தமிழ்ப் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரினவாதம் இதுவரை மகிந்த ராஜபக்ச என்ற கொடிய இனவாதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இப்போது அதன் தலைமையை மத்திரிபால சிரிசேன குழு கையகப்படுத்த எத்தனிக்கிறது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவுடன் ஒப்பந்தம் எழுதிக்கொண்ட மைத்திரிபால தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் எழுத மாட்டோம் என்கிறார். ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் வேறும் தரப்புக்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் திட்டம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது தேர்தல் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரமளவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அக்கொள்கைப் பிரகடனத்தில் தமிழர் பிரச்ச்னைபற்றிப் பேசப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். இதேவேளை சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமையான சுயநிர்ணைய உரிமையை மறுக்கும் இடதுசாரிகள் உழைக்கும் மக்களுக்கு தவறான அரசியல் பாடத்தைக் கற்பிக்கின்றனர்.
சிங்கள அரசியல் தலைவா்களில் எவராவது தமிழருக்கு ஒரு தீா்வை வழங்க எண்ணியுள்ளேன் என்று கூறி இலங்கையில் தோ்தலில் வெல்லமுடியுமா?? ஒருபோதும் இல்லை அப்படி ஒரு எண்ணம் யாருக்காவது இருந்து இரகசிய உடன்படிக்கை ஏதாவது செய்ய நினைத்தாலும் இவா்களுக்கு நிதி வழங்கும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கல்லவா ஆடவேண்டும்.
மறுபடியும் சிங்கள போினவாதிகளிற்காக காவல் இருந்து வாக்களித்து ஏமாறுவதை விட தமிழ் மக்கள் அன்றய நாளில் வேறு ஏதாவது பிரயோசனமான ஒன்றை செய்யலாம்.
இந்த தோ்தலுக்காக கட்சி மாறி ஓடித்திாியும் மனிதா்களைப்பாா்க்கும்போது இந்திய IPL தொடங்கும் வேளையில் வீரா்களை ஏலம் விடும் நிகழ்ச்சியே ஞாபகத்திற்கு வருகிறது. இவா்களுக்கென்று ஒரு கொள்கை கோத்திரம் எதுவுமே கிடையாதா அதாவது இடது வலது என்று ஏதாவது.
A law should be pass to these mp,s that if they want to cross over to another party they give the seat to previous party. And go alone.