உறைந்து கிடந்த இத்தாலியில் மாபெரும் மாணவர் போராட்டங்களை நாம் எதிர்பார்த்ததில்லை. பில்லியன்களைச் திருடிவைத்திருப்பவர்களின் சொர்க்கபுரியான வோல் ஸ்ரீட்டை அமரிக்க உழைக்கும் மக்கள் ஆக்கிரமிக்கும் போராட்டத்தை யாரும் எதிர்பார்த்ததில்லை. அதிகாரத்தைச் சர்வாதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு மதத்திற்குள் புதைந்துகிடந்த அரேபிய மக்கள் தெருக்களில் உரிமைக்காகப் போராடுகிறார்கள்.
கார்ல் மார்க்சை கோமாளி என்ற அதிகார வர்க்கம் கூட இப்போது அவரை மேதை என்று புகழாரம் சூட்டுகிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதிதான் இலங்கையில் இடது சாரிக் கட்சி என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட ஜே.வி.பி இனுள் ஏற்பட்ட பிளவா அன்றி வெறும் அதிகாரப் போட்டியா என்ற தேடலில் இனியொரு தன்னை உட்படுதி கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நேர்காணல் வெளியாகிறது.
ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி)இன் மத்திய குழு உறுப்பினரும் ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் பிரதான உறுப்பினருமான , வருண ராஜபக்ச உடனான இனியொரு நீண்ட உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
இனியொரு: ஜே.வி.பி யில் ஏற்பட்ட பிரிவின் அடிப்படைக் காரணம் என்ன?
வருண: உழைக்கும் மக்களின் சோசலிசப் பாதைக்கான போராட்டமாகவே ஜே.வி.பி உருவாக்கப்பட்டது. வழி முறைகளில் விமர்சனங்கள் சுய விமர்சனங்கள் என்பன இருந்தாலும், கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட பின்னடைவுகள் போன்று முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இவ்வாறான வலதுசாரித் துவத்தை நோக்கிய மாற்றங்களுக்கு எதிராக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஜே.வி.பி யில் உட்கட்சிப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக திருத்தல் வாத அரசியல் மற்றும் வலது சாரி சந்தர்பவாதப் போக்கு என்பவற்றிற்கு எதிராக முற்போக்கு சக்திகளின் இடைவிடாத உட்கட்சிப் போராட்டங்களில் எதிர் விளைவே இன்றைய பிளவாக வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை,வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.
இனியொரு: பாராளுமன்ற வாக்குக் கட்சிகளில் வழமையான அணிசேர்க்கைகளில் ஒன்று தானே இதுவும்?
வருண: நாம் குறிப்பாக உட்கட்சிப் போராட்டம் நடத்தும் பிரிவினர் , பாராளுமன்றத்தை மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு இடை நிலைப் பாதையாகவே பன்படுத்திக்கொள வேண்டும் என்று நம்புகிறோம் அது இறுதியான தீர்வல்ல. மக்கள் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
இனியொரு : தமிழ்ப் பேசும் மக்களுடையை அல்லது இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமை குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
வருண: சோசலிச அரசு ஒன்று உருவாகும் வேளையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் உரிமை பெற்றவர்களாக மாறுவார்கள். ஆக, சோசலிச அரசை உருவாக்குவதில் ஏனையவர்களோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்கள் போராடும் போதே அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இனியொரு : சோசலிச அரசு உருவாவதற்கான முன் நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை என்பதை நீங்கள் கருதவில்லையா?
வருண: தொழிலாளர்களின் போராட்டம் என்பதே இங்கு பெரும்பாலானவர்கள் முன்வைக்கும் கருத்து. தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் போது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலை பெறும். சிங்கள தேசியத்தையோ அன்றி தமிழ்த் தேசியத்தையோ நம்மில் பெரும்பாலனவர்கள் ஆதரிக்கவில்லை. யுத்ததின் பின்னர் சிங்களத் தேசியம் மிக அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை ஆபத்தான நிலையை நோக்கி இட்டுச் செல்கிறது. எவ்வாறு சிங்கள தேசியம் முதலாளித்துவக் கோசமோ அதே போன்றே தமிழ்த் தேசியமும் முதலாளித்துவக் கோசம் என்றே நாம் கருதுகிறோம்.
அதே நேரம் இந்திய அரசும் மேற்கத்தைய அரசுகளும் தமிழர் பிரச்சனையை இலங்கையைச் சுரண்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்வார்கள், போர்க்குற்ற வழக்குப் போடுவதாகச் சொல்வார்கள் , இவ்வாறு இலங்கை அரசை மிரட்டிவிட்டு பின்னர் இலங்கை அரசிடமிருந்து அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பேச்சு நடத்துவார்கள். இலங்கை அரசு அவர்கள் விரும்பியதைக் கொடுத்ததும் தமிழர்களைக் கைவிட்டு விடுவார்கள். இது தான் முப்பது வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இங்கு தமிழர்கள் வெறும் பகடைக் காய்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பாவவனைக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் தமது உண்மையான நண்பர்களைக் கூட இழந்துவிடுவிகிறார்கள்.
