கிழக்கு மாகாணத்தில் 10.04.2010 அன்று மா வீரர் தினத்தை அரச துணைக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொண்டாடினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த தமது உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமது அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்தத் தினத்தை மாவீரர் நாளாக அனுஸ்டிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இதே தினத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை கிழக்கு லண்டனின் புதிய திசைகள் ஏற்பாடுசெய்த ஒன்று கூடலில் (11.04.2011)தமிழ்த் தலைமைகளின் குழுவாத நிலைப்பாட்டைக் கண்டித்த சிறீ என்பவர் நாடுகடந்தத தமிழீழம் பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகியவற்றை நோக்கி கேள்விகளைக் எழுப்பினார். இதன் போது இவ்விரு அமைப்புக்களும் அனைத்து இயக்கப் போராளிகளையும் அங்கீகரிப்பதோடு, அனைத்து இயக்க்கத் தலைவர்களையும் விடுதலைப் போராட்டத் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைக் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்ட இவ்விரு அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் தமது அமைப்புக்களோடு இக்கருத்தினை அமைப்பு ரீதியான முடிவாக முன்வைப்பதாகக் கூறினர்.
why don’t you remember Srilankan Soldiers ?
include them as well ?
what a mad idea
யார் தேசத் துரோகி? read more at
article published on 22.04.2008
https://thamilislam.wordpress.com/2008/04/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/
போராளிகளை அங்கீகரிக்க கோரினாரா? போராளி இயக்கங்களின் தலைவர்களை அங்கீகரிக்க கோரினாரா?
தெரிந்தவரை telo பாண்டியனும் இந்த கருத்தை அக்கூட்டத்தில் முன்வைத்ததாக தெரிகிறது. எல்லா இயக்க தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே மேடையில் வைத்து நிகழ்ச்சி நடாத்தினால் எல்லா மாற்று தரப்பினரும் ஆதரிப்பார்கள் என்றும் எல்லோரும் விடுதலைக்காக வந்த தலைவர்கள் என்றும் சொல்லப்பட்டதாகவே அறிகிறேன்.
சிறிசபாரத்தினத்தை Teloக்குள் எத்தனை பேருக்கு பிடிகும்?சுதன் ரமேஸ் ஆதரவாளர்களும் தாஸ் ஆதரவாளர்களும் மனோ மாஸ்ரரின் ஆதரவாளர்களும் சிறியை ஆதரிப்பார்களா?
உமாமகேசுவரனை Plot யை சேர்ந்த எத்தனை பேர் ஆதரிப்பார்கள்? மாணிக்கதாசனை ஆதரிப்பார்களா?
பத்மநாபாவை கட்டாயமாக பிள்ளை பிடிப்புக்கு பறிகொடுத்த புலி ஆதரவாளர்கள் ஆதரிப்பார்களா?
பிரபாகரனின் படத்தை வைக்க மாற்றுகருத்தாளர்கள் ஆதரிப்பார்களா?
பிள்ளையானின் கருணாவின் ஆதரவாளர்களின் , டக்ளசின் ஆதரவாளர்களின் படத்தை ஒரே மேடையில் வைக்க பிள்ளையானும் கருணாவும் தேவானந்தாவும் தான் ஆதரிப்பார்களா?
