மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழ்க் கட்சிகள் ஒரே அமைப்பாக சேர்ந்து இயங்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது அனைத்து கட்சிகளும் கருத்தொருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் அவசியமும் அவசரமுமாகிறது என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் மக்கள் நாளாந்தம் அழிக்கப்படுகிறார்கள், இராணுவமயமாக்கப்பட்ட இலங்கையில் முதலாளித்துவத்தின் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. ஐம்பதாயிரம் மக்களைச் மூன்று நாட்களுக்குள் சாகடித்துவிட்டு எஞ்சியவர்களை பிச்சைக் காரார்களாகவும், அடிமைகளாகவும் நடத்திவரும் இலங்கை அரசிற்கு எதிராக மூச்சுகூட விட்டிராத சித்தார்த்தன் எந்த அரசியல் தளத்தில் ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்?
15 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் தேசத்தின் நுளைவாசலில் நின்று கொண்டு சித்தார்த்தன் பேசுகின்ற ஒற்றுமை தமிழ் மக்க்களைச் சுரண்டுவதற்கான ஒற்றுமை.
மக்கள் ஒற்றுமைக்குத் தயாராவார்கள் அதன் முதல் வெளிப்பாடு சித்தார்த்தன் போன்றவர்களை அரசியலிலிருந்து அன்னியப்படுத்துவதற்கான போராட்டமாகத் தான் அமையுமுடியும்.
-சி.எஸ்.குமரன் – வவுனியா
பயங்கரவாத அரசை அண்டிப் பிழைப்பு நடத்தும் இவர்களால் தமிழின அழிப்பை பார்த்துக் கொண்டும் வி.புலிகளை விமர்சித்தக் கொண்டும் அரசைத் துதிபாடிக் கொண்டும் இருந்து விட்டு இப்போது தமிழ் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று பக்கப்பாட்டு பாடித் திரிகின்றார்கள். ஏன் கிடைக்கும் எலும்புத் துண்டங்கள் போதவில்லையா? வெள்ளை வான்கள் ஓடவில்லையா? ஒன்று சேர்ந்து இருக்கும் மிச்ச சொச்ச தமிழர் தலைக்கும் விலை பேசி கொலைவெறி அரசிற்கு அழிப்பதற்கு துணைபோவதன் மூலம் எலும்புத் துண்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவா? இந்த தறுதலைகள் இத்தனை காலம எங்கிருந்தார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இன வெறி கொலை வெறி அரசிற்கு அடிவருடிக் கொண்டு இருந்த போது அப்பாவி ஈழ மக்களை காக்க முடியாமல் போனது ஏன்? இவர்கள் ஒன்று சேர்வதனால் தமிழினம் காக்கப்படும், காப்பாற்றுவார்கள் என்று எண்ணினால் உலகில் அவன் போல் அரசியல் அறியாத முட்டாள் இருக்க முடியாது. யாழ்
வீர மக்களின் கல்லறைகள் உடைக்கப்படுகின்றன, விமான இறங்கு துறையாக்கப்படுள்ளது. அதுவும் இவர்கள் இருக்கும் வன்னியில். இதை தட்டிக் கேட்க துணிவில்லை. இதில் வீரம் எங்கை? இவர்கள் எந்த வீர மக்களை நினைவு கூறுகிறார்கள். ஒரத்தநாட்டில் போட்டவர்கலையா? இவர்கள் யாருடன் போரிட்டு வீர மரணமடைந்தார்கள். இவர்களில் இறந்த கூடுதலானவர்கள் உட்கொலையாலைஐயும் புலியிட்ட வாங்கியதும் போக எந்த சிங்கள இராணுவத்துடன் மோதி வீர மரணமடத்தவர்கள்? இவை உட்கொலையல்ல போட்டவைய படம் வைத்து நினைவு கூருவினமோ. இவையளால யாரோட சேந்து ஒற்றுமையா என்ன செய்ய ஏலும். ஒருகாலத்தில ஈராணுவ பயிற்ருவிக்கபட்ட 10 ,000 இருந்த இயக்கத்தில ஜனநாயகம் இல்லாமல் உட்பூசல், உட்கொலையல் கூடி, பிறகும் வன்னியில் கொலையல