இனியொரு : தேசியம் என்பது முதலாளித்துவக் கோசம் என்பதிலும் உள்ளகச் சந்தைக்கான போட்டியிலிருந்தே தேசிய இன முரண்பாடு உருவாகிறது என்பதிலும் நாமும் தெளிவாக இருக்கிறோம். இங்கு தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனம் தமது ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது தவறானதா? அந்த ஒடுக்கு முறை தேசிய இன ஒடுக்குமுறையாக இருக்கும் போது அதற்கு எதிராகப் பிரிந்துபோகும் உரிமைக்காகப் போராடுவது தவறானதா?
வருண : தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெறும். தனியாக தேசிய இனப் போராட்டமாக முன்னெடுத்தால் வெற்றிபெற முடியாது. தமிழர்கள் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களோடு இணைந்து சோசலிச அரசை அமைப்பதற்காகப் போராடினால் அவர்கள் தேசிய இன ஒடுக்கு முறையிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
இனியொரு: நாம் கோருவது மிகத் தெளிவானது. இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தேசிய இன முரண்பாடு அந்த அளவிற்குக் கூர்மையடைந்திருக்கிறது என்பதை இலங்கையில் வாழும் உங்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் என்று கூறிக்கொள்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை – பிரிந்து செல்லும் உரிமையை – ஏற்றுக்கொண்டுபோராடத நிலையென்பதே பெருந்தேசிய வாததை வலுவூட்டுகிறது…
வருண : ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மத்தியிலிருந்து இடதுசாரி இயக்கம் உருவாகுமானால் நாம் ஆதரிப்பதற்கும் அவர்களோடு ஐக்கிய முன்னணி அடிப்படையில் வேலை செய்வதற்கும் தயாரான நிலையிலுள்ளோம். தேசியத்தையும் பிரிவினையையும் ஆதரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து. இன்றைய முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஒன்றிணைந்த போராட்டம் என்பதே அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இனியொரு: 1905 ஆம் ஆண்டு நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து சென்ற போது லெனின் அதனை ஆதரித்தது மட்டுமன்றி, சுவீடிஷ் தொழிலாலர்களை நோர்வேயின் பிரிவினையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுவீடிஷ் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது. அவ்வாறு இடதுசாரிகள் என்று கூறும் நீங்கள் சிங்களத் தொழிலாளர்களை இணைத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடத் தயாரா?
வருண: இது புறச் சூழல் சார்ந்த பிரச்சனை. அன்றை நிலை, ஐரோப்பியப் பொருளாதாரம், உலக நிலை என்பன எல்லாம் வேறுபட்டது….
இனியொரு: புறச் சூழல் என்பதைக் கூட லெனின் தெளிவாகக் கூறுகிறார். தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்து அது பிரதான முரண்பாடாக உருவான சூழல் குறித்தே நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய இனம் குறித்த கருத்தை முதலில் உருவாக்கியவரான லெனின் இதற்கு முன்னுதாரணமாகவே நாம் கருதுகிறோம். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் சூழலில் பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின் ஓட்டோபவர், ரோசா லக்ஸம்பேர்க் போன்றவர்களுடன் நடந்த விவாதங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார். நீங்கள் லெனினை நிராகரிக்கிறீர்களா?
வருண : நீங்கள் சொல்வதில் சில நியாயங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. கட்சிக்குள் இது குறித்த பிரச்சனை முக்கிய விவாதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த விவாதத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.
இனியொரு : இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இடதுசாரிக் கட்சி தொழிலாளர்களின் பிரதினிதிகளாக பிரிந்து செல்லும் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்களானால் தமிழ் மக்கள் இணைந்து வாழ விரும்பும் நிலை உருவாகும். சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இலங்கையில் அவ்வாறான ஒரு இடதுசாரிக் கட்சி உருவாகி பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இலாது போகும் அதே வேளை தமிழ்ப் பேசும் மக்களும் பிரிவினை குறித்துச் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க நீங்கள் தயாரா?
வருண: இன்னும் பலமான உட்கட்சி வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கும் இப் பிரச்சனையில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியமானது.இதுவரையில் முழுமையாக முடிவற்ற பிரச்சனைகளை நாம் அதிகமாக விவாதிக்க முடியாது.
இனியொரு: யார் இந்த பிரமகுமார் குணரத்தினம்? தமிழர் என்று சொல்கிறார்களே? உங்கள் பிரிவுற்ற குழுவின் தலைவரா? இந்திய உளவாளியா? ராஜபக்சவின் ஆளா? புலிகளோடு தொடர்பானவரா? இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?
நேர்காணலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்…
மாயாவியின் மந்திரத் தொடர் கதையா இது?
பாகம் பாகமாக….
ஆக தமிழர் அரசியலில் வந்தால்,
1.இந்திய உளவாளி,
2.ராஜபக்சவின் ஆள்,
3.புலிகளோடு தொடர்பானவர்”
என மூவகைப் பிரிவின் கீழ் வரவேண்டும் என்று வரையறுத்தவர் யார்?
