யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல ஒரே இரவில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்று அரசாங்கம் அறிவித்தது. காலத்துக்கேற்றவாறு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை எட்டவேண்டும் என்பதில் அரசாங்கம் கரிசனையுடன் இருக்கின்றது. தமிழருக்கான தீர்வு ஏனையவர்களை பாதித்துவிடக்கூடாது.
எனவே தமிழருக்கும் நாட்டிற்கும் பொருத்தமான அரசியல் தீர்வினையே ஏற்படுத்தவேண்டும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை பதில் அமைச்சரும் அமைச்சரவை பதில் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
இனி மேல் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு காரணம் தேட வேண்டியிருக்கிறது என்பதைப் பூடகமாகச் சொல்கிறார்,அவ்வளவு தான்!இனி மேலும் இந்தப் பருப்பெல்லாம் வேகாது சாரே!உலகம் அம்மணமாக்கி விடும்!!!!!