தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல்செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச குற்றம் சுமத்தினார்.
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் புதன்கிழமை பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்னையை, பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் தீர்ப்பார் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.டில்லியில் இருந்து நேற்று காலை, சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இக் கருத்தைத் தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் பெரு முதலாளிகள் நவீன மீன்பிடி முறைகளால் கடல்வளங்களைக் கொள்ளையிடுவதால் ஏழை மீனவர்கள் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பலியாகின்றனர். இலங்கையின் வடக்கு மீனவர்கள் வாழ்வாதரத்தை இழக்கின்றனர். ராஜபக்ச போன்ற இந்திய அரசால் பலப்படுத்தப்பட்ட இனக் கொலையாளிகள் இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்டுகின்றனர். தொழிலாளர்களை உயிர்ப்பலி கொடுக்கும் பல்தேசிய முதலைகளும், இனவாதிகளும், இந்திய அரசும் இந்தச் சிக்கலைத் தீர்த்துவைக்கப் போவதில்லை.
There is an Indian Cnsulate in Jaffna, now. We must atop blaming President Rajapakse alone about the war. You all must see what Wimal Weerawansa got to say. It is General Sarath Fonseka that did not want to stop the war. Soldier do not want to stop the momentum. He is no politician. For the Rajapakse family it is 1952 – Mother Language Day – Dhaka, Bangladesh.
இப்படியான முரண்பாடுகளை அரசுகள் ஒருபோதும் தீர்த்து வைக்காது,அவர்களாலே திட்டமிட்டு உருவாக்கப்படும் அல்லது உருவான பிரச்சனைகளை தக்கவைத்துகொண்டிருக்கும்.
தங்களின் கொள்ளைகள் அம்பலமாகும்போது பிள்ளையார் பால் குடிப்பார்,முல்லைபெரியாரில் புவி அதிர்வு வரும்,காவேரியில் தண்ணீர் வராது,கிறிஸ்பூதம் ஊருக்குள் வரும்,பள்ளிவாசலை பிக்குகள் தாக்குவர்,சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வாற மாதிரியிருக்கும்……. இப்படி பல பலவை நீங்கள் ஆய்ந்து அறியலாம்
This fisherman’s problem is very special to this region of the world. It should be handled that way..