இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் இந்திய பிராந்திய இராணுவப் பாதுகாப்பு நலன்களுக்கு அமையவே கைச்சாத்திடப்பட்டது. அந்தச் சட்டத்தில் இலங்கை பேரினவாத அரச நலன்களுக்கு அமைவான தமிழர் உரிமைகள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. இனப்படுகொலை ஆட்சி அதனைக் கூட வழங்க மறுக்கிறது.
கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது என்று இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இத னையே வலியுறுத்துகிறது.
இந்த நிலையில் அரசின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ஸ போன்றோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 19 அரச உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் 12 உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இதிலும் அரசே பெரும்பான்மை வகிக்கிறது.
இவ்வாறான ஒரு குழுவில் அரசின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதில் சாத்தியம் இல்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே சம்பந்தனுக்கு தேவைப்படுவது இந்திய நலன்களே தவிர தமிழ்ப் பேசும் மகளின் நலன்கள் அல்ல.
த.தே.கூட்டணி என்றும் தமிழர் பிரச்சனைகளை இந்திய வல்லூறுகளின் நலன் சார்ந்தே நோக்குகின்றது. ஒன்றுமில்லாத 13 இருந்தால என்ன இல்லாவிட்டால் என்ன? இவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அன்றும் இன்றும் தாளம் போட்டுக் கொணடிருக்கின்றார்கள்.
எமது மறைமுக பிராந்திய எதிரி இந்தியா,இந்திய அரசமைப்பில், அதன் கொள்கையில் தேசிய இனங்கள் ,அவற்றின் சுயநிர்ணய உரிமை பற்றிய நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வரும் வரை, எவ்வாறு, எப்போது மாற்றம் வரும் என்ற கேள்விகளிற்கு அப்பால், எமது தேசிய இனம்,அதன் தலைமையான கூட்டமைப்பு இந்தியாவின் நலன்களை மீறி எதுவிதத்திலும் தமிழ் பேசும் மக்களின் நலனை(??) மட்டும் முன்னிறுத்தி எது வித தளத்திலும் நகர விடாது ,முடியாதென்பது அனைவரிற்கும் புரிந்த ஓன்று.
எமது உடனடி, நேரடி எதிரி
இலங்கை அரசுடன், மறைமுக பிராந்திய எதிரி இந்திய அரசின் நலனிற்காக பேரம் பேசுவதற்கு ஆக மட்டும் இந்திய அரசால் உருவாக்கப்பட்டதே எமது ஆயுத போராட்டமாகும். இந்த ஆயுத பலம் மக்கள் விரோதமானதா,மக்களை அடக்குகிறதா என்பதை மீறி இந்தியாவின் நலனுடன் இணங்கியிருத்தலிட்காக “மட்டுமே” உருவாக்கப்பட்டதுமாகும்.
இதில் எமது ஆயுத போராட்ட வழி முறையில்,தலைமையில் , மற்றும் இன்னோரன்னவற்றில் தவறு இருந்திருந்தாலும் இந்தியாவின் நலனிற்கு இணங்கி இருந்திருந்தால் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் 13th +/- இற்கு 25 வயசாயிருக்கும்.அதாவது இந்திய நலன் இலங்கையில் உறுதியாக காலூன்றி 25 வருடங்கள் ஆகியிருக்கும் .
எமது உடனடி,நேரடி எதிரியை வெல்ல மறைமுக எதிரியின் பக்கம் நாம் சாய்வதால் என்ன பலன்?
நாம் சாய்ந்த பின் மறைமுக எதிரி இந்தியாவை எப்படி ,எப்போது வெல்வது?
இல்லை,
மறைமுக எதிரியின் பக்கம் சாயாமல் எப்படி ,எப்போது உடனடி,நேரடி எதிரியை வெல்வது?
போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
சூழவர எதிரிகள் தான் தெரிகிறது.நண்பர்கள் எமது மக்களே அயலிலுள்ள மக்களே ,அதிலிருந்து வரும் முற்போக்கு சக்திகளே,எமது நண்பர்கள்.
13 வது திருத்த சட்டத்திட்கும். ரி ன் எ . குறூப்புக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா உங்கள் கருத்துக்களைப் இதய சுதியுடன் பதிவு செய்யுங்கள் அந்த 13 வது திருத்த சட்ட தேசிய மாவிரர்களை இலங்கையில் வடக்கு கிழக்குபகுதியில் எரு லோறீயிலும் கோப்பிரட்டி லொறீகழிலும் ஏத்தி சுட்டுகொன்ரவர்கள் யார் ….17000த்திற்கும் மேல்பட்ட தமிழ்தேசியபடைஜை. பத்தாக்குரைக்கு இந்தியாவிள் பற்மநாபவையும் விடவில்லை முதலை கண்ணீர் வடிக்குது கள்ளகூட்டம் …எனக்கு ஒருசந்தேகம் மகேந்தா தீர்வு எட்ட நிநைத்தாளூம் ரின் எ குழப்பும் காரணம் அவர்கழின் ஆலோசகர்கள் யார் என்பது உங்களூக்கு தெரியும் தீர்வுவரும் வந்துதாந்தீரும் ரி ன் எ குழப்பப்பார்க்கும் கவணம்……..மக்கள் விழிப்புநர்வை ஏற்படுந்த்துங்கள் …..