Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழர்களின் இனவெறி இது தான் தமிழ் வீரமா ? : இக்பால் செல்வன்

இனியொரு... by இனியொரு...
09/06/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கைத் தமிழர்களின் எதிர்க்காலம் எந்த திசையை நோக்கிப் போகப் போகின்றது என்பதை யாரும் அறியவில்லை. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகின்றார்கள். ஏனெனில் முள்ளில் சேலை சிக்கியுள்ளது, அவசரப்பட்டால் கிழிவது சேலை அல்லவா.

ஆனால் ஈழத் தமிழர்களை வைத்தே அரசியல் செய்து வரும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு வேறு பிழைப்பே இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். பெரிய முதலைகளான திமுக, அதிமுக போன்றவைகளாலேயே ஈழத் தமிழர்களுக்கு ஒன்றையும் கிழிக்க முடியவில்லை. இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம் என்றார் ஜெயராம் ஜெயலலிதா ஆனால் அது சாத்தியமற்றது என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். அதே போல ஈழத்தமிழர் நலன்களுக்காக மூன்று மணிநேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து சாதனைப் படைத்தார் முத்துவேல் தகஷ்ணாமூர்த்தி கருணாநிதி.

அவை தான் பழையக் கதை என்றாகிவிட்டது. கடைசி வரை தமிழ்நாட்டுத் தமிழர்களால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வு வாங்கிக் கொடுக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டோம். அண்மையக் காலமாக செத்துப் போன டெசோவை தூக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றப் பார்த்தார்கள். அதுவும் பலிக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த முதல்வர் நாற்காலிக்கு குறி வைத்திருக்கும் சீமான், அவரை உசுபேற்றிவிடும் வைக்கோ முதலானோர்கள் சும்மா இருந்தால் என்னவாகும். மகிந்த ராஜபக்ஷேவின் இந்திய வருகையைத் தடுக்க வக்கில்லாதவர்கள், தமது வீரத்தை அப்பாவி சிங்கள மக்கள் மீதுக் காட்டியுள்ளார்கள். சிங்கள இனவாத அரசுக்கு பூரண உதவிகளை செய்த இந்திய நடுவண் அரசினை எதிர்க்கத் துணிவில்லாத வாய்ச்சவடல் பேசுவோர் அவ்வப்போது நோஞ்சான்களை தாக்கி தமது வீரத்தை நிரூபிக்கின்றார்கள்.

இதே வகையில் வேளாங்கண்ணி, பூண்டி திருத்தலங்களுக்கு யாத்திரை வந்த அப்பாவி சிங்கள மக்கள் 184 – பேர் மீது தமது வீரத்தைக் காட்டியுள்ளார்கள். அவர்களில் பலர் இலங்கையின் ரோமன் கத்தோலிக்க மீனவ மக்கள். ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறி பின்னர் சிங்கள மக்களாகவே மாறிவிட்ட தமிழர்கள் தான் என்பதைக் கூட நாம் மறந்துவிட்டோம். அவர்களில் பலர் முழு சிங்களவர்கள் கூட இல்லை, சரளமாக தமிழை வீடுகளில் பேசக்கூடிய தமிழர்களே. பலர் தமிழ் நன்கு தெரிந்த சிங்களவர்கள்.

அவர்கள் இலங்கையிலேயே பௌத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழும் விளிம்பு நிலை மனிதர்கள். மீன்பிடி தொழில் போன்ற இயல்பான தொழில் செய்யும் உழைப்பாளர்கள். அவர்களின் அதிகப் பட்ச யாத்திரை தமிழ்நாடும், இந்தியாவும் தான். அதனைவிட்டு ரோமுக்கு போகும் அளவுக்கு வசதிப் படைத்தவர்கள் இல்லை. இப்படிப்பட்ட எளிமையான மனிதர்கள் மீது தமது இனவெறிக் கோபத்தைக் காட்டுவதன் மூலம், சிங்கள பௌத்த இனவெறியாளருக்கும், இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

அவர்களுக்கு முறையான பாதுகாப்புக் கொடுக்காமல் தமிழக அரசும் உடனேயே அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது. இது எவ்வளவு பெரிய அநாகரிக செயல் தெரியுமா ? நாய் கடிக்கின்றது என்பதால் திருப்பிக் கடிப்போம் என்ற மன நிலை. தமது வீரத்தை தம்மை விட வலியவர்கள் மீதுக் காட்டினால் ஆபத்து என்பதறிந்து, தம்மைவிட வலியமையற்ற மக்கள் மீது காட்டுகின்றனர் இந்த தமிழ் தேசியவாதிகள்.

