அடிப்படை மனித உரிமைகளையும் மனித விழுமியங்களையும் மீறும் வகையில் உலகில் இரண்டு நாடுகளில் அரசியல் அகதிகள் கூட்டம்கூட்டமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். ஒன்று இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு, மற்றது சோவனிஸ்டுக்கள் மேற்கு ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு ஆட்சிசெய்யும் இஸ்ரேல். இஸ்ரேல் அகதிகளாக விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான ஆபிரிக்கர்களைத் தடுத்து வைத்துள்ளது. தமிழ் நாட்டில் அரசியல் அகதிகளாக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோரை அந்த மாநிலத்தின் ஆட்சிக்கு வரும் அரசுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, கொலைகுற்றக் கைதிகளைப் போலவும் விலங்குகளைப் போலவும் அடைத்து வைத்திருக்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து தமிழ் உணர்வு பிடித்து ஆட்டிவருவதாகக் கூறும் எவரும் இந்த அகதிகளின் விடுதலைக்காக் குரல்கொடுத்ததில்லை. தமிழ் நாட்டிலிருந்து இந்த அகதிகளின் நெஞ்சில் மிதித்து புலம்பெயர் நாடுகளுக்கு வந்து கூட்டங்களில் கூச்சலிட்டுச் செல்கிறார்கள்.
‘தமிழர்களுக்காகப் போரடும்’ புலம் பெயர் அமைப்புக்கள் இனச்சுத்திகரிப்புப் போன்று அழிக்கப்படும் அகதிகள் குறித்து புலம்பெயர் நாடுகளுக்குத் தேசியச் சுற்றுலாச் செல்லும் யாரையும் கேட்டதில்லை.
இன்று தமிழ் அகதிகளை கைதிகளாகவும் அனாதைகளாகவும் குடியுரிமையற்றவர்களாகவும் அழிக்கும் செயற்பாடு இனச்சுத்திகரிப்பின் ஒரு பகுதியாகும்.
தமிழ் நாட்டில், இலங்கை இனப்படுகொலை அரசின் கோரப்பிடியிலிருந்து தப்பித்து சென்னைக்குச் சென்ற இரு தமிழ் இளஞர்கள் இரண்டு வருடங்களின் பின்னர் கடந்தவாரம் சென்னைக் காவல்துறையால் கைதாகினர் எனத் தகவல்கள் வெளியாகின.
உலகம் முழுவதும் அவலத்திற்கு உள்ளாக்கப்படும் ஈழத் தமிழர்களின் கண்ணீரை காசாக்கிக் கொள்ளும் மேட்டுக்குடித் தமிழர்கள் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்கு ஒப்பான செயலை செய்துமுடிக்கின்றனர். தமது பிழைப்பிற்காக ஒப்பாரிவைக்கும் இவர்கள் இலங்கைப் பாசிச அரசின் நண்பர்களே. இந்திய அரசு, தமிழ் நாட்டு அரசு, உலகின் அழிக்கும் அதிகாரவர்க்கங்கள் ஆகியோரோடு கூட்டுவைத்துக்கொள்ளும் இவர்கள் இவற்றினூடாகத் தமது வியாபாரத்தை நடத்துகின்றனர். இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இவர்களை முற்றாக நிராகரிப்பதும், ராஜபக்ச அரசிற்கு எதிரன போராட்ட அமைப்புக்களை புதிய அரசியல் வழிமுறைகளில் காலம்தாழ்த்தாது கட்டியெழுப்புவதும் இன்றைய கடமையாகும். அவ்வாறான அமைப்புப் பலம்பெறும் போது மட்டுமே ஏகாதிபத்திய உளவாளிகளும், மகிந்த அரசின் அடியாட்களும் செயலற்றுப் போக வாய்ப்புக்கள் உள்ளன.
என்னைப் பொறுத்தவரையில் முதலில் எம்மில் உள்ள அழுக்கை (நிஜத்தை ஒப்புக்கொள்ளும் சுயவிமர்சனம்) கழுவ வேண்டும்…
1. தமது குடும்பங்களை இன்றும் பாதுகாப்பாக தமிழ் நாட்டில் வைத்திருக்கும் கூட்டமைப்பினர் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிற்கு சென்று இருக்கிறார்களா…?
அவர்களின் நலன் வேண்டி குரல் கொடுத்துள்ளார்களா…?
அவர்களின் துயரில் பங்கு பற்றியுள்ளார்களா…?
2. இந்தியப் படைகளுடன் இலங்கை வந்து தேசியப் படை என்ற பெயரில்… புலிகளுக்கு பிள்ளை பிடிக்க சொல்லிக் கொடுத்தவர்களின் தலைவர்… பின் புலிகளுக்குப் பயந்து ஆளை விட்டாக் காணும் என்று மண்டையன் குழுவோடு இந்தியாவுக்கு தப்பியோடியவர்… ‘புலிகளின் பின் கதவு நண்பர்’ மண்டையன் குழுத் தலைவரே… திரும்பி வந்த நிலையில்… தம்முடன் அழைத்து சென்ற உறுப்பினர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறாரா…?