தொடர்ந்து யாழ் போக முடியாதவை தங்கடை இயக்கத்தையே ஒற்றுமையா வைத்திருக்க முடியாதவை. இப்ப கூடி என்ன செய்ய போயினம். அதுவும் டக்கிளஸ் தலைமையில. இப்ப இருக்கிற சூழ்நிலையில டக்கிளசை மீறி இவையளால என்ன செய்ய முடியும். இவை மக்களை நேசிக்கிரவை எண்டா முதல்ல உண்மையான ஜனநாயகத்தில தாங்கள் இதுவரை விட்ட பிழையல உணர்ந்து தாங்கள் போட்டவைய வரிசைபடுத்தி அவையளுக்கு வீர வணக்கம் செலுத்தட்டும். தாங்கள் போட்ட குடும்பதவர்களிட்டை பகிரங்க மன்னிப்பு கேட்கடும். இதவிட்டிட்டு வீர வணக்கம், அறிக்கை. இன்னும், டம்பின்க் இடி, மொட்டை மூர்த்தி, பாபுஜி, பாலமோட்டை சிவம் தாங்களும் மனுஷரிண்டு உலா வருரான்கள். கனடா ஈ பி காரரிண்டை கூட்டதில பாபிஜி பேசியதெண்டு நெட்டில இருந்தது. இவங்கள் போட்டவ அப்பாவிகள் எத்தனை. மக்கள் விடுதளைஎண்டு இயக்கத்தை நம்பி போன பெடியளை போட்ட சங்கிலி. ஐயர் எழுதுற மாதிரி யாரும் இவையிண்ட சரித்திரத்தை எழுதுங்கோ.
வீரருக்குத்தான் வீரமக்கள் எண்டு சொல்றது. முதல்ல விடுதலை எண்டு நம்பி போன எங்கடை இனத்து வீர இளைஜர்களின் கல்லறைகள் உடைக்கப்படுவதை நிர்ப்பாட்ட பாருங்கள். மற்றவை உலகமெல்லாம் தியாகிகள் தினமேண்டு கொண்டாடினம். இவைஎன்கை தியாகம் செய்தவை? இவை இந்தியாக்காரனுடன் சேர்ந்து போட்ட அப்பாவிகள் எந்த தியாகி லிஸ்டில வருகினம். இந்த வருஷம் உலகமெல்லாம் பெரிய எடுப்பு எடுக்கினம். புலிக்கு முதல்ல இவைதானே தேசிய இராணுவம் என்று கட்டாய ஆட்சேர்ப்பு செய்தவை. பிறகு இத்தியாவுக்கு கொள்ளையடிச்ச நகையளோட தப்பியோடினவை இப்ப புலிகளை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கு. இவையலேண்ட வண்டவாளங்கள எல்லாரும் விலாவாரியா எழுதுங்கோ.
(என் பாதுகாப்பு கருதி சொந்த பெயரில எழுதவில்லை)
புளொட் காரர் இவர்களின் நெட்டிலேயே இந்த செய்தி போட்டிருக்கிறார்கள். மன்னார், மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தற்போது புதிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மடு தேவாலயத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முகாம் அமைத்துள்ள படையினர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கவுதம புத்தரே நாடு முழுவதும் புத்தர் சிலை வைக்கவா இப்போ ஒற்றுமை தேவை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது தீர்க்க ஒற்றுமை தேவை என்று சொல்கிறீர்களே. இந்த கட்டாய புத்தர் சிலை வைக்கும் நிகழ்வுகளை கூட தட்டி கேட்க முடியாத நீங்களா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது தீர்க்க போகிறீர்கள். முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள். இலங்கை அரச ஆசியுடன் டக்லஸ் தலைமையில் விளுங்கப்போகிறார்கள். போதாதற்கு இந்தியாவிலும் இருந்து ஒருவர் இந்திய ஆசியுடன் வந்திருக்கிறார். முதலில் உங்கள் கட்சியை பலம் பொருந்திய பெயருக்கு ஏற்ற தமிழ் மக்களின் விடுதலைக்கான கழகமாக மாற்றுங்கள். பல அமைப்புகளை கொண்ட மக்கள் விடுதலை கழகத்தின் முன்னால் அங்கத்தவர்களை இனம் கண்டு சேருங்கள். ஜனநாயக கட்சி என்ற பெயருக்கு ஏற்ப்ப கட்சியில், அங்கத்தினரிடையே ஜனநாயகத்தை கொண்டு வாருங்கள்.