Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்சினிமா இசையில் அகத்தூண்டுதல் : 6(முற்றும்) : T .சௌந்தர்

இனியொரு... by இனியொரு...
09/14/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா
0 0
70
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ் திரைப்பட இசையின் வளர்ச்சியில் பாபநாசம் சிவன் , ராஜகோபால் போன்ற ஆரம்பகால இசையமைப்பாளர்களை பின்பற்றி ,அதில் தமிழ் மெல்லிசைக்கான முயற்ச்சிகளை ஜி.ராமநாதன், எஸ்.எம் சுப்பையா நாயுடு. எஸ்.வீ.வெங்கட்ராமன் ,ஆர். சுதர்சனம் போன்ற இசை மேதைகள் விரிவாக்கினார். பின் திரை இசைத் திலகம் கே.வீ.மகாதேவன் . மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,ஏ.எம்.ராஜா போன்ற பல கலைஞர்கள் பெரும் பங்காற்றினார்கள்..இவர்களின் தொடர்ச்சியாக இளையராஜா ஆச்ச்சர்யமிக்க வளர்ச்சியை காட்டினார்.அவரது இசை பழ்மைக்கு பழமையாயும் , புதுமைக்குப் புதுமையாயும் விளங்கியது.

இளையராஜாவின் இசையின் தாக்கமில்லாத அவரது சமகால இசையமைப்பாளர்கள் இல்லை என்ற நிலையை பார்த்தோம்.இளையராஜாவின் இசை புதிய அலைகளை எழுப்பியது. இசை என்பது ” கதாநாயக “னாக அவரது காலத்தில் உருவெடுத்தது. இசை பற்றிய விழிப்புணர்வை அவரது இசை ஏற்ப்படுத்தினாலும் , அவருக்கு முன்னிருந்த இசை மேதைகளின் வழியில், மரபில் நின்று பல புதுமைகளைச் செய்து காட்டினார். மேலைநாட்டு சங்கீதம் நன்கு தெரிந்தவர் எனினும் அவற்றை அளவான கலவையில் தர அவரால் முடிந்தது.அந்தக் கலவையில் இரண்டு இசை வகைகளின் பிணைப்பு ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத, சிறப்பாக இருந்ததுடன், அதில் எந்த வயதுப் பிரிவினரையும் ஏற்க வைக்கும் கலாமேதமையும் இருந்தது.

“சிகர “, ” இமய ” இயக்குனர்களின் படங்களிலும் ” கட்டாந்தரை” இயக்குனர்களின் படங்களிலும் அவரது இசை சிறப்பாகவே இருந்தது. கார்த்திக் படத்திலும் கமல் படத்திலும் , ரஜனி படத்திலும் ராமராஜன் படத்திலும் இசை சிறப்பாகவே இருந்தது என்பதை நாம் கண்டோம்.போட்டியும் , பொறாமையும் , காழ்ப்புணர்வும் நிறைந்த சினிமா உலகில் பொதுவாக ஏற்ப்படக்கூடிய மன்க்கசப்புக்களால் சில ” பெரிய இயக்குனர்கள்” இளையராஜாவுடன் ” நானா நீயா ” போட்டியில் இறங்கினர்.இந்த மனவேறுபாடுகளால் அவர்கள புதிய இசையமைப்பாளர்களை தேடி ஓட ஆரம்பித்தனர். அதன் நிகழ்வாக பல இசையமைப்பாளர்கள் “சிகர ” , ” இமய ” இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமான்வர்களாக மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் .ரவீந்திரன் , வீ.நரசிம்மன் , எஸ்.ஏ.ராஜ்குமார் , சௌந்தர்யன் , தேவா போன்றவர் களைக் குறிப்பிடலாம்.அவர்கள் நல்ல பாடல்களைத் தந்தாலும் அவை கூட இளையராஜாவின் எதிரொலிகளாகவே இருந்தன..அவற்றிற்கு உதாரணங்களாக

1 . சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா

2 . காதல் என்னை காதலிக்கவில்லை – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா

3 . கண்ணுக்குள் நூறு நிலவா – படம்: வேதம் புதிது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவேந்திரன்

4 . சம்மதம் சொன்னேன் வந்துவிடு – படம்: வேதம் புதிது பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவேந்திரன்

5 . சங்கீத சுரங்கள் – படம்: அழகன் பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : மரகதமணி

6 . தத்தித்தோம் தோம் – படம்: அழகன் பாடியவர்கள் சித்ரா இசை : மரகதமணி

7 . ஆவாரம்பூ ஆறேழு நாளா – படம்: அச்சமில்லை அச்சமில்லை பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சுசீலா இசை : வீ.நரசிம்மன்

8 . அம்மா அடி அம்மா – படம்: ஒரு ரசிகன் ஒரு ரசிகை – பாடியவர்கள் பி. ஜெயச்சந்திரன் + எஸ்.ஜானகி இசை : ரவீந்திரன்

9 . சங்கீத வானில் சந்தோசம் பாடும் – படம்: சின்ன பூவே மெல்ல பேசு – பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

10 . சின்ன பொண்ணுதா வெக்கப்படுது – படம்: வைகாசி பொறந்தாச்சு சு – பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவா

11 . காதல் கடிதம் வரைந்தேன் – படம்: சேரன் பாண்டியன் – பாடியவர்கள் லாப்சன் ராஜ்குமார் + ஸ்வர்ணலதா இசை : சௌந்தர்யன்

12 . தாமரைப் பூவுக்கும் – படம்: பசும் பொன் – பாடியவர்கள் : கிருஷ்ணசந்தர் + ஸ்வர்ணலதா இசை : வித்யாசாகர்
மேல் சொன்ன இசையமைப்பாளர்கள் நல்ல இசையமைப்பாளராக நல்ல பாடல்களைத் தர முயர்ச்சித்தமை பாராட்டுக்குரியது.குறிப்பாக் மரகதமணி பல நல்ல பாடல்களை தந்துள்ளார்.அவர் வேறு மொழி படங்களுக்கு M.M. கீரவாணி என்ற பெயரிலும் இசையமைத்துள்ளார்.குறிப்பாக தேவராகம் என்கிற மலையாள படத்தில் மென்மையான , மெல்லிசைப்பாங்கான பாடல்களை தந்துள்ளார்.மலையாளப்படங்களில் இசையமைத்துத் தனக்கென ஒரு பாணியை அமைத்த ரவீந்திரன் தலை சிறந்த பாடல்களைத் தந்து சென்றுள்ளார்.அவரது மரணம் , நல்ல இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு வருடத்தில் 45 , 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்தாலும் தரத்திலும் [ஒரு சில படங்களை திவிர] அவை சோடை போனதில்லை.இளையராஜாவுடைய பாடல் அமைப்பு முறைகளை அப்பட்டமாக பிரதி பண்ணத் தயங்காத ஒரு இசையமைப்பாளராக தேவா தமிழ் திரைக்கு ” வைகாசி பொறந்தாச்சு ” என்ற படம்மூலம் அறிமுகமானார்.

இளையராஜாவின் இசையின் மலிவான வடிவமாக பல பாடல்களை தேவா தந்தார். இளையராஜாவை தங்கள் படங்களுக்கு அமர்த்த முடியாத இயக்குனர்களின் மலிவு இசையமைப்பாளரானார். தனது தனித்துவத்தை காட்டத் தவறிய தேவா மற்றவர்களைப் ” போல ” [ Imitation ] இசையமைக்கும் இசையமைப்பாளரானார்.தரம் பற்றிய எண்ணமில்லாத திரைப்பட வியாபாரிகளுக்கு இந்த Imitation இசை போதுமானதாக இருந்ததும் வியப்பில்லை. இளையராஜாவின் பாடல்களை வகை தொகையில்லாமல் தேவா செய்த நகலேடுப்புக்கள் அவரது இசையை மலினப்படுத்தின. அது இளையராஜாவின் இசையின் மதிப்பையும் கெடுத்தது.

இவை ஒரு புறமிருக்க இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக MTV , STAR டிவி போன்றவை இந்தியாவில் நுழைந்தன. தொடர்ச்சியாக அவர்கள் ஒளிபரப்பிய ஆங்கில பாடல் கள் ஒரு ரசனை மாற்றத்தை ஏற்ப்படுத்தியது.

ஆங்கிலேய அமெரிக்க பொப் பாடக , நடன மணிகளான சமந்த பாக்ஸ் , மடோன்னா போன்றவர்களின் இசை நிழச்சிகளும் பரபரப்புடன் நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களும் பார்வையாளராக அழைக்கப்பட்டனர்.

பிறப்பால் இந்தியர்களாகவும் , நினைவில் வெள்ளையர்களாக வாழும் இந்தியர்களுக்கு ஒரு உவப்பான காலம் இது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்களில் கணிசமானோர்கள் தாய் மொழியில் பேசுவது தாழ்ந்ததாகவும் , ஆங்கிலத்தில் பேசுவது உத்தமமேனும் எனும் ஒரு தாழ்வு நிலையால் பீடிக்கப்பட்டவர்களயாயிருகின்றனர்.

தாய்மொழியான தமிழில் தங்கள் பிள்ளைகள் படிக்க கூடாது என்று எண்ணுகிற கணிசமான தமிழ் பெற்றோர்கள் இன்றும் இருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினவு கொள்ளலாம். இவ்விதம் தங்கள் தாய் மொழியில் படிக்க விரும்பாத மக்களை உலகில் எந்தப் பகுதியிலாவது நாம் அறிந்திருக்கிறோமா? அது போலவே தமிழ் பாடல்களைக் கேட்பதும் தரக்குறைவான செயல் , நாகரீகமற்ற செயல் என்பது போன்ற கருத்துக்கள் வைத்திருந்தவர்களுக்கு கொண்டாட்டமான காலமானது எனலாம்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகள் இந்தியாவின் உத்தியோக பூர்வ கொள்கையாகிய நிலையில் , அந்த உலக மயக் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களை ஒருங்கமைக்கும் திருப்பணியை இந்திய அரசே தலைமை ஏற்று செய்து கொண்டது, செய்து கொண்டுமிருக்கிறது. அதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களான கொக்கோ கோலா , பெப்சி போன்ற நிறுவனங்கள் உள்நுழைந்தன. கொக்கோ கோலா கண்டெடுத்த அழகியாக சுஸ்மிதா சென்னும் , பெப்சி கண்டெடுத்த அழகியாக ஐஸ்வர்யா ராயும் உலக அழகிகள் ஆக்கப்பட்டனர்.இதன் உள்நோக்கம் என்பது அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையை கைப்பற்றுவது தான் என்பதும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.

நீண்ட காலம் இந்திய திரைப்படங்களைப் புறக்கணித்து வந்த ஒஸ்கார் விருது, மரணத்தின் வாசலில் இருந்த சத்யஜித் ரே க்கு” வாழ்நாள் சாதனை ” ஆஸ்கர் விருது [ 1992 ல் ] கொடுத்து தனது பாவத்தை கழுவிக்கொண்டது. அமெரிக்க அரசின் இந்தியா மீதான புதிய போக்கின் வெளிப்பாடு என இதனைக் கொள்ளலாம்.

எண்பதுகளில் அமெரிக்காவின் உலக மய கொள்கையின் இசைத் தூதுவனாக உருவாக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன் , செயற்கைக்கோள்களின் [ SATALITE ] உதவியுடன் திட்டமிடப்பட்டு உலகெங்கும் காண்பிக்கப்பட்டார்.அவரது வியக்க வைக்கும் பிரமாண்டமான மேடை அலங்காரங்கள் , சிறப்பான ஒலிப்பதிவு தொழில் நுட்பம் , ஒளியமைப்பு உள்ளடங்கிய இசை நிகழ்சிகள் உலகெங்கும் ஒரே நேரத்தில் விண் கோள்களின் வலைப்பின்னல் தொடர்பில் உருவாக்கப்பட்ட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டன.

புற்றீசல்களாக உருவான இருபத்தி நான்கு மணி நேர தொலைக்காட்சிகள் மூலம் இவை இடை விடாமல் ஒளிபரப்பபட்டன. கிட்டதட்ட 200 மில்லியன் மக்கள் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் இவற்றை பார்க்கும் படியான நிலை வளர்ந்தது. உலகின் பல இனக் கலாச்சாரங்களை அழிக்கும் ஒரு போக்காக , ஒரு போதையாக இந்த வகை இசை திரும்ப, திரும்ப திட்டமிட்டு உலகெங்கும் ஒளிபரப்பட்டது. ஏனெனில் தொடர்ந்து ஒரு விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்தால் கேட்பவர் மனதில் அவை பதிந்து விடும். அப்படிப்பட்ட இசையை மக்கள் மனதில் முதலில் பதிப்பிதே அவர்களது நோக்கமாக இருந்தது. இந்தப் போக்குக்கு இணங்கும் கலைத்துறையினர் ஊக்குவிக்கப்பட்டனர்.

இசை என்பது ஒரு பண்பாடு , கலாச்சார மரபிலிருந்து உருவாவது. நாம் மெக்சிக்கோ நாட்டு இசையை கேட்கும் போதும் , எத்தியோப்பிய இசையை கேட்கும் போதும் அநதந்த நாட்டு மக்களின் வெவேறு விதமான இசையை கேட்கலாம். அவற்றில் உள்ள வித்தியாசமான இசையின் இனிமையை ரசிக்கிறோம். இந்திய இசையை ரசிக்கும் நாம் அவற்றின் ராகங்களை எல்லாம் வேறு சில நாட்டு இசைகளிலும் கேட்டு இன்புறுகிறோம்.

சூடான் நாட்டு இசையில் சுத்த தன்யாசி , சுத்தசாவேரி போன்ற ராகங்களின் சாயல்களைப் பாடல்களில் கேட்டு இன்புறுகிறோம். அது போலவே மேலைத்தேய இசையிலும் சில தமிழ் ராகங்களை அடையாளம் கண்டு , அதன் சாயல்கள் இருப்பதை கேட்டு ஆனந்திக்கிறோம். அந்தந்த ராகங்களின் சாயல்கள் அவற்றிலிருந்தாலும் காலச்சார வேறுபாடுகளால் அவை புதிய தரிசனங்களைத் தருகின்றன.

இந்த வேறுபாடுகளை அழித்து தாங்கள் திணிக்கும் ஒரு இசைக்கு ஏற்ப தாளம் போட வைப்பதே உலகமய கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். உலகின் மக்கள் தொகையில் இசை கேட்பவர்களே அதிகம்.எழுத, படிக்கத் தெரியாதவர்கள் கூட இசையை கேட்கலாம்.எந்த விதமான செலவும் இல்லாமல் இசையை கேட்க்கலாம். போகுமிடமெல்லாம் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இசையை மக்கள் மனதில் பதிய வைக்கவே மைக்கேல் ஜாக்சன் , மடோனா ,இன்ன பிற மேலைத்தேய பொப் இசை பாடகர்களின் பாடல்களை திட்டமிட்டு ஒலிபரப்புகிறார்கள்.

அதில் உள்ள கவர்ச்சியைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள். எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும் , என்னென உடை உடுத்த வேண்டும் , எப்படி பட்ட இசையை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் குறியாக இருக்கின்றார்கள். இது போன்ற மாற்றங்களை எல்லாம் கொண்டுவரும் கருவியாக இசையையும் அவர்கள் பயன் படுத்துகிறார்கள்.

” இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது ” என்று ஓர் அறிஞர் கூறியது தற்செயலானதல்ல. இசைக்கு அந்த ஆற்றல் இருக்கிறது. உலக மக்களின் பண்பாடுகளை அழிப்பதற்கு இசை பயன் படுகிறது. பண்பாட்டை இழந்தால் மக்களை தம் எண்ணம் போல் ஆட்டிப்படைக்கலாம் என்பதும் அவர்கள் அறிந்த ஒன்றே.

இப்படிப்பட்ட ஒரு புற சூழ்நிலை அமைந்த நிலையிலும் எஸ்.ஏ.ராஜ்குமார், மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் , ரவீந்திரன் ,வீ.நரசிம்மன் . இப்படி பல இசையமைப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு எதிர் பார்க்கப்பட்ட வெற்றியளிக்காத சூழ்நிலையில் , பத்தோடு பதினொன்றாக ஏ.ஆர். ரகுமான் அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்விதம் பல இசையமைப்பாளர்கள் அறிமுகம் செய்யபட்டு வெற்றியடையாத சூழ்நிலையில் ஒலிப்பேழைகளில் இளையராஜாவின் பெயரை போட்டு அதனுடன் , வேறொரு இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படப் பாடல்கள் [ அந்த இசையமைப்பாளர்களின் பெயர்கள் இல்லாமலேயே ] விற்பனை செய்யப்பட்டன. ரோஜா பட ஒலிப்பேழையிலும் இசையமைப்பாளரின் பெயர் இருக்கவில்லை.

ரோஜா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒலித்தரத்தில் சிறப்பானதாக விளங்கியது. பாடல்களில் ஏதோ ஒரு வேறு பாடு தெரிந்தது.பாடல்களும் பிரபல்யமடைத்த்ன. முஸ்லீம் எதிர்ப்பு படமாக விளங்கியதால் இந்தியா அரசு தேசிய விருது கொடுத்து கௌரவித்தது.முஸ்லீம் எதிர்ப்பை ஆரம்பித்து வைத்த ரோஜா திரைப்படம் மணிரத்தினமும் , பாலச்சந்தரும் இணைந்து எடுத்த படமாகும். ரகுமானின் இசைக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு விருதுக்குத் தெரிவு செய்யப் பட்ட படங்களில் தேவர் மகன் என்ற படமும் முக்கியமானதாக இருந்தது என்றும் , இளையராஜாவின் இசை நன்றாக இருந்ததெனினும் , ஒரு புது இசையமைப்பாளருக்கு கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டதாக பின்னாளில் தேர்வுக் குழுவில் இருந்த இயக்குனர் பாலு மகேந்திரா சொல்லியிருக்கிறார்.

