26.10.2008.
சந்திரசேகரன், கருணாநிதியின் உரைகளை ஐ.தே.க. ஏற்றுக்கொள்கின்றதா? கருணாநிதி என்னதான் தமிழ்நாட்டில் துள்ளினாலும் இந்திய அரசாங்கம் எம்முடனேயே இருக்கின்றது என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். ஜானக பெரேரா கொலை தொடர்பில் சபையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,தனது தந்தையை பலியெடுத்த எதிராளியை தரமாட்டீர்களா என ராகுல் காந்தி இன்னும் கண்ணீர் வடிக்கின்ற நிலையிலேயே இந்தியா எமக்கு ஆதரவு நல்க வருகின்றது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஓய்வுபெறும்வரை இறைமை, ஒருமைப்பாட்டிற்காக உழைத்து பல படைப்பிரிவுகளை ஆரம்பித்தார் என்று கூறுகின்ற ஐ.தே.க.வில் அவருக்காகக் கண்ணீர் வடிவப்பதற்காக 8 எம்.பி.க்களே இருக்கின்றனர். சரியானால் நிரம்பி வழிய வேண்டும்.
ஜானக பெரேரா பலியாகும் போது எத்தனை எம்.பி.க்கள் அங்கு இருந்தனர். தலைமைத்துவத்திற்கு அவரால் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகத்தில் பலியெடுப்பதில் அனுபவம் பெற்ற ஐ.தே.க.வினரே லலித் அத்துலத் முதலியை போல இவரையும் பலியெடுத்திருக்கலõம்.
புலிகளுக்கு சம்பந்தமானவர்களே, அவர்களுக்கு (புலிகளுக்கு) இடையூறு ஏற்படுத்தாதவர்களே இந்த கொலையை செய்திருக்கலாம். மரணத்தின் மூலமாக, அதுவும் படைவீரின் மரணத்தின் மூலமாக சார்ஜ் இறங்கிய பற்றரியை சார்ஜ் செய்துகொள்ள ஐ.தே.க. முயற்சிக்கின்றது.
படைவீரரை கௌரவிக்கும் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதி, அப்பாவி மக்களையும் படையினரையும் கொன்றொழிக்காது தன்னை பலியெடுக்குமாறு கோரினார். வெள்ளையர்களை வெயிலில் இருக்க சொல்லிவிட்டு மக்களை சந்தித்த பரம்பரையை சேர்ந்தவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அமைச்சர் சந்திரசேகரனின் உரையையும் கருணாநிதியின் உரையையும் ஐ.தே.க. ஏற்றுக்கொள்கின்றதா? யுத்தத்தைக் கைவிட்டு ஜனநாயகத்திற்குள் நுழையும் போது வெறுக்கின்றீர்களே! நாடு இல்லை என்றால் எதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்யப்போகின்றீர்கள்?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு பொறுப்பான எதிராளியை தரமாட்டீர்களா? என்று ராகுல் காந்தி இன்றும் கண்ணீர் வடிக்கின்றார்.