முக்காலமும் உய்ந்துணர்ந்த தலைவனின் வழியில் ஒழுகுவோர்
இனியொருசார்பில் கீழ்காணும் கேள்வியை முன்வகத்த நண்பருக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். சிங்களவர் என்ன வேசத்தில் வந்தாலும் அவர்களொரு பேரினவாதிகள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதை தெளிவாக இனக் காண வைத்துள்ளீர்கள். இனியொரு: நாம் கோருவது மிகத் தெளிவானது. இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தேசிய இன முரண்பாடு அந்த அளவிற்குக் கூர்மையடைந்திருக்கிறது என்பதை இலங்கையில் வாழும் உங்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் என்று கூறிக்கொள்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை – பிரிந்து செல்லும் உரிமையை – ஏற்றுக்கொண்டுபோராடத நிலையென்பதே பெருந்தேசிய வாததை வலுவூட்டுகிறது…
வருண : ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மத்தியிலிருந்து இடதுசாரி இயக்கம் உருவாகுமானால் நாம் ஆதரிப்பதற்கும் அவர்களோடு ஐக்கிய முன்னணி அடிப்படையில் வேலை செய்வதற்கும் தயாரான நிலையிலுள்ளோம். தேசியத்தையும் பிரிவினையையும் ஆதரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து. இன்றைய முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஒன்றிணைந்த போராட்டம் என்பதே அவசியமானதாகக் கருதப்படுகிறது.
//உழைக்கும் மக்களின் சோசலிசப் பாதைக்கான போராட்டமாகவே ஜே.வி.பி உருவாக்கப்பட்டது// வருண
றொகணவிஜவீராவினால் மலையகத்தமிழர்கள் உழைக்கும் வர்க்கம் ஆக பார்க்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பங்களாராகவே பார்க்கப்பட்டனர். ஜே.வி.பி என்பதே அன்றும் இன்றும் என்றும் சிங்களப் பேரினவாதத்தின் ஒரு வடிவம் மட்டும்தான்.
//மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும். //வருண
சந்திரிக்காவுடன் தமிழின அழிப்பில் கைகோர்த்தது சரி அதே இனவழிப்பு போரை முன்னெடுத்த மகிந்த+ சரத் பொன்சேகா கூட்டுமட்டும் பிழை! என்னவொரு குள்ளநரித்தனம். அது சிங்களபேரினவாதிகளிற்கு மட்டும் உரித்தான குணாம்சம்.
//ஆக சோசலிச அரசை உருவாக்குவதில் ஏனையவர்களோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்கள் போராடும் போதே அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.//வருண
சரி தமிழர் தமது கடந்த கால கசப்பான அனுபவங்களின் காரணத்தால் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தால். “சோசலிச அரசு” இல்லாது போய்விடும்! அப்படித்தானே.தொடர்ந்தும் சிங்களப் பேரினவாதம்தான் கோலோட்சும்!
“தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் போது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலை பெறும்” எனச்சொல்லும் சிங்களப் பேரினவாதி “தேசியத்தையும் பிரிவினையையும் ஆதரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து. இன்றைய முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஒன்றிணைந்த போராட்டம் என்பதே அவசியமானதாகக் கருதப்படுகிறது.” என தமது சிங்களப்பேரினவாத கோரமுகத்தை மறைக்க முடியாது தவிப்பதுடன். தமது உள்நோக்கமான சிறிலங்கா பேரினவாத அதிகாரத்தலைமையை கைப்பற்றுவதற்கே அவதிப்படுகிறார் என்பதையும் அப்பட்டமாக சொல்லிவிட்டார்.
சிங்களப்பேரினவாதியின் கோரமுகத்தை அப்பட்டமாக்கும் விதமாக தொடர்ந்து இனியொரு பேட்டியாளர் கேள்விகளை தர்க்ரீதியில் வெகு சாமர்த்தியமாக வைத்தவுடன் சிங்களப்பேரினவாதியின் ஒரே பதில் “இதற்கான முக்கிய உட்கட்சி விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” ஆனால் தமிழர்கள் எந்த நிபந்தனைளுமின்றி தமது போராட்டத்தில் பங்கெடுக்கவேணுமென நிபந்தனை விதிக்கப்படுகிறது.
ஆக தமிழர்கள் மீதான சிங்களப்பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய விடயத்திற்கு என்ன தீர்வென முடிவெடுக்கப்படவில்லை(???) இல்லையேல் எடுக்கப்பட்ட முடிவென்பது சிங்களப்பேரினவாத இனவொடுக்குமுறையை தொடர்வதென்பதே. அதை மறைக்க வழமையான “முக்கிய உட்கட்சி விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” எனும் புலுடாபதில்.
இந்தியா மேற்குலகு தமிழரை பகடைகாயாக வைத்து தமது நலனை பேண முனைவதைப் போலவே இந்த சிங்களப்பேரினவாத மாற்று ஜே.வி.பி யும் தமிழரை பகடைகாயாக வைத்து தமது சிங்களப்பேரினவாதத்தை காப்பாற்றி தொடர முயற்சிக்கிறது. தமிழர்களே சிங்கத்திடமிருந்து தப்பும் முயற்சியென நம்பி முதலைக்கு இரையாகதீர்கள்.
