ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரணியாக தமது ஒன்றுபட்ட ஆதரவினை வெளிப்படுத்தியிருப்பது ஈழத்தமிழ் மக்களிற்கு ஆறுதலை தந்துள்ளது.
சிங்கள அரசுகளால் பல்லாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு அரசியல் ரீதியான அடக்குமுறைக்கு எதிராக தந்தை செல்வா முதல் அண்ணர் அமிர்வரை பல்வேறு தலைவர்களின் கீழ் அகிம்சை வழியில் போராடி எந்தவொரு உரிமையையும் இனவாத அரசுகள் வழங்குவதற்கு முன்வராத நிலையில் ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்தது. அகிம்சை வழியில் மேற்கொண்ட போராட்டங்களிற்கும் ஆயுதபோராட்டத்திற்கும் தமது தார்மீக ஆதரவினை வழங்கிய இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவினை என்றுமே நாம் மறந்துவிடவில்லை.
பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினத்தையே அழித்து ஒட்டுமொத்த இன அழிப்பினை கட்டவிள்த்துவிட்டுள்ள சிங்கள இனவாத அரசு இன்றுவரை எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஈழத்தமிழ் மக்களிற்கு வழங்க தயாரில்லை. ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு தமிழ்மக்களிற்கு ஒர் நியாயமான தீர்வை வழங்குவேன் என்று ஆட்சிபீடம் எறிய இன்றைய மஹிந்த அரசு, பேச்சுவார்த்தை என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் கடந்த காலங்களைப்போன்று சர்வதேசத்தையும், தமிழ்மக்களையும் ஏமாற்றும் வழக்கமான அரசியல் நகர்வையே முன்நிலைப்படுத்தி வருகின்றது.
இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்றுமே எமது விடுதலையை பெற்றிடுவதற்கு உதவவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு. தொப்புள்கொடி உறவு என்று தெரிவித்துவரும் தமிழ் மக்களிற்கு தமிழக மக்களின் இந்த ஒன்றுபட்ட ஆதரவு பெரிய ஆறுதலை தந்துள்ளது. இறுதி யுத்தம் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான மக்களை பலியெடுத்தும், அங்கவீனர்களாக்கியும், முகாம்களிற்குள் முடக்கிவைத்து அராஜக ஆட்சி நடாத்திவரும் இலங்கை அரசு. நியாயப+ர்வமான ரீதியில் தீர்வை வழங்க தவறிவருவதுடன். தமிழ்மக்களின் ஆயுதபோராட்டத்தை நசுக்கிவிட்டேன் என்ற விறாப்புடன் தொடர்ந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியும், தமிழர் வாழ்விடங்களை அபகரித்தும், சொத்துக்களை சூறையாடியும் பல்வேறு சூழ்ச்சிமங்களை அரங்கேற்றி தமிழ்மக்களை விரக்தியின் விழிம்பிற்கு தள்ளியள்ளது.
ஆகவே எமது மக்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காக உழைத்துவரும் அமைப்புக்களிற்குள் ஒற்றுமையென்பது அல்லது ஒன்றுபட்ட கருத்தினை முன்வைக்க முடியாத துரதிஸ்டம் தொடர்கின்றது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க,
தி.மு.க, தமிழக காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி, சி.பி.ஜ, சி.பி.எம் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலாக ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று ஒன்றுபட்டு குரல் எழுப்பியுள்ளது ஈழத்தமிழ் மக்களிற்கு நம்பிக்கையையை தோற்றுவித்துள்ளது.
