இலங்கையில் போர் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் அங்கிருந்து வந்த அகதிகளை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு நிர்ப்பத்ந்திக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு அந்த நாட்டு அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசியல் கட்சிகள் பல வழிகளில் கோரியபோதும் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு போதுமான வசிப்பிடம் சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை. இலங்கை அகதிகளை தாயகம் திரும்புமாறு வற்புறுத்தக் கூடாது.
தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டாலும்> கலைஞரின் “குடும்ப அரசியல் உணர்வை” மதித்துத்தானே உள்ளது!
தம்பி திருமா!நீங்கள் தாத்தாவுடன் கூட்டுவைத்து இத்தாலி அம்மையாரின் காங்கிரசோடு தொகுதி உடன்பாடு செய்தபோதுதானே ஈழக்கொலைகள் நடைபெற்று முடிந்தன.என்றாலும் உங்கள் மனசு இளகிய மனசு.மறக்காமல் ஈழத்தமிழர்கள் பற்றிப் பேசுகிறீர்களே அது போதும். இனி அவர்கள் வீடுகளில் பாலுந் தேனும் பாய்ந்தோடும்!எம்.பி பதக்வி கிடைத்துவிட்டது, பேசாமல் பேரம் பேசியே சம்பாதிப்பதை விட்டு விட்டு வீணாக எதற்காக தமிழர் பற்றிப் பேசுகிறீர்கள், சோனியா அம்மா கோபித்துக்கொள்ளப் போகிறார், கவனம் தம்பீ! தாத்தாவின் ஆலோசனைப் படி நல்ல பிள்ளையாக நடவுங்கள்.
//இலங்கை தமிழ் அகதிகளுக்கு போதுமான வசிப்பிடம் சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை//
சாப்பாடு தண்ணியெல்லாம் யாராய்யா தாறது?
அய் நாவின் அகதி திட்டத்தில் கைச்சாத்திடாத இந்நதியா அகதிகளை மனிதாபிமானம் இல்லாமல் நடத்துறது ஒனக்கு தெரியுமா தெருமா? சாரி திருமா