மேலைத்தேய இசை அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலை காட்டிய போதும் ஆரம்பகால் இசையமைப்பாளர்கள் அங்கொன்றும் , இங்கொன்றுமாய் திரையில் சூழ் நிலைகளுக்கு தகுந்தவாறு பயன் படுத்தி வெற்றிகண்டார்கள்.” எங்கே இசையமைச்சாலும் நம்ம பாரம்பரிய இசையிலிருந்து விலகாதே .எல்லா இசையும் தெரிஞ்சுக்கோ !.. ஆனால் உன் பாதையை விட்டு விலகாதே .கேட்டாஎங்க அம்மா ,அப்பா தமிழர் தான், வெள்ளைக்காரா இல்லைன்னு சொல்லு ..” என்று இசைமேதை ஜி.ராமநாதன் தனது உதவியாளராக இருந்த சுந்தரம் என்பவருக்கு கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப கண்ணியம் காத்தார்கள்.

மேலைத்தேய இசை நன்கறிந்த இளையராஜா மேலைத்தேய இசையை அப்பட்டமாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவரோ அவருக்கு முன்பிருந்த இசை மேதைகள் போல அளவோடு நிருத்திக் கொண்டார். புதிய தொழில் நுட்பங்களும் , அதற்க்கு பின்னால் ஓடுவதும், வெளிநாட்டு இசைக்குத் ஏற்ப தாளம் போடுவதும் , மரபார்ந்த மண்ணின் இசையை சீரழித்து விடும் என்ற எண்ணமும் அதனால் முக்கியமாக் தமக்குக கெட்ட பெயர் வந்து விடும் என்ற தயக்கமும் பழைய இசையமைப்பாளர்களிடம் இருந்தது எனலாம். வட இந்தியாவில் 1990 களில் சில பொப் அல்பங்களைப் பாடி புகழ் பெற்றருந்தவர் ஆசா போஸ்லே , அது போல தென்னிந்தியாவில் இளையராஜா உச்சத்தில் இருந்தார்.இந்த இருவரும் மேலைத்தேய இசைக்கு இந்திய அளவில் தோற்றம் தரக்கூடியவர்கள் அல்ல.அவர்களுடைய வயதும் பொருத்தமானதல்ல.

அவர்களுக்கு வேறு விதமான அடையாளம் இருந்தது. அதனால் மேலைத்தேய போப் இசைக்கு இசைவாகப் போகக் கூடிய ஒருவர் தேவையாக் இருந்தது. ரோஜா பட வெற்றி அவர்கள் காத்திருந்த ஒருவரை பெற்றுக்க் கொடுத்தது.

ரோஜா பட வெற்றியின் மூலம் நல்ல இசை தருவார் என்ற எண்ணம் இசை ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.” சின்ன சின்ன ஆசை “, ” புது வெள்ளை மழை ” போன்ற பாடல்களில் மேலைத்தேய இசையை ஆரம்பித்த ரகுமான் தனது பாடலகளுக்கான உந்துதுலாக [ INSPIRATION } தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் பாடல்களின் ஒலித்தரத்தில் காட்டப்பட்ட நுட்பம் இசை மெட்டுக்களில் வெளிப்படவில்லை. அவை உணர்ச்சியற்ற அலங்காரங்களாகவே வெளிப்பட்டன.

மேலைத்தேய பொப் இசைக்குபின்னால் ஒடக்கூடியவராக ரகுமான் இருந்தார்.அவர் ஏற்க்கனவே ராக் இசை குழுவை [ பஞ்சதன் ] நடாத்தியதுடன் விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்து வந்தார். அவர் பிடித்த கண்ணி தாளமாகும்.எங்கும் தாளம் எதிலும் தாளம் என்பது போல தாளத்தை ஒரு முழக்கமாக்கினார். தாளம் என்பது மனிதன் கண்ட ஆதி கலை. இசை , நாட்டியம் , நாடகம் போன்ற கலைகளின் ஆதாரம் தாளம். மனிதனின் உள்ளியக்கத்தில் இயல்பாக இருப்பது. தாளத்தின் வேகம் பலவிதமான உணர்வுகளை தரவல்லது.

தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். என்று அழகாகச் சொல்வான்.

குறிப்பாக பருவ வயது இளைஞர்களை [ 13 – 20 வயது ] அலைபாய வைக்கின்ற வேகமான தாள லயம் அவர்களைக் கொந்தளிப்புக்குள்ளாக்கி விடுவதாய் அமைந்து விடுகின்றன.அறியும் ஆர்வமும் , உடல் , உள மாற்றங்களை செய்தி ஊடகங்கள் திட்டமிட்டு குழப்பி விடுகின்றன. தாளத்திற்க்குக் கட்டுப்படாத மனிதனே கிடையாது.:பாடலின் மொழி விளங்காதவர்கள் கூட தாளத்தில் லயித்து நிற்பர் . பாடலுக்குத் தாளம் என்பது போய் , தாளத்திற்க்குப் பாடல் என்ற நிலைக்கு தாழ்ந்து விட்டது.

முக்காலா முக்காப்புலா லைலா பாடலின் பின் அது போன்ற தாளத்தை முன்னிறுத்தும் பாடல்களை தருவதிலும் , அர்த்தமற்ற வார்த்தைகளை வைத்துப் பாடல்களை பிரபலயப்ப்டுத்துவதிலுமே முனைப்பும் காட்டினார்.அர்த்தமற்ற சொற்களை வைத்து பாடலாக்குவதை முன்பிருந்த இசையமைப்பாளர்களும் மிக , மிக அரிதாகச் செய்தவை தான்!. சில

உதாரணங்கள் :

1 . ஐயோ பாகிரியாமா… – படம்: சந்திரலேகா [1948 ] – பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம் இசை: S.ராஜேஸ்வர ராவ் இந்தப் பாடல வெளிப்பார்வைக்கு அர்த்தமற்ற சொற்கள் போல் தெரிந்தாலும் , படத்தில் மறைமுகமான , பூடகமான செய்தியை தெரிவிப்பதாக அமைந்தது.படத்தின் கதைக்கு அந்த பாடல் முக்கியமாக இருந்தது.

2 . ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா – படம்: அமரதீபம் [1956 ] – பாடியவர்: ஜிக்கி இசை: T.சலபதிராவ்

3 .மச்சான் உன்னை பார்த்து மயங்கி போனேன் நேற்று ” -படம்: பாசவலை [1956 ] – பாடியவர்: ஜிக்கி இசை:விசுவநாதன் ராமூர்த்தி

இந்தப் பாடல் சுமார் என்று அந்த படத்தின் தாயாரிப்பாளர் டீ.ஆர் .சுந்தரம் கூறிய போது ” இந்த பாடலை நாம் ஒரு ஹிட் பாடலாக்கி காட்டுகிறோம் ” என்று சொல்லி அந்த பாடலின் முன்னால் ” லொள் லொள் லொள் லொள் ” என்ற பாடலுக்கு சம்பந்தமில்லாத அர்த்தமற்ற சமாச்சாரத்தை சேர்த்தோம்.பாடல் பயங்கரக் ஹிட் ஆகியது ” என்று மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார்.படத்தில் ஒரு பெண் குடி போதையில் , நாயை வைத்துக் கொண்டு பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது.

4 . ஜியோஜியோ யோ ஐயோ என் அம்புலியோ – படம்: அடுத்த வீட்டுப்பெண் [1960 ] – பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ் + S .ஜானகி இசை: ஆதிநாராயணராவ்

5 . ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு சொல்லி தாரேன் மனக்கணக்கு – படம்: குருசிஷ்யன் [1987 ] – பாடியவர்: மனோ + சித்ரா இசை: இளையராஜா

” முக்காலா முக்காப்பிலா லைலா போன்ற பாடல்கள் ஆரோக்கியமானதல்ல ” – என்று [ அப்துல்ஹமீதின் ] பேட்டி ஒன்றில் கூறிய ரகுமான் , தானே தொடர்ந்து அது போன்ற அர்த்தமற்ற சொற்களைக் கொண்டு ஆரம்பிக்கும் பாடல்களையும் , பாடல்களுக்குதேவை இல்லாத சப்தங்களையும் எழுப்புவது , காட்டு கத்தல் கத்துவது போன்றவற்றை புதுமை என்று நினைத்திச் செய்து வருகிறார். இன்று புகழ் பெற்றிருக்கும் ” நாக்கு மூக்கா நாக்கு மூக்கா … நாக்கு மூக்கா …நாக்கு மூக்கா ” பாடல் இந்த போக்கின் உச்சம் எனலாம்.இது போன்ற பாடலை மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ தொலைக்காட்சிகள் விடுவதாய் இல்லை.

அகத்தூண்டுதல் [ Inspiration ] என்பதை மலினப்படுத்துவது போல, பிற இசையமைப்பாளர்களின் புகழ் பெற்ற பாடல்களின் பல்லவிகளை பயன்படுத்தி தனது பாடலாக்குவதும் , அல்லது வெவ்வேறு பாடலகளை வெட்டி ஓட்டுவது என்ற தவறான செய்முறையை மற்றவர்களும் செய்து காட்டியவர் ரகுமான்.மற்றவர்களின் படைப்பிலிருந்து அகத்தூண்டுதல் [ Inspiration ] பெறுவது கலைகளின் அடிப்படையே. மற்றவர்கள் பாடலில் எங்காவது ஒரு இடத்தில் தமக்கு தேவையானதை எடுப்பார்.ஆனால் இவரோ மற்ற இசைகலைஞரின் பாடல்களின் புகழ் பெற்ற பல்லவிகளை தனது பாடல்களில் அமைத்திருக்கிறார்.இந்த முறை அந்த பாடலை பிரபல்யமாக்கும் ஒரு மலின முறையாகும்.பாடல்களில் பல்லவி என்பது தான் அதன் அடையாளம். ரகுமான் எடுத்தாண்ட புகழ் பெற்ற பல்லவிகளைப் பார்ப்போம்.

1 . என்னை விட்டால் யாருமில்லை – படம்: நாளை நமதே – பாடியவர்கள் கே .ஜே . ஜேசுதாஸ் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

ரோஜா ரோஜா ரோஜா – படம்: காதலர் தினம் – பாடியவர்: உன்னி கிருஷ்ணன் இந்த பாடலிலேயே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த
சிப்பியிருக்குது முத்துமிருக்குது – படம்: வறுமையின் நிறம் சிவப்பு – பாடியவர்கள் :எஸ்.பி. பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி
என்ற பாடலும் வரும்.

2 . தங்கபதக்கத்தின் மேலே – படம்: குமரிகூட்டம் – பாடியவர்கள் டி.எம் சௌந்த்ரராஜன் + பி.சுசீலா . இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தப் பாடலின் பல்லவி தான்

என்னவிலை அழகே …. – படம்: காதலர் தினம் – பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

3 . O Mere Sona Re – film: Teesri Manzil Singers: Rafi + Asha Bosley Music: R.D.Burman
நேருக்கு நேர் நின்று – படம்: எதிரிகள் ஜாக்கிரதை – பாடியவர்கள் டி.எம் சௌந்த்ரராஜன் + பி.சுசீலா . இசை : வேதா ..
வாராய் என் தோழி வாராய் என் தோழி – படம்: ஜீன்ஸ் இசை : ஏ.ஆர் .ரகுமான்

4 . Aap Jaisa Koi Meri Zindagi – film: Qurbaani [1980 ] Singers: Rafi + Asha Bosley Music: Pappi Lahiri

பச்சைக் கிளிகள் தோளோடு – படம்: இந்தியன் – பாடியவர்: கே .ஜே .ஜேசுதாஸ் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

5 .ஆசையே அலை போலே படம்:தை பிறந்தால் வழி பிறக்கும் – பாடியவர்: திருச்சி லோகநாதன் . இசை : கே..வீ .மகாதேவன்
முக்காலா முக்காப்பிலா லைலா – படம்: காதலன் – பாடியவர்: மனோ . இசை : ஏ.ஆர் .ரகுமான் ..

6 . உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வரும்மாம் தென்றல் – படம்:பூஜைக்கு வந்த மலர் – பாடியவர்: பி.சுசீலா . இசை : விசுவநாதன் ராமூர்த்தி

தென் மேற்கு பருவக் காற்று – படம்: கருத்தம்மா – பாடியவர்: உன்னி கிருஷ்ணன் + சுஜாதா . இசை : ஏ.ஆர் .ரகுமான்

இந்த பாடலின் பல்லவி மேல் சொன்ன பாடல் என்றால் மிகுதியை
O.. Neele Gagen Ke Tele Film: Hamraaz [ 1967] Singer : Rafi Music: Ravi …. [ அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் என்ற பாடலின் ஹிந்தி மூல வடிவம்.] என்ற பாடலின் சில பகுதிகளிலிருந்து வெட்டி ஓட்டப்பட்டிருக்கும்.

7 . Patta Patta Podda – Hariharan gazal
மலர்களே மலர்களே- படம்: Love Birds – பாடியவர்: சித்ரா + ஹரிகரன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

8 . Tune Mera Naina – Guida no 911 [ 1959] lata mangeshkar musi: Duttaram
உப்புக் கருவாடு ஊற வைத்தசொறு – படம்: முதல்வன் – பாடியவர்: சங்கர் மகாதேவன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

9 . உறவுகள் தொடர்கதை – படம்: அவள் அப்படித்தான் பாடியவர்: கே.ஜே ஜேசுதாஸ் . இசை :இளையராஜா
உயிரே உயிரே உன்னை என்னோடு – படம்: பம்பாய் – பாடியவர்: ஹரிகரன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

10 . The Robots – KRAFTWERK
புதிய மனிதா பூமிக்கு வா – படம்: இந்திரன் – பாடியவர்: ரகுமான் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானின் பிரபலய்மான பல பாடல்கள் இவ்விதம் வெவ்வேறு பாடல்களிலிருந்து வெட்டி ஓட்டப்பட்டவையாக இருப்பதை காணலாம்.ரோஜா படத்தில் வெளியான ” புதுவெள்ளை மழை பொழிகிறது ” [ ரகுமானின் பாடலகளில் நான் மிகவும் ரசித்த பாடல் ] இரண்டு ஆங்கிலப் பாடல் இசையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவை என்பதை அறிந்த போது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அந்த இரண்டு பாடலகளின் பெயர்கள் கீழே உள்ளன.

1. Queitman [ Beauty Nature Slow ] Music: Yanni

2. Vangelis – Chariot Of Fire [ 1981]

இது மட்டுமல்ல பிரபலமான ஆங்கில , ஆபிரிக்க பாடல்களின் தாளங்களை அப்படியே எடுத்துக்கொண்டு , அதற்க்கு ஏற்ப பாடல்களை உருவாக்கி , அதில் நவீன ஒலியமைப்புக்களை காட்டி பிரமிக்க வைப்பதன் மூலம் அது Second Hand Music என்பதை அழகாக மறைத்தல் . அதன் மூலம் உலக சந்தைக்குரிய இசையை தயாரிக்கும் ஒரு பணியை முன்னிறுத்தி வேரில்லாத இசையை உருவாக்குதல், அதன் மூலம் இசையில் பண்பாட்டுக் கூறுகளை அழித்தல் போன்றவற்றை ரகுமானும் அவரை பின்பற்றி அவருக்கு பின் வந்த யுவன் சங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் அன்டனி , தேவிஸ்ரீ பிரசாத் போன்றவர்களும் செய்து வருவது வருந்தத்தக்க விசயமாகும்.இவர்களுக்குக் கிடைத்த ,கிடைக்கின்ற அங்கீகாரம் , புகழ் எல்லோரையும் மிரள வைப்பதாக இருக்கின்றது.இப்படியான மிரள வைக்கும் போக்கினூடாக “இது தான் சிறந்த இசை ” என்பதாக மக்களை நம்ப வைக்கும் திருப்பணியை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஊதிப்பெருக்கி செய்து வருகின்றன.சாதாரண மக்களின் மனதுக்கு இந்த இசை ஒவ்வாததாக அல்லது மனதில் ஒட்டாத இசையாக இருந்தாலும் கொடுக்கப்படும் விருதுகளால் அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டு விடுகின்றன.

ஒரே ஒரு பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தனுஷின் ” கொலை வெறிப்பாடல்” எவ்விதம் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது என்பதை அறிந்தோம்.ஒரு “தமிழ் [ ? ] ” பாடல் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது என்று பலரும் பெருமைப்பட்டுக் கொண்டார்கள்..அந்தப் பாடலைப் பாடிய தனுசை ” இந்தியாவின் இசை அடையாளம் ” அல்லது தனுசை தெரியாதவர்கள் இசை தெரியாதவர்கள் ” என்று சொல்லலாமா? முன்பு ஒரு இசை விழாவில் ரகுமான் பெயர் தெரியாதவர்கள் ” இசை தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் ” சொல்லப்பட்டது. கொலை வெறி பாடலின் சாதனை ரகுமானின் சாதனையை விட சாதனை என்று தான் கொள்ளவேண்டும்.

ஆனால் தனுஷ் ” அது ஒரு தவறுதலாக நடந்த சம்பவம், இனி மீண்டும் அது நடவாது ” என்று சுய விமர்சனம் செய்து கொண்டார். இது போன்ற அபத்தங்கள் நிறைந்த காலமாக இந்தக் காலம் இருக்கிறது.எது நடக்கும் எது நடக்காது என்று ஆரூடம் சொல்ல முடியாத காலம்.

