இலங்கை போதைப்பொருள் மாபியாவும் ரஜபக்ச குடும்பத்தின் நண்பருமான துமிந்த சில்வா நடுத்தெருவில் தனது அரசியல் எதிரியைக் கொன்று போட்டுவிட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொழும்பு திரும்பி அங்கு ராஜபக்சவோடு வலம்வரும் அதே வேளை தமிழ் நாட்டைச் சேர்ந்த அப்பாவிகளுகுத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் போதைப்பொருள் வலையமைப்பிற்கும் மகிந்த ராஜபக்ச கிரிமினல் அரசிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்ப்படுகின்றன. கசீனோ சூதாட்ட விடுதிகளும் போதைப் பொருளும் இராணுவ வியாபாரமும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முழுவதும் காணப்படுகின்றது. துமிந்த சில்வாவிற்காக கொழும்பின் சிறிய போதைப்பொருள் மாபியாக்க்களைக் கொலைசெய்த மகிந்த கும்பல் துமிந்தவைப் பலப்படுத்தியது.
தம்மிக்க பெரேரா என்பவர் நடத்தும் ஐந்து கசீனோக்களும், ஐந்து நடசத்திர விடுதிகளும், இராணுவ உதவி நிறுவனங்களும், உல்லாசப் பயணத்துறையும் போதைப் பொருள் விற்பனையோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவின. தம்மிக பெரேரா என்ற இலங்கையின் முதலாவது பணக்காரரும் துமிந்த சில்வாவின் நண்பரும் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் மறுபக்கத்தில் போதைப் பொருள் வர்த்தகத்தை இலகுபடுத்தவதற்காக என்ற சந்தேகங்கள் வெளியாகின.
போதைப்பொருள் கடத்தலுகான தெற்காசிய மையமாக மாறியுள்ள இலங்கையில் தமிழ் நாட்டு மீனவர்களைப் போதைப்பொருள் கடத்தியதற்காகத் தூக்கிலிடுவது என்பது மகிந்த குடும்பத்தின் போதைப் பொருள் வர்த்தகத்தை மறைப்பதற்கே.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.
கடலில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இலங்கையை சேர்ந்த மூவருக்கும் தூக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கொழும்புத் துறைமுகத்தில் இலங்கைப் பிரதமர் அலுவலகத்தின் அனுமதியோடு அனுப்பிவைக்கப்பட்ட 260 கிலோ போதைப் பொருள் கையகப்படுத்தப்பட்டது. இப் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரதமரி தனிப்பட்ட செயலாளர் பதவி விலகியதும் கையகப்படுத்தப்பட்ட 260 கிலோவில் 130 கிலோ காணாமல் போய்விட்டது. இலங்கையில் மகிந்த பாசிஸ்டுகளைக் கடந்து எந்தச் சட்டவிரோத வர்த்தகமும் நடைபெற முடியாது.
இலங்கைப் பிரதமர் என்ற அதிகாரமற்ற ராஜபக்சவின் கைப்பொம்மையே அரசியல்வாதிகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
காணாமல் போன 130 கிலோ போதைப் பொருளை துமிந்த சில்வாவின் வலையமைப்பின் கைகளுக்கு மாறியிருப்பதற்கான வாய்ப்புகளை பலரும் சுட்டிக்காட்டினர்.
இலங்கையில் தெற்காசியாவின் கிமினல் அரசை நிறுவுவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் முயலும் அதே வேளை மகிந்த தனது சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொள்ளும் செலவை போதைப் பொருள் வர்த்தகம் போன்ற சமூகவிரோதச் செயல்கள் ஈடுசெய்கின்றன.
போர்குற்ற விசாரணை, புலம்பெயர் புலிகள், தமிழ் நாட்டின் இனவெறியர்கள் போன்ற எல்லைகளுக்குள் இலங்கைப் பிரச்சனையை முடக்கிவிட்டு அதன் அடியில் அந்த நாடு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலிலேயே தமிழக மீனவர்களின் துக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.