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.
அப்ப உங்கள் தேசிக்காய் தலைவனும் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தானே அது என்ன மாதிரி, அந்த குன்டன் எதை செய்தாலும் சரி என்னும் புலி வர்க்ம் தானேநீர்
ஆக சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த வடிவில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத்தானே veeranனும் நிர்மலனும் சொல்கிறீர்கள்.
இன்று மாற்றங்களை கோரிநிற்கும் உலகில் வெளிப்படையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்துகின்ற இனியொருவின் நேர்காணல் ஒரு மைல்கல். ஜே.வி.யி யும் தங்களுடைய கடந்தகாலத்தை பற்றி சரியான முறையில் சுயவிமர்சனம் செய்து கொள்ளாத அமைப்பு. அது அதன் ஸ்தாபகர் றோகண உள்ளிட. ஜே.வி.பி க்குள் முற்போக்கான அணியினர் இருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.. மேலும் இனியொருவின் கவனத்திற்கு பின்னூட்டங்களின் தரத்தில் கவனமெடுங்கள். அண்மைக்காலமாக மற்ற இனங்களை மதத்தவரை தூற்றுகின்ற, தங்களின் வக்கிரங்களை கொட்டுகின்ற இடமாக மாற்றுவதை சிலர் தொடர்ச்சியாக செய்துவருகின்றனர். ஜனநாயகம் என்ற முறையில் அனுமதித்தாலும் கருத்தாடல்களின் தரம் குறைந்துவருகின்றது என்பதை கவனத்தில் எடுக்கவும். வசைகளுக்கு என்றே சிலர் தளம் வைத்திருக்கின்றார்களே. அந்த தளங்களை பரிந்துரையுங்கள். தங்கள் பலத்தை அங்கே பரிட்சித்துகொள்ளட்டும். இது மாற்று அரசியலுக்கான தேடலுக்குரிய தளம் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
பெயரிலும் எழுத்திலும் ஒரெ விதமாக எழுதுபவர்கள் தரம்’ தேடுகிறார்கள்.
அதற்கு சான்று:
..
..உங்கள் பு.தலைவர் யூதமக்களை வேட்டையாடிய கிட்லரின் ரசிகன் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். புலிகளின் ராணுவ சல்யூட்டும் நாஜிகளிடமிருந்து கடன்வங்கியது என்று ஐயர் எழுதியதாக நினைவு. ………
vampu
Posted on 10/05/2011 at 2:13 pm Peace ல் இருந்து Piece ஆகும் பாலஸ்தீனியம் : ரதன்
“பு.தலைவர் என்பதை புரட்சிதலைவர் என்று எழுதியதாக கருதி அல்லல்படவேண்டாம். புலிகளின் தலைவர் என்பதையே சுருக்கியிருந்தேன் என்பதை சிறுபிள்ளைகளுக்குக்கூட புரிந்திருக்கும்” மற்றும்படி புலிகளின் தலைவர் நாஜி ராணுவ அமைப்பின்மேல் கொண்டிருந்த காதல் ஆவணமயப்பட்டதுதானே. உங்கள் புண்பட்ட மனதை நோகடிப்பது என் நோக்கமல்ல.
இனியொரு: யார் இந்த பிரமகுமார் குணரத்தினம்? தமிழர் என்று சொல்கிறார்களே? உங்கள் பிரிவுற்ற குழுவின் தலைவரா? இந்திய உளவாளியா? ராஜபக்சவின் ஆளா? புலிகளோடு தொடர்பானவரா? இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?
அவர் கேகாலையை சேர்ந்தவர், தந்தை இந்திய வம்சவளி தமிழர், தாய் சிங்கள பெண்மனி, அவர் கற்றது சிங்களத்தில் , ஆனால் தமிழில்நல்ல புலமை மிக்கவர், இவரது அண்ணன் அவரும் பேராதனை பொறீயியற் பீடத்தில் கற்றவர், 89 ஆண்டு கொல்லப்பட்டார், இவர் மிக னேர்மையானவர், எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக வேருபாடு உண்டு,
1.இந்திய உளவாளி——-தந்தை இந்திய வம்சாவளி
2.ராஜபக்சவின் ஆள்——தாய் சிங்கள பெண்மணி
3.புலிகளோடு தொடர்பானவர்.——தமிழில் நல்ல புலமை.
இனிஒருவுக்கான கேள்வி, veeran
இன் ஆதாரங்களின் அடிப்படையில் எழுந்ததா?
“இது மாற்று அரசியலுக்கான தேடலுக்குரிய தளம்” எனவும் “பின்னூட்டங்களின் தரத்தில் கவனமெடுங்கள்” எனவும் போலியான பெரும்நாகரீக முகம்காட்டுபவரின் பின்னூட்ட அடையாளம் “வம்பு” அதற்குத்தான் தான் தகுதியானவர் உன்பதை காட்டும் விதமாக சென்ற வாரத்தில் மட்டும் இட்ட பின்னூட்டங்கள்.