A.R.ரகுமான் உலகெங்கிலும் உள்ள இசையிலிருந்து அவற்றின் தாளங்களை எடுத்து , அல்லது அப்படியே பிரதி பண்ணி பல பாடல்களைத் தயாரித்துள்ளார். சில உதாரணங்களைப் பார்ப்போம். இவை அகத்தூண்டுதல் என்பதற்கு மாறான நேரடியான பிரதி எடுப்பு [ COPY ] தவிர வேறல்ல.அவர் ஒரு சிறந்த Copyist என்று சொல்லுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

1. KUBE – RHYTHM OF THE PRIDE LANDS

பூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு – சுஜாதா

2. DR.ALBAN – OM WE REMBWE IKE – ONE LOVE

தென் மேற்கு பருவக் காற்று – கருத்தம்மா – உன்னிகிருஷ்ணன் + சுஜாதா

3. OSIBISA – KELELE FUNK – [ஆபிரிக்க இசைக்குழு ]

பார்க்காதே பார்க்காதே – ஜென்டில்மென் – மின்மினி

4. POUL YOUNG – LOVE OF THE COMMEN PEOPLE

அக்கடாங்கு நாங்க உடை போட்டா – இந்தியன் – சுவர்ணலதா

5. THE MUMMY RETURNS – DEEP FOREST – NIGHTCLUB

தில்லான தில்லானா – முத்து – ஆரம்ப இசை நேரடியாக பிரதி.

6. Ace of Base – Happy Nation

டெலிபோன் மணி போல் – இந்தியன் – தாளம் நேரடியாக பிரதி.

7. Can’t Live without you – Happy Nation

ஓமனப்பெண்ணே – விண்ணை தாண்டி வருவாயா –

8. Ennini Morricone – For a few dollers more

மெல்லிசையே மெல்லிசையே – MR. ரோமியோ –

M.I.A என்ற பெயரில் புகழ் பெற்ற ஈழத் தமிழ் பெண் பாடகியான மாதங்கி அருள்பிரகாசம் என்பரின் , KALA என்கிற அல்பத்தில் வெளியான ” PAPER PLANE ” என்ற பாடல SLUMDOGMILLIONAIRE படத்தில் பயன்படுத்தபட்டது.இவரின் BAMBOO BANGA என்ற பாடலில் இளையராஜா இசையமைத்த ” காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ” என்ன்ற தளபதி படப்பாடலின் தாளம் பயன்படுத்தபட்டிருப்பதுடன் , அந்த பாடலில் வரும் ” எல்லோரும் சொர்க்கத்திலே ” என்ற பாடல் வரிகளுடன் தொடக்கி அதன் தாளம் முடியும் வரை பின்னிப்பினைக்கபபட்டிருக்கிறது.M.I.A வின் HUSSEL அல்பத்தில் இளையராஜாவின்” ஆட்டமா தேரோட்டமா “என்ற பாடல் பிணைக்கப்பட்டுள்ளது.மேலே சொன்ன பாடலகள் போல இன்னும் பல பாடல்கள் உள்ளன.நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.இது ரோஜாவிலிருந்து எந்திரன் வரை நீண்டு கிடக்கிறது. இவ்விதம் உலகெங்கும் உள்ள இசைகளை அப்பட்டமாக காப்பி அடிக்கும் ரகுமான் மேதையாகவும், உயர்வாகவும் , உள்ளூரில் அப்பட்டமாக காப்பியடிக்கும் தேவா தாழ்வாகவும், இழிவாகவும் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டார்.குமுதம் , விகடன் போன்ற பத்திரிகைகள் கூச்சமில்லாமல் தேவா பற்றிய ஜோக்ஸ் வெளியிட்டன.பதத்திற்கு ஒன்று.

ஒருவர்: அவர் Xerox கடையில் வேலை பார்க்கிறாரமே ?

மற்றவர் : ஆமாம், அவர் தேவாவின் ரசிகராச்சே !

தேவா எந்த பாடலைத் தழுவி அவற்றை செய்கிறார் என்பதை அறிந்திருந்த பத்திரிகைகள் , ரகுமான் எந்த வெளிநாட்டு பாடலகளை தழுவி இசையமைத்தார் என்ற விபரங்களை அறியாத்திருந்தமையே அதற்க்குக் காரணம் எனலாம். தேவா உள்ளூர் , ரகுமான் வெளியூர் என்பதுதான் வேறுபாடு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அழகாகச் சொல்வார்.

பட்டப் பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது – ஒரு
பஞ்சையைத் தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்று உதைக்குது

இசையில் உள்ளடக்கத்தில் கற்பனை வளமற்ற படைப்புக்களுக்கு விருதுகள் கொடுப்பதன் மூலம் அவர்களை விலைக்கு வாங்குவதன் ஊடாக மக்கள்மத்தியில் பிரமிப்பூட்டப்படுகிரார்கள். விருதுகள் பெற்று புகழ் பெறுபவர்களை துதிபாடுதலேன்பது ஒரு கலையாகவே பயிலப்படுகிறது. இந்தபிரமிக்கும் விருது கொடுப்புகளால் மயக்கத்தில் வீழ்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் ,கலை விமர்சகர்கள் , இந்த போக்குக்கு வக்காலத்து வாங்குவது அதிசயமானதல்ல. குறிப்பாக ” நவீன “, “தீவிர இலக்கிய ” எழுத்தாளர்கள் எல்லாம் இசை பற்றியும் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரண மக்கள் கேட்கும் பாடலின் அளவுக்குக் கூட இவர்கள் பாடல்களை கேட்டதில்லை.ஆனாலும் இசை பற்றி எழுதுகிறாகள். ஏனென்றால் இந்த “அலையில்” தாம் விடுபட்டு போய் விடுவோம் என்ற பயம் தான் என நினைக்கத் தோன்றுகிறது! எழுத்து மூலம் பிரபலம் அடைந்த இவர்கள் மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.அதன் மூலம் தாங்கள் இன்னும் புகழ் பெறலாம் என்பதும் காரணமாக இருக்கலாம்.

மேற்கத்தேய இசை என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு மேலைத்தேய இசையில் தெளிவான புரிதலற்ற வெறும் தாள லயத்தை முன்னிறுத்தி செய்யப்படும் செக்கு மாட்டுத் தனமான இசையும் , உணர்ச்சிக் குழப்பமும் , தெளிவான மொழியற்ற பாடல்களும் புது அங்கீகாரம் பெறுவதன்மூலம் உணமையான கலையாக்கத் திறன் அழித்தொழிக்கப்படுகின்றது. குறுகிய காலத்தில் புகழ் பெறுவதும் ,அங்கீகாரம் , விருதுகள் கிடைப்பதும் பல இளம் கலைஞர்களை ஈர்த்து சீரழிப்பதாக உள்ளது.

கலைவாணர் என்.எஸ் .கிருஷ்ணன் பாடிய “சரியில்லை மெத்த சரியில்லை” [ படம்: டாக்டர் சாவித்திரி ]என்ற ஓர் பழைய பாடலில் , என்னென்ன சரியில்லை என்று வரிசைப்படுத்துவார்.அதில்

சுதி விட்டு பாடுவதும்
ஜதி விட்டு ஆடுவதும்
சரியில்லை

மெத்த சரியில்லை என்று பாடுவார்.இன்றைய பாடல்களின் ஆதாரமே சுதி விட்டு பாடுவதும் ,ஜதி விட்டு ஆடுவதும் என்று சொல்லும் தரத்தில் உள்ளன. ஏ.ஆர்.ரகுமானின் செம்மொழி பாடலைக் கேட்ட போது என்.எஸ்.கே யின் இந்த பாடல் தான் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது ! . சுருதி பல இடங்களில் இல்லாமல் பாடப்பட்டது. காட்டுக்கத்தல் புதிய நாகரீகமாகவும் கருதப்படுகிறது. தமிழ் தெரியாத பாடகர்கள் தமிழை கொச்சையாயகப் பாட வைக்கப்படுகின்றனர், என்றால் தமிழ் பாடகர்களும் வேண்டுமென்றே கொச்சையாகப் பாட வைக்கப்படுகின்றனர்.

மேலே உள்ள பாடலைப் போலவே பாதுருஹரி [1944 ] என்ற படத்தில் T.A.மதுரம் பாடிய ” பாட்டைக்கேக்கோணும் ” என்று ஆரம்பிக்கும் பாடலின் சரணத்தில் மிக அழகாக இன்றுள்ளவர்களுக்கு பொருத்தமாகப் பாடியது போல அமைந்த பாடல இதோ …

சுதியும் குரலும் ஒன்றுக்கொன்று
சொந்தம் கொண்டாட வேணும்
நல்ல மதி சேர் மனதில்
நல்ல மகிழ்ச்சி நேர வேணும்
தொடரும் பதமும் பொருளும் தெரிய
பகுத்து பாட வேணும்
பக்கம் பார்க்காமல் பல்லைக் காட்டாமல்
தலையாட்டாமல் கையை நீட்டாமல்
அங்க சேஷ்டை செய்யாமல்
பதமும் பொருளும் தெரிய பகுத்துப் பாட வேணும்
பாக்களில் உள்ள வாக்கியங்களை
மூக்காலும் கடி நாக்காலும்
சொல்லி தேய்க்காமல் ஊரை ஏய்க்காமல்
பதமும் பொருளும் தெரிய பகுத்துப் பாட வேணும்

“உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமற்றது..” என்பார் வயலின் இசை மேதை யகூடி மெனுகின் [Yehudi Menuhhin ] ஆனால் இன்றைய கால கட்ட இசையை பலரும் ஒலிக்காகவே கேட்கிறார்கள்.உணர்வுகளை விட ஒலிகளை முதன்மைப்படுத்துவதால் வந்த விபரீதம் இது.பொதுவாக இன்றைய பாடல்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் ? பாடல்கள் சுமார் தான் ஆனால் பாடலின் ஒலித்தரம் காரில் கேட்க நன்றாக இருக்கிறது என்று !

ரகுமானால் பின்பற்றப்படும் இன்றைய இசைப்பாணி [ MUSIC STYLE ] மேற்கில் 1990 களில் உருவாக்கபட்ட கல்ப்பிசையின் பிரதியாகும். இந்த இசையை ஆரம்பித்து வைத்தவர் Nusrat Fateh Ali Khan என்கிற தலைசிறந்த பாகிஸ்தானிய கவாலி இசைப்பாடகர். இவரது குடும்பத்தவர்கள் ஆறு தலைமுறையாக கவாலி [ Qawwali ] இசையை பாடி வருபவர்கள்.கவாலி இசையை உலக அளவின் கொண்டு சென்ற பெருமை இவரைச் சாரும். இவரது கச்சேரிகள் எழுச்சியும் ,இனிமையும் , கம்பீரமும் கொண்டனவாக இருக்கும்.ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அவர் பாடும் போது, அவரைத் தொடர்ந்து அவரது குழுவினர் ஒவ்வொருவராக அதே ராகத்தை தங்கள் மனோதர்த்திற்கேற்ப பாடி சிறப்பிப்பார்கள்.

குறிப்பிட்ட அந்த ராகத்தின் அழகுகளை எல்லாம் உணர்ச்சி மயமாகப் பாடி பிரமிக்க வைப்பார்கள்.அவர்களது இசையில் பாகிஸ்தானிய , பஞ்சாபிய இசை ரசிகர்கள் கட்டுண்டு கிடப்பர்.

ஸுபி இசையின் [SUFI MUSIC ] பிரிவுகளான ஹசல் , கவாலி முக்கியனாவையாகும்.கவாலி இசையின் பிறப்பிடம் பொதுவாக பாகிஸ்தான் என்று சொல்லப்பட்டாலும் ,அதன் வேர்கள் ஈரான் இசையிலும் , ஆப்கானிஸ்தான் இசையிலும் உள்ளன.கவாலி இசையில் புகழ் பெற்ற கலைஞர்களில் Nusrat Fateh Ali Khan , Sabri Brothers முக்கியனானவர்கள்.ஸுபி இசையின் ஹசல் வகையைச் சேர்ந்தவை தான் மெல்லிசையின் உச்சம் என்று இன்றும் போற்றப்படுகின்ற பழைய ஹிந்தி பாடலகள்.இந்தவகைப் பாடல்களின் தாக்கத்தினாலேயே உந்தப்பட்டவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி , மற்றும் பல இசையமைப்பாளர்களும். அதுபோலவே கவாலி , பங்க்ரா இசையும்.இந்த வகை இசையையும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். ரகுமான் தான் சூபி இசையை கண்டெடுத்தது போல பிரச்சாரம் செய்கிறார்கள்.

கவாலிசைக்கு சில உதாரணங்கள்.

1. இங்கே மிருகம் பாதி – படம்: சித்தி பாடியவர்: T.A. மோதி + குழுவினர் இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்

2. பாரடி கண்ணே கொஞ்சம் -படம்: வல்லவனுக்கு வல்லவன் – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் + சீர்காழி கோவிந்தராஜன் இசை :வேதா

3. ஆற்றின் கரை தனிலே கண்ணன் என்னை – படம் : அக்பர் பாடியவர்: பி.சுசீலா

4. தங்கச்சி சின்னப்பொண்ணு – படம் : கருப்புப்பணம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் + எல்.ஆர். ஈஸ்வரி + குழுவினர் இசை :விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பங்க்ரா இசைக்கு உதாரணங்கள்

1. ஆடலுடன் பாடலைகேட்டு – படம்: குடியிருந்த கோயில் பாடியவர்: T.M.சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்

2. கல்யாண சாப்பாடு போடா வா -படம்: மேயர் சந்திரகாந்த் – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் இசை :வீ.குமார்

3. நேற்று ராத்திரி தூக்கம் போச்சுது . – படம் : சகலகலா வல்லவன் பாடியவர்: எஸ்.பி.பி இசை :இளையராஜா

4. நாடுக் கொட்டை செட்டியாரு – படம் : – பாடியவர்: மனோ + குழுவினர் இசை :இளையராஜா

பாடகர் அலிகான் [ .Nusrat Fateh Ali Khan ] குழுவினரின் கச்சேரிகள் இங்கிலாத்தில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இதனால் ஏற்ப்பட்ட புகழ் ஆங்கில இசை கலைஞர்களின் அறிமுகத்தை கொடுத்தது.அதன் விளைவால் Peter Gabriel என்கிற ஆங்கில ராக் பாடகர் இவருடன் இணைந்து சில பாடல்களை உருவாக்கினார்.மேலைத்தேய கலப்புடன் அலிகானின் பாடல் ஒலித்தது. கவாலி கலப்பிசை [Qawwali fusion ] என்கிற புதிய இசை பிறந்தது. அந்த இசைத தொகுப்பு ” Mustt Mustt ” என்ற பெயரில் இசைத்தட்டாக 1990 இல் வெளியானது.இந்த இசைத் தட்டை Peter Gabriel ன் இசை நிறுவனமான ReallWorld Records வெளியிட்டது.இந்த நிறுவனம் பல நாட்டு இசைகளை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தில் உள்ள ” “Mustt Mustt [Lost in His Work]” (Nusrat Fateh Ali Khan) ” என்ற பாடல் வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து புகழ் பெற்றது. அந்த இசைத்தட்டில் ரீமிக்ஸ் ஆக வெளிவந்த “Mustt Mustt ( Massive attack remix)” பாடல் மிகவும் பிரபல்யமானது.பின்னர் கொக்கோ கோலா விளம்பரத்திற்கும் இந்தப்பாடல் பயன்பட்டது. இந்தப் பாடலின் புகழ் தான் இன்றைய தமிழ் சினிமா இசையில் A.R.ரகுமானின் Inspiration [ அகத்தூண்டுதல் ] என்று சொல்லலாம்.இந்த அல்பத்தில் வெளி வந்த பாடல்களின் பிரதிபலிப்பு இன்று வரை A.R.ரகுமானின் இசையில் தொடர்கிறது.இந்தக் காரணத்தால் தான் ரகுமானின் பாடல்கள் தமிழ் பாடல்கள் போல தெரிவதில்லை.தமிழில் தான் பாடப்படுகிறது , ஆனால் அவற்றில் உள்ள தமிழ் பாடல் வரிகள் நீக்கப்பட்டால் அவற்றில் தமிழ் தன்மை இல்லாதிருப்பதை நாம் உணரலாம்.

உலகெங்கும் ஒரே வகை மாதிரியான இசையைஇன்று நாம் கேட்டு வருகின்றோம்.அது உலகமயம் என்ற வல்லாதிக்கத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் இது போன்ற இசை ஊக்குவிக்கப்படுகிறது. பல் இனக் கலாச்சாரங்கள் எல்லாம் புறம்தள்ளப்பட்டு ஒரே வகைமாதிரியான நுகர்வுக்கலாச்சாரம் பரப்பபட்டு வருகின்றது. அந்த வகையிலேயே இசையிலும் ஒரே வகைமாதிரியான முறை பினப்ற்றப்படுகிறது. அந்த இசை ஜப்பானில் , வியட்நாமில், தாய்லாந்தில் , ஆபிரிக்காவில் , அரேபியாவில் எங்கு ஒலித்தாலும் அவற்றில் ஒட்டியிருக்கும் மொழியை அகற்றி விட்டால் சிறிதளவும் வித்தியாசம் தெரியாமல் இருப்பைதை நாம் உணரலாம். அந்த ” உலக இசையின் ” இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் செயல்படுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா,ஹரீஸ் ஜெயராஜ், விஜய் அன்டனி , ஜி.வீ.பிரகாஸ் மற்றும் புற்றீசல்களாக அறிமுகமாகும் பல இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித் தன்மை தெரிவதில்லை. பல நூறு பாடகர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் அவர்களிலும் தனித்தன்மை வெளிப்படுவதில்லை. நல்ல பாடகர்களான மதுபாலகிருஸ்ணன் , ஷ்ரேயாகோசல் போன்றவர்கள் ஓரளவு தனித்தன்மை காட்டினாலும் , ஒரே வகைமாதிரியான , சலிப்புத் தரும் ஃபார்முலா பாடல்களின் தன்மையால் அவர்கள்கூட மழுங்கடிக்கப்ப்டுகிரார்கள். தற்போது வெளிவரும் பாடல்களுக்கும் ஆங்கில பாடல்களுக்கும் அதிக வேறுபாடில்லை என்னுமளவுக்கு இன்றைய தமிழ் திரை இசையின் நிலை மாறியிருக்கிறது .

1990 களின் ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் அரேபிய சானல்களில் [ MBC ]அலி கானின் போல ஒலித்த அரேபிய பாடல்களும் ரகுமானின் பாடல்களுக்கு முன்மாதிரியனவையாக இருந்தன..அரேபிய பாடல்கள் மேலைத்தேய தாளங்களை கொண்டு பாடப்பட்டு வந்தன.

