இனியொருவின் அடிப்படைக் கருத்துக்களோடு முரண்பாடுகளைக் கொண்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தும் நோக்கோடும் விவாத நோக்கோடும் ‘முரண்’ பகுதியில் வெளியிடப்படும். இப் பகுதியில் வெளியாகும் செய்திகள் அவற்றின் முழுமையான பின்புலத்தோடு கூடியவை அல்ல.
சென்ற வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2013 ல் கனடா நாட்டின் ரீ.வீ. ஐ எனும் தொலைக்காட்சீயில் வெளியான வெளிச்சம் நிகழ்ச்சியை பார்த்த பலர் வேதனை கலந்த வலியுடன் என்னை அழைத்து, இந்நிகழ்ச்சியின் சாரத்தையும், த0மது கருத்தையும் எடுத்துக் கூறினார்கள. அவர்களின் ஆதங்கத்தையும் எம் இனத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும், அக்கறையையும் கண்டு பெருமைப்பட்டேன். தமிழரின் வலியை என்னொரு தமிழரால்தானே உணரமுடியும்.
முஸ்லீம் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இழைத்த தவறுக்கு யார் மன்னிப்புக் கேட்பது? தமிழர் கூட்டமைப்பா, நாடுகடந்த தமிழீழ அர்சா, தேசிய மக்கள் அவையா அல்லது தமிழ் மக்களா? என்ற நிகழ்ச்சியே இந்த சச்சைகுரிய விடயமாகும். இது காலம் கடந்தத கேள்வி மாத்திரமல்ல, இன்றைய சூழலில் தேவையற்ற விடயமுமாகும். இதற்கான பதிலை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தெளிவாகவும், விளக்கமாகவும் பகிரங்கமாக பலமுறை கூறியுள்ளார். இது உலகம் அறிந்த உண்மை.
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய அரசியல் ஞானிகளான நாடுகடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பொன் பாலராஜனுக்கும், கனடாத் தமிழர் பேரவையின் துசியந்தனுக்கும் தேசத்தின் குரல் தந்த பதில் தெரியாதா? அல்லது தேவையின் நிமிர்த்தம் தெரியாததுபோல் நடிக்கிறார்களா? அல்லது எமக்கு குழப்பத்தை உண்டுபண்ண இவர்கள் செய்யும் சதியா?
.காரணம் இல்லாமல் யாரும் காரியம் நடப்ப்தில்லை. இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? என்பதை முதலில் நாம் புரிய வேண்டும். இவர்கள் முள்ளிவாக்காலுக்கு முன்னபும் பின்பும் எம்மவர்க்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய்ந்து அறிவதே மேல். முள்ளிவாக்காலுக்கு முன் தன்மானத் தமிழரையும், சிங்கள அரசுகன் சேர்ந்து செயற்பட்ட சில தமிழரையும் கண்டோம்; ஆனால்; இன்று, சிங்கள் அரசுக்கு விலைபோன தமிழரையும் கொண்ட இனமாகிவிட்டோமே.
சனிக்கிழமை ஒக்ரோபர் 27, 2012 வெளியான ஆங்கிலப் பத்திரிகையான காடியனில் நாடுகடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பாலராஜனுக்கும், அதன் நிதி அமைச்சர் செல்வநாதனுக்கும் சிங்கள அரசாங்கத்துடன் இரகசியத் தொடர்பு உண்டு என்று வெளியான செய்தி கண்டு திகைத்த பலரில் நானும் ஒருவன். இச்செய்தியை பிரதமர் உருத்திராவுக்கும் அனுப்பி, இது பொய்யானால், எமது மறுப்பை அப்பத்திரிகைக்கு தெருவிப்பது அவசியம் என்றேன்.. இதுவரை, தமது மறுப்பை இவர்கள் தெருவிக்காது மௌனம் சாதிப்பது ஏன்?
காடியன் செய்தியை பார்க்க, கீழே உள்ள தொடர்பை அழுத்தவும்..
http://www.srilankaguardian.org/2012/10/kps-secret-diaspora-tamil-contacts.html
மானமொன்றே வாழ்வென வாழ்ந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஐ இருபத்தைந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும், மெச்சும் விதத்தில், உலகெலாம் நடாத்திவரும் அந்தத் தர்மவான்களிடமிருந்து அதன் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதும், அது சரிவராதபோது, ரொறன்ரோவிலும், லண்டனிலும் மாவீரர் பணிமனை என்ற பெயரில் சென்ற ஆண்டு பிரிவினையை உருவாக்கி எம்மவரை வேதனைக்குள் ஆழ்த்தியது யாரப்பா? தமிழீழ அரசின் பிரதமரால் தத்தெடுக்கப்பட்ட, அவரின் செல்லப் பிள்ளைகளான பொன் பாலா குழுவினரே.
வாத்தைப்போல் சத்தமிட்டு, வாத்துமாதிரி நடந்தால் அது வாத்தேதான் என்பார்களே; அப்படியானால், எம்மவர்க்கு மாறாக செயற்படுபவர்களை, எம் இனத்தின் முன்னேஎற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை, சிங்களா அரசுடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பவர்களை எப்படிஅழைப்ப்பதபா?
சாவிலும் மண்டியிடாத எம் சந்ததியே! இவர்கள் தன்மானத் தமிழர்களா அல்ல்து சிங்களவருடன் சேர்ந்து செயற்படும் தமிழர்களா அல்லது சிங்களவருக்கு விலைபோனதமிழர்களா? என்பதை எனக்குக் கூறுங்கள்; இவர்கள நோக்கத்தை நான் சொல்லுகிறேன்.
கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca