முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரள அரசின் நோக்கம் என்றார்