இளங்கோ அவர்களே உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை போலிருக்கிறது. மாற்று இயக்கப் போராளிகளை போராளிகளாக ஏற்றுக் கொள்வதன் மூலமே ஒற்றுமையை உருவாக்கலாம் என்று அங்கு இருந்த பிரிஎவ் நாடு கடந்த அரசு உறுப்பினரை நண்பர் சிறி கூறினார். அதன் அடையாளமாகவே இயக்கத் தலைவர்களின் (புலிகளால் கொல்லப்பட்ட) பெயர்களை கூறினார். எனக்கு சிறிசபாரத்தினம் மேல் மிகுந்த விமர்சனங்கள் உண்டு. மற்றைய இயக்கத் தலைவர்களின் மேலும் கூட. இங்கு மற்றைய இயக்கத் தலைவர்களை நாம் ஒன்றும் வழிபாடு செய்யவில்லை. ஒரு சிம்போலிக்காக மாற்று இயக்கத் தோழர்களை ஏற்றுக் கொள்வதாகவே இத்தலைவர்களை (இவர்களில் பலர் பிரபாகரன் போன்றேரே) சிறி முன் மொழிந்தார். தயவு செய்து தயவு ரெலோ பாண்டியன் என என்னை விளிக்காதீர்கள். நான் ரெலோவாக பிறக்கவில்லை. புலி வண்டியில் ஏறி இருந்தால் புலிப்பாண்டி. இங்கு சிறுபான்மை இனங்களின் விடுதலையே நோக்கமாகுமேயன்றி ரெலோ புலி புளொட் என்ற அடையாளங்கள் தேவையற்றது . குழுவாதங்களை ஏற்படுத்தக் கூடியது. தயவு செய்து கருப்பொருளை இவ்வாறு எழுதுவதன் மூலம் திசை திருப்ப வேண்டாம். சிறிய உதாரணமாக மட்டக்களப்பில் புலி- கருணா மோதலில் இரத்த ஆறு ஓடச் செய்த ரமேஸ் இலங்கை இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். இங்கு சித்திரவதை என்பதே கருப்பொருளாகுமேயன்றி ரமேசுக்காக நான் பரிதாபப்படவில்லை. பாண்டியன்.
எல்லாம் நன்மைக்கே.
////தமிழ்த் தலைமைகளின் குழுவாத நிலைப்பாட்டைக் கண்டித்த// குழுவாதத்தை இல்லாமல் செய்வதற்குரிய ஆரோக்யமான கருத்தாக,
ஆரம்பபப் புள்ளியாக இந்தக் கருத்தை பார்க்க வேண்டும். நம்மை ஒருங்கிணைய விடாமல் தடுப்பது இந்த குழுவாதமே.
ilango ! குழுவாதத்தை இல்லாமல் செய்வதற்குரிய வழிமுறைகளை முன் வையுங்களேன்.
இவ்வளவு கேள்விகள் உள்ள உங்களிடம் நிச்சயம் வழிமுறைகள் இருந்தேயாகும்.
குழுவாதம் எல்லா வாதங்களும் கதைக்க சோக்கத்தான் இருக்குது. நடைமுறைக்கு ஒத்துவருகுது இல்லையே.இனியொரு தமிழரங்கத்துடன் ஒரு புள்ளியில் இணையமுடியவில்லை.தமிழரங்ககாரர் ஒருவருடனும் ஒரு புள்ளியிலும் இணைய முடியவில்லை.தேனிக்காரருடன் எவரும் ஒருபுள்ளியில் இணைய விரும்பவில்லை.தேசக்காரருடன் தமிழரங்கமும் இனியொருவும் எங்கோ ஒரு புள்ளியில் முரண்பாடு.தேசத்துக்கு புதியதிசைகளை பிடிக்கல்ல. ராகவனுக்கு தேசத்தை பிடிக்கல்ல.தேசத்துக்கு சபா. நாவலனை பிடிக்கவில்ல.
சம்பந்தருக்கும் மாவைக்கும் தமிழரசு கட்சியை விட்டு வரமுடியவில்லை.சம்பந்தரும் சங்கரியும் ஒரு புள்ளியில் இணைய முடியவில்லை.மாவைக்கு சுரேசையும் செல்வத்தையும் பிடிக்கவில்லை.சுரேசுக்கு சிவிகேயையும் சிறிதரனையும் வித்தியின் பினாமியான சரவணபவனை பிடிக்கவில்லை.வித்திக்கு சிவிகேயை பிடிக்கவில்லை.வித்திக்கு சுரேசையும் ஜங்கரநேசனையும் பிடிக்கல்ல.சிவிகேக்கு சுரேசையும் ஜங்கரநேசனையும் வித்தியையும் பிடிக்கல்ல.செல்வத்துக்கு சுரேசையும் சம்பந்தரையும் மாவையையும் பிடிக்கல்ல.சங்கரிக்கு டக்ளசை பிடிக்கல்ல.சுரேசுக்கு சங்கரியை டக்ளசை வரதரை சந்திரகாசனை பிடிக்கல்ல.சிவாஜிலிங்கத்துக்கு செல்வத்தை சுரேசை பிடிக்கல்ல.சுரேசுக்கு சிவாஜியை சிறிகாந்தாவை பிடிக்கல்ல.சிறிகாந்தாவுக்கு செல்வத்தை பிடிக்கல்ல.சிற்றம்பலத்துக்கு Tணா யை பிடிக்கல்ல.
