி யலா ளர்களால் வாழமுடியாது என்பதால் தான் யதார்த்தங்களையும் இடைக்கி டையே சொல்ல விழைகிறோம்.
அதனால்தான் சொல்லுகிறோம், மாகாண நிர்வாகமானால் என்ன நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானால் என்ன தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு அதனைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றிபெற முடியும். அது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும்.
இதை வாசித்த உங்களில் சிலர் கிழக்கு மாகாணம்தானே பறி போயிருக்கிறது, வடமாகாணம் எங்கள் கைகளில்தானே இருக்கிறது என பெருமிதம் அடையலாம். ஆனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் இன்று எங்கள் கைகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுபற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்
மேலும்: http://www.uthayan.com/Welcome/afull.php?id=331&L=T&1269005751
இவ்வளவு காலத்து முட்டாள்தனமான வேலைகளையும் விமர்சிக்க மனமில்லதவர்களாக் இருந்துகொண்டு புலம்பிப் பயன் என்ன?
இனியாவது இந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமைத் திருட்டுக் கூட்டத்தைப் பற்றி விசரித்து விட்டு வாக்களிப்பார்களா?