6வது மக்களவைக்கு தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
16 வது தடவையாக மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால் ஜனநாயகமோ பழுதடைந்துவிட்டது.
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட நந்தனத்தில் வாக்கு இயந்திரம் பழுதானது. வாக்கு இயந்திரம் பழுதானதால் மாற்று இயந்திரம் கொண்டு வர தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட சுசிந்தரத்திலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
மேலும் கோவில்பட்டி அருகே வெம்பூர்-குமாராபுரம் வாக்குச்சாவடியிலும் இயந்திரம் பழுதானது. வேலூர் மாவட்டம் திருப்பத்தர் ஆசிரியர்நகர் வாக்குசாவடியில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதானது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதாக தெரிகிறது. மாமல்லபுரதில் உள்ள 232வது வாக்குச்சாவடியிலும், திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் வாக்குச்சாவடியிலும் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள அறிவாலயம் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதாக கூறப்படுகிறது.
அரசு இயந்திரம் பழுதடைந்தது