விக்கினேஸ்வரனுக்கு சம்பந்தரை பிடிக்கல்ல.வரதருக்கு, டக்ளசுக்கு Tணா யை பிடிக்கல்ல.
சிறிரெலோ உதயனுக்கு செல்வத்தை பிடிக்கல்ல. சித்தார்த்தனை சிறிடெலொவுக்கு பிடிக்கல்ல.மாணிக்கதாசன் ஆதரவாளர்களுக்கு சித்தார்த்தனை பிடிக்கல்ல.ஜெகநாதனுக்கு கூட்டமைப்பை பிடிக்கல்ல.சித்தார்த்தனுக்கு அண்மைக்காலமாக சம்பந்தரை பிடிச்சிருக்கு.ராமராஜ்யையும் பரந்தன் ராஜனையும் பலருக்கு பிடிக்கல்ல.
சுரேசுக்கு,வித்திக்கு, சிறிதரனுக்கு கேபியை பிடிக்கல்ல.கேபிக்கு கூட்டமைப்பை பிடிக்கல்ல. இவர்கள் எவரையும் அனைத்துலக பிரிவினருக்கு (TCC) க்கு பிடிக்கல்ல.இவை எல்லோருக்கும் நாடு கடந்த அரசை பிடிக்கல்ல.
எப்படி சார் இதை குழுவாதம் என்று குறுக்கலாம். இது ஒருவிதமான தமிழ் இனத்தில் ஊறிப்போன மனோவியல் வருத்தம்.இதை லேசாக குணமாக்க முடியாது. இதுக்கு உலகத்தில் மருந்து கிடையாது. எயிட்சுக்கு கூட மருந்து கண்டுபிடிச்ச்சு குணமாக்கிடலாம். தமிழனுக்கு பிடிச்சிருக்கும் நோய்ப்பட்ட வருத்தத்துக்கு மருந்து சிங்களவன் மட்டும் தான் கண்டுபிடித்துகொடுக்கவேண்டும்.
ilango ! //இது ஒருவிதமான தமிழ் இனத்தில் ஊறிப்போன மனோவியல் வருத்தம்.இதை லேசாக குணமாக்க //முடியாது. இதுக்கு உலகத்தில் மருந்து கிடையாது//
ஆகவே நாம் அழிந்து போவது தான் நியாயம் என்கிறீர்களா?
அல்லது உரிமை பற்றிப் பேசாது இருப்பதுவே ஒரே தீர்வு என்கிறீர்களா?
நாம் எல்லோரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைய முடியாது என்று கூறுகிறீர்களா?ஏன்? எது தடுக்கிறது? பல்வேறு பட்ட கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது இலக்கை நோக்கி போயே ஆக வேண்டிய தேவை நிறையவே எமக்கு உண்டு. வாருங்கள் ஆக்கபூர்வமான திருத்தங்கள்,கருத்துக்களுடன்.
ஆக மொத்தத்தில் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை. தனிப்பட்டநபர்களின் பிரச்சனைகளை “தமிழ்” பிரச்சனை என்று வர்ணித்து தமிழர்களின் அமைதியை கெடுத்தாகி விட்டது. ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ் பிரச்சனை என்று சொல்லி “மேலே” வர வழி தேடுகிறார்கள்.
போராளிகள் யார்? பொறுக்கிகள் யார்? என்பதையும் தலைவர்கள் யார்? தறுதலைகள் யார் என்பதையும் மக்களே தீர்மானிப்பர். கழிவுகள் எல்லாம் மொழிவுகள் சொன்னதாலேயே அழிவுகள் கண்டோம்.
