தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துத்தரப்போவதாக மக்கள் மத்தியில் போலி நம்பிக்கைகளை விதைத்து ஈழத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வளரவிடாமல் தடுக்கும் தமிழ் இனவாதிகள் தமிழ் நாட்டின் உள்ளேயே நடைபெறும் வன்முறைகளைக் கண்டுகொள்வதில்லை. ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோரது அரசுகளில் வை.கோ, சீமான் உட்பட அனைத்து ‘இன-மான’ வகயறாக்களின் முன்னிலையில் மீண்டும் ஒருவர் சிறப்புமுகாமில் கொலைசெய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் ஈழ அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடத்தில் சிறைவைக்கப்ப்பட்டுள்ளனர். அகதிகளுக்கு அடிப்படை உரிமைகளை தமிழக அரசுகள் மறுத்து வருகின்றன, உலகின் ஏனைய அரசுகளைப் போலன்றி கிரிமினல்கள் போன்று அவர்களை நடத்திவருகின்றது.
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவரூபன் என்ற குறித்த அகதி, கடந்த 6ம் திகதி மருத்து பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் வைத்தியர்கள் கோரியுள்ளனர்.
எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9ம் திகதி அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தகவலை திருச்சி காவற்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
I hope this draws the attention of Ms. Navi Pilaly soon.
Not the killing 30/40k civilians in the final days of the war in SL ? You’ve brushed that aside as nonsense in the past, haven’t you ?