தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் கொள்கை தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த அந்த அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் கலைஞர்.தமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இன்று இனப் படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். அதை தக்க வைக்கும் வகையில் எதிர்காலத்தில் தமிழினப் பாதுகாப்பிற்கு அவர்கள் கோரும் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?
அரசியல் வியாதிகளே தயவு செய்து ஈழத்தமிழரின் கண்ணீரில் துன்பத்தில் உங்கள் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற முயலாதீர்கள். முள்ளி வாய்க்காலில் ஈழத்தமிழன் அழிந்ததுடன் தமிழகத்து அரசில் வாதிகளின் உளரல்களை இனம் கண்டு விட்டான். இனியாவது ஒதுங்குங்கள். உங்களால் முடியாது. ஏனேனில் நீஙகள் அனைவரும் அரசியல் கோமாளிகள். யாழ்
People in Northeast are not worrying or believing these Jokers