தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளில் அரசுத் தரப்புக்குத் தலைமை வகிப்பவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் செயற்படமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.அதேபோன்றுதான் ஐ.நா.நிபுணர் குழுவுக்கும் அவர்கள் சாட்சியம் வழங்கியிருக்கமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். ஊடகங்களில்தான் இவ்வாறான தகவல்கள் வெளிவருகின்றன. ஊடகங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இது அவர்களுக்கும் தெரியுமென நினைக்கின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எதிராகக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விக்கிலீஸின் கேபிள் ஒன்றும் அம்பலப்பத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தேச விடுதலைப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்கும் புதிய அரசியல் தலைமையின் தேவையை இவையனைத்தும் வலியுறுத்துகின்றன.
சாட்சியம் சொல்லி விட்டு இங்கே எப்படி இருப்பது