கடுமையான நிதிச்சுமைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்தது திமுக. ஒன்றிய அரசின் பாராமுகம், விலை வாசி உயர்வு, மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காமை. ஜி.எஸ்.டி என தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையை சந்தித்து வருகிறது. இந்த நிதிச்சுமையை சமாளித்து தமிழ்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உட்பட பல வல்லுநர்களைக் கொண்ட தமிழ்நாடு வளர்ச்சிக்குழுவை அமைத்தது தமிழக அரசு.
இப்போது முதல்வருக்கான பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான எஸ்தர் டாப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன்,பொருளாதார நிபுணர் – ஜீன் டிரேசஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் – டாக்டர் எஸ் நாராயண், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்- ரகுராம் ராஜன் ஆகியோரைக் கொண்ட தனிக் குழுவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இவர்கள் தமிழக அரசின் நிதி வளங்களை மேம்படுத்துவது. உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது,தமிழ்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவது உட்பட பல விஷயங்களில் தமிழக அரசுக்கு வழிகாட்ட இந்த குழு பணியாற்றும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.