தமிழீழ விடுதலைப் புலிகளின் மகிளிர் அணியின் தலைவியாகச் செயற்பட்டவரான தமிழினி மகிந்த ராஜபக்ச கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிடப்போவதாக தெரியவருகிறது. தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.
சர்வதேச கிரிமினலும் இலங்கை அரச உளவாளியும் முன்னை நாள் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளருமான கே.பி அல்லது குமரன் பத்மநாதன் மகிந்த பாசிசத்தின் வடக்குத் தேர்தல் வெற்றிக்கு உழைத்துவருகிறார். தமக்கு நெருக்கமான முன்னை நாள் புலி உறுப்பினர்களை தேசிய முகமூடி அணிவித்து தேர்தலில் களமிறக்கும் திருட்டுத்தனத்தை மேற்கொண்டுவருகிறார்.
தன வாழ்வை போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெண் அவர்.அவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும்.