கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இளம் பெண்களை வலுகட்டாயமாக இராணுவத்தில் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தமை தெரிந்ததே. இவ்வாறான முயற்சிகளை நடைபெறுவதை இலங்கை அரசின் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத் தளபதி சுதச ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளியன்று(21) கிளிநொச்சி ஒத்துழைப்பு மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவத்தளபதி உரையாறும் போதே இத்தகவல்கள் வெளியாகின.
தாம் இராணுவத்தில் பெண்களை இணைத்துக்கொள்வது உண்மையென்றும் 25000 ரூபா மாதந்த ஊதியமாக வழங்குகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்வது தொடர்பாகப் பத்திரிகைச் செய்திகள் வெளியிட்டு வசதியாக வாழ ஊதியம் மற்றும் மேலதிக நன்மைகள் குறித்தும் செய்தி வெளியிட்டதக அவர் கூறினார்.
போரினால் பாதிப்படைந்து சமூகத்தில் நிலவும் அச்சம் மற்றும் புறக்கணிப்புக் காரணமாகப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகள் சமூகத்தின் கலாச்சாரத்தால் கட்டமைக்கபட்ட உளவியல் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளனர். இலங்கை அரச பாசிசத்தின் இனவழிப்பால் கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரமும் நாளாந்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பெண்களை 25 ஆயிரம் ரூபா தருகிறோம் என்று ஆசைகாட்டி ஏமாற்றி இராணுவத்தில் இணைத்துக் கொள்வது பலவந்த இணைப்பின் ஆரம்பமே. அரசு என்ற அடிப்படையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு சமூக உதவித்திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக இனவழிப்பு நடத்திய போர்க்குற்ற அழுக்குகளைச் சுமந்துகொண்டிருக்கும் பாசிச இராணுவத்தில் இணைந்துகொள்ளக் கோருவது பலவந்தமான இணைப்பே.
பெண்களைச் சூழ்நிலையின் கைதிகளாக்கி இராணுவத்தில் இணைவதற்கான சமூகக் கட்டாயத்தை ஏற்படுத்தும் இராணுவத்தின் நோக்கம் இனச்சுத்திகரிப்பே.
வெளிப்படையாகவே பெண்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டு, இராணுவத்தில் இணையுமாறு கோரும் பாசிச இராணுவம் மறைமுகமாக எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை அனுமானிக்கலாம்.
தனது பொதுவான தேவைக்கும் அதிகமாக இராணுவத்தைக் கொண்டிருக்கும் பாசிச இராணுவம், ஆட்குறைப்புச் செய்வதற்கு எதிராக ஏன் இராணுவத்தை இணைத்துக்கொள்கிறது என குறைந்தபட்சம் எழுத்துமூலமாகக் கேட்பதற்குக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுவற்றுக் காணப்படுகிறது.