இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் பல்லாயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் . நூற்றுக்கணக்கானோர் மடிந்தும் வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில்
வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,62,284 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 19,11,496 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் இன்று 468 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,340 ஆக உயர்ந்துள்ளது.
சுமார் ஐம்பது மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களும் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். இன்றும் குருபரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
அரசு ஊழியர்களோ மருத்துவர்களோ உயிரிழந்தால் அரசு நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அந்த குடும்பமே நிர்கதியாகி விடுகிறது. கொரோனா உருவாக்கும் பேரிடர் கொடூரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இழப்பீடுகள் இல்லாத முன்களப்பணியாளர்களான ஊடகவியலாளர்களும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.