புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம் படங்களை நீண்ட வரிசையில் நின்று பார்த்துத் தொலைக்கின்றவர்கள் தமிழ்பெயர் மன்றங்கள் வைத்து மற்றவர் குழந்தைகட்கு தமிழ்பெயர் சுட்டத் துடிக்கின்றார்கள்.,
இதற்கும் ஒருபடி மேலே போய் தமிழக படங்களின் உப்புச்சப்பற்ற பாடல்களை வெளிநாடுகளில் வெளியிட்டு மகிழ்கின்றார்கள் இந்தப் புலம் பெயர் தமிழ் படைப்புப் பிரமங்கள். தமிழே தம் உயிர் மூச்சு என்று வாழுவதாகச் சொல்கிற புலம் பெயர் தமிழர்களின் பேச்சில் மட்டும் தமிழ் இருந்தால் சரியா????? செயலிலும் அது வேண்டாமா?. அபத்தமும் ஆபாசமும் நிறைந்த வெற்றுச் சந்தைதான் நாம் கட்டி வளர்த்திருக்கிற சினிமா. இதையே கலை என்று கொண்டாடி அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள் புலம் பெயர் மக்கள்.தமிழ்த் திரைப்படம் பேசத்தொடங்கி சுமார் எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. .
அதன் ஆரம்பப் படமான தேவதாஸ் மற்றும் வண்ணப்படமாக வந்த புரட்டுப்படம் அலிபாவும் நாற்பது திருடர்களும் என ராஜா இராணிக்கதைகளிலிருந்தும் ,கட்டுக்கதைகளிலிருந்தும், காதல் கதைகட்கு மாறியிருக்கிறது சினிமா. அதன் நீண்ட வரலாற்றில் தமிழையும், தமிழின அறிவியலையும்,மானிட நேயத்தையும் தட்டி எழுப்பித் தலை நிமிர வைத்துள்ளதென சொன்னால் அதைவிட அபத்தம் வேறில்லை
திரையில் விழும் வண்ணங்கள் யாவும் அதில் நடிக்கின்ற நடிகரின் எண்ணங்கள் என்கின்ற எதிர்பார்ப்பில் அவர்களைக் காவடிமேல் தூக்கிஆடி தமிழக முதல்வராக்கிவிட்டுதான் மறுவேலை எனப் பழகிப் போயினர் தமிழக மக்கள்
.சினிமாக்கள் கருத்துக்களை விதைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லைத்தான். ஆனாலும் அந்தக்கருத்துக்கள் நல்லவையா? கெட்டவையா? என்று பகுத்துப்பார்க்க வேண்டியவர்கள் திரைப்படம் எதைச் சொன்னாலும்கைஎடுத்துக் கும்பிடும் பக்தர்களாகி கையறு நிலையில் உள்ளமை அபாயகரமானது. அச்சம் தருவது. நடிக்கின்ற நடிகரைத் தெய்வமாக்கியும், காக்கும் ஆபத்தாண்டவர்களாக்கியும்,மகிழ்கின்றவர்களிடத்து சினிமா ஒரு பொழுது போக்குச் சாதனம் என்கின்ற கருதுகோள் கொஞ்சமும் எடுபடாது.அவ்வாறு தெய்வமாக்கப்பட்ட பலர் தமிழக அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் நம் கண்முன் விரிகின்றார்கள்.
சமூகச் சீரழிவுகளை வளர்த்து விடும் புராணக் கட்டுக்களையும்,இதிகாச இடர்களையும் மக்கள் மனதில் விதைத்து மக்களை மாக்களாக்கி விட்ட சினிமா இன்றைக்கும் அக்கொள்கையிலிருந்து கொஞ்சமும் விலகவில்லை.புலம்பெயர் தமிழரைச் சுற்றிப் படர்கின்ற இந்தச் சினிமா மோகம் வேறு தினுசில் அங்கு முகாமிட்டிருக்கிறது. நடிகர் நடிகையரை கொண்டாடங்களுக்கு, களியாட்டங்களுக்கு வரவழைத்தல்,அவர்களைப் பிரதம விருந்தினர்களாக்கி விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் விருது வழங்கல்கள் புத்தக வெளியீடுகள் இசைக்கச்சேரிகள் நடன நிகழ்வுகள் என்று அவர்களின் மத்தியஸ்தத்தில் புலம் பெயர் தமிழர் கைதட்டுகின்றார்கள்.
