இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரானகுழுவினரே கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின்தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இக்குழுதொடர்பில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில்வாசுதேவ நாணயக்கார என்ன செய்யபோகின்றார் என்பதை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ளவிரும்புகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இவ்விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ் மாவட்ட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் தாக்குதல்நடத்தப்படவே இல்லை என்று முதலில் சொன்னார்கள். பின்னர் இந்த சிறுசம்பவத்தைபயன்படுத்தி, நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்றுகூட்டமைப்பினர் மீதே குற்றம் சொன்னார்கள். பின்னர் இது அமைச்சரவை பாதுகாப்புபிரிவிற்கும், இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற அடிதடி என்று சொன்னார்கள். தற்சமயம்அமைச்சர் வாசுதேவ இது இராணுவத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழுவின் வேலையெனகண்டுபிடித்து சொல்கிறார். அத்துடன் புலிகளின் தலைவர் பிராபகரனின் தயாரின் தகனகிரியைகள்நடைபெற்ற இடத்தில் நாய்களை சுட்டு வீசியவர்களும் இவர்களே என்றும் கூறியுள்ளார். இவை இலங்கைஇராணுவத்திற்கு எதிரான மிகவும் பாரதூரமான தகவல்களாகும்.
இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்குஅப்பால் சென்று அமைச்சர் இந்த இரகசிய குழு தொடர்பில் என்ன செய்யப்போகின்றார் என்பதைதமிழ் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றார்கள். தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறைசெலுத்திவரும் சர்வதேச சமூகமும் நிச்சயமாக இதுதொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்குவிரும்புகின்றதாக எனக்கு தெரியவந்துள்ளது.
தற்போதைய தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவுதுறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஒரு காலத்தில் தமிழ் மக்களுக்காக பெருங்குரலில்பேசிவந்தவராகும். அவரது கூற்றுப்படி இராணுவத்தின் இந்த இரகசிய குழுவின் இத்தகையசெயற்பாடுகள் இன நல்லுறவிற்கு ஊறுவிளைவிப்பவையாகும். இதை அவரே ஊடகங்களில் கூறுகின்றார்.
இவ்விவகாரம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவநாணயக்காரவின் செயற்பாடு, ஊடக அறிக்கைகளுக்கு அப்பால் செல்லவேண்டும் என்பது அவரதுநீண்டகால நண்பர் என்ற முறையில் எனது வேண்டுகோளாகும்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளர்ப்புபிராணிகள்,இடதுசாரியம் பேசி,தமிழ்த்தேசியத்தை சின்னாபின்னமாக்கியது மட்டுமல்ல,அரசியலமைப்பையும் மாற்றி,இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கூலிகளாக தமிழர்களைக் காட்டி,சீன ரசிய கூட்டில் குளிர் காய்கிறார்கள்.எதிரிகளை அடையாளம் கண்ட தமிழ்த் தேசியம்,நண்பர்களாக நடித்தவர்களே,’நாசமறுப்பான்கள்’ என்று அடையாளம் காணத் தவறி விட்டார்கள்.இதுதான் மனோ கணேசனின் கூக்குரல்.