1)” உங்கள் பு.தலைவர் யூதமக்களை வேட்டையாடிய கிட்லரின் ரசிகன் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். புலிகளின் ராணுவ சல்யூட்டும் நாஜிகளிடமிருந்து கடன்வங்கியது என்று ஐயர் எழுதியதாக நினைவு. அப்போ ” மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை……..?”
2)கடைந்தெடுத்த கயவாளிட்தனதுடன் கருத்துக்கள் எப்படி மோதுவது?
3)கோயில் வைத்து உண்டியல் குலுக்கியும் களைத்துப்போவார்களா என்ன?
ஆரோக்கியமான கருத்தாடலுக்கு திராணியற்றவர் “பின்னூட்டங்களின் தரத்தில் கவனமெடுங்கள்” என்பது பெரும் நகைப்புக்குரியது.
“உன்னை திருத்திக்கொள் சமூகம்தானாக திருந்திவிடும்” எனும் உண்மை வரிகள்தான் “வம்பு” விற்கு சமர்ப்பணம்.
//மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.
அப்ப உங்கள் தேசிக்காய் தலைவனும் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தானே அது என்ன மாதிரிஇ அந்த குன்டன் எதை செய்தாலும் சரி என்னும் புலி வர்க்ம் தானேநீர்//veeran
ஐனாதிபதி தேர்தலை பஸ்கரிப்பென்பது எப்படி மகிந்தா ஆதரவாகும்??? யார் யுத்தத்தை ஆதரித்தது. லங்காபுவத்செய்தியின் பாதிப்பா! ததேகூட்டமைப்பு மகிந்தாவை எதிர்த்ததை தவறு என்கிறீர்கள்.
உங்கள் சந்தர்பவாத குற்றச்சாட்டை எனி பாருங்கள். 2005 மகிந்தாவை ஆதரித்தது (???) தப்பென சொல்லும் தாங்கள் 2010ல் மகிந்தாவை எதிர்த்ததையும் தப்பென்கிறீர்கள். ஆக தங்கள் எத்தனம் வெறும் சேறடிப்பு மட்டுமே.
உங்களிற்கு தேவை சிங்களத்தின் எலும்புத்துண்டு மட்டும்தான்.அதை ரணில்லோ மகிந்தவோ யேவிபியோ யார் போட்டாலும் சந்தர்பத்திற்கேற்ற வாறு வாலாட்டுவீர்கள்.
இனி தலைப்பிற்கு வருவோம். யேவிபியின் மாற்று அணியினர் மகிந்தா அரசிற்கெதிராக ஏதோ சோசலிச புரட்சி செய்யப் போகிறார்களாம். அதுபற்றிய தங்கள் கருத்தென்ன? பதிலை நேரடியாக சொல்வீர்களா! இல்லை வழமை போன்று அர்த்தமற்ற அலம்பல்கள்தானா!
“வழமை போன்று அர்த்தமற்ற அலம்பல்கள்தானா!”
.நிர்மலன் . உங்களையே நீங்கள் வர்ணிக்கின்ற வார்த்தைகள். நான் புதிதாக சொல்வதற்கொன்றுமில்லை. ந்ன்றி.
Lenin to JVP
political freedom and democracy (in which case he is naturally no longer a Social-Democrat)—that this example virtually proves that it is the bounden duty of class-conscious workers to conduct systematic propaganda and prepare the ground for the settlement of conflicts that may arise over the secession of nations, not in the“Russian way”, but only in the way they were settled in 1905between Norway and Sweden. This is exactly what is meant by the demand in the programme for the recognition of the right of nations to self-determination. But Rosa Luxemburg tried to get around a fact that was repugnant to her theory by violently attacking the philistinism of the Norwegian philistines and the Cracow Naprzod; for she understood perfectly well that this historical fact completely refutes her phrases about the right of nations to self-determination being a “utopia”, or like the right “to eat off gold plates”, etc. Such phrases only express a smug and opportunist belief in the immutability of the present alignment of forces among the nationalities of Eastern Europe.
Despite the very extensive autonomy which Norway enjoyed (she had her own parliament, etc.), there was constant friction between Norway and Sweden for many decades after the union, and the Norwegians strove hard to throw off the yoke of the Swedish aristocracy. At last, in August 1905, they succeeded: the Norwegian parliament resolved that the Swedish king was no longer king of Norway, and in the referendum held later among the Norwegian people, the overwhelming majority (about 200,000 as against a few hundred) voted for complete separation from Sweden. After a short period of indecision, the Swedes resigned themselves to the fact of secession.
ததேகூட்டமைப்பு மகிந்தாவை எதிர்த்ததை தவறு என்கிறீர்கள்.
உங்கள் சந்தர்பவாத குற்றச்சாட்டை எனி பாருங்கள். 2005 மகிந்தாவை ஆதரித்தது (???) தப்பென சொல்லும் தாங்கள் 2010ல் மகிந்தாவை எதிர்த்ததையும் தப்பென்கிறீர்கள். ஆக தங்கள் எத்தனம் வெறும் சேறடிப்பு மட்டுமே.
