ஸ்னோடென் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பல்லாயிரம் ஆதரபூர்வமான ஆவணங்கள் அமரிக்க அரசு உலகம் முழுவதும் தனது உளவுவேலைகளை நடத்திவருவதை நிறுவியுள்ளது. ‘இரும்புத்திரை’ யால் மூடப்பட்டுள்ள அமரிக்க அரச அமைப்புகள் உலகம் முழுவதையும் தமது பயங்கரவாதக் கண்களால் பார்த்துக்கொண்டிருப்பதை நிராகரிக்க முடியாத அளவிற்கு புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வறான ஒருவரை ஒருவர் கழுத்தறுக்கும் செயல் என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைபொருள் என Dissident Voice என்ற சஞ்சிகையில் இணை ஆசிரியர் கிம் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் விழிப்புணர்ச்சியடைந்து அரசியல் மயப்படும் நிலையில் தமிழ் தேசிய இனவாதிகள் மட்டும் பூகோள அரசியல், அரசியல் சாணக்கியம் போன்ற ‘காய் நகர்த்தும்’ எல்லைக்குள்ளேயே மக்களிடம் அரசியலைக் கொண்டு செல்கின்றனர்.
உலகில் வேறெந்தப் போராட்ட அமைப்புக்களிடமும் காணப்படாத அளவிற்கு வர்க்க அரசியலை மட்டும் நேரடியாகவே நிராகரிக்கின்றனர்.
அதிகார வர்க்கத்தின் அழுகிய அரசியலோடு தம்மை அடையாளப்படுத்தும் இவர்கள் போராடும் மக்களின் பலத்திலிருந்து ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்துகின்றனர்.
ஐந்து கண்கள் என்று அழைக்கப்பட்ட அமரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகள் சீனா மீதும் ஏனைய கிழக்காசிய நாடுகள் மீதும் வேவு பார்த்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய ஆவணம் வெளியானது குறித்தே தனது கருத்துக்களை பீட்டர்சன் தெரிவித்தார்.
முதலாளித்துவம் என்பது மக்களும் அரசுகளும் தொடர்ச்சியாகப் போட்டியிடும் அமைப்பு முறையாகும். சட்டங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முசோலீனி, ஹிட்லர் போன்ற முன்னைய கொலையாளிகளிலிருந்து, நரேந்திர மோடி, ராஜபக்ச போன்ற இன்றைய கொலையாளிகள் வரை முதலாளித்துவ அமைப்பின் உருவாக்கமே.