ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக சுமார் 800க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள், இன்று வெறும் 200 படகுகளில் மட்டுமே சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த கடற்படையினர், கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் 4 படகுகளைப் பிடித்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை சேதப்படுத்தியதுடன், விலையுயர்ந்த மீன்களையும் பறித்துச் சென்றனர்.
4 படகுகளில் இருந்த மீன்களை பறித்துக் கொண்ட இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாக்குநீரிணையில் மீன்களை விட அரசியல்தான் அதிகமாக கிடைக்கிறது.
நாளை பாக்குநீரிணை மீன்பிடி தடை வலயமாகவும் மாற வாய்ப்புண்டு..!
இந்தியா பிரஜ்சனை வலர்ப்பதட்காகவே பிரஜ்சனை தீர்க்கமல் இருக்கு
There is a Consulate General of India at Jaffna to report any matters like this.