எனக்கு கேட் கத்தான் தெரியும் எனும் தருமிகள் ந்மக்கு வ்ழிமுறகளா அது சுட்டுப் போட்டாலும் தெரியாதே
இளங்கோ அவர்களே! பிடிக்கவில்லை என்பதில் தான் குழுவாதாம் ஆரம்பிக்கிறது. பாண்டியனின் வழிமுறை பிரிந்து நிற்கும் தமிழ் மக்களிடையே நெகிழ்ச்சியை உண்டாக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை பலப் படுத்தும். தமிழ் மக்களை பார்த்து தமிழ் மக்களே துரோகிகள் எனச் சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. துரோகிகள் என்ற கூற்றில் மயங்கி, எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சு கலாச்சாரம் அடியோடு துடைக்கப் படவேண்டும் அன்றுதான் எமக்கு முழுவிடுதலை கிடைக்க வழி பிறக்கும். நீண்ட காலத்தின் பின் இனிஒருவில் விடயமுள்ள விமர்சனம் வருவது மிகவும் மகிழ்ச்சி.
இந்த குழுவாதம் என்ற தோற்றுவாய் இன்றுநேற்று தொடங்கப்பட்ட ஒன்றல்ல. இயக்கங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து 35 வருடமாக தொடர்ந்து இந்த பின்னூட்டம் வரைக்கும் சென்று கொண்டிருக்கிறது. ஒருவர் பார்வையில் குழுவாதம் என்பார். இன்னொருவர் பார்வையில் பிரிந்து நிற்கும் ஜனநாயகம் என்பார் கருத்து சுதந்திரம் என்றும் சொல்வார். ……………………………………………………………………………………………………………….அண்மையில் வழுதி என்பவர் இப்படி எழுதியிருந்தார்……
இத்தனை வருடங்களாகப் புலிகளுக்கு எதிராகப் புறணி பாடிக்கொண்டு காலத்தை ஓட்டியவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும் –
உங்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. உங்களுக்கான வாய்ப்பு இப்போது வந்திருக்கின்றது. உங்களது முன்னொரு காலத்துச் சாதனைகள் பற்றிப் புராதனக்கதைகள் பேசிக் கொண்டும், புலிகள் இல்லாதவிடத்து எல்லாவற்றையும் வெட்டிப் புடுங்கியிருப்பீர்கள் என ஆண்டுகளைக் கடத்திக்கொண்டும் இருந்த உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. புலிகள் இயக்கம் இப்போது இல்லை. நீங்கள் “சந்தர்ப்பவாதிகள்” அல்ல என்பதையும், நீங்கள் இனபக்தி உள்ளவர்களே தான் என்பதையும், நீங்கள் மக்கள் நேயம் மிக்கவர்களே தான் என்பதையும் நிரூபிக்க இதுவே சந்தர்ப்பம். இது உங்களுக்கான நேரம். தயவு செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
இனத்தின் பெரிய அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என்பது, ஒவ்வொரு தனி மனிதரினதும் உள்ளத் தெளிவிலிருந்து தான் தொடங்குகின்றது……………………………………………………………………………………………………………………………………………………………….
சுந்தரத்தை பார்த்து பிரபாகரன் குழுவாதம் செய்வதாக சொன்னார். பிரபாவை பார்த்து சுந்தரம் குழுவாதம் செய்வதாக சொன்னார். 80களில் சொன்ன அதே வேதவாக்குகளுடனேயே 2011 இலும் பொதுவேலைத்திட்டம் என புலத்தில் இருந்து REMUTE CONTROL மூலம் தாயகத்தின் உரிமை பற்றியும் றிமூட் கொன்ரோல் மூலம் தமிழீழம் அடைவது பற்றியும் ஒடுக்கப்பட்ட இனக்குழுமத்துடன் சேர்ந்து வேலை செய்வது பற்றியும் இப்போது தான் பேசுகிறீர்கள். புலி இருக்கும் போதே ஏன் இந்த ஒடுக்கப்பட்ட இனங்களுடன் சேர்ந்து வேலை செய்து ஓர் பலமான கட்டமைப்பை சமாந்தரமாக நாவலன் போன்றவர்களால் செய்யமுடியாமல் போனது.
மே18 காரர் இப்படிதான் பொதுவேலைத்திட்டம் முன்னேறிய பிரிவு என்று கூட்டம் வைத்து வியூகம் அமைத்தனர் கிட்டுவுக்கு குண்டு எறிந்த செய்திக்கு பின்னர் மே 18காரரை காணவில்லை.
இங்கு குழுவாதம் செல்லாக்காசு. தனி நபர்களின் விருப்பு வெறுப்பைதான் குழுவாதம் என்று சொல்லாடல் மூலம் நிறுவ முற்படுகிறோம்.
