அரசுப்பணிகளில் 30 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதன் முதலாக அறிவித்து சாதனை புரிந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் பெண்களும் அரசுப்பணிகளில் மிகச்சாதரணமாக இருப்பார்கள். இது போன்ற நிலமையை கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே அதிகமாகக் காண முடியும். கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெண்களில் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் இருக்கிறது. ஆனால், வட இந்தியாவில் அரசுப்பணிகளில் பெண்களில் பங்களிப்பு மிக மிக குறைவு.
அரசுப்பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதம் அளவுக்கு கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அது 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கான முன்னுரிமை மீண்டும் வழங்கப்படும். அதே போன்று முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். போட்டித்தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும். தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படும்” என்றார்.