இலங்கை கடலில் மீன் பிடிக்கும் உரிமையை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இலங்கை முதலீட்டுக் கழகத்தின் சார்பில் ராஜபக்சே அரசின் அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் தனிஉரிமை கடற்பகுதியில் சீன நிறுவனத்தின் கப்பல்கள், இலங்கை கொடியுடன் மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.
இதற்கு முந்தைய உடன்படிக்கையின்படி இலங்கையின் தனிஉரிமை கடற்பகுதியில் மீன் பிடிக்க வந்த இரண்டு சீனக் கப்பல்களை இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி விட்டது. இப்போது பேரம் சரியாக படிந்து, இலங்கை கொடியுடன் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்படும் மீனில் 30% நேரடியாகவும், 60% இலங்கை-சீன கூட்டு நிறுவனம் மூலமாகவும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது 90% சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 60% மீன்களை ஏற்றுமதி செய்யவுள்ள இலங்கை நிறுவனம் அமைச்சரின் பினாமிக்கு சொந்தமானது.
10% மீன்கள் கிலோ $1 என்ற விலையில் இலங்கை மீன்துறை கழகத்துக்கு விற்கப்படும். இலங்கை மீன்துறை கழகத்துக்கு எந்த வகையான மீன்கள் கொடுக்கப்படும் என்று வரையறுக்கப்படவில்லை. அதாவது கிடைப்பதில் பலனற்ற அல்லது விலை குறைந்த சிறிய மீன் வகைகளை மீன் துறை வாரியத்திடம் கொடுத்து விட்டு மதிப்பு அதிகமானவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம்.
சீன நிறுவனம் தொடக்கத்தில் 150 அடி நீளமுள்ள நான்கு மீன்பிடி கப்பல்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் 40 கப்பல்கள் வரை பயன்படுத்தப்படும். இதன் மூலம் முதல் ஆண்டில் 1.1 அமெரிக்க டாலர்கள் (இலங்கை ரூபாய் 130 கோடி) வருமானம் கிடைக்கும். ஆரம்பத்தில் பயன்படுத்தப்படவுள்ள நான்கு படகுகளும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை எதிர் நோக்கி இலங்கைக்கு தெற்கே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
“அன்னிய கப்பல்களை தனிஉரிமை பொருளாதார மண்டலத்தில்தான் மீன்பிடிக்க அனுமதித்திருக்கிறோம். இலங்கை கடல்
பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை” என்கிறார் முதலீட்டு வாரிய அதிகாரி. ஆனால், “இலங்கையில் பதிவு செய்யப்பட்டு இலங்கை கொடி பொருத்தப்பட்ட கப்பல்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க எந்தத் தடையும் இல்லை” என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, சீன நிறுவனம் தனது கப்பல்களில் இலங்கைக் கொடியை பொருத்திக் கொண்டால் இலங்கையின் கடல் வளத்தை கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை ராஜபக்சே அரசு வழங்கியிருக்கிறது.
இப்போது தனிஉரிமை பொருளாதார பகுதியில் 42% மீன்கள் ஐரோப்பிய நாடுகளால் அறுவடை செய்யபடுவதாகவும், அதில் 60% இலங்கைக்கு வந்தாலும் அது லாபம்தான் என்றும் அரசு அதிகாரி கூறியிருக்கிறார். சீன மீன்பிடி கப்பல்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ள டிக்கோவிடா மீன்பிடி துறைமுகத்திற்கு தமது பிடிப்பை கொண்டு வரும் என்றும், அங்கு ஏற்றுமதிக்கான பதப்படுத்தல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் கொழும்பிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் டிக்கோவிடா மீன்பிடி துறைமுகத்தை ஜனாதிபதி ராஜபக்சே கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இலங்கை மீனவர்களுக்கு உள்கட்டுமான வசதியை மேம்படுத்துவதற்காக நெதர்லாந்து அரசு அளித்த குறைந்த வட்டியிலான 43 மில்லியன் யூரோ கடனில் நெதர்லாந்தின் பிஏஎம் நிறுவனம் இந்த நவீன துறைமுகத்தை உருவாக்கியிருந்தது. இலங்கையின் முன்னேற்றத்துக்காக அன்னிய நாடுகள் செய்யும் நிதி உதவிகள் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நலன்களுக்காகவே பயன்படுகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளுடனான போர் நடந்த காலத்திலும் பின்னரும் கூட கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்களை சுடுவது, அவர்களது வலைகளை அறுப்பது, படகுகளை சேதப்படுத்துவது என்று இலங்கை கடற்படையினர் அடாவடி செய்து வந்தனர். போராளிகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்திலிருந்து எந்த உதவியும் புலிகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று பயமுறுத்துவதற்காகவும் இலங்கை கடற்படை இத்தகைய நடவடிக்கைகளை செய்து வந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் இருந்தது.
