தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் சிங்களமயப்படுத்தல் குறித்த கொள்கைகளை ஆளும் கட்சி பிரச்சாரம் செய்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், அதனை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அநேக சந்தர்ப்பங்களில் தமிழர்களிடம் இருந்துபறிக்கப்படும் காணிகள் பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சாதாரண செய்தியாக படிப்பவர்களுக்கு தோன்றலாம் ஆனால் இதன் தாக்கம் பல முள்ளிவாய்க்கால்களைவிட மோசமானது.