னான் எப்போது சொன்னேன் 2005 மகிந்தாவை ஆதரித்தது (???) தப்பென 2005 லநான் மகிந்தவுக்கு எதிராக் அல்லவா செயல்பட்டேன்
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.Posted on 10/10/2011 at 1:39 pm veeran
இனி தலைப்பிற்கு வருவோம். யேவிபியின் மாற்று அணியினர் மகிந்தா அரசிற்கெதிராக ஏதோ சோசலிச புரட்சி செய்யப் போகிறார்களாம். அதுபற்றிய தங்கள் கருத்தென்ன?
இதுவென்ன அரட்டைஅரங்கமா? கோவில் திண்ணைபேச்சா? வரலாறுகள் நிறைந்துகிடக்கின்ற மகாபாரதம், இராமாயணம் வாசியுங்கள். இராமர் அணில் உதவியுடன் கட்டியபாலத்தை பற்றி ஆய்வுசெய்ய்யுங்கள். அதைவிடுத்து…….
ததேகூட்டமைப்பு மகிந்தாவை எதிர்த்ததை தவறு என்கிறீர்கள்.
உங்கள் சந்தர்பவாத குற்றச்சாட்டை எனி பாருங்கள். 2005 மகிந்தாவை ஆதரித்தது (???) தப்பென சொல்லும் தாங்கள் 2010ல் மகிந்தாவை எதிர்த்ததையும் தப்பென்கிறீர்கள். ஆக தங்கள் எத்தனம் வெறும் சேறடிப்பு மட்டுமே
னான் சொல்லவில்லையே மகிந்தவை எதிர்த்தது தப்பென்று
Dear JVPs,What should Sinhala workers do in Sri Lanka? Why don’t you follow the Norwegian example??
//The close alliance between the Norwegian and Swedish workers, their complete fraternal class solidarity, gained from the Swedish workers’ recognition of the right of the Norwegians to secede. This convinced the Norwegian workers that the Swedish workers were not infected with Swedish nationalism, and that they placed fraternity with the Norwegian proletarians above the privileges of the Swedish bourgeoisie and aristocracy.// V.I.LeninThis is what inioru.com said too://இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இடதுசாரிக் கட்சி தொழிலாளர்களின் பிரதினிதிகளாக பிரிந்து செல்லும் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்களானால் தமிழ் மக்கள் இணைந்து வாழ விரும்பும் நிலை உருவாகும். சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இலங்கையில் அவ்வாறான ஒரு இடதுசாரிக் கட்சி உருவாகி பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இலாது போகும் அதே வேளை தமிழ்ப் பேசும் மக்களும் பிரிவினை குறித்துச் சிந்திக்க மாட்டார்கள்.//
பழைய பால் தயிரானது அதில் இருந்து நெய் எடுப்பதற்கு பதிலாய் தேன் வரும் என்று கடைந்து பார்த்து தோல்வி காண்பது நிச்சயம்
வம்பு! நீங்கள் எழுதிய ‘பு’ பற்றிய வம்பளப்பில் எனக்கு அக்கறையில்லை.
முதலில் “கிட்லரின் ரசிகன்.””புலிகளின் ராணுவ சல்யூட்டும் நாஜிகளிடமிருந்து கடன்வங்கியது.”
என்பது எங்கே ஆவணமயப்பட்டது? எங்கே அய்யர் எழுதியிருக்கிறார்? என்பதை ஆதார பூர்வமாகத் தெளிவுபடுத்துங்கள்.
தவறு என்று முன்பே சுட்டிக் காட்டிய பின்னரும்,மீண்டும் வம்பு பண்ணுகிறீர்கள்.அதை விடவும்,தரம்,தராதரம் என்கிற சிந்தனை முறையை புகுத்த முனைகிறீர்கள்.
எழுதியதை வாசித்து, விளங்கி, பகுப்பாய்வு செய்து, கருத்தாட வாருங்கள்.
பிரிந்து செல்லும் உரிமை பற்றிய அவர்களது நிலைப்பாடு என்ன என்ற உரையாடலுக்கு முன் கேட்கப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான கேள்விகள் மூன்று தவறவிடப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அடுத்த பாகத்தில் அவற்றை எதிர்பார்க்கிறேன்.
1. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், தமிழர், மலையகத்தமிழர் ஆகியோரைத் தேசிய இனங்களாக அங்கீகரிக்கிறீர்களா?
2. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான பேரினவாதத்தின் ஒடுக்குமுறை கூர்மையடைந்துள்ள நிலையில் ஒன்றிணைந்த தொழிலாளர் வர்க்கப்போராட்டத்தின் முன் நிபந்தனையாக பேரினவாத அரசியலமைப்பு மாற்றப்பட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கமும் தீர்வுத்திட்டம் ஒன்றும் முன்வைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? குறிப்பாக தமிழர் மீதான ஒடுக்குமுறை தீவிர நிலைக்குச் சென்றுவிட்டதால் தமிழருக்கான அரசியல் தீர்வும் அதிகாரப்பரவலாக்கமும் முக்கியமான உடனடி அரசியற்பணி என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
3. மலையகத் தமிழர் தொடர்பான ரோகண விஜேவீரவின் நிலைபபடு மீது உங்களுக்கு விமரிசனங்கள் இப்போது உண்டா?