இந்த PATTERN ஐ தான் ரகுமானும் அவரை பின் தொடர்ந்த பல இசையமைப்பாளர்களும்பிரதி பண்ணினார்கள்..அதனால் தான் அரேபிய பாடல்களை போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் 1990 களில் முழக்கமிட்டன. பல அரேபிய பாடலகள் காப்பியடிக்கப்பட்டன.இந்த ரகப் பாடல்களை மக்கள் முகம் சுழித்தே கேட்டனர்.கோமாளித்தனமான நடனங்களால் கேலிக்குரிய பாடல்களாகவும் அவை இருந்தன. இவை தமிழ் திரையிசையின் வீழ்ச்சியை தான் பறை சாற்றின.கற்பனை வளமற்ற , தாளத்தை வெறும் முழக்கமாக்கி , வகை தொகையின்றி வெளிநாட்டு இசை கொப்பியடிக்கப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சி அதாவது பிறது படைப்பை கூச்சமில்லாமல் கொப்பியடிப்பதில் முடிந்திருக்கிறது. ” கொப்பியடிப்பதில் வல்லமை காட்டும் ஒரு போக்கு ” , அது ” திறமை ” என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.அதற்க்கு அவர்கள் நாகரீகமாக இட்ட பெயர் REMIX. இந்த நாமத்தை வைத்துக் கொண்டு பழைய பாடல்களை எல்லாம் குதறினார்கள்.ஆயினும் இவர்கள் செய்யும் இந்த கொடூரத்தை நியாயப்படுத்தவும் சிலர் முனைந்தார்கள். ” இதன் மூலம் பழைய பாடல்களை மக்கள் கேட்கும் வாய்ப்புக்களை ஏற்ப்படுத்துகிறார்கள் ! ” என்று நியாயப்படுத்தப்பட்டார்கள்.பின்னணிப்பாடகர் டி.எல்.மகாராஜன் சொல்வார் ” அந்தப் பாடல்களை சுமாராகப் பாடினாலும் பரவாயில்லை , ஏன் பாட வந்தார்கள் என்பது போல பாடக்கூடாது ” என்று. இன்றுள்ள நிலைமையில் அந்தப்பாடல்களின் இனிமையை இந்த Remix கெடுக்கின்றது என்பதே பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த Remix என்கிற சங்கதியை பழம்பெரும் இசையமைப்பாளர்களும் Remix என்ற பெயரில்லாமலேயே செய்திருக்கிறார்கள்.மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற மெட்டுக்கள் என்பதை நன்கு தெரிந்து பயன் படுத்தியிருக்கிராகள்.சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1 .கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்

வகைகிடைத்த குளிர் தருவே என்ற வள்ளலாரின் அருட்பா விருத்தப் பாடலை நாடகங்களில் பாடி கிட்டப்பா பிரபல்யப்படுத்தினார். பல வருடங்களுக்குப் பின் அதே மெட்டை வைத்துக் கொண்டு இசைமேதை ஜி.ராமநாதன் கோகிலவாணி என்ற படத்தில்

மாலையிலே மனச்சாந்தி தந்து மணம் பரப்பும் மலர் வானமே ….. என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜனை பாட வைத்தார்.அந்தப் பாடல் ஒரு தனித்துவமிக்க பாடலாக வெற்றி பெற்றது.

2 .ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற தியாகராஜ பாகவதரின் பாடலை இசையமைப்பாளர் கே.வீ.மகாதேவன் குலமகள் ராதை படத்தில்
ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்று டி.எம் சௌந்தரராஜனை மீண்டும் பாட வைத்தார்.

3 .உன்னை ஒன்று கேட்பேன் என்ற புதிய பறவை படப் பாடலை இசைஞானி இளையராஜா , தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற படத்தில்

இளமைக்காலம் இங்கு என்று திரும்பும் என்ற பாடலை தனது வாத்திய இசையால் அழகு படுத்தியிருப்பார்.பழைய பாடல் , புதிய பாடல் என்ற வகைப்படுத்தல் இளையராஜாவின் காலத்திலேயே வகைப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பாடல் அவரது சுய விமர்சனப்பாடல் என்றும் நாம் வைத்துக் கொள்ளலாம்.” பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை ” என்று பாடவும் , அதை எதிர் கொள்ளும் தைரியமும் அவரிடம் இருந்தது எனலாம்.ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதற்காக சில பாடல்களை அதற்குப் பொருத்தமான காட்சிகளுக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லலாம்.

ஆனால் இன்றோ பழைய திரைப்பட பாடல்களை எடுத்துக் கொண்டு தாளத்தை முழக்குவதர்க்காகவே பயன்படுத்துகிறார்கள். “தலை தெறிக்க ஆடுவது ” இதுவே ஒரு வியாதி போல பரவி வருகிறது. ரகுமான் ஆரம்பித்து வைத்த இந்த ரீமிக்ஸ் வகை தொகையில்லாமல் மற்றக் கலைஞர்களின் படைப்புக்களை இழிவு படுத்தும் பாங்கில் , சேஷ்டையாகவும் பயன்படுத்துகின்றார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் பலரும் இதை ஒரு பிழைப்பாகச் செய்துவருவது அருவருக்கத்தக்க செயலாகும்.படைப்பாற்றலற்றவர்கள் தமது கையாலாகத்தனத்தை மறைக்கும் ஒரு யுக்தியாகவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு எதிரான குரலகள் அவ்வப்போது ஒலித்தாலும் அவை சட்டை செய்யப்படுவதில்லை.

சமீபத்தில் கவிஞர் புலமைப்பித்தன் மிகக் காட்டமாக ஒரு கருத்தை துணிந்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பலரும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததால் எழுந்த ஆவேசக்குரலாக அவரது குரல் ஒலித்தது. அவர் சொன்னார் :

” தலை வாழை இல்லை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு நாய் வந்து அசிங்கம் செய்து விட்டுப் போவது போல கேவலமானது “

தனது சொந்த டியூனை எப்படிவேண்டுமானாலும் கெடுத்துக் கொள்ள இசையமைப்பாளர்களுக்கு உரிமையுள்ளது. அதை நான் ஆட்சேபிக்கவில்லை.ஆனால்பழம்பெரும் இசையமைப்பாளர்களின் பாடல்களை சிதைக்க அவர்களுக்கு உரிமையில்லை.தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான பூமழை தூவி பாடலை ஒரு படத்தில் ரீமிக்ஸ் செய்வதாகக் கேள்விப்பட்டேன் அது உண்மையானால் அந்த இசையமைப்பாளருக்கு எதிராக கோட்டுக்குப் போவேன்.ஏ.ஆர் ரகுமான் முதலில் தமிழைச் சரியாக கற்றுக் கொள்ளட்டும்.பிறகு இசைப்பள்ளியை ஆரம்பிக்கட்டும். – புலமைபித்தன்.

நல்லதை நல்லதென்றும் , தீயதை தீயது என்றும் சொல்லத்தயங்குகின்ற இன்றைய காலகட்டத்தில் உண்மையை துணிந்து கூறியமை பாராட்டத்தக்கது.புகழ் பெற்றவர்களை பாராட்டுவதும் அவர்கள் செய்வதெல்லாவற்றையும் நியாயப்படுத்தும் போக்கையும் நாம் காண்கிறோம்.இந்த மாதம் [august 2012]இந்த Remix கலாச்சாரத்தை கடுமையாக , அதனைக் கண்டித்துக் கூறக்கூடிய அருகதை உள்ளவரான மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூறிய கருத்தும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர்களிடம் அவர் கூறிய கருத்து :

“பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது ரொம்ப தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்துங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சில நேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்பனையில் நல்லது செய்யுங்கள்,” என்றார்.

அந்த காலத்து பாடல்களை போல் இப்போது இல்லையே என்று பலரும் கேட்கிறார்கள். அந்தக் காலத்துப் பாடல்களைப் போல இப்போதும் போட முடியும். ஆனால் அப்படி கேட்டு யாரும் பாட்டு வாங்குவதில்லையே.

முன்பெல்லாம் இசைக் கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து பாடல்களை உருவாக்கினோம். இப்போது மிஷின் வந்துவிட்டது. மிஷினே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது,” – எம்.எஸ்.விஸ்வநாதன்

ரகுமான் செய்யும் ” விளையாட்டுக்களை” நியாப்படுத்த பலர் இருக்கிறார்கள். அவரிடம் பாடும் பாடகர்கள், பாடகிகள் மற்றும் கவிஞர்கள், அதில் முதன்மையானவர் வைரமுத்து.அவருக்கு மறு வாழ்வு கொடுத்த நன்றி கடன் அது.

ரகுமான் மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டு” அவர் தாமமதமாக்ச் செயல்ப்படுகிறார் என்பது ” அது பற்றி கவிஞர் வைரமுத்து கூறுகிறார்.

” அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.அவர் திட்டமிட்டுத் தாமதமாக இல்லை.வேண்டுமென்றே தாமதமாக இல்லை.அந்தப் பாடலின் விளைச்சலுக்காக , பாடல் என்ற நிலக்கரி வைரமாக முதிர்வதர்க்காக அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார்.அந்த நேரத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியும்.பல மெட்டுக்களைப் போட்டு போட்டு பார்த்து அழிக்கிறார்.இது என் காதுக்குச் சுகமில்லை.இது என் நெஞ்சுக்கு நெருக்கமில்லை, இது தமிழர்களுக்கு ஆகாது , இந்த இசை ஏற்க்கனவே வந்தது,எனக்கு முன்னாள் பெரும் சாதனையாளர்கள் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள், ஜி.ராமநாதன் அவர்கள் , கே.வீ. மகாதேவன் அவர்கள், எம்.எஸ் .விஸ்வநாதன் அவர்கள் , இளையராஜா அவர்கள், இவர்கள் எல்லாம் செய்யாத சாதனைகளை செய்ய முடியுமா என்று அந்த சின்னஞ் சிறுவன் யோசித்து இந்தப் பெரியவர்களின் வழி காட்டுதலோடு , ஆனால் இந்த பெரியவர்களின் பாதிப்பு இல்லாத வகையில் அவன் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.அந்த ஆசையின் விளைச்சல் தான் இந்த வெற்றி என்று கருதுகிறேன்.- வைரமுத்து
இவ்விதம் ரகுமானே சிந்தித்து இருக்கமாட்டார் !!

” நான் ஒஸ்கார் நிகழ்ச்சியை சோபா நுனியிலிருந்து பார்த்தேன் ” என்று எழுதினார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் மட்டுமல்ல , எழுத்தாளர் ஜெயமோகன் ரகுமான் பற்றி பின் வருமாறு எழுதுகிறார்.

” ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. ரஹ்மானின் சையைப்பற்றி விரிவாகப்பேச நான் தேர்ந்த இசை ரசிகன் அல்ல. ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கார் விருது அந்தத் திறனுக்கான சர்வ தேச அங்கீகாரம்.”

“ஒரு கூட்டுவெளிப்பாடு ” என்றால் கூட்டாக அல்லவா விருதுகள் வழங்கப்பட வேண்டும். இவர்களின் பெருமிதமெல்லாம் ” விருதுகளின் ” அங்கீகாரம் தான்.இவர் ஐஸ்வர்யா ராய் பற்றி எழுதுவதை பாருங்கள்.

” ஐஸ்வர்யா ராயை நான் சந்த்திதிருக்கிறேன்.அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன் .அழகான பெண் .அழகான பெண்கள் இருப்பது போல் அல்லாமல் புத்திசாலியும் கூட.அவருடன் பேசும் போதெல்லாம் ” இவர் உலக அழகி ” எண்ணம் வந்த படியே இருந்தது.அல்ல இப்படியும் சொல்லலாம், ” உலகம் என்பது தான் என்ன “என்ற எண்ணம், உலகில் எத்தனை கோடிப் பெண்கள், எத்தனை கோடி அழகிகள் ,எத்தனை லட்சம் பேரழகிகள் எத்தனை வண்ணங்கள் , எத்தனை வடிவங்கள். ஆனால் யாரோ நம்மிடம் சொல்லிவிட்டார்கள் ” இவர் உலக அழகி ” என்று.பலகோடி ரூபாய் செலவில் அடஹி விளம்பரம் செய்து நிறுவி விட்டார்கள்.அது ஒரு உண்மையாகி விட்டது.அதன் பின் நம்முடன் இருப்பது ஒரு பெண்ணல்ல. ஒரு குறியீடு. ஒரு அமைப்பு .”

ஆனால் இதே எழுத்தாளர் இன்னொரு பெண் எழுத்தாளரான அருந்ததி ராய் பற்றி பின்வருமாறு எழுதுகிறார். அருந்ததி ராய் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

” ஒரே ஒரு பல்ப் நாவல் மட்டும் எழுதிய , போதிய அரசியல் அறிவோ , வாசிப்போ , கள அறிவோ இல்லாத இந்தப் பெண்மணிக்கு ஊடகங்கள் உலகெங்கும் அளிக்கும் விளம்பரத்தின் உள்சதிகளை காணும் கண்ணற்றவர்கலாக இருக்கிறார்கள்.”

தமிழ் திரைப்படக்கதையை ஒரு தேநீர் வழங்கும் பையனும் சொல்லுவது போல , ” கதை தயாரிப்பது ” போல. இசையைத் தயார் செய்பவராக இருப்பதால் அவர் ஒரு இசை தயாரிப்பாளர் என்றழைககபடுகிறார்..அதனால் பாடகர்களும் ,வாத்தியக்காரர்களும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப வாசிப்பதை பொருக்கி ஓட்டுவதா இசையமைப்பாளனின் வேலை ? .உண்மையான இசைக்கலைஞனிடம் அந்தக் கணத்தில் பீறிட்டு எழுவது இசை.ஜி.ராமநாதனிலிருந்து இளையராஜா வரை அவர்களின் கற்பனைக்கும் , இசைவடிவங்களுக்கும் தான் வாத்தியக்காரர்கள் துணை போயிருக்கிறார்கள்.வாத்தியக்காரர்களிடம் என்ன வேண்டுவது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.இந்த மாதிரி பல பாடல்களை ரகுமான் தயாரித்திருப்பதை அவரிடம் பாடிய பாடகிகளும் , பாடகர்களும் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்கள்.அவர் எங்கள் நண்பர் ” நாங்கள் எங்கள் எண்ணத்திற்கு பாடலாம் ” !! என்று.அதனால் தான் போலும் நீண்ட நாட்கள் எடுத்து கொள்கிறார்.

என்னுடைய நீண்ட கால நண்பர் , என்னை விட பல வயதுகள் மூத்தவர்.நீண்ட காலம் வெளிநாட்டில் வசித்தவர்.மிக பழைய பாடல்களின் ரசிகர். அவர் புதிய பாடல்களை பற்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேசியவரல்ல. ஆனால் பேச்சுவாக்கில் ஒருநாள் ஏ.ஆர் .ரகுமான் மிக திறமையான இசையமைப்பாளர் என்றார்.அவருடைய பாடலகள் உங்களிடம் இருக்கிறதா ? என்றும் கேட்டார்.” நீங்கள் கேட்கும் பாடல் என்னிடம் இருக்கிறதோ தெரியவில்லை, நீங்கள் பாடலை சொல்லுங்கள் பார்க்கலாம் ” என்றேன் .” கொஞ்சம் தாமதித்து ” நான் அவருடைய பாடல்கள் ஒன்றுமே கேட்டதில்லை ” என்றார்.ஏ.ஆர்.ரகுமானின் பாடலகளைக் கேட்காத ஒருவருக்கும் தெரிகிறது அவர் சிறந்த இசையமைப்பாளர் என்று!

இந்த கட்டுரை எழுதும் போது டென்மார்க் எழுத்தாளரான H.C.ANDERSON எழுதிய THE EMPORER’S NEW CLOTHS என்ற குட்டி கதை ஞாபகத்திற்கு வருகிறது.அந்த கதையின் சுருக்கம் இது தான். புதிய ஆடை அணிவதில் மிக்க மோகம் உள்ள ஒரு அரசனை , இரண்டு நெசவாளிகள் , தாம் அதி நவீன டிசைன்களில் ஆடை செய்வதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள்.தாம் நெய்யும் ஆடைகள் அறிவில்லாதவ்ர்களுக்கும் , முட்டாள்களின் கண்களுக்கும் புலப்படாது என்று கூறி விடுவதால் ,, மந்திரிகளும் , அதிகாரிகளும் அவர்கள் நெய்யும் ஆடை ஒன்றுமில்லை என்று தெரிந்தும் ,உண்மையைச் சொன்னால் தம்மை முட்டாள் என்று சொல்லி விட்டால் தங்கள் பதவிகள் பறி போய் விடும் என்று எண்ணி , அவர்கள் நெய்யாத ஆடைகளை எல்லாம் அற்ப்புதம் , அற்ப்புதம் என்று போற்றி மன்னனை உற்சாகப்படுத்துகிறார்கள் . மன்னன் அந்த ஆடையை அணித்து ஊர்வலம் போகும் நாளும் வருகிறது.மன்னனும் தான் முட்டாள் இல்லை என்று நிரூபிக்க அந்த ஆடையை அணிந்து ஊர்வலம் போகிறான்.எல்லோரும் அற்புதம் , அற்புதம் என்று கோஷமிடுகிறார்கள்.அந்த ஊர்வலத்தில் சென்ற ஒரு குழந்தை தந்தையிடம் ” மன்னனின் உடம்பில் ஒரு துணியுமில்லை ” என்று சொல்கிறது.அது ஊர்வலத்தில் பரவுகிறது. மக்கள் எல்லோரும் ” மன்னனின் உடம்பில் ஒரு துணியுமில்லை ” கோஷமிடுகிறார்கள்.மன்னனுக்கும் புரிகிறது , ஆனால் ஊர்வலத்தை நிறுத்த விரும்பவில்லை.