வசந்த கால இரவுகள் நடிகர்கள் அல்லது சினிமாத்துறை சார்ந்தவர்கள் இல்லாமல் புலம்பெயர் நிலத்தில் இல்லை என்கின்ற அளவிற்கு இறுகப் பின்னப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் என்கின்ற பெயரில் இயங்குகின்ற அமைப்புகள் கூட தமிழ் வல்லுனர்களை மொழிசார் புலைமையாளர்களை அழைப்பதற்குப் பதில் சினிமாக்காரரையே அழைத்து பார்வைப் பொருளாக்கி காட்சிப்படுத்திச் சந்தைப்படுத்துகின்றார்கள். வருமானம் வருமெனில் திரைத் தேவதைகளின் தீட்டுத் துணிகளையும் தங்கள் தலைப் பாகைகளாக கட்டிக்கொள்ளத் தயங்காதவர்களாயிருக்கின்றார்கள் இந்தச் தன்மானச் சிங்கங்கள்.
இத்தகு வியாபாரப் போட்டிகளில் ,பங்குப் பிரிவினைச் சண்டைகளில்,எழுத்துப் புரட்சிகளில் ஒருவர் சிண்டையொருவர் பிய்த்து பின் அது இன முலாமிட்டு தமிழர் பிரச்சனையாக தமிழர்தலைகளில் கட்டப்படுகின்றது. அரசியல் சொல்பவனும் சினிமாக்காரன், இசைவிழா நாடத்துபனும் சினிமாக்காரன்,நாட்டியம் நிகழ்துபவனும் சினிமாக்காரன் என்று அனைத்தும் சினிமா மயமாகியுள்ள புலம் பெயர் நிலத்துள் இவர்களினால் தமிழ் பெறும் பேறு என்ன ? என்று கேள்வி கேட்பவனும் இல்லை விடை பகர்பவனும் இல்லை. செருப்பை மாட்டுவது போல வழக்கமான நிகழ்வாக புலம் பெயர் நிகழ்ச்சி நிரல்களில் இது பொதுவாகி வருகின்றது., பத்திரிகைச்சமர், தொலைக்காட்சிச் சமர், வியாபாரச் சமர்,கோவில் சமர், ஊர்ச்சங்கச் சமர், துண்டுப்பிரசுர சமர் என்று அனைத்தையும் துப்பாக்கிச் சமராக்கி விட்டு ஒற்றுமை பேசவும், ஒன்று பட வைக்கவும் சமரசம் பேச நடிகர்களை இறக்குமதி செய்வதாய் கதை பின்னி போட்டா போட்டியாக இயங்கும் தமிழினத் தலைமைகள் புலம்பெயர் தேசம் எங்கணும் மலிந்து வருகின்றார்கள்.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவெனில் “”ஈழத்துப் பிரச்சனை எவ்வாறு முடியும்”” என்று அவர்களைப் போட்டுப பிடுங்கி எடுக்கிறது புலம் பெயர் ஊடகங்கள்.இத்தகு தரகுமுதலாளித்துவ தமிழினத்தலைமைகள் குறித்தும், இவர்களினால் சமரசம் பேச அழைக்கப்படுகிற நடிக,நடிகைகள் குறித்தும் புலம்பெயர் சாமானியன் ஒவ்வொருவருள்ளும் உண்மையின் குரல் விழித்துக் கொண்டாலும் அதை ஒப்புக் கொள்ளவும், உரத்த குரலில் கேள்வி கேட்கவும் எவனும் தயாரில்லை. .பொய்மையாளர்களின் முகத்திரையை கிழித்தெறியவும் காலம்காலமாய் போடப்பட்டிருக்கிற கட்டுக்களை உடைத்தெறியவும் வேண்டிய தேவை புலம் பெயர் மனிதர்களுக்குண்டு .ஆனாலும் அவர்கள் மௌனத்துடன் வாழத்தலைப்பட்டுள்ளார்கள். இவர்களின் இத்தகு மௌனம் கொடுமையாளர்களின் சந்தர்ப்பவாதத்தினைவிடவும் கொடியது.
முன்னேறிய நாடுகளில் வாழ்ந்தாலும் நம்ம கூட்டம் மட்டும் அம்புவில் காலத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றது உதாரணத்துக்கு எங்கள் ஊடகங்களே சாட்சி ( இளையராஜா எங்குயிருந்து வந்தவர் என்றும் என்ன புரச்சி செய்தவர் என்றும் இனியொருவுக்கு நல்லாய் தெரியும் )
இது என்னடா இது, என்னவோ விட்டாலும் தமிழிலதான் விடவேணும் எண்டமாதிரி ஆயிடிச்சு. படம் எடுத்தா தமிழ் வளர்க்க படம் எடுக்கணும், பாட்டு எடிதினா, போட்டொ புடிச்சா, டான்ஸ் ஆடினா, புத்தகம் படிச்சா, எண்டு அடுக்கிக்கொண்டே போகுது. அது ஏன் இங்கிலீசுக்காரனுக்கு, பிரென்சுகாரனுக்கு ஏன் சீனனுக்கு கூட இந்த வருத்தமில்ல பாழாப்போன தமிழனுக்கு மட்டும் இந்த லூசு.
