Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழகத்தில் இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை – வன்மையாக கண்டிக்கின்றோம்

இனியொரு... by இனியொரு...
09/05/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தியாவிற்கு புனிதயாத்திரை சென்று இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள் மத்தியில், இலங்கை சிங்கள பிரஜைகளுடன், தமிழ் பிரஜைகளும் இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால், இலங்கை தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் வன்முறையாளர்களின் இந்நடவடிக்கைகள், இந்நாட்டில் இருக்கின்ற தீவிரவாத இனவாத வன்முறை முட்டாள்களுக்குத்தான் உதவுகின்றன.
அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அப்பாவி வேடம் புனைந்து, தீக்கோழியைப்போல் மண்ணில் தலையை புதைத்துக்கொள்ளவும் முடியாது. எமது நாட்டு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக எமது தேசிய இனப்பிரச்சினைக்கு எமது நாட்டுக்குள் நியாமான தீர்வு காணப்படாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை நீண்ட நாட்களுக்கு முன்னமே கடந்து சென்றுவிட்டன என்ற வெட்கங்கெட்ட யதார்த்தத்தை நமது அரசாங்கம் இனியாவது உணர வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி இந்திய ஊடகங்களுக்கும், இந்நாட்டு சிங்கள ஊடகங்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உலகின் பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டவை. ஆனால் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையும், மனிதர்கள் மீதும், சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளாக மாற முடியாது.
எனவே இலங்கையிலிருந்து தமிழகம் செல்லும் சாதாரண மக்கள் மீதான தாக்குதல் எத்தனங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக கட்சிகளும், அமைப்புகளும் தங்களது எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசு இயந்திரங்களுக்கு எதிராக முன்னெடுக்கவேண்டும் எனவும், சாதாரண மக்களை விட்டு வைக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.
எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை கடந்து சென்றுவிட்டன என்பது கண் முன்னே தெரியும் உண்மை. இன்று கூச்சல் இடும் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களும் அவரது தீவிரவாத இனவாத சகபாடிகளும்தான், நமது நாட்டு பிரச்சினைகள் கரைகடந்த விவாதங்களுக்கும், போராட்டங்களுக்கும் உள்ளாக்கப்படுவதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இன்று, இலங்கையில் இந்திய பிரஜைகளுக்கு எதிராக வன்முறை நடந்தால் என்னாவது என கூச்சலிடும் இவர்கள் ஒன்றும் உத்தமர்களும் அல்ல. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காமல் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து கதிர்காமத்துக்கு புனிதயாத்திரை சென்ற இந்திய பிரஜை ஒருவர், தென்னிலங்கையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதேபோல் இந்தியாவின் பிரபல நடிகர் ஷாருக்கான், இலங்கை வந்து அவரது நிகழ்வில் கைக்குண்டு வீசப்பட்டபோது ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று தனது நாட்டுக்கு ஓடியே போனார்.

இன்று நாம் இந்த கறுப்பு வன்முறை வரலாற்றை கடந்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். எனவே இந்தியாவில் செயற்படும் இந்த தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படியும், புனித யாத்திரை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தமிழகம் வரும் சாதாரண இலங்கை பிரஜைகளுக்கு எதிரான போக்கை கைவிட அவர்களை வலியுறுத்தும்படியும் இந்திய அரசை நாம் கோருகிறோம். நமது இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு முறைப்படி தெரிவிக்கும்படி இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்தா அவர்களையும் கோருகிறோம். அதேபோல் நமது உள்நாட்டு விவகாரம் வெளிநாட்டு விவகாரமாக மாறிவரும் சூழலை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னேடுப்பதின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரும்படி இலங்கை அரசையும் நாம் வலியுறுத்தி கோருகிறோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சிங்கள மக்களை எதிர்க்கும் ‘வீரம்’! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத ‘அறம்’!!

Comments 2

  1. Mariyampillai says:
    14 years ago

    அது சரி, இன்று வரை இந்திய அரசின் தயவில் தன்னையும் தன் மனைவி பிள்ளைகளையும் (தன்னோடு கூட்டிச் சென்ற வால்களை முகாம்களில் விட்டிட்டு) வளர்க்கும் வரதரோ, வரதரோடு ஒன்றாய் இருந்து இலங்கையில் மாறி மாறி வரும் அரசாங்களுடன் இணைந்து தொடர்ந்து நாட்டின் அமைச்சராக இருக்கும் டக்ளசோ புத்தளம், சிலாபத்தை சேர்ந்த யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை இன்று வரை கண்டிக்கவில்லை. இதன் மர்மம் என்னவோ?

    அதுமட்டுமல்ல, இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குகளில் தங்கி இருக்கும் அமைச்சர் தொண்டமானும் இதை இன்னும் கண்டிக்கவில்லை.

    கூட்டமைப்பில் கூட்டாக கிழக்கில் திரியும் ITAK, TULF, PLOTE, EPRLF (Suresh), EPRLF (Sritharan), TELO (Selvam) காரர் கூட மவுனம் (இவர்களை மன்னிக்கலாம் இருக்கிறார்கள்)

    எல்லோருக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ENDLF மவுனம்.

    இது பதிந்த நேரம் இந்திய நேரப்படி 9:45 PM (Wednesday)

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    I am with you all the way Mano Ganeshan.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...