தமிழ்நாட்டில் குன்னூரில் ராணுவ மையம் உள்ளது. இங்கிருந்து ராணுவ விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளோர் விமானத்தில் பறந்ததாக தெரிகிறது. இந்த விமானம் கோவை சூலூர் அருகில் சென்ற போது விபத்தில் சிக்கி காட்டுப்பகுதியில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணம் செய்த ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி பற்றிய தகவல் தெரியவரவில்லை.
இச்சம்பவம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.