இப்போது நாம் அனைவரும் தமிழ் தேசியத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் . அதை விடுத்து உங்களின் கற்பனையான
அனைத்து இனங்களில் இணைவும் இலங்கையில் நடவாது !
//பு.தலைவர் என்பதை புரட்சிதலைவர் என்று எழுதியதாக கருதி அல்லல்படவேண்டாம். புலிகளின் தலைவர் என்பதையே சுருக்கியிருந்தேன் //vampu
அப்படிங்களா! உங்களிற்கு சாதரணதமிழ் புரியாது பு.மொழிதான் புரியுமா!
பு.வைத்து பு.காட்டி பிழைப்பு நடத்தும் வெறும் பு. வம்புதானே தாங்கள். ஈபிஆர்எல்எப் பு.வில் வளர்ந்தீர்களா! இல்லை போலி கொம்முனிச பு.வில் வளர்ந்தீர்களா!
சிங்களப்பேரினவாத பு.கள் சிறிலங்காமுஸ்லீம் பு.கள் உங்களை போல் பு.காட்டி பிழைப்பு நடத்தும் தங்கள் தோழர்களா!
பு- என்றால் புத்தி புலி புரட்சி புழுகு புறம்போக்கு புண்ணாக்கு …. என நினைத்து வீணாக ரென்சன் ஆகாதீர்கள். பு- புலுடா. வெறும் புலுடா புரியுதா இப்ப “பு.”!
உந்த பு. வைத்து/ காட்டி பிழைப்பு நடத்துகிறதை, பின்னூட்டம் எழுதுவதை உங்கள் மட்டில்வைத்திருங்கள். பு.வம்பு அவர்களே!
வீரனுக்கு போடுகிற தொப்பி உங்களிற்கும் பொருந்துகிறதா! தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
//னான் சொல்லவில்லையே மகிந்தவை எதிர்த்தது தப்பென்று//Veeran
2010 ஐனாதிபதி தேர்தலில் ததேகூடட்டமைப்பின் நிலைப்பாடு மகிந்தாவை எதிர்க்கணும் தோற்கடிக்கனும் என்பதே. அதுதான் சரத்பொன்சேகாவின் ஆதராவாக உருபெற்றது. எனவே சரத்பொன்சேகா ஆதரவென்பது மகிந்தா எதிர்ப்பே!
//எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக வேருபாடு உண்டு//Veeran
அரசியல் என்பது நாட்டின் மக்களின் நலன் பேணும் உன்னத கலை. சிங்களப்பேரினவாத எலும்புத்துண்டிற்கு வாலட்டுவதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
//. இராமர் அணில் உதவியுடன் கட்டியபாலத்தை பற்றி ஆய்வுசெய்ய்யுங்கள். அதைவிடுத்து……. //kovilkaaran
இந்திய வானரப்படைக்கு வால்பிடித்த சேவகம் செய்த மலரும் நினைவுகளோ!
அட் என்ன அருமையான தமிழ், தமிழ் வளர்க்கும் பண்டிதர், புலியின் ஏக விசுவாசி என்னமாய் பு வில் கல்க்குகின்றார்
அது தானே அண்ணனை தம்பி அண்னன் டெலோ வில் இருந்தான் என்று கொன்றால் அது அரசியல், டெலோ காரனை டயர் போட்டு எரித்தால் அது அரசியல், வடையும் ரோல்சும் சாப்பிட்டு விட்டு அமிர்தலிங்கதை சுட்டால் அது அரசியல், தற்கொலை குன்டு தாரி மூலம் பக்கத்துநாடு பிரதமரை கொன்றால் அது அரசியல், கோவனம் அணிந்து எதிரியின் காலில் வ்ழுந்தால் அது அரசியல்
இதைத்தான் சொல்லுறது,” கண்ட இடத்தில கொண்டை முடியிறது”, எண்டு.
சொல்லாத சேதிகள்கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட செல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்எம் மக்களை நேசித்ததனால் மரணிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்காக இந்த நினைவு தினக் கூட்டத்தில் பங்கு பற்றுவோம் !இடம்: Scarborough Village Recreation Centre3600 Kingston Road Toronto ON M1M 1R9Markham Road & Kingston Roadகாலம்: October 16, 2011 (Sunday) 3:00 pm – 6:00 pm‘தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாக இருந்தவேளையில் கடத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பான Amnesty International தனது1994ம் ஆண்டு மார்ச் இதழில் செல்வியின் விடுதலையைக் கோரி எழுதியது. இந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists அமைப்பால் வழங்கப்பட்டது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி பேரினவாதம் கோலோச்சும்போது
தமிழ் மக்களை பொறுத்திருங்கள் நெல் விதித்திருக்கு அறுவடை முடிந்தால்
உங்களுக்குத்தான் சாப்பாடு என்பது போல் உள்ளது வருனவின் பதில்.