இந்திய அரசினதும், தமிழக மக்களினதும் ப+ரண ஆதரவு தொடர்ந்து நீடிக்கவேண்டும். மறுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு உரிமை கிடைத்திட தமிழகத்தில் வாழும் தமிழக உறவுகள் தொடர்ந்து கைகொடுத்திட வேண்டும். நீண்டகாலத்திற்கு பின்னர்
தமிழகத்தில் உள்ள கட்சிகள் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஈழத்தமிழ் மக்களிற்காக ஒன்றுபட்டு வெளியிட்டுள்ள தற்போதைய கருத்து மிகப்பெரும் நம்பிக்கை கீற்றினை தோற்றுவித்துள்ளது. தமிழக மக்களினது ஆதரவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் உங்களுடனான நல்லுறவு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடும் ஆகும்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (சர்வதேச ஒன்றியம்)
ஊடக இணைப்பாளர் எஸ்.மைய+ரன்
விறாப்பு அரசியல் பேசாமல் ஜதார்த்தமான கருத்துக்களிற்கு ஆதரவு தெரிவித்து. தமிழக கட்சிகளின் ஏகோபித்த ஆதரவினை வரவேற்றுள்ள புளொட் இயக்கத்தின் நன்றியுணர்வக்கு முதலில் எனது பாராட்டுக்கள். வீம்பு அரசியல் பேசியே கடந்தகாலத்தின் தனது போராட்ட பாதையில் இருந்து ஒதுக்கப்பட்ட அல்லது பலவீனப்பட்ட புளொட். இன்று பிராந்திய நாட்டினதும் அங்குவாழும் தமிழ் மக்களினதும் ஆதரவினை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பது சித்தார்த்தனின் தெளிவான தலைமைதுவ பண்பினை காண்பிக்கின்றது. ஆயுத போராட்டத்தினை தொடங்கிய விடுதலை இயக்கங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியபோது. தமக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சிகளையும், ஒத்துழைப்பையும், ஆதரவினையும் நல்கிய இந்திய அரசிற்கோ தமிழக மக்களிற்கோ ஒர் நன்றியினை தெரிவிக்காத எமது தலைமைகள் மத்தியில். புளொட் இயக்கத்தின் அப்போதைய தலைவர் உமாமகேஸ்வரன்(முகுந்தன்) மட்டும் தன்னிடம் வந்து தாம் தாயகத்திற்கு செல்வதாகவும் வழங்கிய ஆதரவுக்கும் உதவிக்கும் நன்றி என்று தெரிவித்துவிட்டு சென்றதாகவும் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இப்படியான பண்பாடுகளை கொண்ட நமது அமைப்புக்களும், கட்சிகளுக்கும், மக்களிற்கும் மத்தியில் புளொட் ஒன்றுமட்டும் நன்றியுணர்வை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை அரசியலை மட்டுமல்லாமல் தமது கட்சி அரசியலை விவேகமாகவும், வேகமாகவும் முன்னெடுத்தால் எட்டப்பர்களும், களுத்தறுப்பாளர்களும், இணக்க அரசியல் என்று கூறி டீல் அரசியல் நடாத்துபவர்களிற்கும் தகுந்த பாடத்தை புகட்ட முடியும்.
உங்க பெரியய்யா கருணாநிதிக்கு நன்றி மட்டுமா சொன்னார். கூடவே தமிழகத்தில் கொள்ளையடித்து பணத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கென்றே ஒரு குழுவை விட்டுச் சென்றார். நாம் முன்னர் பணத்தை இங்கு கொண்டுவந்தோம். இனி இங்கிருந்து நாட்டுக்கு கொண்டுசெல்வோம் என தத்துவம் உதிர்க்கப்பட்டது.(ஏற்கனவே சிங்கள இளையோரை போதைமருந்துக்கு அடிமையாக்குவதன் மூலம் எமது போராட்டத்தை முன்னெடுப்பதை இலகுவாக்கலாம் என தனது போதை மருந்துவியாபாரத்தை நியாயப்படுத்துவதற்காக உதிர்த்த தத்துவவியாக்கியானத்தையும் மனங்கொள்க) இப்போ திண்ணை காலியானதும், என்ன தமாஷ் பண்ணுகின்றீர்கள்.