தமிழ் நாட்டின் இன்றையை திரை இசை அம்மணமாகி நிற்பதைச் சொல்ல ஒரு குழந்தை இல்லையே!

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்

கள்ளர்கள் வாழ்விலும் நியாயமுண்டு – என்பது கண்ணதாசன் வரிகள் .” இந்த இசை ஏற்க்கனவே வந்தது” என்று தெரிந்து தான் ரகுமான் இசையமைக்கிறார் எனபதற்கு மேல் சொன்ன பாடல்கள் பல சான்றாக உள்ளன என்பதை POET EMPORER அறியாமலிருப்பது அதிசயமல்ல.

முன்பெல்லாம் மிக அரிதாக வந்து போகக் கூடிய விருந்தாளிகள் போல வந்து நம்மை மகிழ்வித்த மேல்நாட்டு இசை , இன்று நாம் வரவேற்க்காமலே வந்த விருந்தினர் போல நம் வீட்டில் உட்கார்ந்து நம்மை அதிகாரம் செய்யும் பரிதாப நிலைக்கு நாம் வந்துள்ளோம்..அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்விதமே என்பதற்கிணங்க பொப் கலாச்சாரம் திட்டமிட்டுப் பரப்பபடுகிறது. ரகுமானின் பாடல்கள் உணர்வு நிலையில் பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை.உயிரே உயிரே என்று ஓலமிட்டாலும் மனதில் சலனங்களை எழுப்புவனவல்ல.உணர்ச்சி செறிவான இசையற்ற , வெறும் அலங்கார இசை மக்கள் மனங்களில் அமரமுடியுமா? இசை நிறுவனங்கள் பழக்கப்படுத்த முனையும் தாள லயன்களை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் இசை மக்களுக்கு அன்னியமாயிருப்பதால் அவை நின்று நிலைப்பதில்லை. அவை அற்ப ஆயுளில் மறைந்து போக நேர்கிறது. உணர்ச்சியற்ற மேலோட்டமான இசையினால் ஏற்ப்படும் விளைவு இது. வியாபாரத்திற்காக உருவாக்கப்படும் வேரில்லாத இசை இன்று வலிந்து ஊடகங்களால் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டு, பரப்பபட்டு வருகிறது. கணனியில் இசை மென்பொருட்களை கொண்டு பலரும் இசையமைப்பதால் புற்றீசல்களாக அறிமுகமாகும் பல இசையமைப்பாளர்களின் இசையில் தனித்தன்மை தெரிவதில்லை. இந்த நிலைமை இன்றைய மொபைல் தொலை பேசியில் ஒலிக்கும் அழைப்புஒலி[ RinkTone] போன்றே உள்ளது.எல்லோரிடமும் உள்ள மொபைல்தொலைபேசிகளில் ஒரே விதமான சத்தங்கள் ஒலிக்கும் போது , ஒருவர் தானாக ” அது என்னுடைய தொலைபேசி ” என்று உறுதிப்படுத்துவது போலவே , இன்றைய இசையமைப்பாளார்களும் ” இந்த பாடல்களுக்கு நான் தான் இசையமைத்தேன் ” என்று சொன்னால் தான் நமக்கு புரியும் என்கிற பரிதாபத்தில் இன்றைய தமிழ் சினிமா இசை உள்ளது.இவ்விதம் இசை மலினப்படுத்தப்படும் அதே வேளையில் , இசை அமைப்பு என்பது உயர்ந்த தொழில் நுட்பம் சார்ந்ததாகவும் ஆக்கப்பட்டு வருகின்றது.இந்த நுட்பங்களை அறிய வாய்ப்பில்லாதவர்கள் இசைத்துறைக்கு வர இயலாத அளவுக்கு மறைமுகமான முட்டுக்கட்டை போடப்படுகிறது.

Inspiration என்பதை முற்றாக தவறாகப் புரிந்து கொண்ட அல்லது , அது பற்றிய சிந்தனையற்ற விரைவான புகழையும் , விருதுகளையும் , அங்கீகாரங்களையும் எதிர்பார்க்கின்ற , குறுக்கு வழிகளில் அவற்றைப்பெறத் துடிக்கின்ற , சந்தர்ப்பங்களுக்கேர்ப்ப நடிக்கின்ற , படைப்பாற்றலற்றவர்களின் கையில் இன்றைய சினிமா உலகம் சிக்கியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றை உலக மயக் கொள்கைகளுக்கு அடிமையாகி போன ஒரு கூட்டத்தின் கையில் இன்றைய சினிமா இசை சிக்கித் தத்தளிக்கின்றது.வங்காளப் படங்களைக் காப்பி அடித்தவர் “இயக்குனர் சிகரம்” !! , GODFATHER என்ற அமெரிக்கப்படத்தை காப்பியடித்து , அதை ஒஸ்காருக்கு அமெரிக்காவிற்கே அனுப்பிய மணிரத்தினம் ” இந்தியாவின் சிறந்த இயக்குனர் “!!.

இசையமைப்பது என்பது மற்ற கலைகளைப் போன்றே சிறப்பான கலை.அது எல்லோருக்கும் கைவரப் பெறுவதல்ல.ஆனால் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி என்பது கலையாற்றலை தொழில் நுட்பமாகக மாற்ற முயற்ச்சிக்கிறது.பெரு வணிகத்தின் வீச்சும், அதை ஊக்குவிக்கும் , அதன் அத்தியாவசியத் தேவையான விளம்பரமும் இன்று கலையாகப் பிரச்சாரப் படுத்தப்படுகிறது.உலக மக்களின் பண்பாடுகளை அழிப்பதும் , இறையாண்மையை அழிப்பதும் உலக மயத்தின் பிரதான் குறிக்கோளாக இருக்கிறது.அந்த குறிக்கோளிற்கு உதவும் ஒரு கருவியாக இசை பயன் பட்டு வருகிறது. சகல துறைகளிலும் உலக மயகொள்கை திணிக்கப்பட்டு வருகிறது.கம்பியூட்டர்களை , சில மென் பொருட்களை இயக்கத் தெரிந்தவர்கள் கலைஞர்களாக போற்றப்படும் அவல நிலை உருவாகியிருக்கிறது.இதன் விளைவு இசையில் பன்முகம் இழந்த ஒரே ரகமான , அலுப்புத்தட்டுகின்ற இசை முழக்கப்பட்டு வருகிறது.நல்ல இசையை கேட்க சந்தர்ப்பமில்லாதவ்ர்களுக்கு தேவையானால் இது போன்ற முழக்க இசை வியப்பாக இருக்கலாம்.மகத்தான நவீன தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு வித்தை தான் இவர்களால் காட்ட முடிகிறது.

ஜி.ராமநாதன் , எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு போன்ற இசைமேதைகள் தமிழ்த்திரை இசையை மண் மணத்தோடு ஒரு எல்லை வரை வளர்த்தெடுத்தார்கள்..அதை அடுத்த கட்டத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ.மகாதேவன் போன்றோர் வளர்த்தெடுத்தார்கள்.அவர்கள் வழியே இளையராஜா இசையின் உச்சங்களை தொட்டார். கலையம்சமான இசையின் தொடர்ச்சி அவருடன் நின்று விட்டது வேதனைக்குரியது.

-முற்றும்-

முன்னைய பகுதிகள்:

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்
தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T.சௌந்தர்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலம்பெயர் தமிழர் போராட்டங்களை நிறுத்த இலங்கை அரசிற்கு சுரேன் சுரேந்தர் ஒப்புதல் ?

புலம்பெயர் தமிழர் போராட்டங்களை நிறுத்த இலங்கை அரசிற்கு சுரேன் சுரேந்தர் ஒப்புதல் ?

Comments 70

  1. Muthu says:
    13 years ago

    An excellent comparative article about tamil cinema music directors. I enjoyed reading your article very much. Thanks for your good work. As you have in the last line of this final article…traditional music continuation has stopped with Illayaraja, which is very unfortunate for Tamil cinema world and to Tamil people. Hope in future Tamil thai will give another Raja to tamil music world. Thanks a lot.

  2. s.amirthan says:
    13 years ago

    Very beautifull final lines.and you can also add some more lines, like Tamil thaai gave bharathy to poem , and gave ilaiyaraja to music.every tamilian can be proud of these personalites.
    Thanks , sounder.

  3. nithi says:
    13 years ago

    சௌந்தர் அவர்களே ! இளையராஜாவின் இசை இதமானதுதான்.
    நானும் அவரது ரசிகன் தான்.ஆனால் இந்த ஆய்வின் மூலம்
    என்ன சொல்ல வருகின்றீர்கள் .
    பல தவறுகளை உள்ளடக்கிய அதி மேதாவித்தன ஒப்பீடுகள்.
    ரகுமான்  கொப்பி செய்த ஆங்கில பாடல்கள் என சில தரவுகள்.
    நானும் எல்லா பாடல்களையும் youtube இல் கேட்டேன் .எங்கே ,
    என்ன சம்பந்தம் ஆங்கில பாடல்களுக்கும் ரகுமான் பாடல்களுக்கும் 
    இருக்கின்றது.
    அதிலும் சில ஆங்கில பாடல்கள் ரகுமானின் இசை ரிலீசாகி  
    பல வருடங்களுக்கு பின்பு  வெளிவந்தவை.
    ex…. ரகுமான் இசை அமைத்த முத்து வெளிவந்த வருடம் என்ன?
             the mummy returns வெளிவந்த வருடம் என்ன?
    எங்களாலும் இசை சம்பந்தமாக பத்தி பத்தியாக எழுத முடியும்.
    ஆனால் நிஜம் வேண்டும் எழுத்தில்.
    ப்ரியா –இளையராஜாவின் இசை. இதில் எத்தனை பாடல்கள் 
    நேரடி ஆங்கில தழுவல்  தெரியுமா?
    அறுபதுகளில் வெளிவந்த தென்னமெரிக்க  ,ரஷ்சிய பாடல்களின் 
    பல மெட்டுக்கள் இளையராஜாவின் பாடல்களில் உண்டு.
    இளையராஜாவின் பல பாடல்கள் நாட்டுப்புற பாடல்களின் 
    மெட்டு என்கின்றீர்கள் ..இது தழுவல் இல்லையா?
    உங்களைப் போன்ற பலருக்கு இளையராஜாவின் திரையிசைத் 
    தோல்வி ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதன் தாக்கம் தான் 
    இந்த ஆறு பாகங்களைக் கொண்ட தொடர்.
    ஏ .ஆர் .ரகுமான் மீது உங்களுக்கு என்ன கோபமோ ?

    • thamizhan says:
      13 years ago

      ரகுமானின் ஆரம்பப்படங்களில் அவெரது இசை சொந்தப் பாணியாக , வித்தியாசமாக இருந்தது உண்மைதான். ஆனால் போகப் போகா அவெரும் கொப்பி மன்னன் ஆகி விட்டார்.நாம் ஜரோப்பியநாடுகளில் சில பாடல்களை றாடியோவில் கேட் கும் போது ,ரகுமானின் கள்ளத்தனமான ரகசிய இசை விளையாட்டுநமக்கு புரிகிறது,. ரகுமானின் 50% வீதமனா பாடல்கள் அப்பட்டமான காப்பியே.நித்தி சொல்லதீர்கள் ; தயவு செய்து செயலில் எழுதிக் காட்டுங்கள்:

  4. s.amirthan says:
    13 years ago

    சொல்ல வேண்டியதை , பிறர் சொல்லத் தயங்குகின்ற விஷயத்தை துணிந்து கூறியமைக்கு பாராட்டுக்கள்.குறிப்பாக ஆடை பைத்தியம் பிடித்த மன்னனின் உதாரணம் அதன் சிகரம்.

  5. ramesh says:
    13 years ago

    ilayaraja pola saathanai yarum seiya mudiyathu…. ilayaraja amaitha bgm pesum avarin saathanaiyai…. raja sir great… god of music…. raja rocksssssss

    • s.amirthan says:
      13 years ago

      ஏன் அவருடைய பாடல்கள் போதாதோ.?? http://www.thirapaadal.com இணையத்தில் போய் பாருங்கள் இளையராஜாவின் பாடல்கள் எத்தனை , ரகுமானின் பாடல்கள் எத்தனை சாதனை பாடல்கள் என்று..

      • ramesh says:
        13 years ago

        rahumanai raja sir udan opidavendam….

        • s.amirthan says:
          13 years ago

          iLAIYARAJA IS THE GREATEST. I AGREE YOU..

  6. sivaputhran says:
    13 years ago

    பிரதிஎடுத்தல் என்பது தற்செயலாக ஏற்பட்ட ஒரு வாய்ப்பாக கொள்ள
    வேண்டுமே தவிர ,அதனையே ஒரு தொழிலாகத் தொடரக்கூடாது
    அவ்வாறாயின் ,அது பிரதி எடுப்பவர்களின் தகுதியின்மையைப் பறைசாற்றி
    விடும் .
    கவியரசு கண்ணதாசன் சங்க இலக்கியத்தையும் ,சித்தர்களையும் ,கம்பனையும்
    தொட்டுத்தான் சென்றார் .அங்கு அவரின் மேதாவிலாசம் வெளிப்பட்டது .ஆனால் ,
    அவர் அதனத்தொடரவில்லை .மாறாக ,அவரின் ஆற்றல்மிக்க கவித்துவம் ,ஆளுமை
    அழகெல்லாம் காட்டி நின்றது வரலாறு .அது போன்றே இசைஞானி இளையராஜாவும் .
    ஆற்றலும் ,தகுதியும் கொண்ட அவருடைய காலம் பொற்காலம் என்றால் மிகையாகாது .
    “திரை இசை அலைகள் ” என்ற தலைப்பில் ,திரு வாமனன் எழுதி மூன்று பாகங்களாக
    வெளிவந்த தொடரில் ,இசைஞானியைப் பற்றி எழுதும் போது மிகவும் நீண்ட பக்கங்களையே
    செலவிடுகிறார் .திரு சௌந்தரைப்போலவே இசைஞானி திரு வாமனன் அவர்களால் மிகவும்
    விதந்துரைக்கப்படுகிறார் .அதுதான் உண்மையும்கூட .
    திரு சௌந்தர் அவர்கள் விரிவஞ்சி ,தனது கட்டுரையை நீட்டியிருக்க விரும்பவில்லை போலும்
    நினைத்திருந்தால் ,இப்படி பேர்வாங்கிப் பிழைப்பு நடத்தும் இசையமைபாளர்களை தோலுரித்திருக்கலாம்.
    ஆனால் அதுவல்ல அவரின் நோக்கம். தற்கால இசையமைபாளர்களிடம் சொந்தமாக எதுவும் இல்லையே
    என்ற ஆதங்கத்தேயே இந்த கட்டுரை சொல்ல விளைகிறது .தவிரவும் ,இசைஞானி இளையராஜா எங்கே
    எப்போது தோற்றுப்போனார் ? வேரோடும் மண்ணோடும் ஒட்டி நிற்கும் கலைஞனை வெட்டிவிட்டது யார் ?
    ஆற்றலுக்கும் ,திறமைக்கும் மதிப்பளிக்கத்தவறியவர்களாலா …அல்லது நவீன காலம் கொண்டுவந்த உப்பு
    சப்பற்ற உதவா இசை வடிவமா ……? புதியவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதுமல்ல ,இசைஞானி தோற்றுப்போனார்
    என்பதுமல்ல . இன்றுவரை இசைஞானிக்குப்பிறகு ஓர் இனிய இசைக்கான வெற்றிடம் வெற்றிடமேதான் .
    அம்மணமாக அலங்கார பவனி வந்த அரசனைப்போல் இன்றும் எத்தனையோ அம்மணங்கள் …………கத்திச்சொல்ல
    எவருண்டு கோவணத்தையாவது கட்டுங்கள் என்று !!!!
    வெறும் நுனிப்புல் மேயாமல் ஆய்ந்தும் ,ஆழமாயும் மிகவும் அழகான இக்கட்டுரையை தந்த திரு சௌந்தர்
    அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும் … தொடருட்டும் எழுத்துப்பணி

    சிவாபுத்திரன்

    • Sharva says:
      13 years ago

      எணை அப்பு உமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நவீன கால இசை குறைந்ததாக போய் விடாது. உமக்கு அதுல ரசை இல்லை அதற்கேனப்பா ஊரை குறை சொல்கிறாய். இந்த காலத்து இழசுகள் இளயராசா பாட்ட்போட்டிட்டு டிஸ்கோ ஆட முடியுமா. உமக்கு மூட்டுவலி உம்மால முடியாதெண்டா டாக்டரை பாரும் இல்ல மூலையுல படுத்து தூங்கும் ராசாட பாட்ட கேட்டுட்டு.

  7. Veeran says:
    13 years ago

    சின்ன மாமி ஏ உன் சின்ன மகள் எஙே தவிர எல்ல்லாமே கொப்பி அடித்த பாடல்கள் தான்

    • Sharva says:
      13 years ago

      சோல்றாரு கேளுங்க, இசை மேதாவி.

    • s.amirthan says:
      13 years ago

      கூழ் பானைகள் கருத்துக்கள் சொல்கின்றன.

  8. sivaputhran says:
    13 years ago

    மூட்டை சுமையானால் மூட்டுவலி யாகலாம்
    பாட்டே சுவையானால் பாதங்கள் தாளமாம் -அட தம்பி
    கேட்டுப்பார் ஞானத்தைச்சொல்லுவான் என்றும்
    மூட்டுவலி நிவாரணிக்கும் இசைஞானியே தானாமே !!!!!
    சிவாபுத்திரன்

  9. காரிகன் says:
    13 years ago

    அபாரமான கட்டுரைகள்..ஆறு பகுதியையும் படித்து முடித்ததும் ஒரு பிரமிப்பு உண்டாகிறது.உங்களின் இசை தேடல்கள்,இசை புரிதல்கள் ,ஆதங்கங்கள் பாராட்டுகள், விமர்சனங்கள் எல்லாமே வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு அழகான சிலை போல இருப்பது குறித்து மகிழ்ச்சியே..ஒரு நீண்ட ரயில் பயணத்தை முடித்தது போலிருந்தது எனக்கு.தமிழ் திரை இசை பற்றி இந்த அளவுக்கு நுட்பமாக சிரத்தையுடன் பதிவுகள் இருப்பது வெகு குறைவு.உங்களோடு எனக்கு சில இடங்களில் உடன்பட முடியாவிட்டாலும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.நல்லது. 