இலங்கையை எதிர்ப்பது என்றால் தூதரகத்தினை எதிர்க்கலாமே ! அல்லது மஹிந்த ராஜபக்க்ஷே இந்தியா வரும் போது நேருக்கு நேராக சென்று எதிர்க்கலாமே. அதை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்கள் மீது தமது கோரமுகத்தைக் காட்டுவது வேதனை தருகின்றது. இவர்களின் இந்த செயலால் ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்களும் இப்படியானவர்கள் தான், வெறிப்பிடித்தவர்கள் என்பதாகவே உலக ஊடகங்கள் சித்தரிக்கும் அல்லவா.

நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, மதிமுக போன்றவை தமிழ்நாட்டு மக்களிடம் ஆதரவு பெற இப்படியான ஈனச் செயல்களை செய்கின்றனர். இதனால் ஈழத் தமிழர்களுக்கு துளியேனும் நன்மை கிடைக்குமா சொல்லுங்கள் ?

நாளை இதே போல இனவெறியை சிங்கள அமைப்புக்களும் இலங்கையில் காட்டலாம். அதன் பின் விளைவுகள் மிக மிக ஆபத்தாய் அமையும். ஏற்கனவே நொந்து நூலாய் போன ஈழத்தமிழர்களுக்கு இது மேன்மேலும் வேதனையை மட்டும் தரவல்லது. அத்தோடு சிங்களப் பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையையும் இதுப் போன்ற சம்பவங்கள் பாதிப்படையச் செய்யும் அல்லவா.

இந்த கொசுறுக் கட்சிகளின் அரசியல் போதைக்கு ஊறுகாயாக இருப்பது அப்பாவி மக்கள் மட்டுமே. இவர்களின் எதிர்ப்பார்ப்பு எல்லாம் ஒன்று தமிழ்நாட்டு மக்களில் சிலரை இனவெறியூட்டி அவர்களின் வாக்குக்களைப் பெறுவது. இப்படியான அடாவடித்தனங்களை செய்து அதன் மூலம் புலம்பெயர் தமிழர்களிடம் நல்ல பெயர் எடுத்து அவர்களிடம் இருந்து காணிக்கைகள் பெறுவது. அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நல்ல பெயர் வாங்குவதன் மூலம் தமிழ்நாட்டுத் திரைப்படங்களை நல்ல விலைக்கு விற்றுக் காசாக்குவது. அவ்வளவு தான் ! உண்மையில் வன்னிப் பகுதிகளில் வறுமையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி தமிழர்களுக்கு இச்செயலால் ஒருவேளை கஞ்சியாவது கிடைக்குமா சொல்லுங்கள் !

இறுதியாக வள்ளுவரின் வாக்கினை இங்குப் பகிர்ந்துவிட்டுப் போகின்றேன்.
செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.
தன் கோபம் தன்னைவிட வலியார் மேல் உண்டானால் அது தனக்கே தீதாகும்; தன்னைவிட எளியவர் மேல் உண்டாயின் அதனைவிட தீமையுடையது வேறில்லை.

http://www.kodangi.com/2012/09/tamil-fascists-attacks-innocent-sinhala-tamil-pilgrims.html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் தேசத்துரோகிகள்

Comments 11

  1. சின்ன சசி says:
    14 years ago

    குறிப்பிட்ட அளவு ஈழத்தமிழரிடம் கூடியளவு செல்வாக்கு பெற்ற சீமான்,வைகோ… போன்ற வகையறாக்களை வலுக்கட்டாயமாக அசிங்கபடுத்த இந்திய மத்திய அரசும்,மாநில அரசும் திட்டமிட்டு செய்த காயடிப்புதான் இது.(அப்பாவிகள் மீதான தாக்குதலினால் அசிங்கப்பட்டது ஈழ ஆதரவுக்கும்பல்)

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    That is really true. Sri Lankan Tamils will look after themselves. The Elections for the Eastern Provincial Council is very hot and spicy here now. Northern Provincial Council will start functioning next year. Wimal Weerawansa is saying the right thing.

