அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து புறப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியக் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இலங்கையின் உயர்மட்ட கடற்படை அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கடலின் நடுப்பகுதியில் வைத்து இலங்கை அரச படைகள் அகதிகளைப் பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கப்பல் அவுஸ்திரேலியக் கடற்பகுதியை நோக்கிப் புறப்பட்டுள்ளதாகவும், அவர்களை கடற்பகுதியில் வைத்துப் பொறுப்பேற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிக கடற்பகுதியில் அகதிகளை இனப்படுகொலை அரசிடம் ஒப்படைக்கும் போது ஐக்கிய நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள், புலம்பெயர் ஈழக் காவலர்கள், தென்னிந்திய தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
I think they want to regularise many matters. Canada had moved the Immigration Section to a different location in Colombo. Australia may do the same.