கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். மீன்களையும், மீன்பிடி கருவிகளையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த கருவி, மீன்களையும் இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் இது குறித்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினர் தாக்குதலில் காயம் அடைந்த 4 மீனவர்களும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.