தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் மூலம் தமிழகம் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
ஒரே ஆண்டில் 4 லட்சம் கடனில் இருந்து 5.70 லட்சமாக தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது.
2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும்போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக்கொண்டு உயர்ந்து நிற்கின்றன.
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய்ப் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்திவிட்டுச் செல்கிறது.
தமிழக அரசுக்கு வருவாய் தரும் முக்கியமான மூன்று விஷயங்கள் ஒன்று டாஸ்மாக், அடுத்து பெட்ரோல் டீசல் விற்பனை வரி வருவாய், மூன்றாவது பத்திரப்பதிவு இதில் டாஸ்மாக் விற்பனையை தவிற மீது வருவாய்கள் எங்கே போனது என தெரியவில்லை.
இத்தனை கடன் சுமை, வருவாய் இழப்புக்கு மத்தியில் வெற்றி நடை போடும் தமிழகமே என்ற பெயரில் விளம்பரங்களுக்காக ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயை எடப்பாடி பழனிசாமி செலவிட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.