ஈழப் போர் முடிந்த பிறகு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால் இலங்கை மீனவர்களின்
வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற பெயரில் இலங்கை அரசு தாக்குதல்களை தொடர்ந்தது. தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து சுடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தமிழக மீனவர்களை தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, இறுதியில் கைது செய்து இலங்கைக்கு கொண்டு போவது என இலங்கைப் படையினர் தொடர்ந்து வருகின்றனர். சிங்கள இனவெறி ராஜபக்சே அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும், பொதுக்கருத்தும் உருவாகிவருவது தோற்றுவிக்கும் வெறுப்பிலும் கூட இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
அதே நேரம் இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் இத்தகைய தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது. அவர்களும் அதை நம்பியிருக்கக் கூடும்.
இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தம் நாட்டு மீனவர்களின் நலனுக்காக இல்லை என்பதை சீன ஒப்பந்தம் அம்பலப்படுத்தியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மீன் பிடிப்பதற்கு வசதி செய்து தருவதற்குத்தான் என்பதையும் இந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இலங்கையின் கடற்பகுதியிலும் அதைச் சுற்றிய பன்னாட்டு கடற்பகுதியிலும் மீன் பிடிக்கும் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதுதான் இலங்கை அரசின் நோக்கம். அத்தகைய ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் தரகு முதலாளிகளும் லாபம் ஈட்டுகின்றனர். மீன்பிடி துறைமுகத்தை இயக்குவது அன்னிய நிறுவனம், மீன் பிடிப்பது அன்னிய நிறுவனம், மீனை நுகரப் போவது அன்னிய நாடு, அழியவிருப்பது இலங்கை மீனவர்களின் தொழில். இனி சீனக்கப்பல்கள் மட்டுமல்ல இந்தியக் கப்பல்களுக்கும் கூட அத்தகைய அனுமதி தரப்படலாம்.
இலங்கை அரசால் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் மட்டுமின்றி இலங்கையைச் சேர்ந்த சிங்கள, ஈழத் தமிழ் மீனவர்களும்தான் என்பதை அவர்களும் உணர்வார்கள். அதன் முன்னறிவிப்பாக இலங்கை அரசு சீன நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக போராடப் போவதாக இலங்கையின் மீன்பிடி சங்கங்கள் அறிவித்திருக்கின்றனர்.
நன்றி : வினவு
சீனா உதவியுடன் சிங்கள மீனவர்களுக்கு தொழில்(அம்பாந்தோட்ட தொழிற்பேட்டை,அரச ஊழியர்கள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படை) மாற்றம்,இடமாற்றம்(வட கிழக்கு) செய்து கொடுக்கப்பட்டு விட்டது.சீன மீன்பிடி என்பது இந்தியாவிற்கெதிரான வலை வீச்சு.சீன ஊடுவலால் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் மட்டுமே.அதை ‘இலங்கை மீனவர்கள்’ என விளிக்கும் இடதுசாரிய நோக்கு,சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பங்களிப்பே.
கிட்லர், முசோலினி, புஷ், தட்சர், சதாம் குசைன், ராஜபக்ச .. இப்படி நிளும் வலது சாரிகளின் பட்டியலை செய்வினை தேடித் திரிகிறது… எதுக்கு விடுதலை வாங்கித் தர…. எங்க போய் முட்ட…. இவர்களை வளர்த்து விட்டது தேசியத் தலை ஈழத்து வடிவேலு தம்பி …. பிரபாகரன்… முள்ளி வாய்க்காலில் ஒரு லட்சம் அப்பாவிகளை மகிந்த கும்பலுக்கு மண்மூட்டையாக் கொடுத்துப் போட்டு கதைக்கிறதப் பாருங்கோவன்…….. நாசமாப் போவார்…
முள்ளிவாய்காலில் கோமணத்தோடு தேசியத் தலை கிடந்தததுக்கும் இடது சாரிகள் தான் காரணமோ…? .
அறிவிருந்தா கொஞ்சம் யோசித்து பாரு மனித ஜென்மமே.
இந்த மீன் பிடித்தல் விவகாரம் தொடர்பாக தவறான புரிதல் பலரிடம் உண்டு .
