இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் முழு உலகுமே கவலை தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
பூந்தமல்லி மற்றும் செங்கல்ப்பட்டு பகுதிகளில் 100 இற்கும் அதிகமான இலங்கை அகதிகள், விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள் உள்ளனர் இத்தடுப்பு முகாமிலுள்ள ஒருவர் தெரிவிக்கையில், தாம் அங்கிருந்து சட்டரீதியாக வெளியேறவே விரும்புவதாகவும் அதற்கு பொலிஸார் வாய்ப்புகளை வழங்கி ஒத்துழைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரொருவர் தெரிவிக்கையில் பெரும்பாலும் இங்குள்ளவர்களுக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகள் இருப்பதில்லை ஆனால், இங்கு இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்படும் போது, அவர் முதலில் கியூ பிரிவுக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பது போன்ற ஆதாரங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேலும், இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இம் முகாம்களிலுள்ளவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.