வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழக எம்.எல்.ஏ கள் இலங்கை வரவுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை நிலவரங்களை சர்வதேசம் அறிந்துகொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை இலங்கைக்கு தமிழத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் சென்று வந்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல. எனவே ஒருவேளை இப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்றால் அது முதன்முறையாக செல்வது ஆகும்.
இவர்கள் அறிந்து கொண்டு என்ன புடுங்கப் போகின்றார்கள். கொலைவெறியனுக்கு புகழாரம் சூட்டி பொன்னாடை போர்த்தி கட்டிப்பிடித்துக் கொண்டு அவனிடம் பெற்ற எலும்புத் துண்டங்களை பொறுக்கிக் கொண்டு வரப் போகின்றார்கள். இதைத்தவிர என்ன செய்யப் போகின்றார்கள். சர்வதேசம் அறியாத உண்மைகளையா இவர்கள் கண்டு பிடித்து வெளியிடப் போகின்றார்கள். தம் சுயநலன்களுக்காக கொலைவெறியர்களை போற்றிப் புகழ்ந்து அறிக்கை விடப் போகின்றார்கள். இது தான் நடக்கும் நடக்கப போகின்றது. வெட்கம் கெட்டவர்கள். ஐனா
திரு.ஜனா!,கலைஞர் கருணாநிதி கொடுக்கும் அஞ்சு,பத்துக்கே,அண்ணா தி.மு.கா. விலிருந்து தி.மு.கா. வுக்கு ஓடோடி வரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள்,திரு.மகிந்த ரா..ஜ பக்ஷே அவர்கள் கொடுக்கும் விலையுயர்ந்த “வைர நெக்லஸுகு” கொழும்பு அரலி மளிகைக்கு,செல்லவேண்டாம் என்று “வெருங்கையால் முழம் போடும்” உங்களைப் போன்றோர்கள் அல்லல் பட்டால்,காதுக் கொடுத்து கேட்பார்களா?!.”சமூக மூக்குக் கண்ணடியை” போடவே மாட்டேன் என்று அடம் பிடித்து,அதை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாட்டிவிட நினைப்பது நியாயமா?.தங்கள் தோற்றத்தின் “ஏற்றத்திற்காக” சிலர் மூக்குக் கண்ணாடி அணிவார்கள் ஆனால் அதுவெல்லாம் “சமூக மூக்குக் கண்ணடி” ஆகாது!!.