பெரிய கப்பல்களை வைத்து மீன் பிடிக்கும் “முதலைகளாலேயே” பிரச்சனை .
இவர்கள் அப்பாவி ஏழை மீனவனின் பெயரால் பின்னால் ஒழிந்து கொண்டு அவன் பெயரால் நாடகம் ஆடும் அயோக்கியர்கள்.
கைது செய்யப்படும் மீனவன் அந்த கப்பலில் ஒரு கூலி மட்டுமே!!
அதனால் தான் அவன் சுட்டுக் கொல்லப்படும் பொழுது ஆழும் வர்க்கம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது .
நேரம் போதாமையால் இத்துடன் நிறுத்துகின்றேன். இது பற்றி தெளிவான புரிதல் இந்திய தமிழக மீனவர்களுக்கும் எமது ஈழத்து மீனவர்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும் . டயானா பற்றி பேசுவதை விடுத்து இவர்கள் உரிமை பிரச்சனை தொடர்பாக சூரியா பொன்ற மன நோயாளிகள் பேசலாமே!!!
சூரியா வா சொல்லு உன் கழுதறுப்பு இடியட் கருத்தை. சொந்தப் பெயரில் துணிவிருந்தால் வா? பெரிய படிச்சவன் எண்டிராய் பட்டத்தையும் , தொப்பியையும் போட்டுக் கொண்டு வா !!! அம்மண்மாய் கோமணம் இல்லாமல் ஓடுவாய் !!சூரியா வா சொல்லு உன் கழுதறுப்பு இடியட் கருத்தை.
Aha this son of a gun has a real problem now. He wants me to comment on his fisheries expertise too. What do you want to know ? Trawl fishing, gillnet fishing, long line fishing or beach seine ? Tell me first Mr Know All. Morons like you are a shame for the rest of us Tamils. You want to have a debate here with your foul mouth ? Don’t know why Inioru even bothers to post the claptrap you write here.
////////////
Suriya
Posted on 08/21/2013 at 02:40
Aha this son of a gun has a real problem now. He wants me to comment on his fisheries expertise too. What do you want to know ? …………..////// —————————————————
silly do some objective analysis of the above topic in the post with your Royal brain of “eat-sleep-remarry”— remember here we are not talking about diffrent fishing methods. but the issue faced by fishermen- uderstand that idiot .
//////////He wants me to comment on his fisheries expertise too. What do you want to know ? Trawl fishing, gillnet fishing, long line fishing or beach seine ? Tell me first Mr Know —-Surya /////here we are not talking about diffrent fishing methods. but the issue faced by fishermen- uderstand that idiot ———silly do some objective analysis of the above topic in the post with your Royal brain of “eat-sleep-remarry”—
Three repetitive responses for one comment ? Are you OK bud ? My only only objective is to stir you up and drive you bananas. Keep up your seemingly useless work.
சி.சந்திரமெளலிசன்
Posted on 08/21/2013 at 09:02
//////////He wants me to comment on his fisheries expertise too. What do you want to know ? Trawl fishing, gillnet fishing, long line fishing or beach seine ? Tell me first Mr Know —-Surya /////here we are not talking about diffrent fishing methods. but the issue faced by fishermen- uderstand that idiot ———silly do some objective analysis of the above topic in the post with your Royal brain of “eat-sleep-remarry”—
Your comment is awaiting moderation.
//////Suriya
Posted on 08/21/2013 at 12:4 My only only objective is to stir you up and drive you bananas. Keep up your seemingly useless work.////
there you go you are caught now . I was actually talking about this with another person who is observing you . OUR CONCLUSION WAS WITH YOUR ROYAL BRAIN “EAT-SLEEP-REMARRY” THERE IS NO REASON YOU PRESENCE EXCEPT FOR SPYING .
mate idiots when they talk bit longer they do give out the hidden truth . read pragmatic analysis of criminal mind . criminal mind gives out truth in various ways distabilaisation or making them over confident or constant verbal threats . idiot .
as you said you came to this web with intent of string up people. a big thank you .
YOU BOSS WILL NOW WORRY ABOUT YOUR PERFORMANCE .
You’ve run out of substance and started using vitriol and bad language. My responses are about you only don’t drag others into this to cover your madness.
சி.சந்திரமெளலிசன்
Posted on 08/21/2013 at 15:14
//////Suriya
Posted on 08/21/2013 at 12:4 My only only objective is to stir ////
I did not see you contributing anything usefull !!! prove me wrong !!! you are here to devert
Only for you, there are other good contributors here.
The stance of the Sri Lanka Navy had to cool down. It may cause long time problems.