    எப்படி இன்றைய இசை ஒரு மாபியா கும்பலிடம் மாட்டிகொண்டது, அதற்க்கு பின் இருக்கும் அரசியல், ஊடக திணிப்பு, போன்ற பல விஷயங்களை அலசி இருக்கும் நீங்கள் இதே அளவுகோல் கொண்டு இளையராஜாவின் காலத்தையும் அந்த கால இசையையும் மதிப்பீடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கடைசி பகுதி முழுவதும் எ ஆர் ரகுமான் என்னும் ஒரு இசை அமைப்பாளரை பற்றிய பிம்பத்தை தலை கீழாக புரட்டிப்போட்டும் , அவரை அங்கீகரிக்காத போக்கும் என இசை தொண்ணூறுகளுக்கு பின் மரித்துவிட்டது என்கிற பாணியில் இருப்பது உங்களுக்கும் இசையை தாண்டிய தனி மனித ஆராதனை இருப்பதையே காட்டுகிறது. ரகுமானை பற்றி பொதுவாக இளையராஜா அபிமானிகள் சொல்லும் வழக்கமான குற்றச்சாட்டுகளையே நீங்களும் சொல்லி இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.தன் சொந்த முயற்சியால் வராமல், திறமை ஏதுமின்றி இருந்த ஒரு டீன் ஏஜ் பையனை ஒரு முதலாளி வர்க்கம் இசை உலகில் முன்னிறுத்தி அதுவரை ஆட்சி செய்து வந்த ஒரு தமிழ் வேர்களோடு தொடர்புள்ள இசை அமைப்பாளரை வீழ்த்தி விட்டது என்று எதோ பேண்டசி கதை போல நீங்கள் ஆதாரம் காட்டுவது ஏனோ புரியவில்லை.அப்படி இருந்தாலுமே திறமை இல்லாத ஒரு காப்பிகேட் இந்த அளவுக்கு வர முடிந்தால் அது எல்லோருக்குமே சாத்தியம்தானே. 

      .போட்டியும் , பொறாமையும் , காழ்ப்புணர்வும் நிறைந்த சினிமா உலகில் பொதுவாக ஏற்ப்படக்கூடிய மன்க்கசப்புக்களால் சில ” பெரிய இயக்குனர்கள்” இளையராஜாவுடன் ” நானா நீயா ” போட்டியில் இறங்கினர்.இந்த மனவேறுபாடுகளால் அவர்கள புதிய இசையமைப்பாளர்களை தேடி ஓட ஆரம்பித்தனர். அதன் நிகழ்வாக பல இசையமைப்பாளர்கள் “சிகர ” , ” இமய ” இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமான்வர்களாக மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் .

     நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. எல்லா இயக்குனர்களும் இளையராஜாவிடமே வரிசை கட்டி நிற்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ?பலவிதமான இசை அமைப்பாளர்கள் வருவது அந்த தமிழ் திரை உலகத்திற்கும் ரசிகர்களும் நல்லதுதானே?இருந்தும் நீங்கள் விரும்பியபடிஏதான் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு நடந்தது. இளையராஜா செய்த திமிர் தனமான ஆணவமான போக்கினாலேயே இவர்கள் வேறு இசை அமைப்பாளர்களை நோக்கி செல்ல நேரிட்டது. அது ஒரு குற்றம் போல நீங்கள் எழுதுவது உங்கள் சிறந்த இசை அறிவுக்கு ஏற்புடையதா என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். அப்படி வந்தவர்களும் ஒரு புதிய இசையை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அவர்களும் வழக்கம் போல இளையராஜாவின் பாதையிலேயே பயணித்தனர்.எனவேதான் அவர்களை ரசிகர்கள் உடனே மறந்தும் போய்விட்டார்கள்.இப்படி இருந்தவரும் தலைகால் தெரியாமல் ஆட்டம் போட, மாற்றாக வந்தவர்களும் அவரையே காப்பி அடிக்க தமிழ் ரசிகர்களுக்கு இசை என்பது எண்பதுகளின் கடைசியில் ஒரே தாளம் கொண்ட பூவு, எசப்பாட்டு, ராசா ரோசா மாமா போமா நோவுது நீவுது போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகளோடு முடிந்துபோனது..இந்த மூச்சடைத்து போன தமிழ் இசையில் தொண்ணூற்று இரண்டில் ஒரு புதிய காற்று வீசியதை உங்கள் அரசியல் கலந்த விமர்சனம் மறுக்கிறது.ஒரு மிகப்பெரிய இசை அமைப்பாளருக்கு எதிராக ஒரு சின்னப்பையனை சிலர் உள்நோக்கத்தோடு உருவாகினார்கள் என்று மற்றவர்கள் போல நீங்கள் பேசுவது வினோதம்தான். ரகுமானின் இசை தமிழ் மக்களுக்கு ஒரு புதிய விடியலை காண்பித்தது. இப்படிகூட இசை இருக்குமா,இப்படிப்பட்ட இசை ஒலிகள் உண்டா என்று ரகுமான் பாடல்களை கேட்டவர்கள் வியந்தது உண்மையில்லையோ?ரகுமான் வருகைக்கு பிறகே தமிழ் இசையில் பல பாடகர்கள் இசை அமைப்பாளர்கள் வர முடிந்தது.இளையராஜாவின் இரும்பு திரையை ரகுமான் சிதற அடித்து ஒரு புதுவெள்ளத்தை ஓட வைத்தார்.அந்த வெள்ளத்தில் காணமல் போனவர்களில் ஒருவர்தான் இசைஞானி அவர்கள். இதை உணர்ந்தும் இளையராஜாவின்  அபிமானிகள் இளையராஜாவின் வீழ்ச்சியை ஏற்க முடியாமல் பலவிதமான குற்றச்சாட்டுகளை ரகுமான் மீது வாரி இறைப்பது அவர்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறது.

    இசை என்பது மாறிவரும் கலாசார நுட்பங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அதை பிரதிபலிப்பது. இது எங்கேயும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும் மாற்ற முடியாத வளர்ச்சி.ஐம்பதுகளின் ஆங்கில இசை அறுபதுகளில் ராக் அன்டு ரோலாக மாறி எழுபதுகளில் ராக், ஹெவி மெட்டல் சைகேடேலிக் ராக்,டிஸ்கோ, பாப் என்று உருமாறி எண்பதுகளில் பாப் ராக் பங் என்று வளர்ந்து தொன்னூறுகளில் அல்டேர்நெடிவ் வடிவம் பெற்று இப்போது முழுதும் மாறிப்போய் எல்விஸ் ப்ரெஸ்லி, பீட்டில்ஸ், டர்டில்ஸ், ஈகிள்ஸ், பிங்க் பிளாயிட், டயர் ஸ்ட்ரைட்ஸ் இசை இலிருந்து வேறுவிதமாக ஒலிப்பதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். நாமோ பழசு மாறி இல்லை என்று ஒரே காமென்ட் சொல்லி ஒரே வட்டத்தில் சுற்றி சுற்றி வருகிறோம்.ரகுமானை சீர்கெட்ட இசை அமைப்பாளர் என்று வர்ணிக்கும் உங்களுக்கு இதே போல்தான் இளையராஜா வந்த போது பலர் சொன்னார்கள் என்பது தெரியாதா? அந்தந்த தலைமுறையின் இசையை மதிக்கதெரியாத யாருமே பழமைவாதிகள்தான். எனக்கும் கூட இந்த காலத்து இசையை பிடிக்கவில்லைதான். இருந்தும் அதை ரசிக்கும் பல லட்சக்கணக்கான ரசிக்கர்களின் ரசனையை மதிக்கிறேன். அவர்களை குறை சொல்ல மாட்டேன். ஏனென்றால் இசை நமக்கு பிடிக்காத அல்லது புரியாத வகையில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஜி.ராமநாதன் , எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு போன்ற இசைமேதைகள் தமிழ்த்திரை இசையை மண் மணத்தோடு ஒரு எல்லை வரை வளர்த்தெடுத்தார்கள்..அதை அடுத்த கட்டத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ.மகாதேவன் போன்றோர் வளர்த்தெடுத்தார்கள்.அவர்கள் வழியே இளையராஜா இசையின் உச்சங்களை தொட்டார். கலையம்சமான இசையின் தொடர்ச்சி அவருடன் நின்று விட்டது வேதனைக்குரியது.

    இப்படி உங்கள் கடைசி வரிகள் முடிந்துபோகிறது. இனிய இசை இளையராஜாவோடு முடிந்து போகவில்லை மாறாக நீங்கள் இளையராஜாவுடன் நின்று விட்டீர்கள் என்பதே உண்மை.

    • appu says:
      11 years ago

      Great reply, Kaarigan!

  10. s.amirthan says:
    13 years ago

    திரு சௌந்தர் அவர்களே ,
    வணக்கமும் வாழ்த்துக்களும்.ஒரு கை தேர்ந்த விமர்சகன் போல இந்த தலைப்பில் நீங்கள் எழுதிய தொடர் முடிந்தது எண்ணி ஓரளவு வருத்தம் என்றாலும், முடிவில் சொல்ல வந்ததை மிக நன்றாக சொல்லி உள்ளீர்கள்.இந்த தொடரை நீங்கள் ஒரு முடிவுரை போல ஒன்றையும் எழுதியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.அப்படியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.எனது கருத்து என்னவென்றால் அவசரமாக முடித்து விட்டீர்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.வழமையாக பலரும் இதை பற்றி கருத்து சொல்லவதற்கு இடமில்லாமல் பல அபூர்வமான விசயங்களையும் , அவை உலக இசையோடு எவ்விதம் இசைந்து போகிறது என்பதையும் சொல்லியுள்ளீர்கள்.அது மட்டுமல்ல தமிழ் சினிமாவின் ஆதிகால இசையமைப்பாளர்களையும் ,அவர்களது பாடல்களையும் நாம் கேள்விப்படாத பல தகவல்களையும் தந்துள்ளீர்கள்.அது தான் மிக சிறப்பு.உங்கள் பரந்த இசை குறித்த பார்வை பாராட்டத்தக்கது.
    தற்போது சில எழுத்தாளப் பெருமக்கள் பின் நவீனத்துவ இசை , முன் நவீனத்துவ இசை என்று எத்தனையோ புரியாத வார்த்தை யாழ்களை வைத்து வாசிக்கிறார்கள்.அவை என்னவென்று அவர்களுக்கே புரியுமோ தெரியாது.இசை பற்றி எழுதும் கட்டுரைகளை பொதுவாக திசை திருப்பும் ஒரு சமாச்சாரமாக ஒப்பீடுகளை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பதியபட்டு திசை திருப்பப் பலரும் முயற்சிப்பார்கள்.அந்த நோய் இந்த ஆக்கத்திற்கு வரவில்லை எனினும் காரிகன் என்பவர் இதனை ஒரு தந்தரமான முறையில் உள் நுழைக்கப் பார்க்கின்றார்.இந்த காரிகன் என்பவர் வேறு தளத்தில் இளையராஜாவை மிகவும் காழ்ப்புடன் வசை பாடி வருபவர் என்பதை அறியத்தருகின்றேன்.இந்த சில்லறைகளுக்கு நீங்கள் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    நான் முன்பு எனது பின்னூட்டத்தில் சொன்னது போல …
    சொல்ல வேண்டியதை , பிறர் சொல்லத் தயங்குகின்ற விஷயத்தை துணிந்து கூறியமைக்கு பாராட்டுக்கள்.குறிப்பாக ஆடை பைத்தியம் பிடித்த மன்னனின் உதாரணம் அதன் சிகரம்.

    • காரிகன் says:
      13 years ago

      நான் திருவாளர் சவுந்தருக்கு எழுதி இருக்கும் பின்னூட்டத்தை படித்து விட்டு வினோத பெயர் கொண்ட சிலர் தங்கள் சொல்ல வந்த கருத்தை ஒருவரை பாராட்டுவது போல பாராட்டி விட்டு இடையில் திட்ட வேண்டியவர்களை திட்டி தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள். நான் இளயராஜாவை காட்டமாக விமர்சிப்பவன் என்பது ஒன்றும் ரகசியம் இல்லையே.நான் வேறு தளத்தில் இளையராஜாவை காழ்ப்புடன் விமர்சித்தேனாம். வேறு ஒரு தளம் இல்லை பல தளங்கள் . இங்கு கூட நான் இளயராஜாவை துதி பாடி எதுவும் எழுதவில்லை தந்திரமாக என் கருத்தை உள்ளே நுழைப்பதற்கு.  இதற்கு முன்பே நான் சவுந்தர் அவர்களுக்கு இரண்டு பின்னூட்டம் எழுதி இருக்கிறேன்.  என்னை பற்றி அநாகரீக முறையில் சில்லறை என்று எழுதும் அந்த அதி மேதாவி என்ன அமெரிக்கன் டாலரா? என் எழுத்தில் அநாகரீக வார்த்தைகள் இருந்தால் என்னை தாராளமாக வசை பாடுங்கள். அதை விட்டு விட்டு என் கருத்துக்கு பதில் சொல்ல முடியாத ஆத்திரத்தில் எதையோ குடித்துவிட்டு உளருவதைபோல உங்கள் மனதில் இருக்கும் அசிங்கத்தை என் மீது தெளிப்பது எந்த ஊர் நாகரீகம் திருவாளர் அமிர்தன் அவர்களே. முகம் தெரியாத மற்றவர்களை சில்லறை ,ரூபா என்று வர்ணிக்கும் முன் சற்று யோசித்துவிட்டு செய்யவும்.

    • காரிகன் says:
      13 years ago

      உங்கள் பெயரை இப்போதுதான் முதலில் பார்க்கிறேன். உங்களின் பழைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்தேன். உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தவறாக உங்கள் கருத்தை சொல்ல முற்பட்டு அது முடியாமல் வழக்கம் போல இளயராஜா துதி பாடி இருக்கிறீர்கள்.  I agree you என்பது ஒரு தவறான ஆங்கில பிரயோகம் அது  I agree with you என்று இருக்க வேண்டும். என்னை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத போது என்னையும் நினைத்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள். ஆனால் என்ன தரங்கெட்ட தமிழில் எழுதியதை விட உங்கள் தவறான ஆங்கிலத்திலேயே அதை நீங்கள் செய்திருக்கலாம்.

      • Roopan says:
        13 years ago

        ஆங்கிலம் பிழையா இல்ல கருத்து பிழையா இல்ல ரண்டுமே பிழையா? புரியல்லியே ? சார் ஆங்கில பண்டிதரோ என எண்ணத் தோன்றுகிறது.

  11. nithi says:
    13 years ago

    இளையராஜாவின்  இசையை யாரும் இங்கே குறை சொல்லவில்லை.
    தமிழ் திரை இசை என்றால் இளையராஜாதான் என சொல்கின்றீர்களே ;
    அதைத் தான் தவறு என்கின்றோம் .
      சௌந்தர் அவர்கள்  ரகுமானை மிகவும் தரக்குறைவாக விமர்சித்ததன் 
    அர்த்தம் ;இளையராஜா மீதுள்ள மோகமே அன்றி இசை சம்பந்தமான 
    புரிதல்  இல்லை.
       காரிகன்  அவர்களின் கருத்துக்கள் உண்மையானவை.
    ரகுமானின் வரவுக்கு பின்புதான் தமிழ் திரை இசை விடுதலை அடைந்தது.
    விரிவடைந்தது .
       உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம்.விருதுகள் பலவிதம்.நோபல் பரிசு 
    மேடை உட்பட அவர் இசை ஒலிக்காத இடங்கள் இல்லை.
     பெருமை கொள் தமிழா என்பார்கள்.
     ஆனால் நீங்களோ ,தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காய் சொற்களால் 
    வதைவது நாகரீகம்  தானா?
       தமிழ் இசையைப் பற்றி கவலைப்படும் நீங்கள், தமிழ் நாட்டிலே தமிழ் 
    தெரியாத சந்ததி ஒன்று வளர்ந்து கொண்டிருப்பதில் கவலை கொள்ளவில்லையா?
    உங்கள் பிள்ளைகளுக்காவது தமிழ் சரியாக எழுத வருமா?
        அமெரிக்கா, முதலாளித்துவம் கதைக்கின்றீர்களே ;பிள்ளைகளை அமெரிக்கா 
    அனுப்ப வேண்டும் என்ற கனவுடன் தானே இந்திய பெற்றோர் வாழ்கின்றீர்கள்..

  12. s.amirthan says:
    13 years ago

    காரிகன் , நித்தி போன்றோரின் தவறான ,குளறுபடியான கருத்துக்களுக்கு ஆணித்தரமான விளக்கங்களை சௌந்தர் விரிவாக எழுதியுள்ளார்.ஆனால் இவர்களோ மீண்டும் , மீண்டும் இளையராஜாவா .. ரகுமானா என்று அல்பத்தனமான விவாதத்திற்கு இழுக்கிறார்கள்.ரகுமானின் இசை cut & Paste எனது சிறு குழந்தைகளுக்கும் தெரியும் .
    தர்க்கரீதியாக எழுத தெரியாதவர்கள் இவர்கள்.இவர்களுக்கு ஒரே ஒரு புத்திமதி தான் நான் சொல்ல முடியும் .கட்டுரை புரியவில்லை என்றால் தயவு பண்ணி மீண்டும்,மீண்டும் வாசித்து புரிவதே.
    யானையை பார்த்த குருடர்கள்போல இவர்கள்.அந்தோ பரிதாபம். ஆங்கில மேதாவிகளுக்கு என் அனுதாபங்கள்.!!

    “மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடுவதை விட , மானமில்லாத ஒருவனுடன் போராடுவது மிகக் கடினம் “- தந்தை பெரியார்.