பிடிக்கல பிடிக்கல பிடிக்கல
பயன்களை மட்டும்
உருவி எடுத்து
உதடு பிரட்டும்
உக்கிரத் தனங்களும்,
வேரை மிதித்து
தன் வயிறு நிரப்பி
வேதாந்தம் பேசும்
குருவிச்சைக் குணங்களும்
காணும் வெளிகள் எங்கும்
மூச்சு நிரப்பி
வாழ்வு மாசுபட்டுக் கிடக்கின்றது.
எனவே,
கனப்புமிக்க நுகத்தடிகளை
உறவின் பெயர் சொல்லி
முதுகில் சுமத்திவிட்டு
கை கழுவி வெளியேறத் துடிக்கும்
என் தேசத்துக்குரியவர்களே!
வாருங்கள்,
எங்கள்
புன்னகைகளை அடகு வைத்து
நாங்கள் வாங்கத் துடிக்கும்
நிம்மதிகள் பற்றியும்
ஆறுதல்கள் பற்றியும்
மீண்டும் ஒருமுறை
குந்தியிருந்து
கருத்தாடிப் பார்ப்போம்.
இல்லையேல்
ஆண்டுகள் ஓடி
ஆயுளின் விளிம்பில்
வாழ்ந்த பாதைகளை
நாங்கள்
திரும்பிப் பார்க்கும் போது
முதுமைச் சுருக்கங்கள்
இளமையின் தெருக்களிலும்
அப்பியிருந்து தொடர்ந்திருப்பதை
அருவருப்புடன் ஆயினும்
ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
அன்புடன்
ilango!!!! சகோதரா இளங்கோவே !! குழம்பாதேயும்
, “””இங்கு குழுவாதம் செல்லாக்காசு. தனி நபர்களின் விருப்பு வெறுப்பைதான் குழுவாதம் என்று சொல்லாடல் மூலம் நிறுவ முற்படுகிறோம்.”” நீரும் நானும் இந்த தமிழ் இனத்தில் ஊறிப்போன மனோவியல் வருத்தம் உள்ளவர்கள் தான் என்பதை ஒத்துக்கொண்டு,அதனால் ஏற்பட்ட அழிவுகளை புரிந்து கொண்டு வருவோம் வெளியே. உம்மிடம் சமூக இன அக்கறை உள்ளது தெளிவாகவே தெரிகிறது. வாரும் கொட்டும் உம் மனக்கஷ்டங்களை, அதிருப்திகளை, ஏமாற்றங்களை. எனக்கு உம் தோளும் உமக்கு என் தோளும் உண்டு.
குழு வாதத்தை தூக்கி எறிவோம் இருவருமே. எல்லோருமே
மாவீரர்களின் மாவீரர் தினம்.
TRO பணியாளர்களை கொலை செய்து பாலியல் வல்லுறவு செய்த மாவீரர்களா?
திருமலையில் சிறுமி வர்சாவை கொலை செய்தவர்கள் மாவீரர்களா?
பிள்ளையான் குழுவால் கொல்லப்பட்ட கருணா ஆதரவாளர்களை நினைவு கூர்ந்து எப்போது கருணா மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்போகிறார்?
பாண்டியனுக்கும்,
வெருகலில் கொல்லப்பட்டவர்களில் தனியே கருணா அணியினர் மட்டும் கொல்லப்படவில்லை. அவர்களுடன் சண்டையிட்ட புலிகளும் தான் கொல்லப்பட்டனர். வெருகலில் கருணா அணியினர் கொல்லப்படும் போது வெறும் கையுடன் நிற்கவில்லை.அவர்களும் ஆயுதங்களுடன் தான் போரிட்டார்கள். வென்றது பிரபாகரனின் அணி. தோற்றதும் சேதமடைந்ததும் கருணா அணி. இன்று பிரபாகரன் அணியில்லாததால் தோற்றவர்கள் மாவீரர் தினம் கொண்டாட முடிகிறது. வழமையில் வென்றவர்கள் தான் கொண்டாடுபவர்கள். மே 18 இதை மாற்றிவிட்டது.
எவரும் மக்களிற்கு தாங்கள் நல்லவர்கள் என்று நிரூனபிக்க தேவை இல்லை , மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் .