சினிமா என்பது ஒரு பிரமிப்பு பிம்பமா? . சினிமா என்பது மக்களுக்காக செய்யப்படிருக்கிற மாயாஉலகமா ?? சினிமா என்பது ஒரு மொழியா?ஒரு மொழிக்கு அடையாளம் தேவையா? கலைகள் மொழியை மேலும் செழிப்பானதாக்குகின்றதா?? தமிழில் நல்ல கலைகள் என்று ஏதாவது உண்டா? கலைகளின் செழிப்பு என்பது எதை?அத்தகு கலைகளுக்கான அளவுகோலை மட்டிட வல்ல தகுதி தமிழிற்குண்டா??காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் குறிப்பிட்டது போல் உண்மையில் தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழிதானா???புலம்பெயர் நிலத்தில் தமிழ் வளர்ப்பதாகச் சொல்பவர்களால் தமிழ் வளர்கிறதா?? சுருங்கிப்போன இன்றைய புவி தொடர்பாடலில் அல்லது உலகமயமாதலில் தமிழ் என்பது அவசியம் தானா? இது போன்ற பல கேள்விகளை இவ்வாய்வு முன்வைக்க முயல்கிறது.சோதிநாதன்
ஒண்ணான்
இளையராஜா பற்றி ஏன் இந்த வம்பை துவங்குரீர்? திமூகாவும் ,எம்.ஜி.றும் தான் ஏராளம் புரட்சி செய்தார்கள்.உமக்கு தெரியாதா ?
சமூகச் சீரழிவுகளை வளர்த்து விடும் புராணக் கட்டுக்களையும், இதிகாச இடர்களையும் மக்கள் மனதில் விதைத்து மக்களை மாக்களாக்கி விட்டது சினிமா மட்டுமல்ல, பாட்டிகளும், பள்ளிக்கூடங்களும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. தமிழர்களை அரக்கர்களாகவும், நீசர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் பார்ப்பணர் உருவாக்கிவைத்துள்ள புராணக் கதைகளையே பாட்டிகள் பாலகர்களுக்கு தாலாட்டோடு ஊட்டுகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் பார்ப்பணர் உருவாக்கிவைத்துள்ள புராணங்கள் மற்றும் இதிகாசக்கதைகளுமே பாடங்களாக இன்றுவரை புகட்டப்படுகிறது. போட்டொ புடிச்சா ஆயுள்குறைவு, டான்ஸ் ஆடினா தேவடியாள், இவையும் இளமையலேயே தமிழர்களுக்கு ஊட்டப்படுகிறது. சினிமாவை மட்டும் சாடுவதில் பயனில்லை.
யார் ஒத்துக்கொள்வார்கள் ?மகேந்திரா
ஓணான் குறிப்பிடுகிற இளையராசா அவர்களின் இசை வெள்ளத்தை கனடாவில் பாய்ச்சிவிட முயன்ற புலிகள் ஒருபுறமும்,அந்த வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்துவிட முயன்ற புலிகள் ஒரு புறமுமாய் பட்ட இழுபறியுள் கனடா பட்ட அவலம் கொஞ்சநஞ்சமல்ல. தூள்பறக்கும் துண்டுப்பிரசுரங்களையும், அதை ஒட்ட வாளி பசைகளுடன் முடுக்கிவிடப்பட்ட இளைஞர்களையும் பார்த்த பொழுது யாழ்ப்பாண நகரோ என்ற ஐயம் எழுந்தது.இளையராசாவின் இசையை ரசிக்க வாங்கோ,வாங்கோ என்றழைத்த ஊடகங்களும்,மறுபுறம் புறக்கணியுங்கோ,அதைப் புறக்கணியுங்கோ என்று மறித்த ஊடகங்களுமாய் மக்களை விழிபிதுங்க வைத்தபொழுதுகளில் சூறாவளி வந்து தமிழரைக் காத்தது. சினிமாவில் முளைத்த இசைஞானம் இளையராசாவும்,சினிமாவில் முளைத்த அரசியல்ஞானம் சீமானும்
மகேந்திரா சார் பாட்டிமார் கதையை யார் இங்கு கேட்கின்றார்கள். பாட்டியின் வடையில் காகம் ஏமாந்த காலம் போய் நரி ஏமாறுகிற காலம்சார் இது.//போட்டோ புடிச்சா ஆயுள்குறைவு, டான்ஸ் ஆடினா தேவடியாள், ///என்ற காலம் எல்லாம் மலையேறுவதற்குப் பதில் சினிமாவில் ஏறீடிச்சு சார். பெரியார் கூற்றை இங்கு மீள்பதிவாக்குகின்றேன்.“பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலே நம்பிவிடக் கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ; மந்திர சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.”