    • Vasanth says:
      13 years ago

      சவுந்தர் அவர்களின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. இது போல விரிவான இசை தொகுப்பை நான் எங்கும் படித்ததில்லை. பாராட்டுக்கள். கட்டுரைக்கு வந்துள்ள பின்னூட்டங்கள்தான் கவலை கொள்ள செய்கின்றன. இளையராஜாவை ஒருவர் விமர்சிக்கிறார். உடனே இன்னொருவர் அது எப்படி என்று ஆஜராகிறார். காலித்தனமான மூன்றாந்தர உரையாடல்களோடு தனி மனித தாக்குதல்கள் வருகின்றன.ஒருவர்  மற்றவரை சில்லறை என்று சொல்லப்போக மற்றவரோ உங்கள் ஆங்கிலமே தப்பு என்று சாட்டை வீசுகிறார். இது என்னடா கொடுமை என்று பார்த்தால் இளையராஜாவை விமர்சனம் செய்யும் எல்லோரையுமே ஒரே அளவில் திட்டி, இந்த பதிவின் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புகிறார்கள். சவுந்தர் அவர்களே காரிகனின் பின்நூடதிர்ற்கு பதில் சொல்லட்டும் அதை மீறி பின்னூட்டம் இடும் அன்பர்கள் நீங்கள் இதை செய்யாதீர்கள் இப்படி செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவது தேவை இல்லாதது. இளயராஜா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற மன நோயில் பீடிக்கப்பட்டுள ஒருவர் மட்டுமே இவ்வாறு பேச முடியும்..அமிர்தன் எழுதிய ஆங்கிலம் தப்பு என்றதும் அவர் ஆங்கில மேதாவி என்று ஜகா வாங்குவது செம காமடியா இருக்கு சார்.. எல்லோருமே ஒரே மாதிரியாவா யோசிப்பாங்க? இது கூட தெரியாம சில ஜன்மங்கள் இருக்கு..

  13. ramesh says:
    13 years ago

    aayiram malargalea malarungal…. kannan oru kai kulanthai…. poonthalir aada pon malar sooda….. pothi vacha maligai motu….. kaatril unthan geetham…… siru ponmani asaiyum athil therikum puthu isaiyum…. then paandi tamilea en singara kuyilea….. kanmaniyea kathal enbathu….chinna kannan alaikiran…. anjali anjali anjali… unnai kanamal nan ilai…. maligai motu manasa thotu…. en uyirea va en uyirea…. etc…… raja god of music…..

  14. Jagannaathan says:
    13 years ago

    உங்கள் பதிவு நன்றாக இருந்தது. நானும்  இளையராஜாவின் இசையை ரசிப்பவன்தான். நீங்கள் குறிப்பிட்டபடி இன்றைய இசை சத்தங்கள், புரியாத வார்த்தைகளுக்கு இடையே காணமல் போய்விட்டது. ஆனாலுமே எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நீங்கள் இளையராஜாவை அதிகமாக பாராட்டி (அதில் தவறில்லை என்றாலுமே) பிற இந்த கால இசை அமைப்பாளர்களை மட்டம் தட்டுகிறீர்கள். அது ஒரு விதத்தில் சரிதான் என்றாலுமே இளையராஜா வந்த பொழுது கூட அவரை சாவு மேளம் அடிக்கிற ஆள் என்று கேலி பேசி பலர் அவரை அங்கீகாரம் செய்யாமல் இருந்தார்கள். அவரின் இசையை ஆரம்பத்தில் இளைஞர்களே கேட்டார்கள். அந்த தலைமுறையே இப்போது அவரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுகிறது. நீங்கள் கூட அந்த தலைமுறையை சேர்ந்தவர்தான் என்று நினைக்கிறன். நமக்கு நாம் சிறிய வயதில் கேட்ட பாடல்கள் மீது ஒரு வித மோகம் உண்டாவது இயற்கையே. இந்த நாஸ்டால்ஜிக் உணர்வுக்காகவே நாம் பழைய பாடல்களை விரும்பி கேட்கிறோம். எனவே இப்போதைய இசையை நாம் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. எப்படி இளையராஜாவை காலி டப்பா என்றால் அவர் ரசிகர்களுக்கு கோவம் வருமோ அதே போல இந்த கால ரகுமானை காப்பி அண்டு பேஸ்டு  என்று சொன்னால் சிலர் அதை மறுப்பது நடக்ககூடியதே.இதை வைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாள் சில்லறை என்று சம்பம்தம் இல்லாமல் கோவப்படுவது நியாயம் இல்லை. என்னை பொறுத்தவரை காரிகன் (என்ன பெயரோ?) என்பவர் கூறிய கருத்துகள் அநாகரீகமாக தெரியவில்லை. அதற்கு தேவை இல்லாமல் பதில் சொன்ன அமிர்தன் என்பவர் அவரை சில்லறை என்று விமர்சித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி பிறரை சாடுவது முறை அல்ல.முடிந்தால் பதில் சொல்லலாம் இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்..

  15. குமார் says:
    13 years ago

    ஐ.நா. சபை: எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அடுத்தது ரகுமான் தான் கலாச்சாரத் தூதுவனாக அறிவிக்கப்படுவார்.இசை உருப்பட்டுவிடும்.இது செம்பு தூக்கிகளின் காலம்.அமெரிக்காவுக்கு ஜெய்கோ…ஜெய்கோ….ஜெய்கோ.

  16. காரிகன் says:
    13 years ago

                         மீண்டும் என்னைப்பற்றி பேச்சு அடிபடுவதால் இதை எழுத விழைகிறேன். நான் எங்கும் ரகுமானையும் இளையராஜாவையும்  ஒரே கோட்டில் வைத்து யார் பெரியவர் என்ற நீயா நானா விவாதத்திற்கு இந்த பதிவை இழுத்து வரவில்லை. இளையராஜாவின் இசைஞானம் ரகுமானுக்கு இருக்கிறதா என்ற கேள்வியை நான் எங்குமே எழுப்பவில்லை. இருவரையும் நான் சாதித்தவர்கள் என்கிற  ரீதியில்தான் பார்க்கிறேன். ரகுமானைபற்றி எழுதியதால் உடனே நான் அவரை எல்லோருக்கும் மேல வைத்துவிட்டதாக எண்ணிக்கொள்வது முட்டாள்தனமானது. எழுபதுகளின்  மத்தியில் உண்டான ஒரு மாற்றம் தமிழ் இசைக்கு இளையராஜாவை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் அங்கீகாரம் இல்லாத இளையராஜா பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனிக்காட்டு ராஜாவாக உலா வந்தார். இதை நான் இல்லை அப்படி நடக்கேவே இல்லை என்று அதிரடியாக மறுத்தால் அது தான் பொய். எப்படி இளையராஜா தமிழ் உள்ளங்களில் புகுந்தாரோ அதே போல தொன்னூறுகளில் ரகுமான் ஒரு புதிய மாற்றமாக வந்தார். இதை இல்லை என்று இளையராஜாவின் அபிமானிகள் தொண்டை கிழிய கத்தி கூச்சல் போடுகிறார்கள். நடந்ததை நான் குறிப்பிட்டால் அது எப்படி இப்படி எழுதலாம் என்று மீசையை முறுக்குவது முரண்பாடாக இருக்கிறது.
                             ராஜா சிந்து பைரவி க்காக தேசிய விருது வாங்கினால் அது அவரின்  சாதனை  என்று குதூகலிக்கும் அமிர்தன் வகையறாக்கள் ரோஜாவுக்காக ரகுமான் அதே தேசிய விருதை வாங்கியதை மட்டும் அது ஒரு புதிய இசை அமைப்பாளருக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு செய்தது என்று அரசியல் பேசுவது நியாயமா? இங்கே திரு சவுந்தர் கூட இப்படித்தான் ரகுமானை பற்றி விமர்சிக்கிறார். ரகுமானை ஒரு அமெரிக்க சி ஐ எ ஏஜென்ட் அளவுக்கு தாக்கி எழுதுகிறார். இல்லை இல்லை ரகுமானும் ” எதோ கொஞ்சம்” சாதித்தவர்தான் என்று சொல்ல முற்ப்பட்டால் கதவை அடைக்க ஒரு கூட்டம் தயாராக காத்திருக்கிறது. எம் எஸ் வி யை ஆராதிக்கும் ஒரு வகையினர் இளையராஜாவை ஒத்துக்கொள்வதே இல்லை. இதையே இளையராஜாவின் அபிமானிகள் ரகுமானுக்கு செய்கிறார்கள். இசை என்பது காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே வருவது இயற்கை.இதை புரிந்து கொண்டால் இப்படிபட்ட ஒப்பீடுகள் எழாது.
                            ரகுமானை ரீ மிக்ஸ் கலாச்சாரத்தை தமிழுக்கு கொண்டு வந்து சீரழித்தவர் என்று சொல்வது உண்மையில்லை.ரகுமான் 2004 இல் நியூ என்ற (கேடுகெட்ட)படத்தில் எம் எஸ் வி யை ரீ மிக்ஸ் செய்தார். அதற்கும் முன்பே 2003 இல் இளையராஜாவின் தவப்புதல்வர் யுவன் குறும்பு என்ற (கேவலமான) படத்தில் தன் தந்தையின் பாடலை ரீ மிக்ஸ் செய்து தமிழில் நல்ல பாடல்களை கற்பழிக்கும் வேலையை ஆரம்பித்து வைத்தார். இருப்பதை அப்படியே எழுதுவதை அபிமானம் என்று அர்த்தம் கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? 
       

    • ramesh says:
      13 years ago

      sindhu bairavi isai and roja isai…. ethu top ethu duppu????????

  17. ramesh says:
    13 years ago

    sd burman, hemant, ramanathan, kv mahadevan, msv, ilayaraja ivargalaivida rahman isaiyil saathithuvitara ena??? oscar tharum alavirku… rahmanu ku oscar ah comedy than ponga….

  18. s.amirthan says:
    13 years ago

    ” ராஜா சிந்து பைரவி க்காக தேசிய விருது வாங்கினால் அது அவரின் சாதனை என்று குதூகலிக்கும் அமிர்தன் வகையறாக்கள் ரோஜாவுக்காக ரகுமான் அதே தேசிய விருதை வாங்கியதை மட்டும் அது ஒரு புதிய இசை அமைப்பாளருக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு செய்தது என்று அரசியல் பேசுவது நியாயமா? இங்கே திரு சவுந்தர் கூட இப்படித்தான் ரகுமானை பற்றி விமர்சிக்கிறார். ரகுமானை ஒரு அமெரிக்க சி ஐ எ ஏஜென்ட் அளவுக்கு தாக்கி எழுதுகிறார்.”
    காரிகன் என்பவரின் இந்த பின்னூட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் ஒரு முறை இந்த நீண்ட கட்டுரையை வாசித்தேன்.

    “…..பாலச்சந்தரும் இணைந்து எடுத்த படமாகும். ரகுமானின் இசைக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு விருதுக்குத் தெரிவு செய்யப் பட்ட படங்களில் தேவர் மகன் என்ற படமும் முக்கியமானதாக இருந்தது என்றும் , இளையராஜாவின் இசை நன்றாக இருந்ததெனினும் , ஒரு புது இசையமைப்பாளருக்கு கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டதாக பின்னாளில் தேர்வுக் குழுவில் இருந்த இயக்குனர் பாலு மகேந்திரா சொல்லியிருக்கிறார்.” என்று தான் சௌந்தர் எழுதுகிறார்.ஏன் ஐயா காரிகன் கட்டுரையை அங்குமிங்கும் திருப்புகிறீர்கள்.

    • Arokia Raj says:
      13 years ago

      இதைத்த்தானே காரிகன் என்பவரும் சொல்லி உள்ளார். இதுல முரனா எதுவுமே இல்லையே. என்ன அமிர்தன் சார் என்னாச்சு உங்களுக்கு? இளையராஜா பாசம் கண்ணை மறைக்குது போல.

  19. sarnaath says:
    13 years ago

    முதலில் பாலு மகேந்திரா ஒரு இளையராஜா பக்தர். அவர் இதுவும் சொல்லுவார் இன்னமும் சொல்லுவார். தேசிய விருதுகளில் பல அரசியல் வேலைகள் நடப்பது நமெக்கெல்லாம் தெரிந்ததே. எதோ பாவப்பட்டு ரகுமானுக்கு விருதை குடுத்ததைபோல சொல்வது சரியல்ல. அப்படீன்னா சிந்து பைரவி விருதுக்கு பின்னாடியும் கண்டிப்பா எதோ ஒரு அரசியல் உள்குத்து நடந்திருக்கும். எப்படி சிவாஜியை விட்டுவிட்டு எம் ஜி ஆர் ருக்கு சிறந்த நடிகர் விருது கிடச்சுதோ அப்படி. 

  20. jagannaathan says:
    13 years ago

    ரோஜாவுக்கும் தேவர் மகனுக்கும் போட்டியா?  இரண்டு படங்களின் பாடல்களுமே குறை சொல்லமுடியாத அளவுக்கு இருந்தாலும் தேவர் மகனை விட ரோஜா பட பாடல்கள் இனிமையாகவும் முழுவதும் இளையராஜாவின் இசையிலிருந்து மாறுபட்டும் ஒலித்தன. fresh feeling உண்டானது ரோஜாவின் பாடல்களை கேட்ட உடனேயே. தேசிய விருது கிடைக்கும் முன்பே ரகுமான் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று சொல்வதே பொருத்தம். பட்டி தொட்டி எங்கும் ஒலித்த சின்ன சின்ன ஆசை பாடலை எல்லோருக்கும் பிடித்து விட்டது. இளையராஜாவுக்கு ஒரு சரியான மாற்று வந்தாச்சு என்று மக்கள் பேசிக்கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

  21. s.amirthan says:
    13 years ago

    இளையராஜாவின் இசை நல்ல இசை தான்…ஆனால்…பேர்வழிகளே

    ரகுமான் இசை டூப் இசையென்பது இன்றைய இளைஞர்களுக்கும் தெரியும்.உங்களுக்கும் தெரியும்.உங்கள் மயக்கம் எல்லாம் இந்த விருதுகளிலே தான்.இந்த விருதுகளில் உள்ள அரசியலும் உங்களுக்கு தெரியும். ரகுமானின் இசை தான் என்றென்றும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய இசையாக இன்றுவரை தமிழர்கள் மத்தியில் பேசப்படுகிறது.இதுவும் உங்களுக்குத் தெரியும் ! என்னதான் பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள், ரகுமானின் பாடல்களுக்கு விருதுகள் கொடுத்தாலும் போயும் போயும் இந்த பாடலுக்கா என்றுதான் பேசப்படுகிறது. ஒஸ்கார் விருது பெற்ற பாடலுக்கும் இதே கதி தான் நடந்தது,

    • saarnaath says:
      13 years ago

      பாவம்  இவருக்கு எதோ ஆசிடுச்சு..

    • Roopan says:
      13 years ago

      அப்பிடியா, எங்க பாப்பம் ஆத்கரத்தோட சொல்லும். இந்த தமிழ் பொறாமை பேசுபவர்களை மட்டும் இங்க ஆதாரமாக வைக்க வேண்டம். வட இந்தியனோ இல்ல வெளினாட்டவனோ சொல்லட்டும், அவனுக்கும் இந்த வெருதுகள்மேல் ஆசைதானெ, இலையராசாவுக்கும் மட்டுமா என்ன.

    • alex says:
      13 years ago

      இப்பிடி சொல்றதே உங்களுக்கு வேலையா போச்சு.. புதுசா வேற எதாவது சொல்லுங்கப்பா…ஆஸ்கார் வாங்கினதுக்கும் திட்டா? கொடுமையா இருக்கே.

  22. ramesh says:
    13 years ago

    ena elarum inga sanda potalum ilayaraja songs la etho oru attraction iruku athu enanu sola therila… oru vithamana veeriyam iruku…. athu rahman songs la ilayea… itharku ena solringa rahman fans??

  23. maran says:
    13 years ago

    தன்னைத் தானே இசை மேதை மாஸ்ரரோ, லண்டன் ராணிக்கு இசை பாடியவர், என்று புகழ் மாலை சூடிக்கொண்டு ஈனக் குரலில் சுருதியும் சேராமல் பாடும் கோமாளி இளையராஜா. இந்தக் கோமாளிக்கு கருணாநிதி போன்ற கோமாளிகள் ஆண்ட நாடுகளில் மட்டும் தான் இடம் கிடைக்கும்.

    • Sharva says:
      13 years ago

      அவரை கோம்மாளி என்று சொல்லும் நீர்தான் கோமாளி. அவ்ருடைய குரல் சரியில்லை என்பதில் தவறில்லை. அவருடைய இசையம்மைப்பு அற்புதம், அதற்காக ரகுமனை குறைவாக பார்ப்பது வேதனைக்குரியது. சிலருக்கு அவர் ஒரு முஸ்லீம் என்பதிலும் வருத்தம் இருக்கிறது, அதை நேரடியாக சொல்ல முடியாம தவிகிறார்கள்.

  24. s.amirthan says:
    13 years ago

    இப்போது தான் காரிகனின் உண்மை முகம் தெரிகிறது.வெவ்வேறு பெயர்களில் அவரது கருத்துகள் கக்கப்படுகிறது.இப்படித்தான் அவரது இசை பற்றிய “விமர்சனங்கள் ”
    வெவேறு தளங்களில் வெளிவருகின்றன.
    நவரசங்கள் என்பார்கள் தமிழில்.ரகுமானின் இசையில் ஏதாவது ஒரு ரசமாவ்து உண்டா.?குடிச்சிட்டு தான் என்ன செய்கிறேன் என்பது தெரியாதவர்களுக்கு அவரின் இசை நன்றாக இருக்கிறது என்பதை ஒத்துகொள்கிறேன்.
    காரிகன் ,உமக்கு ஏன் இந்த கொலைவெறி.கருணாநிதி ஆளாமல் ஒபாமா ஆள்வதா உமது விருப்பம். உம்முடைய முகத்தை நீரே ஒருமுரைகன்னாடியில் பாரும்.உம்மை பார்க்க வெள்ளைக்காரன் போல இருக்கும் சில வேளை!!!

