அதிகாரமற்ற வெற்று நிர்வாக அமைப்பான வடமகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இலங்கை இனப்படுகொலை ஜனாதிபதியின் முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வேண்ட்டும் என்பதில் விக்னேஸ்வரன், சுமந்திரன், சம்பந்தன் உட்பட தலைமை மட்டத்து உறுப்பினர்கள் உறுதியாகக் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை எதிர்த்த ஏனைய பல புதிய உறுப்பினர்கள் கட்சியில் விவாதங்களை முன்வைத்தனர்.
இன்று கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட்டம் நீண்ட இழுபறிகளின் பின் முடிவுற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு கொழும்பில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவிர அமைச்சர் பதவிகள் குறித்த சச்சரவும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அபிவிருத்தி என்றை மாயையைக் கூட நிராகரித்த மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. போர்க்குணத்தோடு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவே அக்கட்சிக்கு வாக்களித்தனர். வாக்குப் பொறுக்கும் கூட்டமைப்பின் தலைமை அருவருப்பான சண்டையில் ஈடுபட்டுள்ளது.
சண்டையுன்னு வந்துட்டா சட்டை கிழியத்தான் செய்யும் அது மாதிரித்தான் பதவியுன்னு வந்தா போட்டி இருக்கத்தான் செய்யும்.
பாவம் மக்கள். மகிந்தாவுக்கு சார்பான கோஷ்டியில் விக்கி ஐயாவும் சேர்ந்துள்ளார். ஆரம்பத்திலே மோதினால் மகிந்தா ஒன்றையும் தரமாட்டாராம். காலில் விழுந்தாலும் ஒன்றையும் தரமாட்டார். ஓட்டு வாங்க மேடையில் வீராவேசம். மந்திரிப் பதவிக்காக உள்குத்து மும்முரம். நல்ல கூத்தமைப்பு. சிறிதரனுக்கும், சுரேசுக்கும் இடையில் அதிகார மோதல்.