(´குடிஅரசு´ 09.12.1928)
மாற்றத்தை தன்னுடைய காலத்திற்குள் காணவேண்டும் என்ற மனிதனின் அவா மாறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் ஒரு காலத்தில் மரபாக இருந்துள்ளது. இன்று உள்ளதா? எப்படி மாறியது?. யாரோ ஒருவனுக்குள் இது மாறவேண்டும் என்று தோன்றிய சிந்தனை, எத்தனை ஆயிரம் தலைமுறைகள், நூற்றாண்டுகள் எடுத்து மாற்றமடைந்துள்ளது. சாதி அமைப்பு. முன் ஒரு காலத்தில் இதுதான் பிறப்பு, இதுதான் அமைப்பு என்று எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள். யாரோ ஒருவனுக்குள் இது மாறவேண்டும் என்று தோன்றிய சிந்தனை பல ஆயிரம் தலைமுறைகள், பல நூற்றாண்டுகள் கழிந்து மேலைநாடுகளில் முற்றாக ஒழிந்துவிடாத போதும் முடங்கிவிட்டதைக் காணலாம். எங்கள் நாட்டிலும் இதுதான் நியதி என்றில்லாமல் போராட்டங்கள் தொடர்கின்றன.
‘யார் ஒத்துக்கொள்வார்கள்’ ‘இது நரியும் ஏமாறுகிற காலம்’ என்ற சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஒரு மாற்றத்தை நோக்கி நாங்கள் பயனிக்கவேண்டும். இன்று தமிழினத்தின் பிரச்சனைகளை அனைத்து உலகின் கவனத்திற்கு கொண்டுவரக்கூடிய தகமையுடையதாக இரண்டு நிறுவனங்கள் எம்மிடையே உண்டு. ஒன்று நிலத்தில் தமிழர்கூட்டணி, மற்றது புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு. இவை இரண்டிலும் உள்ள தவறுகளை நெறிப்படுத்தி அவைமூலம் போராடுவதற்கு கரம்கொடுக்க வேண்டுமே தவிர ஒவ்வொருவருக்கும் உள்ள அறிவைக்கொண்டு பல பிரிவுகளை உருவாக்கி நிற்பதில் அழிவே மிஞ்சிநிற்பது கண்கூடு. தமிழர்கூட்டணியும், நாடுகடந்த தமிழீழ அரசும் தமிழினத்திற்கு ஒரு விடிவை பெற்றுத்தரலாம். அல்லது ஏமாற்றத்தையும் பெற்றும் தரலாம். வெற்றி அல்லது தோல்விதான் உலகநியதி. இதனைப்புறம்தள்ளி எந்த உயிரினத்திற்கும் உலகில் வாழ்வில்லை.
பகுத்து அறிந்துதான் எதனையும் செய்தல் வேண்டுமென்றால் அதனைப் புரிந்துகொள்ள காலம் அவகாசம் தராது. தெரிந்த ஒரு வழியைப் பின்பற்றி பூனை மரத்திலேறித் தப்பித்துக்கொண்டது, பல வழிகளை யோசித்த நரி அடிபட்டுச் செத்த கதையையும் படித்துள்ளோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற எளிய பழமொழியை புரிந்துகொள்ள சிரமப்படும் நாங்கள் பெரியாரின் பகுத்தறிவைப் புரிந்து நடக்க எத்தனை காலங்கள் அல்லது யுகங்களாகும். இங்கு மனோகணேசன் அவர்கள் விடுத்திருக்கும் அதிமுக்கிய செய்தியைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளலாம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=111229
நாங்கள் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது.
தமிழினம் விடுதலை பெற்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே தங்கள் உயிரை அர்ப்பணித்து மக்கள் மாவீரர் ஆனார்களே தவிர, தாங்கள் வாழ்வதற்காகவோ, அன்றிப் புலிகள் அமைப்பு வாழவேண்டுமென்றோ உயிரைத் தியாகம் செய்தவர்களல்ல என்பதை அவர்களது சுயசரிதை, அறிக்கைகளிலிருந்து புரிந்துகொள்ளல் வேண்டும்.
I agree with this article.but today big concert in toronto.
Puli singaraj invited indian actors. Toronto tamil peoples and
medias totally supported. So what is tamil people want???