  3. rachinn says:
    14 years ago

    good one!!!

  4. கிறுக்கன் says:
    14 years ago

    இது இன வெறியா என்பதற்க்கப்பால், இலங்கை இந்தியாவிற்க்கிடையே இருக்கும் நெருக்கமான ராஜிய உறவில் கசப்பினை உண்டுபண்ண உதவி புரியுமோ தெரியவில்லை?? இந்திய நடுவண் அரசுக்கு தமிழகத்தால் அழுத்தம் பிரயோகிக்க முடியாதிருக்கும் போது (இங்கு நான் தமிழக அரசோ, அரசியல் வாதிகளால் என்று ௬றவரவில்லை ) இப்படியான விடயங்கள் சலசலப்பை உண்டுபண்ணலாம். ஒரு காலத்தில் ஜே வி பி இந்தியாவுக்கு எதிராக என்ன மாதிரியான கோசங்களை முன்வைத்ததோ அதே மாதிரி இனியும் இன்னும் சிங்கள இனவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக கோசங்களை தீவிரமாக முன்வைக்க உந்த வேண்டும்… ஆக இந்திய இலங்கைக்கிடையில் இருக்கும் சுமுகமான உறவு எமக்கு எந்த விதமான நன்மையையும் தர போவதில்லை.

  5. S.Anpu says:
    14 years ago

    தமிழனை புதிதா என்ன அழிக்க முடியும்? இதெல்லாம் சிங்களவனை சப்போட் பண்ணும் கும்பல் அவனுக்கு கால் கழுவி குடித்தால் தான் வாழலாம் எண்டு சொல்லும்

    • mojo says:
      14 years ago

       உங்களுக்கு தெரியாது போல 

      பத்தாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி முடிவில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமுற்ற சிங்கள கும்பல் மலையக தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேர்கொண்டுள்ளனர். தமிழர் மீது தாக்குதல் நடாத்தி இந்தியா மீதான ஆத்திரத்தை தெரிவித்துள்ளனர் 

  6. mojo says:
    14 years ago

    தொப்பிள்கொடி உறவாக யாத்திரைக்கு வந்த தமிழனையே தமிழன் அடித்தான்  தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தமிழர்கள் அவர்கள் கூறுவதை கேளுங்கள்

    http://www.youtube.com/watch?v=uvt_PscgN6c&feature=player_embedded  

  7. Veeran says:
    14 years ago

    னீரலவே ஆகுமாம்நீராம்பல் அதுபோலவே புலிகலின் ஆதரவாளர்களின் தகுதியும்

  8. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mojo did you see the way Ealaventhan pronouce Umbilical Cord in Sakthi Television

  9. thamizhan says:
    13 years ago

    சிங்களவனுக்கு ” இனவெறி” இருக்கலாம். முஸ்லீம்களுக்கு “இனவெறி” இருக்கலாம். மராட்டிகளுக்கு “இனவெறி” இருக்கலாம். கேரளத்தான், கர்னாடகத்தான் இப்படி எல்லா இனக்களுக்கும் இனவெறி இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு மட்டும்தான் இனவெறி இருக்க கூடாது. மதவெறி இருக்க கூடாது. பிறகு எப்படி நம் தமிழ் இனம் வாழும் , வழரும். தூ…இத வேற தமிழன் என் கிற , தமிழனே இல்லாத நீங்கள் சொல்வதை நாம் தமிழர் கேட் கணும் ஆக்கும்!

  10. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Thamizhan all of us have to live as decent law abiding citizens. Did you see and hear the media spokesman Dr. Keheliya Rambukwela say that you have a gun in your hand and you can hurt somebody. That is serious buisiness.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...