    • Roopan says:
      13 years ago

      கரிகாலனசாடுறன் எண்டுட்டு திரும்பவும் ரகுமானுல கைய வைக்கிறீர்,நல்ல இசை கேதவெணுன்னா கிந்துஸ்தானி கெளுப்பா, சுமா இளயராசான்னு பினாத்தாம.

  25. காரிகன் says:
    13 years ago

    ஓஹோ உங்களுடைய முட்டாள்தனமான வாதத்துக்கு என்னைபோல இரண்டு மூன்று பேர் எதிர் குரல் எழுப்பினால் அதுவும் நானேவா? நல்லது அப்படியானால் இங்கே இளையராஜாவுக்கு விசில் ஊதும் பல பெயர்களில் வருவதும் திருவாளர் அமிர்தன் தானோ?மேலும் நான் இசை பற்றிய பதிவுகளில் அரசியல் பேசுபவன் கிடையாது.. நான் கருத்துக்களோடு மோத விரும்புவன்.. ஆட்களோடு அல்ல. வந்தனம்..

  26. Sharva says:
    13 years ago

    ராஜாவின் மெஜிக்

    சின்ன தாய் அவள்.. தளபதி

    யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோ டு … தளபதி

  27. குமார் says:
    13 years ago

    நன்றி Sharva ,

    அன்னக்கிளி உன்னதேடுதே
    கண்ணன் ஒரு கைக் குழந்தை
    சின்ன கண்ணன் அழைக்கிறான்
    சிந்து நதிக்கரை ஓரம்
    பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே
    வசந்த கால கோலங்கள்
    அந்த புரத்திலோருமஹராணி
    அந்திமழைபோழிகிறது
    அழகே அழகுஆயிரம் பாவலர்
    விழியில் விழுந்து இதயம் நோலைந்து
    ஆயிரம் தாமரை மொட்டுக்களே
    நானே நானா யாரோ தானா
    வாடி என் கப்பக்கிழங்கே
    இளமை என்னும் பூங் காற்று
    கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
    ஒரு வானவில்போலே
    விழியிலே மலந்தது
    பூவே இளைய பூவே
    ஏதோ மோகம் ஏதோ தாகம்
    என் கண்மணி உன் காதலி
    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
    மயிலே மயிலே உன் தோகை
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    முதன் முதலாக காதல் டூயட்
    வான் மேகங்களே வாழ்த்துங்கள்
    கீதம் சங்கீதம் நீதானே
    இதயம் போகுதே எனையே
    தம் தன தாம்தான் தாளம் வரும்
    கோடை காலகாற்றே
    பூந்தளிராட பொன் மலர் சூட
    வா வா வ்சசந்தமே
    வெள்ளைப் புறா ஒன்று
    ஒரு தங்க ரதத்தில்
    ஆகாய கங்கை
    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    சோலை குயிலே கலைக்கதிரே
    காதல் ஓவியம் கண்டேன் ……………….இது ஆரம்பம் மட்டும் தான் !!

  28. அபு says:
    13 years ago

    ரஹ்மானின் பாடல்களில் சிலவற்றைத் தவிர பலவற்றை ஒரு வயதிற்கு மேல் ரசிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

    • Sharva says:
      13 years ago

      One problem is that people refuse accept the realities of the changing world. Youngsters have access to a vast variety of music which was not the case when you were younger. AR produces music that will attract the you. They are the segment of the market that is willing to spend. Marketing is selling what the people want and creating that want. PU Chinnappah was ‘t popular with your generation, I am sure.

      • குமார் says:
        13 years ago

        ” சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
        சிந்தையிலே எழும் ஜீவ லயம் ”
        அதனால் தான் எம்.எஸ்.வி – இளையராஜா சலிக்காமல் ரசிக்கப்படுகிரார்கள் [ தலைமுறை தாண்டி } அந்த ஜீவ லயம் ரகுமானிடம் இல்லை என்பதை இன்றைய இளைஞர்களும் உணரத் தொடக்கி விட்டார்கள்.ரகுமான் நல்ல வியாபாரி.

        • Mustang says:
          13 years ago

          இப்பிடியே கனவுல காலத்த கடத்தி எல்லாத்தையும் கோட்டயவுட்டுட்மலையேறுங்கப்பா சாமியே சரணம் ஐயப்பா. ஈப்ப புரியிறது உங்களால ஏன் பணமே சம்பாதிக்க முடியாதுன்னு. ஏ ஆர்நீங்க ஒண்னுக்கும் கவலைபடத்தேவயில்ல, இவங்கைருக்கேக்க உங்களுக்கு ஜாலிதான்.

        • அபு says:
          13 years ago

          ரஹ்மானைப் பற்றி விமர்சிக்கையில் ஏனோ சிலர் வள்ளென்று எரிந்து விழுகிறார்கள். இந்தப் பதிவில் கூட இசையின் ராஜா இளையராஜா என்பதாக மட்டும் சொல்லப்படவில்லை. ஏனையோரையும் உதாரணப்படுத்தியே இருக்கிறது. இசையில் இளயராஜாவிற்கு அடுத்தபடியான பரிணாமம், உலகமயத்திற்கு ஏற்ப இசையை கொத்திக் கொண்டிருக்கும் ரகுமான் இல்லை என்பதுதான் விமர்சனம். ரகுமானும் சில நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் தான் மறுக்கவில்லை. இதற்காகவெல்லாம் ரகுமான் உச்சானிக் கொம்பில் வைத்து புகழ்வது என்பதெல்லாம் ஓவர். இசையில் அகத்துண்டுதலுக்கு வேறொருவர் வரலாம். அதுவரையில் தற்போதிருக்கும் இசையமைப்பாளர்களின் கொத்து பரோட்டாதான் நமது தலையெழுத்து

          • MustangGT says:
            13 years ago

            உமது தலையெழுத்தைநீர்தான் மாற்றணும்,நாங்களளல்ல. எங்களுக்கு அது நல்லாத்தான் இருக்கு.

          • குமார் says:
            13 years ago

            அபு ,
            ரகுமானின் ரசிகர்கள் கட்டுரையை ஒழுங்காக வாசிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.ரகுமான் மாத்திரமல்ல வித்யாசாகர் ,பரதவாஜ் ,யுவன் சங்கர் ராஜா ,எஸ்.எ .ராஜ்குமார்,ஹாரிஸ் ஜெய ராஜ் ,தேவா நல்லபாடல்களைத் தரவில்லையா? ரகுமானை விட நல்ல பாடல்களை இவர்கல்தந்திருக்கிரார்கள்.

  29. குமார் says:
    13 years ago

    நெஞ்சுக்குள்ளே இன்னாரேன்னு சொன்னா தெரியுமா – பொன்னுமணி –
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    காலநேர பூங் குயில் கவிதை பாட
    தென்றல் வந்து என்னை தொடும்
    கவிதை பாடு குயிலே குயிலே
    என்னைத் தாலாட்ட வருவாளா
    வீட்டுக்கு வீடுக்கு வாசல் படி வேணும்
    பச்ச மலை ப்போவு
    முத்துமணி மாலை என்னை தொட்டு தொட்டு
    தங்க நிலவுக்குள் நிலவொன்று
    நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்
    சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
    ராத்திரியில் பூத்திருக்கும்
    மணமாலையும் மஞ்சளும் சூடி
    போட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    பூ மாலையே தோல் சேர வா
    இளைய நிலா பொழிகிறதே
    தோகை இல மயில் ஆடி வருகுது
    வெள்ளி கொலுசு மணி வேலான
    நீதானே நாள் தோறும் நான் பாட
    சங்கீத மேகம் தென் சிந்தும் நேரம்
    நிலவு தூங்கும் நேரம்
    கண்ணே கலைமானே
    வண்ண நிலவே வைகைநதியே
    பூ பூக்கும் மாசம் தை மாசம்
    பழ முதிர் சோலை எனக்காகத் தான்
    நிலாக் காயும் நேரம் சரணம்

  30. nithi says:
    13 years ago

    திசை மாறிப் போய்க்கொண்டிருக்கும் பதிவாளர்கள் பார்வை.
    இதற்கு பாதை போட்ட இசை ஆய்வு  சௌந்தர் வாழ்க..
       உண்மையிலே ,தமிழ் சினிமா இசையில் இளையராஜா 
    என்ற தலைப்பில்தான் இந்த ஆறு பகுதியும் வந்திருக்க 
    வேண்டியது. முதல் பகுதியிலேயே தெரிந்து விடுகிறது,
    இது இளையராஜா புகழ் பாடும் அந்தாதி என்று.
        இளையராஜா சம்பந்தமான ஆய்வு என்று கூட தலைப்பிட்டிருக்கலாம்.
    அதற்காக ஏனைய தமிழ் இசை அமைப்பாளர்களின் (ஒரு சிலர் தவிர)
    இசை ,இசையே அல்ல என சொல்லப்படுகின்றது. இந்தியாவிலேயே 
    ஒரேயொரு முழுமையான composer  இளையராஜா எனவும் 
    கூறப்படுகின்றது.
        இவர் அடித்தால்  அகத் தூண்டுதல். மற்றவர்கள் அடித்தால்  கொப்பி.
    இதெல்லாம் ,எந்த வகை நியாயம்..
         எத்தனை புத்தகங்களைப் புரட்டி இருப்பீர்கள்.  இணையத்தில் எத்தனை 
    பக்கங்களை உருட்டி இருப்பீர்கள் .காதுகள் அலுக்க கேட்ட பாடல்கள் 
    தான் எத்தனை.
          அத்தனைக்கும் பயனாய் அமைந்த இந்த ஆறு பகுதிகளிலும் 
    நடுநிலைமையே இல்லையே?  இது எல்லாம் இசை பற்றிய ஆய்வு  தானா?
    புரியல..
           ரகுமானை அறிமுகப் படுத்தியதால்  மணிரத்தினம் ,பாலச்சந்தர் 
    கூட வார்த்தைகளால் வையப் படுகின்றனர் .
         ரகுமானின் இசையுடன் இணைந்த பின்பு தான் ,இந்திய தேசிய கீதமே 
    உரம் பெற்றது. மக்கள் மனதில் இடம் பெற்றது .
    இதைக் கூட  ரகுமான்   எங்கிருந்துதான்  copy  அடித்தார்.
    ஆய்வு நண்பர்கள் சொல்லுங்கையா?
           கடந்த வருட ஆஸ்கார் விழாவிலே ,ரகுமானும் பிரபல ஜேர்மன் இசையமைப்பாளரும் 
    இணைந்தே இசை வழங்கினர்.அந்த ஜேர்மன் இசையமைப்பாளர் ரகுமான் சம்பந்தமாக 
    சொல்லிய வார்த்தைகள் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
     உங்கள் பார்வையில்  ரகுமான் கொப்பி ஆக இருக்கலாம் ;
    தொப்பி அணிபவராக இருக்கலாம்.  ஆனால் ,இன்றைய இந்திய சினி இசையின்  
    no 1 ..கடந்த வருடம் வெளிவந்தது  rockstar .அந்த திரைப்படப்  பாடல்கள் 
    இன்று வரையில்  no 1.
    இந்த வருட  தீபாவளிக்கு வருகிறது ஷாருக்கான் படம்.இதன் பாடல்களும் 
    ரகுமானால் வெற்றி பெறும்..
      உங்களால் என்ன இயலும்   ? இப்படி ஏதாவது எழுதி  சுய இன்பம் 
    காண்பதை  தவிர……….

    • MustangGT says:
      13 years ago

      வயுறு எரியட்டும்

      • குமார் says:
        13 years ago

        காளான்களை பார்த்து பெருமையடையும் நபர்களை எண்ணி பர்தாபம் தான் பட முடியும்.

  31. murugan says:
    13 years ago

    அப்படியே இளையராஜா போட்ட எல்லா பாட்டு பேரையும் எழுதுங்க.. வெளங்கிரும்…

  32. bala says:
    13 years ago

    எத்தனை அவார்ட்டுகளும் இளையராஜாவின் பாடல்களுக்கு கீழே தான்.பாடல்கள் கொதிப்பை ஏற்றி விட்டது சபாஸ்.
    இந்த வரிசை இன்னும் இருக்கிறது.

  33. bala says:
    13 years ago

    ராஜாவை வீழ்த்த எய்யப்பட்ட அஸ்திரங்களில் எய்தவர்களே வியக்கும்படி இலக்கை அடைந்த ஒரு அஸ்திரம் தான் ‘ரஹ்மான்’ (ரஹ்மானின் Agentகள் அவரை எங்கு வேண்டுமோ அங்கு தூக்கி செல்கிறார்கள்.. ராஜா இதனை திறமையுடன் ஒண்ணுமில்லாத பயல்களின் அர்ச்சனையை கேட்டுக்கொண்டு வாழ நேர்ந்தது இசை உலகின் அவலம் தான்…

    • Sinnamani says:
      13 years ago

      யாருக்கு தொப்பி அளவோ அவர் போட்டுக்கிரவேண்டியது தான்.

      • sss says:
        13 years ago

        ராஜபக்சேவுக்கு ஏஜெண்டுகள் ஐ.நா அறிக்கை எழுதிக் கொடுத்தது போலவா சின்னமணி.

    • அபு says:
      13 years ago

      அவர்கள் அப்படி தூக்கிச் செல்வது உம்மையும் எம்மையும் சுரண்டத்தான்

  34. sasi says:
    13 years ago

    கட்டுரையில் ஒரேயொரு குறைமட்டுமே நான் காண்கிறேன் .
    இளையராஜாவை விட ,மற்றைய இசை அமைப்பாளர்களும்
    (அவரின் பின் வந்தவர்கள் )மனதை நெருடக்கூடிய ,நல்ல இதமான
    மெட்டுக்களோடு பாடல்களை தந்திருக்கிறார்கள் என்பதை, இக்கட்டுரை
    வெளிப்படையாக சொல்ல தயங்குகிறதே தவிர , மற்றவை அத்தனையும்
    உண்மை !! உண்மையே !!!! மிகவும் ஆழமான கட்டுரை .
    சசி

  35. bala says:
    13 years ago

    சசி நீங்கள் சொன்னா சரியா தானிருக்கும்.

  36. raja says:
    13 years ago

    http://youtu.be/bxfc_JM_zVs

  37. அப்பு says:
    11 years ago

    சவுந்தருக்கு நல்ல அறிவு இருப்பது தெரிகிறது. ஆனால், ஏனோ குறுகிய மனம் அமைந்துவிட்டது!   MSV அவ்ர்கள் கொடிகட்டிப் பறந்தபோது அறிமுகமான இளையராஜாவின் பாடல்களையும் பலர் குற்றம்தான் கூறினார்கள் – அநாவசியமாக நவீன இசைக்கருவிகளைப் புகுத்துகிறார்; ஆங்கிலப் பாடல்களைக் காப்பி அடிக்கிறார் என்று. இப்பாடல்கள் MSV இன் பாடல்களைப்போல் நிலைக்காது என்றார்கள்.

    இப்பொது அதே போல், இளையராஜாவுடையது சிறந்த இசையென்றும் பிறருடையது தாழ்ந்த இசையென்றும் வருந்துகின்றனர்!!

    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே!
    வருந்துவதை விட்டு இசையை ரசிப்போம்!

  38. ராஜா.மா says:
    11 years ago

     என் அருமைச்  சகோதரர்களே ! இசைக்கடல்  வற்றிவிட்டதோ  என்று நினைத்திருந்த  தருணத்தில், ” இல்லை இல்லை ,இங்கு இன்னும் ஆழமாகத் தூர்  எடுத்தால் இன்னும் நல்ல தண்ணீர்  கிடைக்கும் ” என்று எடுத்துக் காட்டியவர்தான் ” நம்முடைய இளையராஜா “. வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது இந்த “ஆஸ்கார்’ என்ற  கருத்தை  உடைத்தெறிந்து, ” நம்மாலும் வாங்க முடியும் “என்று நிருபித்து , வாங்கிய  கையோடு ” எல்லாப் புகழும் இறைவனுக்கே ” என்று தலை  வணங்கி உரைத்தவர் தான்  ” ஏ.ஆர். ரஹ்மான் “. மொத்தத்தில் நாம் தமிழர்கள்.இல்லை  இல்லை இந்தியர்கள் என்று பெருமைப் படுவோம் ! என்னைப்  பொறுத்தவரை  சாப்பிட்டு விட்டு, சமையலில்  குறை  காண்பது எளிது. ஆனால் …… சமைப்பது  மிகவும் கடினம்தான். நன்றி-:)

  39. tharsan says:
    11 years ago

    மேற்படி இசை ஆராய்ச்சி ஆர்வத்தைத் தந்தாலும் இளையராஜா துதியாக உள்ளது ஏமாற்றமளிக்கிறது. இசையை மட்டுமல்லாது எந்தவொரு விடயமும் அகத்தூண்டுதல் [ Inspiration ] இல்லாமல் செய்வது இயலாது. இசை படத்தில் இதற்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். பாா்த்திருந்தால் புாியும்.

  40. tharsan says:
    11 years ago

    ஆஸ்கா் விருதுபற்றி குறிப்பிட்ட பதிவிற்கு எனது பதில். ரகுமானுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரகுமான் குறிப்பிட்ட ஒரு விடயம் ” இங்க எல்லோரும் திறமையானவா்கள்தான், எனக்கு சந்தா்ப்பம் கிடைத்தபடியால் ஆஸ்கா் விருது கிடைத்தது. மற்றவா்களுக்கும் சந்தா்ப்பம் கிடைக்கும்பட்சத்தில் அவா்களுக்கும் கிடைத்திருக்கும், கிடைக்கும். தனக்கு கிடைத்தமையால் தான் உயா்ந்தவனுமல்ல மற்றவா்களுக்கு கிடைக்காமையால் அவா்கள் தாழ்ந்தவா்களுமல்ல.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...