சிங்களத்தின் பாட்டாளி மக்கள்குஉட பேரினவாத போதையில் உள்ளார்கள்.
அதற்கு எமது முதலளித்துவ வளிகாட்டளிலான விடுதலை போராட்டமே
முக்கிய காரணி. முற்போக்கு சக்திகளை எம்முடன் இணைப்பது அவசியம்
அதற்காக யாரோ கூறியதுபோல் உறைந்த பாலில் தேனை எதிர் பார்த்து நாம்
யாருடனும் இணைய வேண்டாம்
எம் சுய நிர்ணய உரிமையை அங்கிகரிக்காத எவரும் எமக்கு உதவி செய்ய மாட்டார்கள்
நீண்ட நாட்களின் பின் நல்ல ஒரு பேட்டி
“தேசியம் என்பது முதலாளித்துவக் கோசம் என்பதிலும் உள்ளகச் சந்தைக்கான போட்டியிலிருந்தே தேசிய இன முரண்பாடு உருவாகிறது என்பதிலும் நாமும் தெளிவாக இருக்கிறோம். ”
ஆனால் அதற்கான தீர்வில் தான் குழம்பிப்போய் உள்ளீர்கள். முதலாளித்துவ முரண்பாட்டிற்கு முதலாளித்துவமுறையிலேயே தீர்வு தேடும் உங்களை என்னென்பது?
சிங்கள மக்களிடம் கட்சி கட்ட மறுக்கும் எந்தத் தமிழ் அரசியல் வாதியும் இனவாதியே. (மறுதலையும் உண்மையே)
இந்த கருத்துக்கு முழுமையான ஆதரவைத் தருகிறேன்.
இனங்களுக்கான மதங்களுக்கான மோதல்களை முதாலித்துவ-சிந்தனைவாதிகளே தமது லாபத்திற்காக ஏற்படுத்திவிடுகிறார்கள். இதில் பலியாவது அந்த நாட்டின் பாட்டாளிவர்க்கமே!. இதை தானே! கடந்த முப்பது ஆண்டுகாலங்களில் கண்டோம்.
இனமோதல்களில் இரண்டிலும் ஐந்துலட்சம் மேலானவர்கள் கொங்கோ பிரதேசத்தில் பலியாகிப்போனார்கள். இந்த இனமோதல்களுக்கு தூண்டிவிட்டவர்களும் வித்திட்டவர்களும் யார் பிண்னணியில் சுவீடன் நோக்கிய நிறுவனமே பதினைந்து மில்லியன் டொலர்களை முதலீடுசெய்ததாக
ஒரு செய்திகூறுகிறது. காரணம் கைதொலைபேசிக்கு வேண்டிய முக்கிய கனிமப்பொருள் கொங்கோ யுவண்டாவில் தான் குவிந்திருக்கின்றன.
இலங்கையில் நடந்த முப்பதுவருடங்கள் நீடிக்கபட்ட உள்நாட்டுயுத்தற்கு எது காரணம்? இல்மையிட் மன்னர்வளைகுடாவை சுற்றியுள்ள எரிவளங்கள்? இல்லை. இந்துசமுத்திரத்தில் ஏகாதிபத்தியங்களில் தேவையான முறையில் இலங்கை முக்கிய இலக்கில் இருப்பது இதுபோன்ற இன்னும் பலபத்து காரணங்கள் இருக்கலாம். மலிந்தால் சந்தைக்கு வரும். அப்போது கண்டு கொள்வோம்.
நான் குறிப்பிடவந்த பொருள். இனத்திலையோ மதத்தலையோ ஒருபோதும் பாட்டாளிவர்க்கத்திற்கும்-கட்சிக்கும் பகைமை இருக்க முடியாது. இது செய்கையாக திணிக்கப்படுவதே! லாபயரசில்வாதிகளால் இந்த வாதிகள் தமிலொன்னா? சிங்களமென்னா? முஸ்லீம்மென்னா?
ஈபிடிபி கிரிமினல் கும்பலின் சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாளருக்கும் பாட்டாளிக்கும் என்னையா சம்மந்தம்???
மகிந்தா அடிமைக்கு, தமிழன் சிறிலங்கா அரசபயங்கரவாத + சிறிலங்கா முஸ்லீம் + போலித்தமிழ் கொம்னிஸ்ட் கூட்டினால் 60 வருடங்களிற்கு மேலாக இனவழிப்பு செய்யப்படுவது தெரியாதாம். சிங்கள எசமானர்கள் 30 வருடமாய் அனுபவித்த அழிவுதான் அடிமைக்கு உறைக்கிறதோ!
உங்கள் எசமானே முதல்தடவையாக ஐனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சொல்லியது எனக்கு சிங்களவர்களே வாக்களித்தார்கள் எனவே நான் அவர்களின் நலனையே முன்னிலைப்படுத்துவேன் என. வால் நீங்கள் “தமிலொன்னா? சிங்களமென்னா? முஸ்லீம்மென்னா?” எனக்கதைவிடுகிறீர்களா!