சித்தார்த்தன் ,சொந்த ஊரில்( ஈழத்தில்) எப்போநீங்கள் ஒன்று படப்போகிறீர்கள்? உபதேசம் ஊருக்கு மட்டும்தான், உனக்குஇல்லை என்ற கதைதானா.மனதில் ஒன்றும் செயலில் ஒன்றும் வார்த்தைகளில் வேறொன்றும் காட்டினால், எந்த கட்சி உங்களோடு கூட்டு வைக்கும். 20 வருடங்களுக்கு மேல் புலிகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், தமிழருக்கும் , தமிழர் போராட்டத்துக்கும் எதிராய் இருந்து சிஙகள்வரோடு கூட்டு வைத்திருந்த தாங்கள், எதர்க்கு இனியும் தமிழரோடு கூட்டு வைக்கநினைகிறீர்கள், துரோகியாயே இருந்து துரொகிகளாயே இறந்து போங்கள்:
20 வருடங்களுக்கு மேல் புலிகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், தமிழருக்கும் , தமிழர் போராட்டத்துக்கும் எதிராய் இருந்து சிஙகள்வரோடு கூட்டு வைத்திருந்த தாங்கள்——–புலிகலை அவர்கள் எதிர்க்கவில்லை, ஆனால் புலிகல் தான் ஏகப்பிரதினிதி கனவில் மற்ற இயக்கங்கலை எதிர்த்து அவர்கலை கொலை செய்து அவர்களை புலிகலுகு எதிரானவர்களாக் மாற்றினர், இன்று புலிகல் இல்லை, ஆனால் புலிகலால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் உண்டு, புலிகல் சரனடைந்து தேசிய உடையான கோவனம் அனிந்து இறந்து போனர், கடவுள் இருக்கிண்றான் என்று மே 19 2009 அறிந்தோம்
உங்கள் எண்ணங்களின், ஆசைகளின் படி அப்படியே புலிகள் இறந்தாலும், புலிகளை, புலிகளது தமிழ் ஈழம்தான் என்ற கொள்கைகளை ஆதரிக்க ஈழத்திலும் புலத்திலும் லட்சக்கணக்கான மக்களும், தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களும் எப்பவுமே இருக்கிறார்கள் , இனியும் அப்படியேதான் இருப்பார்கள்: ஆனால்நீங்கள் “இருக்கிறது” என்று சொல்லும் உங்களது புளட்டும், மாற்று இயக்கங்களும் , ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை என்றோ அவெர்கள் இறந்துபோய் விட்டார்கள், அவெர்களை ஈழதமிழ் மக்கள் என்றோ தூக்கியும் எறிந்து விட்டார்கள். பாவம்நீர் கனவில் இருந்து எப்போதுதான் நியத்திற்கு விடுதலை ஆகி வரப்போகிறீரோ. புலிகளை எதிர்க்க துணிவு , மனோதிடம் , தைரியம் ஏதும் இல்லாவிட்டின், ஒன்றில் பாலாகுமாரன் போல் புலிகளோடு ஒன்றிப் போய் இருக்க வேண்டும், இல்லையேல் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் போல் இயக்கத்தை கலைத்துவிட்டு வெளிநாடு போய் இருக்க வேண்டும். ஆனால் புலிகள் அடிக்கிறார்கள் , வெட்டுகிறார்கள்; குத்துகிறார்கள் என்றுநீங்கள் எல்லாரும் போய்ச் சேர்ந்த இடம்தான் என்னவோ? யாரை எதிர்த்தீர்களோ , அவெர்களது கால் அடியில் அல்லவா போய் கிடந்தீர்கள்; சிங்களத்தலைவர்களது வேட்டிகளுக்குப்பினால் ஒளிந்து கொன்றுநீங்கள் தமிழருக்கு செய்த அனியாயம் ஒன்றா? இரண்டா? ஒரு கோடியல்லவா! இன்றைக்கு புலிகள் இல்லாதா போதும் டக்கிளஸ் ஆட் கள் யாழிலும், தீவகத்திலும் செய்கிற , அதே கொலை கொள்ளை, ஆட் கடத்தல் , மிரட்டல் , பாலியல் கொலைகள் என்று எல்லாவற்ரையும்நீங்கள் புளட்டும் வவுனியாவில் செய்தநீங்கள் தானே. 10 வருடங்கள் வவுனியாநகரில் இருந்துநேரடியாய்ப் பாத்தவன்நான். கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு என்பார்கள்: உமது புளுகு மூட்டைகளை சித்தாத்தனிடம் போய் அவிட்டுவிடவும்