நாளை மறுதினம் லண்டன் UNHCR அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிதறி அவலத்துள் வாழும் தமிழ் அகதிகளுக்காக 1951 ஜெனீவா ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான அகதிகளுக்கான போராட்டக் குழுவினர் இப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர். புலம் பெயர் தமிழ் சமூக ஆர்வலர்கள், இளஞர்கள் இனியொரு இணையத்தின் ஆதரவோடு இப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகதிகளைப் பாதுகாக்கக் கூடிய சூழல் இருந்தும் அவர்கள் இலங்கை அரசிற்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்குத் திருப்பியனுப்ப UNHCR அனுமதிக்கிறது. இலங்கையில் ஐ.நா சொல்வது போல போர்க்குற்ற்வாளிகளும், அவரகளின் அரச இயந்திரமும் ஆட்சியிலுள்ளன. அவர்கள் முழுமையாக அகற்றப்படும் வரை மனிதாபிமான அடிப்படையில் அகதிகள் தாங்கள் விரும்பும் நாடுகளில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற சுலோகங்களுடன் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அனைவரும் திரளாகப் பங்குபற்றி தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துமாறு போராட்டக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
“புலிகொடியை கோமணமாக கட்டி தெருவில் திரிவதை விடுத்து அன்னை பூபதி என்று அலைவதை விடுத்து ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யலாமா என்று சிந்தியுங்கள்.”
யுத்தத்தின்போது நோர்வே எல்.ரீ.ரீ.ஈ வருடாந்தம் 20 மில்லியன் குரொணர் அல்லது 1மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்து வந்துள்ளது. அவர்கள் தமிழ் சமூகத்தினரிடம் நிதி சேகரிப்பதுடன் (முன்பு யுத்தம் இப்போது யுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்கிற போர்வையில் நிதி சேகரிக்கிறார்கள்),
எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதாமான வருமான மார்க்கம் நோர்வே அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் மானியம் ஆகும், அங்கு 55 கலாச்சார அமைப்புகள் மானியம் பெறுகின்றன. எல்.ரீ.ரீ.ஈ யினது கணக்காய்வு அறிக்கையின்படி எல்.ரீ.ரீ.ஈ பாடசாலைகள் வருடாந்தம் 13. 5 மில்லியன் அல்லது 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2008 – 20012 காலப் பகுதியில் நோர்வே அரசிடமிருந்து பெற்றுள்ளன.
http://www.tamilnewsweb.com/
Norway, Main Venue For LTTE Terror Revival
http://www.thesundayleader.lk/2014/06/01/norway-main-venue-for-ltte-terror-revival-2/
சண்டே லீடர் இல் வெளியிடப்பட்ட பெயர்களில் இருந்து சில நோர்வேயின் படித்த பட்டம் பெற்ற குடும்ப அங்கத்தவர்கள் நோர்வேயின் A nnai P oopathi LTD என்ற பணம்பண்ணும் நிறுவனத்தை நடத்துகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் …..
இவர்கள் தாம் அன்னை பூபதியின் பெயரில் திருடும் பணத்தின் ஒரு பகுதியை அகதிகளுக்கு கொடுப்பார்களா???
இனிஒரு வின் “தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்” என்ற லண்டன் UNHCR அலுவலகத்தின் முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் சிலர் வருவார்கள் … இது புலிகளின் ஆர்ப்பாட்டம் என்று சிங்கள அரசு ஊடகங்கள் அடையாளப் படுத்தும் ……..
அகதிதித் தமிழர்களுக்கு நீதி சேகரிப்பு என்று தமது வீடுகளுக்கு பணம் சேர்ப்பார்கள் … அவர்களைத் திருத்த முடியாது…..
இனிஒரு ஆக்கபூர்வமாக அகதிகளுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் ….
புலிக்கொடி பிடிக்காத … மனித நேயமுள்ள 100 பேரைத் தேடிப்பிடித்து ..உலகில் அங்க்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு … உலக நாடுகள் வியக்கும்படி ஏதாவது செய்யவேண்டும் அப்படிப் பட்டவர்களைத் ஒன்றுபடுத்தும் பணியை இனிஒரு ஆரம்பிக்க வேண்டும்
எல்லாம் வல்ல ஆண்டவன் அகதிகளுக்கு உதவுவானாக
Sri Lankan Tamils changed the course of history for the whole world.
Dr, changed by Political refugees, Economical refugees or Both…?