தேர்தல் காலங்களில் இலங்கை வந்து சென்றவர்… இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புடன்… சகல சகுரியங்களுடன்… தான் உண்டு… தனது மனைவி பிள்ளைகள் உண்டு என்பவர்… தமிழ்நாட்டின் அகதி முகாம்களிற்கு சென்று இருக்கிறாரா…?
தனக்கு சகல சகுரியங்களும் செய்து கொடுக்கும் மத்திய அரசாங்கத்துடன் அவர்களின் நலன் வேண்டி குரல் கொடுத்துள்ளாரா…?
அவர்களின் துயரில் பங்கு பற்றியுள்ளாரா…?
3. ஈழத் தமிழர்… ஈழத் தமிழர்… என்று புலம்பெயர் புலித் தமிழரின் பணத்திற்காக ஓலமிடும்… வைகோ… சீமான்… போன்றவர்களோ… அரசியல் கூட்டணிக்காக… அலையும் விஜயகாந்தோ…ஓர் அகதி முகாமிற்கு சென்றுதானும் நலம் விசாரித்து உள்ளார்களா…?
அவர்கட்காக ஏதாவது நல்லது செய்துள்ளார்களா…?
4. ஈழத் தமிழர்… ஈழத் தமிழர்… என்று இடைக்கிடை கருப்பு சட்டை அணியும்… போராட்டம் நடாத்தும்… health concern இற்காக உண்ணாவிரதம் என்று நாடகமாடும்… பூஜை போடும் போதே முன் பணமாக… புலம் பெயர் ஈழத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும்… சினிமா தயாரிப்பாளர்களோ… இசையமைப்பாளர்களோ… நடிகர்களோ… நடிகைகளோ… தமிழ்நாட்டின் அகதி முகாம்களிற்கு சென்று இருக்கிறார்களா…?
அவர்களின் நலன் வேண்டி குரல் கொடுத்துள்ளார்களா…?
அவர்களின் துயரில் பங்கு பற்றியுள்ளார்களா…?
(ஒரு சிலர் விதிவிலக்கு)
இவ் அகதிகளுக்காக எத்தனையோ projects செய்யலாம்…
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு அகதி முகாமையே பொறுப்பு எடுக்கலாம்…
நானும் இதைத் திரும்பித் திரும்பி எழுதிக் கொண்டே இருக்கிறேன்… ஹ்ம்ம்…
5. ஒன்றும் வேண்டாம் புலம்பெயர் தமிழர் சென்னை சென்று… புடவைகள் வாங்கும் முக்கிய வியாபார நிலையங்களான… போத்தீஸ்… குமரன்ஸ்… சரவணாஸ்… போன்றவர்கள் ஓர் சில அகதி முகாம்களுக்கான அல்லது ஓர் சில அகதிகளுக்கான projects எடுக்கலாமே…
எல்லாம் மனம் உண்டானால் இடம் உண்டு… ஹ்ம்ம்…
ஆனால் சரவணாஸ்… ஜெயச்சந்திரன் கடைகாரர் போன்றவர்கள் அகதி இளைஜர்களை… கூலித் தொழிலாளிகளாக வைத்திருப்பார்கள்…
ஏன் நாம் இலங்கை அரசாங்கத்தை குறை கூற வேண்டும்…
எம்மவர் எமக்காக… எம் இனத்திற்காக என்ன செய்கிறார்கள்….?
எமக்காக குரல் கொடுப்பவர்கள் என்று கூறும் தமிழ்நாட்டினர் எமக்காக… எம் இனத்திற்காக என்ன செய்கிறார்கள்….?
எம் ஈழத் தமிழரின் உழைப்பில் வாழ்பவர்கள்… எமக்காக… எம் இனத்திற்காக என்ன செய்கிறார்கள்….?
இன்றல்ல… அன்றிலிருந்து கூறுகிறேன்… ஈழத்தமிழர் பிரச்சனை தீர்ந்து தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் உள்ளவர்கள்… வெளியில் வசதியாக உள்ளவர்கள்… தாயகம் திரும்பினால் பாதிக்காப்படுவது… தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளும்… ஈழத்தமிழரை வைத்து பணம் பண்ணுபவர்களுமே…
எவ்வளவோ… எழுதிக் கொண்டு போகலாம்…
அனுபவங்களிநூடான… நிஜங்களிநூடான… எழுத்துக்கள்… இப்ப இருப்பது போதாது என்று பலரின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு போகும்… ஆஹா… ஆஹா…
The Sri Lankan Tamils all over the world are now valuable pawns in the international diplomacy and power play. They are not worthless slaves anymore. Daily life is indeed still a painful experience for may of us. So help us God.